நிலவு

This entry is part [part not set] of 24 in the series 20021201_Issue

பிரியா ஆர்.சி.


பாவலனுக்கு மட்டும் அல்ல
பாமரனுக்கும் பிடித்த ஒன்று
கவிஞனை மட்டும் அல்ல
கல்லாதவனையும் கவர்ந்த ஒன்று

பாடல்கள் பலதந்த நிலவிடம்
நாம் கற்றுக்கொண்ட பாடம் என்ன ?

இரவல் வெளிச்சம் வாங்கியாவது
உலகுக்கு ஒளியூட்டும் நிலவு
இருக்கும் செல்வத்தை இல்லாதவனுக்கு
கொடுக்கத் தூண்டியதுன்டா ?

ஒவ்வொறு மாதமும் தேய்ந்தாலும்
முயன்று முழுதாய் மலரும் நிலவு
தோல்விகள் பல கண்டாலும்
துவளாமல் முன்னேற உணர்த்தியதுண்டா ?

மலையிலும் மடுவிலும் பாரபட்சமின்றி
ஒளி வீசும் நிலவு
பாரபட்சமின்றி அனைவரிடமும்
அன்பு பாராட்ட போதித்ததுண்டா ?

தாலாட்டுக்கும் காதலுக்கும் மட்டுமல்ல நிலவு
தந்நம்பிக்கைக்கும் கூடத்தான்!

பாமரனை பாடவைக்கும் நிலவு
பாடல்களை மட்டும் அல்ல
பாடங்களையும் சேர்த்துத்தரும் நிலவு!

rcpriya@yahoo.com

Series Navigation

author

பிரியா. ஆர். சி. ...

பிரியா. ஆர். சி. ...

Similar Posts