இரண்டு கவிதைகள்

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

புதியமாதவி, மும்பை.


குடும்ப விளக்கு

சூரிய வெளிச்சத்தை
கடன் வாங்காத
மின்மினிகள்!

விளக்கு மாடத்தை விட்டு
வெளியில் வராத
வெண்ணிலவுகள்..!!

மின்சார யுகத்தில்கூட
மண்ணெண்ணெய் ஊற்றி
எரிந்து போகும்
நட்சத்திரங்கள்…..!!!!

***

மின்னல் இருட்டு

தாயே –
உன் கர்ப்பகிரஹம்
இருட்டாக இருக்கிறது..
என்னை-
அணைத்துக்கொள்!

என்னைச்
சுமந்து கொண்டு
எங்கே ஓடுகின்றாய்.. ?

உன் சூரிய விளக்குகள்
அணைந்த போது
பூமியின் கருவறையைத்
தீண்டிய
மின்னல் இருட்டு நான்..

இந்த இருட்டுக்குள்
என் வாசம்
தொடரும்வரைதான்
நீயும் நானும்
தாயும் பிள்ளையும்..
இந்த இருட்டை
உடைக்கும்
என் –
பிரசவ வெளிச்சத்தில்
நீ யாரோ .. ?
நான் யாரோ… ?

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

author

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை

Similar Posts