பிராட்டி(வேதா)
நீ
கடந்த பின்பு
காலியான சாலையில் – உன்
காலடி ஓசை தேடிய நான்!
நீ
எழுந்த பின்பு
உதிர்ந்து விட்ட கடற்கரை மணலில்
உன் பாதச் சுவடு தேடிய நான்!
நீ
பேசிய பின்பு
கரைந்து விட்ட காற்றில் – உன்
குரலதிர்வு தேடிய நான்!
நீ
சிரித்த பின்பு
சிதறிய அலைகளில்
சிந்திய பனித்துளி தேடிய நான்!
நீ
பார்த்துவிட்ட பரவசத்தில்
பதைபதைப்பில் பருவம் உணர்ந்த நான்!
நீ
முடிக்காத கவிதையின்
கடைசி புள்ளியில்
முழுவதுமாய் என்னை
தொலைத்துவிட்டுத் தேடிய நான்!
‘நான் ‘ இழக்காத நான்,
நானாகவே திரும்ப வேண்டும்,
தருவாயா நீயாகவே ?
-பிராட்டி(வேதா)
a_manavazhahan@hotmail.com
- வேதாளம் கேட்ட கதை
- இன்று நாமும் குழந்தையும்
- அறிவியல் மேதைகள் வோல்டா (Volta)
- அணுயுகப் புரட்சி எழுப்பிய ஆஸ்டிரிய மேதை லிஸ் மையிட்னர்[Lise Meitnar](1878-1968)
- வெற்றிடத்தை அறிதல் குறித்து
- தப்பிக்க இயலாத பொறி (எனக்குப் பிடித்த கதைகள்- 38 -தி.ஜானகிராமனின் ‘கண்டாமணி ‘)
- Europe Movies Festival
- வேண்டுதல்
- பனி
- உலகம் உன்னை….
- காலமும் பயணியும்
- நிலவு
- நான் நானாக …ஒரு வரம்
- அநாதை
- இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 1, 2002) (எய்ட்ஸ் தினம், ஈராக் விவகாரம், அபு அப்ரஹாம்)
- Europe Movies Festival
- கள்ளர் சரித்திரம்
- கைது செய்யப்பட்ட விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்களை விடுதலை செய்யவேண்டும்
- இவள் அவளில்லை ?.
- முக்கால் வயது முழுநிலவு
- அப்பா!
- தாமதம்
- சர்க்கரை
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது 6