அந்த நாட்கள்

This entry is part [part not set] of 26 in the series 20020428_Issue

ஆனந்தன்


காலையில் எழுப்பி குளியலிட்டு,
தலை சீவி அலங்கரித்து,
பசி தனித்து பள்ளி அனுப்பி
வரும் வரையில் தவம் கிடந்து,
வந்தபின் கலைப்பேடுத்து,
உன்னோடு தானும் படித்து
படிக்காத பட்டதாரியானர்,
பெற்றோர்!

அகத்தின் அழகை
முகத்தில் காட்டாமல்
பொய் சொல்லுவதில்
வல்லவனாகவும்,
பொற்றோனை எமற்றுவதாக
எண்ணி தன்னையே
ஏமாற்றிக் கொண்ட
நாட்களது!

குரிவைத்து கல்லடித்து
மாங்காய் தின்று
தோட்டக்காரனை ஏமாற்றி
வேலி தாண்டி
தப்பி ஓடிய
நாட்களது!

ஊர் சுற்றி நடு இரவில்
கல்லனாய் வீடு திரும்பி
விடிந்தபின்பும் விடியலுக்காய்
சிறு துக்கம் துங்கி
வருகைப் பதிவேட்டில்
முத்திரை பதிக்க
கல்லுரிக்கு ஓடிச் சென்ற
நாட்களது!

வருட இறுதி தேர்வுக்காக
புத்தகம் எடுத்து போதுக் கூட
கனவெனும் சொற்கத்தில்
அவளோடு பேசி
சிரித்தது மதிமயங்கி
தேர்வைக் கோட்டை விட்ட
நாட்களது!

சராசரி மனிதனாக
அந்த நாட்கள் மீண்டும்
வராதா என்று ஏங்கும்
நாட்கள் இது!

Series Navigation

author

ஆனந்தன்

ஆனந்தன்

Similar Posts