மழை.

This entry is part [part not set] of 23 in the series 20020602_Issue

எஸ்.வைதேஹி.


மண்ணைத் தொடும்
முன்பு
கிளறி விடும்
வெப்பத்தையும்,
ஆற்றிவிடும்
மரங்களின் தலைகளையும்.

பிசுபிசுத்து ஒட்டும்
காற்றின் அழுகைகள்
கையில்.

குளித்து முடித்திருக்கும்
விளக்குப் பொதி
நிறைந்த
தீப்பெட்டி கட்டடங்கள்.

கருத்த மேகம்
காட்டும்
நிழல் பிரமைகள்.

***

Series Navigation

author

எஸ். வைதேஹி.

எஸ். வைதேஹி.

Similar Posts