இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 36 in the series 20030911_Issue

செம்மல்.க


உயிர் முளைத்தல்
———————–
* எனக்கும் கவிதை எழுதிடத் தோன்றியது
தேங்க்கிடந்த உன் நினைப்புகளை எடுத்து வைத்தேன் தாளில்
கவிதைகொண்டும் உன்னை மொழி பெயர்க்க முடியவில்லை

* தற்செயலாக எட்டிப்பார்க்கிறேன் ஜன்னல்வழி
இன்று ஏனோ என் தோட்டத்தில்
சற்று கூடுதலாக பட்டாம்பூச்சிகள்…

* உயிர் முளைத்த உன் நினைப்புகளாக.


இன்னொருமுறை.
————————
*நாளை உனக்குப் பிறந்த நாள்
உனக்காக எழுதப்பட்ட வாழ்த்துமடல்
எங்கோ என் புத்தகங்களுக்குள்
தேடுகையில் தோன்றியது,
உனக்கு எழுதியவை
எழுதப்பட்ட நிமித்தத்தின் உயிர்ப்புடனே
என்றைக்காவது எனக்குச் சொல்லிப்போகட்டுமே
உன் நினைப்பை
இன்னொரு முறை…

செம்மல்.க
moongilkaadu@yahoo.co.in

Series Navigation

author

செம்மல்.க

செம்மல்.க

Similar Posts