மெளனம்

0 minutes, 0 seconds Read
This entry is part [part not set] of 30 in the series 20020302_Issue

ஞானமணி


சில மெளனங்கள் புரிந்துகொள்வதற்காக
நிறைய பேசியதுண்டு

சில பேச்சுகளை நிறுத்துவதற்காக
மெளனமாய் இருந்ததுண்டு

பேசுபவர்கள் எப்போதாவது
நிறுத்திவிடுகிறார்கள்…

மெளனங்கள் தரும் தொல்லைதான்
நிரந்தரமாய்…

சில நேரங்களில் மெளனங்களே
எனக்கு சம்மதம் இல்லை-(எனவே)
மெளனம் சம்மதம் என்பது
சுத்தமாய் புரியவில்லை…

மெளனங்களை மெளனங்களால்
புரிந்து கொள்ளலாமென்று
மெளனமானதில்-புரிகிறது
இன்றுவரை என்னை நானே
புரிந்துகொள்ளவில்லையென்று…!

Series Navigation

author

ஞானமணி

ஞானமணி

Similar Posts