அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 7 The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்

This entry is part [part not set] of 29 in the series 20101121_Issue

ஜான் ஹார்ட்டுங்


The Evolutionary Point பரிணாமவியலின் பார்வையில்

400க்கும் மேலான நகரங்கள் இஸ்ரவேலர்களால் முழுவதுமாக அழிக்கப்பட்டன என்று விலாவாரியாக எழுதப்பட்டுள்ளது. இந்த போர்கள் சுமார் 170 வருடங்கள் நடைபெற்று இறுதியில் ஜெருசலத்தில் டேவிடின் வெற்றியுடன் முடிகிறது. ஜெருசலத்திலிருந்துதான் ஜெபுசைட்டுகள் தங்களது நகரமான ஜெருசலத்தை இஸரவேலர்களின் தலைவர்களான ஜோசுவாவிலிருந்து சவுல் வரைக்கும் ஒவ்வொரு தலைவரின் தாக்குதலையும் எதிர்த்து தங்களது நகரத்தை பாதுகாத்தார்கள்.

ஜோசுவாவின் தாக்குத‌லில் வீழ்ந்த‌ இர‌ண்டாவ‌து ந‌க‌ர‌மான‌ அய் (Ai) விழும்போது சொல்ல‌ப்ப‌டும் நிக‌ழ்வுக‌ளில்தான் ம‌னித‌க்கொலை ப‌ற்றிய‌ உள்குழு ஒழுக்க‌மும் வெளிக்குழு ஒழுக்க‌மும் ஒன்ற‌ன்பின் ஒன்றாக‌ வைக்க‌ப்ப‌ட்டு வித்தியாச‌ப்ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து. பைபிளின் ப‌டி, 12000 பேர்க‌ளை கொன்று குவித்த‌ நாளின் போது, போர் முகாமில் வீரர்கள் சூழ நெருப்பருகே அமர்ந்திருக்கும்போது “கொல்லாதே” என்ற‌ க‌ட்ட‌ளை உட்பட்ட‌‌ ப‌த்துக்க‌ட்ட‌ளைகளை ஜோசுவா க‌ல்லில் செதுக்கி வைக்கிறான். (Joshua 8:24-25, 30-32; RSV):

“யோசுவாவும் இஸ்ராயேலரும் நகர் பிடிபட்டதையும், புகை எழும்புவதையும் கண்டபோது திரும்பி வந்து ஆயியின் மனிதரை முறியடிக்கத் தொடங்கினர்.

அப்போது நகரைப் பிடித்துச் சுட்டெரித்த யோசுவாவின் வீரர் ஊரிலிருந்து வெளியேறித் தங்கள் சகோதரர்களுக்கு எதிராக வந்தனர். அப்போது நடுவே அகப்பட்டுக் கொண்ட எதிரிகளை ஒழித்துக்கட்டத் தொடங்கினர். இவர்கள் இருமருங்கினின்றும் தாக்குண்டபடியால் ஒருவர் முதலாய்த் தப்பமுடியாமல் எல்லாருமே மாண்டுபோயினர். ஆயி நகர் அரசன் உயிரோடு பிடிபட்டு யோசுவாவிடம் கொண்டு வரப்பட்டான். பாலைவனத்தை நோக்கி ஒடிய இஸ்ராயேலரைத் துரத்திச் சென்றவர் அனைவரும் அவ்விதமே வெட்டுண்டு ஒரே இடத்தில் வாளினால் மடிந்தனர்.

பிறகு இஸ்ராயேலர் ஒன்று கூடி நகர் மக்களையும் கொன்று குவிக்கத் திரும்பினார்கள். அன்று இறந்தவர்கள் ஆணும் பெண்ணுமாகப் பன்னீராயிரம் பேர் அவர்கள் எல்லாரும் ஆயி நகர்க் குடிகளாவர். ஆயிநகர் மக்கள் எல்லாரும் மடியும் வரை யோசுவா கையை மடக்காமல் தம் கேடயத்தை உயரத் தூக்கிப் பிடித்துக் கொண்டு நின்றார். யோசுவாவுக்குக் கட்டளையிட்டிருந்தபடி உயிரினங்களையும் நகரில் அகப்பட்ட கொள்ளைப் பொருட்களையும் இஸ்ராயேல் மக்கள் எடுத்துக் கொண்டு தங்களுக்குள் பகிர்ந்து கொண்டனர். யோசுவா நகர் முழூவதையும் சுட்டெரித்து என்றென்றும் அது பாழாய்க கிடக்கும்படி செய்தார். அந்நகர் அரசனையும் தூக்குமரத்தில் ஏற்றி மாலையில் கதிரவன் மறையும் வரை அதில் தொங்கவிட்டார். பிறகு யோசுவாவின் கட்டளைப்படி இஸ்ராயேலர் அவ்வரசனுடைய உடலை மரத்திலிருந்து இறக்கி நகர வாயிலில் போட்டு, இன்று வரை கிடக்கும் பெரிய கற்குவியலால் அதை மூடினார்கள். அப்பொழுது யோசுவா கேபால் என்ற மலையில் இஸ்ராயேலின் ஆண்டவராகிய கடவுளுக்கு ஒரு பீடம் எழுப்பினார். ஆண்டவரின் அடியானான மோயீசன் இஸ்ராயேல் மக்களுக்குக் கட்டளையிட்டுத் தம் திருச்சட்ட நூலில் எழுதிவைத்தபடி, அப்பீடம் இரும்புக்கருவி படாத கற்களாலே கட்டப்பட்டது. அதன்மேல் யோசுவா ஆண்டவருக்குத் தகனப் பலிகளையும் சமாதானப் பலிகளையும் செலுத்தினார். பிறகு இஸ்ராயேல் மக்கள் முன்பாக மோயீசன் எழுதியிருந்த உப ஆகமம் எனும் சட்டத்தை அக்கற்களில் பொறித்தார். ”

இந்த வசனங்களை பொதுவாக பைபிள் வாசிப்பு வகுப்புகளில் பேசுவதில்லை. ஆனால், ஜெரிக்கோவை பற்றியோ, அயி நகரை பற்றியோ அல்லது ஜெருசலத்தை பற்றியோ கேள்விகள் கேட்கப்பட்டால், யூத மற்றும் கிறிஸ்துவ பிரச்சாரகர்கள் இந்த ஹீரோக்கள் முழுக்க முழுக்க பரிசுத்தமானவர்கள் அல்ல ஆனால், அவர்களது நோக்கம் பரிசுத்தமானது என்று சர்டிபிகேட் கொடுப்பார்கள். (ஏனெனில் இவை கடவுளிடமிருந்து வந்தவை!) இந்த நோக்கங்களே, இலட்சியங்களே நாம் மனதில் வைத்துகொள்ளவேண்டிய கருத்துக்கள் என்பார்கள். இது சுத்தமாக தவறான விஷயம். முரண்பாடுக்கு ஜோசுவா எந்த விதத்திலும் குற்றவாளி இல்லை. அவர் எந்த விதத்திலும் தவறானவரோ அல்லது தன்னுடைய தவறை பார்க்காதவரோ இல்லை. ஏனெனில், உள்குழு உறுப்பினர்களுக்கு மட்டுமே சொல்லப்பட்ட விதிக்கு நேர்மாறாகவே வெளிக்குழுவிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்ற விதி. (7)

இது என்னவோ புராதனமான இஸ்ரவேலர்களுக்கு மட்டுமேயான ஒரு விஷயம் இல்லை. உள்குழு/வெளிக்குழுவுக்கான இரட்டை அளவுகோல்கள் உலகம் முழுவதும் வரலாறு முழுவதும் இருந்துவந்திருக்கின்றன. உள்குழு ஒழுக்கத்தை உருவாக்கிகொள்ளும் முறை மனித இயல்பு போலவே தோன்றுகிறது.

தொடரும்

Series Navigation

author

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்

Similar Posts