உயிர்ப்பு

This entry is part [part not set] of 29 in the series 20030119_Issue

வசீகர் நாகராஜன்


என் சுவையறிந்து,
அளவாய்க் கலக்கின
தெருமுனைக்கடைத் தேநீர் !

தினசரி பேருந்து
ஜன்னலேரோப் பெண்ணின்
சிநேகப் புன்னகை !

யாரும் விதைக்காமல்
தோட்டத்தில் துளிர்விட்ட
பாகற்காயின் இனிமை !

அந்நிய தேசத்தில்
எதிர்பாராது செவிப்படும்
அவரவர் தாய்மொழி !

மழையும்,வெயிலும்
சேர்ந்தடித்த இளமாலையின்
மயக்கும் வானவில் !

தன் உணர்வே வார்த்தையாகையில்
பூவாய்த்
தைத்திடும் கவிதை !

மனதின் தாழ் களைந்து
நானே நானாய்
மாறியழ இரு தோள் !

உணரும் சில கணம்,
உயிர் மலரும் மறுபடியும் !

vasikar@yahoo.com

Series Navigation

author

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)

வசீகர் நாகராஜன் - ஆங்கில மூலம் : லேங்ஸ்டன் ஹுயுக்ஸ் (1902-1967)

Similar Posts