ஆனந்தன்
அழகிற்குத் தவமிருந்தேன்..
அன்பாய் நீ வந்தாய்…
பன்பிற்காய்ப் பார்த்திருந்தேன்
பாசத்தில் நீ அரவணைத்தாய்….
சிந்தனையில்
சிலை வடித்தேன்,
சிற்பியாய்…
கற்பனையில்
கவி படைத்தேன்,
கவிஞனாய்…
அந்த பிரம்மனையும்,
கம்பனையும்
மிஞ்சி விட…
என் தேவதையாய்
உனைக் காணும் முன்.
சிறு குறும்புகள் செய்து
சிறு பிள்ளையானேன்!
சச்சரவுகள் செய்து
சிறு சண்டைகளிட்டேன்….
எப்பொழுதும் புன்னகை சிந்தி
எனை ஆட்கொண்டாய்…
விட்டுக் கொடுத்தலுக்கு
தண்ணீர் குடிக்காமல்
உயிர் துறந்த
கதையில் வரும்
மான்கள் மட்டும் அல்ல,
கண்ணே…
நாம் கூட
ஓர் உதாரணம் தான்!
புன்னகை பூத்த – உன்
முகம் தெரிந்தால் – என்
கோபம் கூட
கோணி நிற்கும்…
காமதேனும் தேவையில்லை
என் அருகே
நீ இருந்தால்..
ஆனந்தன்
k_anandan@yahoo.com
- நான்காவது கொலை!!! (அத்தியாயம் : இரண்டு)
- விண்ணோக்கிக் கண்ணோக்கும் ஹப்பிள் தொலை நோக்கி
- அறிவியல் மேதைகள் -இப்போகிரட்ஸ் (Hippocrates)
- வங்காள முறை பாகற்காய் கறி
- தன்படை வெட்டிச் சாதல் [தளைய சிங்கம் விமரிசனக்கூட்டப் பிரச்சினை பற்றி]
- எளிமையின் உறையும் மேன்மை (எனக்குப் பிடித்த கதைகள் – 22 -ஸெல்மா லாகர்லாவின் ‘தேவமலர் ‘)
- தேவதேவனின் வீடு :ஒரு குறிப்பு
- ‘திண்ணை ‘க்கு ஒரு குறிப்பு.
- கொள்கை பரப்புதலில் கொங்கை பற்றிய கோட்பாடுகள்…
- கோலத்தைப் புறக்கணித்த புள்ளிகள்.
- இலையுதிர் காலங்கள்
- மனைவி…
- கல்வெட்டுகள்
- வந்ததும் சென்றதும்
- பிரம்ம புரம்
- இந்த வாரம் இப்படி – ஆகஸ்ட் 12 2002
- உலக நாடுகளின் கடன் – ஆரம்பமும், தொடர்ச்சியும் – ஒரு எளிய முன்னுரை – பகுதி 3
- இந்திய மார்க்சீயமும் அம்பேத்காியமும்
- என்னவள்
- வீடு வேண்டி
- ஒரு ஜான் வயிரும் சில கோரிக்கைகளும்.
- தேவதேவன் கவிதைகள் : வீடு
- ஆத்ம தரிசனம்
- தீ, திருடன், சிறுத்தை
- என் வேலை
- சின்னச்சின்ன ஆசை