அரசியல்

This entry is part [part not set] of 49 in the series 20030724_Issue

பொன்னி வளவன்


பாருக்குள்ளே நல்ல நாடு
நம் பாரத நாடு என்றான் பாரதி
ஆனால்
பாருக்குள்ளே ஓர் நாடு
அது பாழ்பட்ட நம் பாரத நாடு
என்று பாடுமளவுக்கல்லவா
செய்துவிட்டார்கள் இந்த
பாழாய்ப்போன அரசியல்வாதிகள்!

நாட்டின் முன்னேற்றம்,
மக்கள் நலன் அப்படியென்றால்
விலை என்ன ? என்பவர்கள்தான்
இந்நாட்டின் அரசியல் தலைவர்கள்.

பதவி என்ற பேயின்
கோரப்பிடியில் சிக்கிக்கொண்டு அதன்
கட்டளைக்கு எப்படியெல்லாம்
பணிகிறார்கள் இந்த பரதேசிகள்.

சமூக விரோதிகள், ரவுடிகளின்
கூடாரமாகிப்போன
அரசியல் கட்சிகள்!

ஜாதிகள் இல்லையடி பாப்பா
என்று பாடினான் பாரதி.
ஜாதிகள் பெயரில்
பிரிவினை ஏற்ப்படுத்தி
ஓட்டுகள் வாங்க நினைக்கும்
கும்பல் ஒருபுறம்,

ஒன்றே குலம், ஒருவனே தேவன்
என்று கூறினர் ஆன்றோர்
ஆனால்
மதங்களின் பெயரில்
பிரிவினை ஏற்ப்படுத்தி
ஓட்டு வாங்கத் துடிக்கும்
கும்பல் ஒருபுறம்,

ஆயுதம், கப்பல் பேர ஊழல்
என்று பட்டியல் போட்டு
கொள்ளையடித்த கும்பல்
ஆசையாய் நிற்கின்றனர்
அடுத்தகட்ட
அறுவடையை எதிர்பார்த்து!

ஊழல் என்ற சொல்லை
முதன் முதலில்
தமிழ்நாட்டில்
பிரபலமடையச் செய்த
தலைவர் அவர்.
இன்றோ
தனது கட்சியின் கொள்கைகளை
காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கின்றார்
தன் வாரிசுகளுக்காக!

காமராசர், அண்ணா போன்ற
தன்னலமற்ற தலைவர்கள்
ஆட்சிபுரிந்து
பெருமை தேடித்தந்த
முதல்வர் பதவியில்
இன்று இருப்பவர் யார் ?
சினிமா என்னும் சாக்கடையில்
நீந்தி மகிழ்ந்த
ஒர் அகம்பாவம் பிடித்த மீன்!
அதற்கு முன்னால்
கைகட்டி, வாய் பொத்தி,
வணங்கி, வளைந்து
நிற்கும் வெட்கம்கெட்ட
உதிர்ந்த ரோமங்கள்!
அப்பெண்மணிக்கு உறுதுணையாக
ஓர் கொள்ளைக்கார கும்பல்.
வாணத்து தேவதயையே
நேரில் பார்த்துவிட்டதுபோல் மகிழும்
பாழாய்ப்போன
படிப்பறிவில்லா மக்கள்.

கண்ணிருந்தும் குருடர்களைப்போல்
வாழும் நம் மக்கள் இருக்கும்வரை
இந்த நயவங்சக அரசியல்வாதிகள்
ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள்.
எம் மக்கள் எப்பொழுதுதான்
விழித்து எழப்போகிறார்களோ ?

***
Ravichandran_Somu@yahoo.com

Series Navigation

author

பொன்னி வளவன்

பொன்னி வளவன்

Similar Posts