மனம்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 37 in the series 20030530_Issue

ஸ்ரீராம்


தெளிவான குழம்பிய குட்டை
தன்ண்ள்ளே அலைபாயும் கருங்கடல்
தேவையானதை அலைகழிக்கையில் பகைவன்
சில சமயத்தில் உதவுகையில் நண்பன்
உதவினால் தான் நண்பனோ ? ? ?

சம்பவங்களை தேக்கி வைக்கும் ஓர் வங்கி
புத்தியை சில சமயம் புத்தியில்லாமல் செய்யும் நேர்த்தி
நிகழ்வுகளை அசைபோட்டுக் கொண்டு இருப்பவன்
கத்தியின்றி ரத்தமின்றி மாய்க்கும் சக்தி கொண்டவன்
காதலுக்கு உற்ற நண்பன், பல காதலுக்கு பகைவனும் இவனே….

உடலின் முக்கிய பாகம் இருதயம்
அந்த இருதயத்தை ஆட்சி செய்யும் முதல்வன்
ஆசை இவனின் செங்கோல்
சம்பவங்கள் இவனின் படைவீரர்கள்
ஓர் நிலையாய் இருக்கையில் இவன் தான் என்றும் முடிசூடா மன்னன்.

slib@rediffmail.com

Series Navigation

author

ஸ்ரீராம்

ஸ்ரீராம்

Similar Posts