ப்ரட்டின் பெருமை!

This entry is part [part not set] of 21 in the series 20020120_Issue

கோமதி கிருஷ்ணன்


‘ப்ரட்டே! ‘ அருமை ‘ப்ரட்டே! எங்கும் இருக்கும் நீயே!
எல்லோருக்கும் உகந்த நீயே!
அனைவருக்கும் படி அளக்கின்றாய்!
நீதான் எத்தனை விதம் ? எத்தனை நிறம் ? எத்தனை ருசி ?
எத்தனை ரூபம் ? எத்தனை மணம் ?!

எங்கும் நிறைந்தனையே! என் அகத்தும் iருக்கின்றாய்!
‘ஒயிட் ‘ ப்ரட்டும், ‘வீட் ‘ ப்ரட்டும், ‘ப்ளெய்ன் ‘ ப்ரட்டும்,
‘ப்ரூட் ‘ ப்ரட்டும், ‘கார்லிக் ‘ ப்ரட்டும்,
‘ரெய்ஸ்ன் ‘ ப்ரட்டும், ‘மாடர்ன் ‘ ப்ரட்டும், iன்னும் எத்தனையோ!

சோம்பேறிக்கு ‘வெறும் ‘ ப்ரட்டு;சிறுவனுக்குப் பாலுடன் ப்ரட்டு,
மாணவனுக்கு ஸான்ட்விச் ப்ரட்டு; அக்காவுக்கும், அப்பாவுக்கும்,
‘பீநட் பட்டருடன் ‘ ப்ரட்டு,

அம்மாவுக்கோ முதல் நாள் மீந்த பொரியல், கூட்டு, கறியுடன் ப்ரட்டு.
‘பர்த்தாவுடனும் ‘ ஒட்டுவாய்; ‘ஜாமுடனும் ‘ சேருவாய்,
‘கெச்சப்புடனும் ‘ அமருவாய்; iன்னும், பல உரு, மாறுவாய்
‘கடலைமா ‘, அரிசிமா, மிளகாய்த்தூள், காயத்தூள், உப்புடன் கரைந்த கரைசலில்,
மூழ்கி குளித்து காய்ந்த, எண்ணையில் குதித்து வெந்து பஜ்ஜி ஆவாய்!
காய்ந்து போனால், உடைபட்டு, உப்புடன், iஞ்சி, பச்சை மிளகாயுடன்,
‘பழரஸத்துடன் ‘, பிசிறப்பெட்டு, கடுகு, கடலை பருப்பு, தாளிக்கப்பட்டு,
உப்புமாவானால்
ஆஹா!!! பலே, பலே ருசி!

பழசானாலும், உன்னால் உய்வார், எங்கள் தோட்டத்து குருவிக்கூட்டமும்.
கறுப்பு, ‘புஸ்ஸி ‘வால் அணில்ஜோடியும்.

அருமை பிரட்டே! ஆசை பிரட்டே!
உன்னைப்போல் யாராகிலும், எங்கும் நிறைந்தவர் உண்டோ ?
உன்னை பெற்றெடுத்த, (மூளையில்) புத்திசாலிக்கு தாங்க்ஸ்! தாங்க்ஸ்!
(lots of thanks!)

Series Navigation

author

கோமதி கிருஷ்ணன்

கோமதி கிருஷ்ணன்

Similar Posts