நான்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

அனந்த்


‘பஞ்சபூதங்களால் ஆன
இவ்வுலகில்
உன் உடல்
அன்னமயம் ஆனது ‘ என்று
அறைகூவும்
உபநிஷத்துகள்.

ஆம்,
நான் உணவாகவே
உள்ளவன்

வானிலிருந்து வீழும் மழையால்
விளைந்த பயிரால்
விளைந்தவனே நான்

என் எழிலும்
குணமும், மணமும்
எல்லாமே தந்தவன்
நீ

நீ நானாகலாம்
ஆனால்…
நான் நான்மட்டும் தான்

உனக்கு என்னைப்
படைப்பதில் தான்
என் நிறைவைக் காண்பேன்.

—அனந்த்

(இது ஒரு வடஇந்திய உணவகத்தில் நானை உண்ணும்போது எழுந்த உணர்ச்சிக் கவிதை!:)

Series Navigation

author

அனந்த்

அனந்த்

Similar Posts