குழந்தை.

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

அருண் பிரசாத்


உதடு பிதுக்கிய அழுகையுடன்
உள்ளே உதைக்கிறது
ஒரு முகமறியா குழந்தை.

ஆற்றவே முடியாததாகின்றது
ஆறுதல்படுத்த முடியாத
ஆற்றாமையின் துக்கம்.

எப்படியாவது நிறுத்த வேண்டும்
ஏதோ ஒரு கூத்தில்
ஏதோ ஒரு வேஷத்தின் மூலம்
தற்காலிகமாக.

——————————

everminnal@yahoo.com

Series Navigation

author

அருண்பிரசாத்

அருண்பிரசாத்

Similar Posts