இரு கவிதைகள்

This entry is part [part not set] of 52 in the series 20040422_Issue

ஸ்ரீராம்


யாரும் இல்லாத ரயில் வண்டியும்,யாரும் இல்லாத ரயில் நிலையமும்
—-

அழகிய வேலைப் பாடுள்ள
ஆளுயர கண்ணாடி சீசாவை
ஒற்றை கயிறு பாலத்தில்
தூக்கிக் கொண்டு நடந்து
பத்திரமாக சேர்த்த நேரத்தில்
ரயில் வண்டி நினைவிற்கு வருகிறது..!
தேடி தேடி பெற்றவற்றை
இந்த ஊரிலேயே இறக்கி வைத்து..
தேடலின் உச்சத்தில்
காத்திருப்பதை காதலிக்க
தயாராகிறேன்..!
ரயில் நிலையத்திற்கு எவரையும்
வழியனுப்ப வர வேண்டாம்
என்று சொன்ன பிறகு
ரயில் நிலையத்தில் இப்போது..!
இருள் கவிழ்ந்த
கரிய இருளில் காத்து இருக்கிறேன்!
பயணத்திற்கு எதுவும் எடுத்து செல்லாமல்
அன்பையும் கருணையையும் ஏந்தி
என்னை ராஜனாக அழைத்து செல்ல
யாரும் இல்லாத ரயில் வண்டி
யாரும் இல்லாத ரயில் நிலையம்
வந்து சேரும்…


அவன் அழகன்!
—-

நான் சென்றபின்னர்தான்
அவன்
வந்து அமர்ந்து கொள்கிறான்!

நான் இருக்கும்வரை அவன்
வரப்போவதில்லை….!
நான் போக ஆரம்பித்தேன்…!
புள்ளியாய் போகும் அளவு…!
புள்ளியும் மறைந்து கரைந்து
போகும் மட்டும்…!
அங்கு
பேசாத வேர்களும்
பேசுகிற செடியில்
அமைதி பூக்களும்!
பால் பருகும் தன் கன்றை
நாவால் வருடும் தாய் பசு..!
பெரிய பெரிய
இறுகிய மலைகளின் மேலே
லேசான சுதந்திர மேகங்கள்!
வன்மையாய் மிதித்தும்
மென்மையாய் முத்தம் இடும் புற்கள்…!
பூவோடு பூவாக
அமைதியாய் அமர்ந்த போது
அவன்தான் வந்திருக்கிறான்…
அழகனாய்.


sriram_nagas@yahoo.com

Series Navigation

author

ஸ்ரீராம்

ஸ்ரீராம்

Similar Posts