புஹாரி, கனடா
அம்மா…
இந்த உலகம் சிறியது…
உன் பாசம் மட்டுமே
பெரியது…
என்
நாவசையும் முன்பே
நீயொரு
பாஷை கற்றுத்தந்தாய்…
அதுதான்
அன்பு என்னும்
இந்த உலக பாஷை…
உன்
கைகளுக்குள் புதைந்து
இந்த
உலகத்தை நான்
எட்டிப் பார்த்தபோது…
எல்லாமே எனக்கு
இனிப்பாய்த்தான் இருந்தது…
O
பொழுதெல்லாம்
உன்
முத்த மழையில்
என்
உயிரை நனைத்தப்
பாச அருவியே…
நீ
என்றென்றும்
எனக்காகவே
கறுத்துக் கிடக்கும்
மழைமேகம் என்று
சொன்னாலும்
என்
எண்ணம் குறுகியது…
என்
கண்களில்
வெளிச்சத்தை ஏற்றவே
உன்
மேனியைத்
தீயில் உருக்கும்
மெழுகுவர்த்திப் பிறவியே…
நான் வசித்த
முதல் வீடு
உன்
கருவறையல்லவா…!
நான் உண்ட
முதல் உணவு
உன்
இரத்தத்தில் ஊறிய
புனிதப் பாலல்லவா…!
நான் கேட்ட
முதல் பாடல்
உன்
ஆத்மா பாடிய
ஆராரோ
ஆரிரரோ வல்லவா…!
நான் கண்ட
முதல் முகம்…
பாசத்தில் பூரித்த
உன்
அழகு முகமல்லவா…!
நான் பேசிய
முதல் வார்த்தை
என்
ஜீவனில் கலந்த
‘அம்மா ‘ வல்லவா…!
நான் சுவாசித்த
முதல் மூச்சு
நீ இட்ட
தேவ பிச்சையல்லவா…!
O
வாய்க்குள் உணவு வைத்து
நான்
வரும்வரைக் காத்திருக்கும்
பாச உள்ளமே…
என்
பாதங்கள்
பாதை மாறியபோதெல்லாம்
உன்
கண்ணீர் மணிகள்தாமே
எனக்கு
வழி சொல்லித்தந்தன…
உனக்காக நான்
என்
உயிரையே தருகிறேன்
என்றாலும்
அது நீ
எனக்காகத் தந்த
கோடானு கோடி
பொக்கிஷங்களில்
ஒரே ஒரு
துளியை மட்டுமே
திருப்பித் தருகிறேன்
என்னும்
நன்றி மறந்த
வார்த்தைகளல்லவா…!
——————————
buhari2000@hotmail.com
- சர்க்கரை.ஆஸ்கார்.சர்க்கரை
- கணினியும் மொழிகளும் – அமுக்கப்பட்ட (Zipped) கோப்புகளை ஆராய்வதில் மொழியியல் முன்னேற்றங்கள்
- பல பருப்பு கார கூட்டு
- கீரை பருப்புக் கூட்டு
- மீண்டும் ‘தீம்தரிகிட ‘ வெளிவருகிறது.
- கலாச்சாரம் செவ்வியல் இன்னபிற : மாலனுக்கு பதிலாக சில …
- பிறவழிப் பாதைகள் (மொழி பெயர்ப்புகளின் பொற்காலம், மீண்டும் விஷ்ணுபுரம் )
- எனக்குப் பிடித்த கதைகள் – 2 – லியோ தல்ஸ்தோயின் ‘மோகினி ‘ (குழப்பமும் தெளிவும்)
- காமத்தில் களிறும் கண்ணகியர்…(அல்லது) புதுமைத் தமிழனின் காதலர் திருநாள் சூளுரை…
- காதல் வீடு
- அம்மா
- தவம் கிடக்கட்டும் ஆண்மை
- சிறை
- எங்களின் தேசம்
- துகள்களின் மாயா பஜார் ( Quarks )
- செடிகள்
- அம்மாவின் கணவர்
- கிளிப் பேச்சு கேட்க வா
- “வந்திட்டியா ராசு!”
- அப்துல் கஃபார் கான் : அறியப்படாத அமைதிப் புறா
- தென்னாப்பிரிக்காவின் தமிழ்ப்பாடகி மஹேந்திரி பிள்ளை
- சங்கம் எனது ஆன்மா
- சிரிப்பு வருது : கேலிக்கு எதிரான மனுஷ்ய புத்திரனின் பார்வை
- நேபாளியப் பெண்கள், கருத்தடையை சட்டரீதியாக்கக் கோரி போராடுகிறார்கள்
- ஜனநாயக திருவிழா
- காதல் கடிவாளம்
- தோழிமார் கதை
- கூரை எரிந்ததில் நிலவை ரசிக்கும் நான்…
- சாட்சி பூதம்
- தாயே தமிழே வணக்கம்!
- அபார்ஷன்