மரணம்

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

காளிதாஸ்


மரணத்துக்கு
என்னிடம் பசியில்லை
மரணம் மீதோ
அடங்காப் பசியெனக்கு
ருசியில்லாப்
பண்டம் என்னை
மரணம் மறுதளிக்கிறது
தெருத்
தெருவாய் அலைந்தாலும்
தரிப்பிடமில்லா வாகனம்
நான்
உயர உயரப் பறந்தாலும்
உறையும்
கூடில்லாப் பறவை
மென்று மென்று
தின்று பார்த்துப்
பாதியில் மீதியைத்
துப்பிவிட்டுப்
பறந்துபோயிற்று மரணம்
மிச்ச எலும்புகளைப்
பொறுக்கிப்
புதைத்துப் பார்த்தேன்

கிழிந்த
தசைத் தொங்கல்களை
நெருப்புக் கூட்டி
எரித்துப் பார்த்தேன்
விடைதரா
விருந்தாளியாய்
வேதனை மட்டுமே
புண்ணிய உடல்தேடி
எங்கோ பாவம்
அலைந்துகொண்டிருக்கும்
மரணம்

– kaalidas2003@yahoo.com

Series Navigation

author

காளிதாஸ்

காளிதாஸ்

Similar Posts