கவிதை

This entry is part [part not set] of 51 in the series 20040219_Issue

பத்மா அரவிந்த்


ஐந்து அறை உண்டு- ஆளுக்கொரு
கணிணி என அனைத்தும் உண்டு
திரும்பிய இடமெல்லாம் இசை வழிய
விரும்பி இனைத்திட்ட ஒலிபெருக்கி உண்டு
ஜன்னலோரம் சிவப்பு மலர்சொரியும்
டாக்வுட்டும் செர்ரி மரமும் உண்டு
மஞ்சள், நீலம், ஆரஞ்சு என்று
பலவண்ண மலர்பூக்கும் தோட்டம் உண்டு
காலைநேரம் காலார நடந்து செல்ல
பனிபடர்ந்த புல்வெளியும் உண்டு
இத்தனையும் இருந்துமென்ன
மனிதர் இல்லை
பகல் முழுதும் இரைதேடி பறந்துசென்று
இரவு வந்தடையும் குருவிபோல
கடமையென பறக்கின்றோம் நாள்முழுதும்
களைத்துவந்து தூங்குகின்றோம்
எதைத்தேடி அலைகின்றோம் புரியவில்லை
ஏனிந்த அலைச்சல் அது தெரியவில்லை
எதுவென்று தெரியாமல் தேடித்தேடி
தொலைத்துவிட்டோம் இளமைதன்னை.
—-
padma.arvind@co.middlesex.nj.us

Series Navigation

author

பத்மா அரவிந்த்

பத்மா அரவிந்த்

Similar Posts