அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். பகுதி 6 Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்

This entry is part [part not set] of 40 in the series 20101114_Issue


Moral Fallout ஒழுக்கவிதிகளின் விளைவுகள்

கனான், பாலஸ்தீனத்தில் முன்பே வாழ்ந்து வந்த மக்கள் மீதான இனப்படுகொலை செய்ய கொடுத்த தங்களது தெய்வத்தின் கட்டளைகளை இஸ்ரவேலர்கள் செய்து முடிக்க பல தலைமுறைகள் ஆயிற்று. இது ஜெரிக்கோவில் ஜோசுவா செய்த படுகொலைகளில் ஆரம்பித்தது. ஜோசுவா ஜெரிக்கோவின் போரை நடத்தினார் என்று கிறிஸ்துவ சிறார்கள் பாடுவதற்கு மாறாக, பைபிளில் பார்த்தால் அங்கு போரே நடைபெறவில்லை. அது ஒரு முற்றுகை. அந்த முற்றுகையின் முடிவில், ரஹப் என்ற ஒரே ஒரு விபச்சாரி தவிர்த் அந்த ஜெரிக்கோ நகரத்தின் மக்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டார்கள். காரணம், அந்த படுகொலையை செய்ய ஜோஷுவாவுக்கு திட்டமிட உதவியதால்Joshua 6:16-17, 19, 21, 24, RSV):

ஜோசுவா தன் மக்களிடம் கூறினான், “ஆர்ப்பரியுங்கள், பட்டணத்தை கர்த்தர் உங்களுக்கு ஒப்புக்கொடுத்தார்..சகல வெள்ளியும் பொன்னும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்யப்பட்ட பாத்திரங்களும், கர்த்தருக்குப் பரிசுத்தமானவைகள்; அவைகள் கர்த்தரின் பொக்கிஷத்தில் சேரும்” அதன் பின்னர், “பட்டணத்திலிருந்த புருஷரையும் ஸ்திரீகளையும் வாலிபரையும் கிழவரையும் ஆடுமாடுகளையும் கழுதைகளையும் சகலத்தையும் பட்டயக்கருக்கினால் சங்காரம்பண்ணினார்கள்…பட்டணத்தையும் அதிலுள்ள யாவையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்; வெள்ளியையும் பொன்னையும், வெண்கலத்தினாலும் இரும்பினாலும் செய்தபாத்திரங்களையுமாத்திரம் கர்த்தரின் ஆலயப்பொக்கிஷத்தில் சேர்த்தார்கள் (ஜோசுவா 6)

இப்படிப்பட்ட கலாச்சார பாரம்பரியத்தின் தொடர்விளைவுகள் பெரும்பாலும் ஆராயப்படுவதில்லை. ஜெரிக்கோவின் வீழ்ச்சிக்குப் பிறகு 3000 வருடங்கள் கழித்து இஸ்ரேலிய மனவியலாளர் ஜார்ஜ் டாமரின் (George Tamarin 1966, 1973) உள்குழு ஒழுக்க விதிகளின் வலிமையை ஆராய்ந்தார். ஜோசுவா 6:20௨1 வசனங்களை 8இலிருந்து 14 வயதுடைய‌ சுமார் 1,066 பள்ளிச்சிறுவர்‍ சிறுமிகளிடம் கொடுத்தார் இது “மனச்சாய்வுகளை உருவாக்கும் படி விமர்சனமில்லாமல் பைபிளை போதிப்பதால் வரும் விளைவுகள்(அதுவும் முக்கியமாக கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் என்ற கருத்துருவாக்கம்)” என்பது ஒரு ஆய்வு.

மற்றொரு ஆய்வு, “ஏகத்துவ கடவுள் வழிபாடும்,பைபிள் ஹீரோக்கள் செய்யும் இனப்படுகொலைகளும்” என்பது மற்றொரு ஆய்வு “ஜோசுவாவும் இஸ்ரவேலர்களும் சரியாக நடந்துகொண்டார்களா, அல்லது தவறாக நடந்துகொண்டார்களா?” என்ற கேள்விக்கு குழந்தைகளின் பதில்கள் அ) முழுமையாக ஆதரிப்பது, ஆ) அரைகுறையாக ஆதரிப்பது, அல்லது நிராகரிப்பது, இ) முழுமையாக நிராகரிப்பது. இஸ்ரேலின் எல்லா சமூக, பொருளாதார படிநிலைகளில உள்ள குழந்தைகளிலும் ஒரே மாதிரியாக 66% பதில்கள் முழுமையாக ஆதரிப்பதாகவும், 8% சதவீத பதில்கள் அரைகுறையாக ஆதரிப்பதாகவும், 26% சதவீத பதில்கள் முழுமையாக எதிர்ப்பதாகவும் இருந்தன. முழுமையாக ஆதரிக்கும் பதில்கள் நேரிடையாகவும் அதிகமாகவும் இருந்தன.(Tamarin, 1966):

சில உதாரண ஆதரவுகள்:

1) என்னுடைய கருத்தின்படி, ஜோசுவாவும், இஸ்ரேலிய புத்திரர்களும் நன்றாக செயலாற்றினார்கள் என்று கருத காரணங்கள்: கடவுள் அவர்களுக்கு இந்த நிலத்தை வாக்களித்தார். இந்த நிலத்தை ஆக்கிரமிக்க அனுமதியளித்தார். இப்படி அவர்கள் நடக்காமல் இருந்து யாரையும் கொல்லாமல் இருந்தால், அவர்கள் “கோயிம்” மக்களோடு கலந்து காணாமல் போயிருக்கும் ஆபத்து வந்திருக்கும்.

2) என்னுடைய கருத்தின்படி ஜோசுவா செய்தபோது சரியாகவே செய்தார். கடவுள் அங்கிருக்கும் மக்களை கொன்றொழிக்க ஆணையிட்டிருக்கிறார். ஏனெனில் இஸ்ரேலின் குடிகள் அங்கிருக்கும் மக்களோடு கலந்து அவர்களுடைய கெட்ட வழிகளை கற்றிருந்திருப்பார்கள்.

3) ஜோசுவா நல்லதையே செய்தார். ஏனெனில் இஸ்ரேலில் முன்னால் இருந்தவர்கள் வேறொரு மதத்தை பின்பற்றி வந்தார்கள். ஜோசுவா அவர்களை கொன்றபோது அவர்களது மதத்தையும் பூமியிலிருந்து அழித்தார்.

டாமரின் (1973) மேலும் குறிப்பிடுகிறார்.

முழுமையாக நிராகரிக்கும் பெரும்பான்மையான பதில்கள், ஒழுக்க ரீதியிலும் உபயோகரீதியிலும் இப்படிப்பட்ட இனப்படுகொலைகளை நிராகரிக்கின்றன. ஆனால், எல்லா “இ” பதில்களும் பாரபட்சமற்ற ‍பதில்கள் என்று கருதிவிடக்கூடாது.

உதாரணமாக ஒரு சிறுமி ஜோசுவாவின் நடத்தையை பின்வருமாறு நிராகரிக்கிறாள். “இஸ்ரேலின் புத்திரர்கள் கோயிம் மக்களிடமிருந்து கெட்ட விஷயஙகளை கற்றுகொண்டார்கள்” ஜோசுவாவின் நடத்தையை நிராகரிக்கும் மற்றொரு 10 வயது சிறுமியின் இனவெறி பதில்,” நான் அது நல்லதற்கு அல்ல என்று கருதுகிறேன்.

ஏனெனில் அரபுகள் சுத்தமானவர்கள் அல்ல. அப்படிப்பட்ட மக்கள் வாழும் நிலமும் சுத்தமானது அல்ல. அப்படிப்பட்ட நிலத்துக்குள் புகுபவர்களும் அசுத்தமாகி, அசுத்தமானவர்கள் பெற்றிருக்கும் சாபத்தை தானும் பெற்றுவிடுவார்கள்”

மற்ற “இ” பதில்கள் (1966):

மற்ற ‘இ” பதில்கள் (1966)

1) ஜோசுவா சரியாக நடக்க்கவில்லை, ஏனெனில் அவன் மிருகங்களை கொல்லாமல் வைத்து தங்களுக்காக உபயோகப்படுத்திகொண்டிருக்கலாம்.

2) ஜோசுவா சரியாக நடக்கவில்லை. ஏனெனில், ஜெரிக்கோவின் சொத்தை அழிக்காமல் வைத்திருக்கலாம். அப்படி அழிக்காமல் வைத்திருந்தால், அந்த சொத்து இஸ்ரவேலர்களுக்கு சொத்தாக ஆகியிருந்திருக்கும்

வன்முறைக்கும், வன்முறையை அங்கீகரிப்பதற்கும் இடையே பொதுவாக சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் வேறுபாடு உண்டு. ஆனால், பைபிள் ஆணையிடும் இனப்படுகொலைகளை பொறுத்தமட்டில், “எங்களுடைய எதிர்பார்ப்புக்கு மாறாக, இப்படிப்பட்ட இனப்படுகொலைக்கும், இனவெறிக்கும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே எந்த வித வேறுபாடும் இல்லை” (1973) என்று டாமரின் குறிப்பிடுகிறார். ஜோசுவா செய்ததை முழுமையாக அங்கீகரித்த சிறுவர் சிறுமிகள் இன்னொரு தற்கால கேள்விக்கும் முழுமையாக ஒத்துகொள்ளும் (ஆச்சரியப்பட ஏதுமில்லாத‌, ஆனால் மிகவும் அதிர்ச்சியான) பதில்களை அளித்தனர்

கேள்வி: இப்போது இஸ்ரேலிய ராணுவம் ஒரு அரபு கிராமத்தை ஆக்கிரமிக்கிறது என்று வைத்துகொள்வோம். ஜோசுவா ஜெரிக்கோவின் மக்களிடம் நடந்துகொண்டது போல இப்போதும் இஸ்ரேலிய ராணுவம் அந்த கிராமத்தின் மக்களிடம் நடந்துகொள்வது நல்லதா கெட்டதா?

டாமரின் (1966)கீழ்க்கண்ட மாதிரியான பதில்களை பெற்றார்.

1) என்னுடைய கருத்தின் படி, இப்படிப்பட்ட நடத்தை தேவையானதுதான். ஏனெனில் அரபுகள் நம்முடைய நிரந்தர எதிரிகள். யூதர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை. ஆகையால் அப்படி அரபுகளிடம் நடந்துகொள்வது தேவையான ஒன்று.

2) ஜோசுவாவும் அவரது போர்வீரர்களும் செய்தது போல செய்வது நல்லதுதான் ஏனெனில் அவர்கள் அரபுகள். அவர்கள் நம்மை எப்போதும் வெறுக்கிறார்கள். நம்மை திருப்பி அடிக்கிறார்கள். அவர்களை ஜோசுவா செய்தது போல கொன்றொழித்துவிட்டால், அவர்கள் நம்மைவிட பெரிய ஹீரோக்களாக மாட்டார்கள்.

3) நம்முடைய எதிரிகளை வெற்றிகொள்வது நல்லதுதான். நம்முடைய எல்லைகளை விஸ்தரிக்க வேண்டும். நாம் அரபுகளை ஜோசுவா கொன்றது போலவே கொல்லவேண்டும்.

சிலர் ஜோசுவாவின் இனப்படுகொலைகளை ஆதரிக்கவில்லை (இ பதில்கள்) ஆனால், அதே போன்ற படுகொலைகளை இஸ்ரேலிய போர்வீரர்கள் செய்தால் ஆதரித்தார்கள். ஒரு சிறுமி ஜோசுவாவை நிராகரித்தாள், ஏனெனில் ” கொல்லாதே என்று பைபிளில் எழுதியிருக்கிறது” ஆனால், அதே மாதிரியான இஸ்ராலிய போர் நடவடிக்கையை ஆதரித்தாள், ஏனெனில், “அது நல்லது என்று நினைக்கிறேன். நம் எதிரிகள் நம் கைகளில் விழவேண்டும். நமது எல்லைகளை விஸ்தரிக்கவேண்டும். அரபுகளை ஜோசுவா கொன்றது போல கொல்லவேண்டும்”

168 சிறுவர் சிறுமிகள் இருக்கும் இன்னொரு குழுவை உருவாக்கி அதில் ஜோசுவா 6:20 21 ப‌த்திக‌ளில் ஜோசுவாவுக்கு ப‌திலாக‌ ஜென‌ர‌ல் லின் என்ற‌ க‌ற்ப‌னை பாத்திர‌மாக‌வும், இஸ்ரேலுக்கு ப‌திலாக‌ “3000 வ‌ருட‌ங்க‌ளுக்கு முந்திய‌ சீன‌ அர‌சு” என்ப‌தாக‌வும் மாற்றி கூற‌ப்ப‌ட்ட‌து. ஜென‌ர‌ல் லின்‍ செய்த‌ இன‌ப்ப‌டுகொலைக‌ளுக்கும் அவ‌ர‌து ந‌ட‌த்தைக்கும் 6 ச‌த‌வீத‌ ஆத‌ர‌வுதான் கிடைத்த‌து. 18 ச‌த‌வீத‌த்தின் பாதி ஆத‌ர‌வு பாதி எதிர்ப்பாக‌ இருந்த‌ன‌ர். 75 ச‌த‌வீத‌த்தின் முழுமையாக‌ நிராக‌ரித்த‌ன‌ர்.

குழந்தைகளின் ஒழுக்க குருட்டுத்தனத்தை நாம் கண்டிக்க தயங்குவோம். ஏனெனில் அவர்கள் இன்னும் வளரும் பருவத்திலேயே இருக்கிறார்கள். ஆனால், நாம் வளர்ந்தவர்களது ஒழுக்க குருட்டுத்தனத்தை கண்டிக்க அஞ்சக்கூடாது. அதுவும் முக்கியமான புகழ்பெற்ற சமூகத்தில் பெயரும் புகழும் பெற்றவர்களது ஒழுக்க குருட்டுத்தனத்தை மற்றவர்கள் மீது சுமத்தும் வலிமை பெற்றவர்களை கண்டிக்க தவறக்கூடாது. இந்த சமயத்தில், எலீ வீஸலின் ஜோசுவா பற்றிய விவரணத்தை பார்ப்போம். அது இவ்வாறு முடிகிறது. “பரிதாபத்துக்குரிய ஜோசுவா, பார்புகழ ஜொலிக்கும் ஜோசுவா, அவர் எத்தனையோ போர்களை வெற்றிபெற கட்டாயப்படுத்தப்பட்டார். அவருக்கு நன்றி சொல்ல அருகே யாருமில்லை…
கடவுளைத்தவிர”

Series Navigation

author

செய்தி

செய்தி

Similar Posts