பூவின் முகவரி

This entry is part [part not set] of 37 in the series 20030104_Issue

-ஆ.பா.அருண் கணேஷ்


ஓயாது யுத்தம் துரத்த
ஓடி ஒளிந்தது
என் குழந்தைப் பருவம்

குண்டுகள் உமிழ்ந்த சத்தம்
செவியில் படும் முன்பே
குடும்பங்கள் காலாவதியாயின

துப்பாக்கி சேவல் கூவினால் மட்டுமே
விடியல்…
எங்கள் ஊரில்

பொம்மைகளை தொடும் முன்பே
என் தலையணை கீழே துப்பாக்கி

சிதைந்த உடல்களை ஒன்று சேர்த்தே
கூட்டல் கணக்கு கற்றுக் கொண்டேன்
பாடசாலைகள் படிக்க அல்ல
பதுங்க மட்டுமே

அதோ…
உடல் கழட்டிய தலையில்
இரண்டு காலான்கள்
பட்டாம்பூச்சியின் சிறகில்
இரத்த ஓவியங்கள்

என் தாயின் முகவரி தெரிந்தால் சொல்லுங்கள்
பூவின் முகவரி மட்டும் கேட்காதீர்கள்
என் ஈழத்தில் பூக்கள் பூத்து
ஆண்டுகள் பலவாகிவிட்டன.

Series Navigation

author

ஆ.பா.அருண் கணேஷ்.

ஆ.பா.அருண் கணேஷ்.

Similar Posts