பொங்கல்

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

விஜய் ஆனந்த் சி.


உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்த மண்ணில்
இன்று உழவனின் உடல் உரமாகிறது
‘சோழநாடு சோறுடைத்து ‘ என்று பாடிய ஊர்களில்
உணவில்லாமல் உழவன் தேகம் சாய்கிறது
விருந்தோம்பலில் சிறந்து விளங்கிய தமிழன் வீட்டில்
தன் வயிற்றுக்குக் கூட உணவில்லா நிலை வந்தது
மூன்று போகம் விளைத்த உழவன் நிலத்தில்
ஒறு விளைச்சல் கூட வராமல் பொங்கல் வந்துவிட்டது!

மண்ணை பொன்னாக்கிய பொன்னி நதியை கன்னடன் கட்டிபோட்டுவிட்டான்
அவளை விடுவிக்க வீரப் புதல்வர்கள் இங்கில்லை
அக்காலத்து மன்னாதி மன்னர்கள் இன்றில்லை

நீர்த்தேக்கங்களை நிரப்பும் பருவமழையும் பொய்த்துவிட்டது
அதை பாடி அழைக்க புலவர்கள் இன்றில்லை
சோழமண்ணில் ஊரெல்லாம் இருக்கும் சிவனருள் பெற்ற அடியவரும் இல்லை

ஊரெல்லாம் தனக்கு கோயில்கட்டி
தவறாமல் விழா எடுத்தவனை
காப்பாற்ற ஈசனுக்கு கூட மனமில்லை

ஆயிரம் தொழில் இருந்தாலும் இதுதான் முதன்மை
உழவு இல்லையேல் இல்லை நம் வாழ்க்கை

ஒரு விளைச்சல் கூட பார்க்காமல்
ஒரு போகம் கூட விளையாமல்
அதற்காக பட்ட கடணை அடைக்காமல்
உண்ண உணவில்லாமல்
வாடித் தற்கொலை செய்யும் உழவர் இருக்கும் நிலையில்
தமிழனுக்கு வேண்டுமா இந்தப் பொங்கல் ?

vijayanandc@hotmail.com

Series Navigation

author

விஜய் ஆனந்த் சி.

விஜய் ஆனந்த் சி.

Similar Posts