தெரியாமலே

This entry is part [part not set] of 30 in the series 20020917_Issue

இ.இசாக்


இரவு கடைசியாக வரும் பேருந்தில்
வருவார் வேலையிலிருந்து
தினமும்
அந்நேரம்
தூங்கிப்போயிருப்போம்
நாங்கள். ?

விடியுமுன்
வெளியேறியிருப்பார் வேலைக்கென
முதல் பேருந்தில்
போகும்போதும் பார்க்கமுடிவதில்லை
எங்களால்.

ஒழுகி
ஒழுகி
ஒழுகி
கரைப்ப்டிந்திருக்கும்
எச்சிலோடு இனிப்பும்
தலையனை முழுக்க!

எங்களோடு
பேசினாராம் சாப்பிட்டாராம்
காலை
எரும்புகள் சொல்லி தெரியும்.

எங்களுக்கேத்தெரியாமல் எங்களோடு
வாழ்ந்துவிட்டுப்போயிருக்கிறார்
அப்பா
பல நாட்கள் !
***
thuvakku@yahoo.com

Series Navigation

author

இ.இசாக்

இ.இசாக்

Similar Posts