வாழ்க்கை

This entry is part [part not set] of 42 in the series 20030802_Issue

பா.ஸ்ரீராம் மயிலாடுதுறை


விரக்தி அடையும்
மனதிற்கு..
ஒருத்தர் கூட
ஆறுதல் இல்லை.

அறிவுரைகள் ஆயிரம்
எடுத்து கூற எத்தனையோ பேர்.
உதவி செய்ய யோசிப்பான்
கதவினை சாத்திப்பான்.

முன் பிறவி தீவினைதான்
முன்னேற தடையென்பான்.
பரிகாரம் பல சொல்வான்
குறி பார்த்து வழி சொல்வான்
அவன் குறி எல்லாம்
பணத்தின் மேல்…

அழகான சொற்களினால்
அர்ச்சணைகள் செய்திடுவான்.
பழகிய மனிதனைப் போல்
பாராட்டி பேசிடுவான்.

உறவுகளும் உறவாடும்
வரவு வர வாழ்த்து சொல்லும்
செலவு என்று சென்று நின்றால்
இழவு என்று இகழ்ந்து கூறும்.

இதுதான் வாழ்க்கை என்று
எளிதாக எடுத்துக் கொள்
இதிலே போய் இடிந்து நின்றால்
வலியை தவிர எதுவும் இல்லை.

பா.ஸ்ரீராம்
மயிலாடுதுறை

Series Navigation

author

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை.

Similar Posts