நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்

0 minutes, 2 seconds Read
This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue


ரஜினிகாந்த் விஜயகாந்த் (பழைய எம்ஜியார் பாணியில்) ரிக்ஷாக்காரன், ஆட்டோக்காரன், பால்காரன் என்று எல்லாத் தொழில்களையும் செய்து நடித்துவிட்டார்கள். புரோகிராமர் சோகங்கள் தெரிந்தால், புரோகிராமராகவும் அவர்கள் நடித்திருப்பார்கள்.
இதுவரை நடிக்கவில்லையாதலால், ஆறுதலுக்கு டைட்டில் பாடலாவது பாடிப்பார்ப்போம்

***

நான் சாஃப்ட்வேர்காரன், சாஃப்ட்வேர்காரன்
நாலும் தெரிந்த பிஸி காரன்
மெயின்பிரேம்ல கோபால்காரன்
இண்டர்நெட்டில ஜாவாக்காரன்
கட் அண்ட் பேஸ்ட் வேலைக்காரன்
லாஜிக்குள்ள மூளைக்காரன்டா
நான் எப்பவுமே பாடி ஷாப்பர் உறவுக்காரன்டா

ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்

ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்
—( நான் சாஃப்வேர்காரன்..

ப்ராஜக்ட் பெரிசாச்சி
கோடு பெரிசாச்சி
பக்-கு எதிர்பார்த்து பாதி வயசாச்சி
ரிவியூ படிப்பதுக்கும் நேரத்திலே

ஈ-மெயில் விண்டோ ஓரத்திலே
ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்

ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்
—( நான் சாஃப்வேர்காரன்..

நான் ஹெச்-ஒன்னு இலவசமா போறேம்மா
உன் பிள்ளைக்கொரு
பி-ஒன்னு வாங்கித் தாரேம்மா
நம்பி வந்து பாரு
இது நம்ம சாஃப்வேரு
மைக்ரோசாஃப் புராடக்டு
விண்டோசுன்னு பேரு

நான் சாஃப்வேர்காரன்..சாஃட்வேர்காரன்
பேக்கெண்டில டிபிக்காரன்
ஃப்ரண்ட் எண்டுல விபிக்காரன்
ஓஎஸ்ஸில எண்டிக்காரன்
மைக்ரோசாஃப் மெளஸ்காரன்
இண்டெர்நெட்டில டிசிபி ஐபிக்காரன்

ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்


ஐஎஸ்ஓ ஆடிட்டில் ஆபத்தில் விடமாட்டேன்
சிஎம்எம் லெவல் 4ஐ மாட்டேன்னு சொல்லமாட்டேன்
அப்பப்போ போரு
அடிச்சாக்கா ஹாட்மெயிலு
அக்ஸெஸ் லைன் எல்லாம் டெடிக்கேட்டடு

ஒய்டுகேன்னா அஜக்குத்தான்
ஒய்டுகேன்னா குமுக்குத்தான்

— நான் சாஃப்வேர்காரன்..சாஃட்வேர்காரன்

Series Navigation

author

செய்தி

செய்தி

Similar Posts