அழகு

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 30 in the series 20020414_Issue

வை. ஈ. மணி


அன்புற் றீந்தான் இறைவனவன்
…. அகிலம் முழுதும் அழகினையே
இன்பம் பெறவே மனிதற்கு
…. இரண்டாய் அதனைப் பாகித்தான் (1)

ஒன்று அகமென் றறிந்திடுவோம்
…. ஒப்பில் லாகுணப் பெட்டகமாம்
மின்னல் போன்றே நொடியதனில்
…. மறையும் மற்றது புறத்தழகாம் (2)

புறத் தழகு புலனீர்க்கும்
…. பழகின் அழிவது நிச்சயமாம்
நிறமில் லாஅகத் தழகென்றும்
…. நற்குண மாகத் திகழுமன்றோ (3)

அழகாம் அர்கதை யுற்றோர்க்கு
…. அளிக்கும் நன்கொடை கரங்கட்கு
அழகே தலைக்கு முதியோர்க்கு
…. அன்பு டனாற்றும் பாதசேவை (4)

இழுக் கிலா ஒழுக்கமதே
…. ஈன்றிடும் அழகு மனத்திற்கு
வழுவா துண்மை உரைப்பதுவே
முகத்திற் கழகு தந்தருளும் (5)

***

Series Navigation

author

வை ஈ மணி

வை ஈ மணி

Similar Posts