நெப்போலியன்,சிங்கப்பூர்
கொஞ்சம்
லஞ்சமாய்
கொஞ்சம்
காணி நிலம்.
அடுத்தவன்
வயிற்றையும்
ஆஸ்தியையும்
பற்ற வைக்க
நிறைய அக்கினிக் குஞ்சுகள்.
நிரந்தரமாய்
ஒப்பாரி கூவக்
குயில்கள்.
நந்தலாலாவின்
சிறகுகளில்
காக்கை இரத்தம்
மின்ன…
விரல்கள்
பலவந்தமாய்
தீக்குள் முக்கப்பட்டு
கரிக்கட்டைகளாய்
தீண்டிய இன்பம்.
மனதில் உறுதி வேண்டும்
மற்றவன் தலையை
மலைக்காமல் சீவ…
வார்த்தை தவறாமல்
கண்ணம்மாக்கள்
வருவதற்கு
முன்கூட்டியே
புரோக்கர்கள் மூலம்
பேசி வைப்போம்.
ஓடி விளையாடாமல்
பாப்பாக்களை
ஒழுங்காய்
தொலைக்காட்சிப்
பார்க்கச் சொல்வோம்…
கூடி விளையாட வேண்டாம்
அந்தக் குறத்தி மகனுடன்
சரிசமமாய் என
குழந்தையிலேயே
கிள்ளி வைப்போம்.
சிங்களத் தீவிற்கோர்
பாலம் அமைப்போம்
செலவுத் தொகையில்
அடிக்கல் நாட்டி
கட்டாத பாலத்தைக்
கணக்கில் வைப்போம்.
கங்கை நதிப்புரத்து
சப்பாத்தி கீமாவிற்கு
காவிரி
ஜர்தா பீடா
போட்டுக் கொள்வோம்.
மராட்டிய
சிங்கம் புலித் தோல்களை
சேரத்துத் தந்தங்களுடன்
சேர்த்துக் கடத்துவோம்.
தனி மனிதனுக்கு
உணவில்லையெனில்
நிற்பதுவே…
நடப்பதுவே…
பறப்பதுவே…
நீங்களும்
ஒரு நாளில்
அடுத்த வேளை
உணவாகலாம்.
யாமறிந்த மொழிகளிலே
தமிழ் மொழி போல்
கண்டவன்
வாய் வைத்து
கண்றாவி
ஆன இனிது
எங்கும் காணோம்.
காக்கை குருவி
எங்கள் ஜாதி
செத்த எலியுடன்
தவசப் பிண்டம் சாப்பிட்டு
கரண்ட் கம்பிகளில்
கருகிப்போக…
கருவக் காட்டில்
கவட்டை வீச்சுகளில்
கல்லடியில் சிதறிப்போய்
செத்துப் போக…
எத்தனை கோடி முகமுடையாள்
அத்தனையும் பேடிப் பிணமுகமாய்
சிந்தனை பதினெட்டாகி
செருப்படிச் சண்டை
செப்பும் மொழிக்காய்.
விடுதலை…விடுதலை…விடுதலை…
அயோக்கியருக்கும்
அராஜகருக்கும்
ஆயுசிற்கும் விடுதலை !
அக்கிரமத்திற்கும்
அநியாயத்திற்கும்
ஆனந்தமாய் விடுதலை !
விடுதலை…விடுதலை…விடுதலை…
ய்ம்மா
பராசக்தி
பயப்படாதே…
பழகிக் கொள் !
———-
kavingarnepolian@yahoo.com.sg
- நான்
- தன்னேய்ப்பு
- ஆகஸ்டு-15
- நலம்
- தெரிந்தாலும் சொல்லாதிரு
- காற்று –வீடுகுறித்த என் ஏழாவது கவிதை
- கடலில்
- முகங்கள் – அலென் வியோம் – கவிஞர் வைத்தீஸ்வரன்
- தமிழ் சினிமா.. உல்டா படலம்…
- கருணாநிதியும் நவீன தமிழ் இலக்கியமும்
- முப்பருண்மையோடு நீர்கீழ் நிழலும் பிரும்மராஜன் எழுத்தும்
- எனக்குப் பிடித்த கதைகள் – 87-குகைக்குள் ஒரு பயணம்-ஆர்.ராஜேந்திரசோழனின் ‘கோணல் வடிவங்கள் ‘
- அடையாளம்
- மாலதி கவிதைகள்
- பாரதீ
- நான்
- நிலை
- புரிசை கண்ணப்ப தம்பிரான் நினைவில்
- பி.ச.குப்புசாமி கவிதைகள்
- வேலைக்காரன்
- பாரதியார் பாதையில்….
- என் கந்தல்
- சீதனச் சிறையுடைப்போம்
- சரிவில் ஒரு சிகரம்
- கவிதைகள்
- ஆராய்ச்சியாளர்கள் மாரடைப்புக்கான முதன்மை ஜீனைக் கண்டறிந்துள்ளார்கள்
- இந்தோ-ஐரோப்பிய மொழிகளுக்கு அனடோலிய வேர்கள்
- பனிப்பாறைகள் உருக உருக பல கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை எதிர் கொள்கிறார்கள் –
- ஜெயகாந்தனின் அரசியல் முரண்பாடுகள்
- ‘முரசொலி ‘ மாறன் (1934-2003)
- சமற்கிருதம் வாங்கலியோ சமற்கிருதம்
- கடிதங்கள் – நவம்பர் 27,2003
- அம்பி
- தொழில்
- யானை
- மேட் ரிக்ஸ் டே..
- கனவின் கால்கள் – பாகம் 2
- காய்ச்சல்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்து நான்கு
- குறிப்புகள் சில-27 நவம்பர் 2003-பாரம்பரிய நெல் வகை-உலக மக்கள் தொகை-தேகம் திரைப்படம்-தமிழில் என் வலைக்குறிப்பேடு
- வாகோ சோகக்கதை (1994)
- பிரபஞ்சத்தின் ஏழு அற்புதங்களை விளக்கிய இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc. [பி-1938]
- கவிமனம்
- நல்நிலம்
- திண்ணைக்கு ஒரு கவிதை வைரமுத்துக்களின் வானம் – 10
- நெல்லையப்பன் போல
- பெயர்ச்சி பெயர்ச்சி பெயர்ச்சி
- பிரச்னை
- இவன் யுவராஜன் போலே
- மொழியின் அலகு
- கண்டதும் கொண்டதும்
- ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 1
- விடியும்!(நாவல்) – (24)