அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 3யார் மனிதர்?( Who Is Human? )

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

ஜான் ஹார்ட்டுங்


யார் மனிதர்?( Who Is Human? )

ஞானவான்களான யூத குருமார்கள் அவர்களது கடவுள் அவர்களுக்கு சிறப்பான உக்கிரத்தை அளித்துள்ளதாக பார்த்தார்கள். ரப்பை சிமியோன் (Rabbi Simeon) ”மூவர் தனிப்பட்ட உக்கிரங்களால் வித்தியாசப்பட்டுள்ளார்கள். நாடுகளில் இஸ்ரேல், மிருகங்களில் நாய், பறவைகளில் கோழி” (Bezah 25b). தென்னமெரிக்காவின் அமேசான் நதியின் ஆரம்ப பகுதியில் வாழும் யானோமாமோ பழங்குடியினர் தாங்களே உலகத்தின் மிக உக்கிரமான மனிதர்கள் என்றும் தாங்களே உலகத்தில் வாழ தகுதியுடைய முழு மனிதர்கள் என்றும் நம்புகிறார்கள். யானோமாமோ என்ற வார்த்தையே மனிதர் என்றுதான் பொருள். யானோமாமோ அல்லாத மக்கள் அனைவரும் தரம் தாழ்ந்த யானோமாமோ மக்கள் (Chagnon, 1992). இதே கருதான் யூத கிறிஸ்துவம் முழுவதும் இருக்கிறது. யார் ஸ்பெஷல் மனிதர்கள் என்ற தேர்வை தங்கள் கடவுள் மாற்றிகொணடதாக கருதும் கிறிஸ்துவர்களால் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்டிருந்தாலும், கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மனிதர்கள் என்ற கரு தோராவில் உருவாக்கம் செய்யப்பட்டு வெளிக்குழு மனிதர்களை பற்றிய பார்வையை ஏறக்குறைய முழுமை செய்திருக்கிறது.

12 ஆம் நூற்றாண்டு அரசியலுக்கு ஒவ்வாத தீர்ப்புகளையும் கருத்துக்களையும் கவனமாக தவிர்க்கும் திறமையுள்ள மைமோனிடஸ்(Maimonides), தால்முத் புத்தகத்தைவிட வெளிப்படையாகவே கருத்தை கூறியிருக்கிறார். முக்கியமாக, தால்முத் எழுதிய ஞானவான்கள் அனுமானம் செய்துகொண்டு எழுதியதை வெளிப்படையாகவே எழுதிவிடுவார். உதாரணமாக கொலைக்கு எதிரான கட்டளையை பற்றிய விளக்க உரையில் (Torts 5:1:1, 5:2:11):

யாரேனும் ஒருவர் ஒரே ஒரு இஸ்ரேலியரை கொன்றாலும், அவர் “கொலை செய்யாதே” என்ற கட்டளையை மீறியவராவார். ஒருவர் சாட்சியங்களின் முன்னிலையில் வேண்டுமென்றே கொலை செய்தால், அவரை வாளால் சீவி மரணதண்டனை வழங்கப்பட வேண்டும்.. அவர் ஒரு இஸ்ரேலியரல்லாதவரை கொலை செய்தால், சொல்ல தேவையின்றி, அவருக்கு மரண தண்டனை வழங்கப்படலாகாது.

மைமோனிடஸின் புத்தகங்களின் சமீபத்திய மொழிபெயர்ப்புகளில் ”ஒரே ஒரு இஸ்ரேலியரை” என்ற வார்த்தையை “ஒரே ஒரு மனிதரை” என்று மாற்றியிருக்கிறார்கள் (e.g., translation by Klein, 1954, p. 195 and note 1, p. 273), ”இஸ்ரேலியரல்லாதவரை” என்ற வார்த்தையை நீக்கிவிட்டார்கள். இது உள்குழு ஒழுக்கத்தை உலகளாவிய ஒழுக்கமாக ஆக்க, திறமையுடன் மொழிபெயர்ப்பதும், ஒரிஜினல் புத்தகங்களை எடிட் செய்வதையும் காட்டுகிறது. இருப்பினும், மைமோனிடஸின் கையால் எழுதப்பட்ட, ஆக்ஸ்போர்ட் கோடக்ஸ் என்று அழைக்கப்படும் புத்தகங்கள் ”மனிதரை” என்று சொல்லுவதற்கு மாறாக, ”ஒரே ஒரு இஸ்ரேலியரை” என்ற வார்த்தையைத்தான் சொல்லுகிறது.

தால்முதின் படி, உள்குழு உறுப்பினர்களான இஸ்ரேலியர்களே மனிதர்கள் என்ற பொருளை உபயோகப்படுத்துவதன் மூலமே இந்தமொழிபெயர்ப்பாளர் இங்கே மனிதர் என்ற வார்த்தையை உபயோகப்படுத்தலாம். இருப்பினும், இப்படிப்பட்ட கொள்கை ரீதியான மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாளர் எடுத்துகொண்ட பொருளை வெளிப்படுத்தாமல் படிப்பவருக்கு வேறொரு பொருள் தரும்படியான வாக்கியங்களை தருகிறது. தால்முது எழுதிய ஞானவான்களான யூத குருமார்கள் யூதர்களல்லாதவர்கள் முழுமையான மனிதர்களாக கருதப்பட முடியாது என்ற கொள்கையில் வெளிப்படையாகவே இருக்கிறார்கள். அவர்கள் ஜெண்டைல்கள் என்று சொல்லப்படும் யூதரல்லாதவர்களாக இருந்தாலும் சரி, விக்கிரக ஆராதனையாளர்களாக இருந்தாலும் சரி, ஹீதன்களாக இருந்தாலும் சரி. விவிலிய பத்தி “என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்கள் மனுஷர்; நான் உங்கள் தேவன் என்று கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.” And ye my flock, the flock of my pasture, are men, and I am your God, saith the Lord GOD.(Ezekiel 34:31; KJV)

“என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்களே மனிதர்கள்; உங்களை மட்டுமே மனிதர்கள் என்று நியமித்தேன்” “And ye my flock, the flock of my pastures, are men; only ye are designated ‘men'” (Baba Mezia 114b). ”என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமான நீங்களே மனிதர்கள். உங்களையே மனிதர்கள் என்று அழைக்கலாம். விக்கிரக ஆராதனையாளர்களை மனிதர்கள் என்று அழைக்கலாகாது” Or: “And ye My sheep the sheep of My pasture, are men; you are called men* but the idolaters are not called men.” [Footnote in original:] ”உண்மையான கடவுளை வணங்குபவரான இஸ்ரேலிய யூதர் மட்டுமே, ஆதாமைப்போல உள்ளவராக கடவுளின் பிம்பத்தில் உருவாக்கப்பட்டவராக சொல்லமுடியும். விக்கிரக ஆராதனையாளர்கள், கடவுளின் பிம்பத்தை களங்கப்படுத்தியுள்ளதால், இந்த பெயருக்கு உரியவர்களாக மாட்டார்கள்”

“யூதரல்லாதவர்களை ஆதாமின் மாதிரியில் உள்ளவர்களாக கூறமுடியுமா? இல்லை. என் மந்தையும் என் மேய்ச்சலின் ஆடுகளுமாகிய நீங்களே ஆதாம் (மனிதர்) என்று எழுதியுள்ளது “நீங்களே ஆதாம், ஆனால் யூதரல்லாதவர்கள் ஆதாம் என்று அழைக்கப்படலாகாது [Footnote reads:] ஆதாம் என்று குறிப்பிட்டுள்ளது மனிதர்களை குறிப்பிடவில்லை. மாறாக இஸ்ரவேலர்களையே குறிப்பிடுகிறது. ஆதாம் என்பது கடவுளின் பிம்பத்தில் உருவாக்கப்பட்ட மனிதர்களையே குறிப்பிடுகிறது. யூதரல்லாதவர்கள் தங்களது விக்கிரக ஆராதனையாலும் விக்கிரக ஆராதனை உள்ள பழக்கவழக்கங்களாலும், கடவுளின் புனித பிம்பத்தை களங்கப்படுத்தியுள்ளதால், ஆதாம் என்று அழைக்க தகுதியில்லாதவர்கள்”

ஹீப்ரூ வார்த்தையான ஆதாம் என்பது 106 தடவைகள் தொராவில் வருகின்றது. ஆனால் ஆதாம் என்ற நபரை குறித்து 14 தடவை மட்டுமே வருகின்றது. மற்ற 92 தடவைகளில் அது மனிதன், மனிதர்கள் என்ற பொருளிலேயே வருகிறது. அது இஸ்ரவேலர்களை குறித்து, ஆனால் ஆண்பால் என்று தனிப்படுத்தாமல் வருகிறது. East of Eden

ஏடனுக்குக் கிழக்கே.

தால்முதில் ஆதாமுக்கும் மற்ற வகை மனிதர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தின் அடிப்படை, இஸ்ரவேலர்களின் தெய்வம் தனது உருவ அடிப்படையில் இஸ்ரவேலர்களை படைத்தது என்பதுதான். கடவுள் ஆதாமை தன் உருவத்தில் உருவாக்கிய போது, அதே நேரத்தில் நோட் என்னும் நிலத்தில் ஏற்கெனவே மக்கள் வாழ்ந்து வந்தது எப்படி என்பதற்கு விடை இதுதான். காயீன் ஏபெலை கொன்ற பின்னால் நோட்Nod என்னும் பகுதிக்கு சென்று அங்கு தன் மனைவியை கண்டுகொள்கிறான். அங்கு ஒரு நகரத்தை ஸ்தாபிக்கிறான்(Genesis 4:16-24). நோட் மக்கள் இஸ்ரவேலர்களின் கடவுளால் படைக்கப்படவில்லை. ஆகவே அங்குள்ள நோட் மக்களை குறிப்பிடும்போது அவர்களை ஆதாம் என்ற வார்த்தை மூலம் குறிப்பிடுவதில்லை.(Genesis 4:23).

சொல்லப்போனால், மனிதன்/மனிதர்கள் என்று குறிக்க விவிலியதில் குறிப்பிடப்படும் ஹீப்ரூ வார்த்தைகள் இயிஷ்/எனொவ்ஷ் ஆகியவை. இவை 428 தடவைகள் தோராவில் வருகின்றன. யாஹ்வேயால் உருவாக்கப்பட்ட ஆதாமின் மனிதர்களை குறிக்க ஆதாம் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால், இஸ்ரவேலர்களால் வெற்றிகொள்ளப்பட்ட மனிதர்களை குறிக்க ஆதாம் என்ற வார்த்தை (இரண்டே இரண்டு பத்திகளில் ஆடுமாடுகளையும் சேர்த்து சொல்லப்படும்போது தவிர) உபயோகப்படுத்தப்படுவதில்லை. தால்முதில் இந்த இரண்டு பத்திகளையும் கேள்வி கேட்கிறார்கள். யூத குருமார்கள் இதற்கு விளக்கம் சொல்லும்போது, ஆடுமாடுகளை ஒப்பிடும்போது யூதரல்லாதவர்களை ஆதாம் (மனிதர்கள்) என்று சொல்லலாம் என்று கூறிக்கொள்கிறார்கள்.

20ஆம் நூற்றாண்டு பதிப்பாளர்களும் மொழிபெயர்ப்பாளர்களும் இந்த பத்திகளுக்கு சால்ஜாப்பு சொல்லும்போது ஆதாம் என்று சொல்லும் இந்த வார்த்தை சடங்கு ரீதியான தீட்டு என்ற பொருளிலேயே வருகிறது என்றும், யூதரல்லாதவர்களையும், விக்கிரக ஆராதனையாளர்களையும் ஆதாம் என்ற வகைக்குள் சேர்க்கக்கூடாது என்றும் இது ”inhuman” என்ற பொருளில் தால்முதின் ஒரு வார்த்தைதான் என்றும் இதை எழுதிய ரப்பை சிமியோன் ரோமானியர்களால் கடுமையாக அடக்குமுறைக்கு ஆளானவர் என்பதால் இப்படி எழுதியிருக்கலாம் என்றும் சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். (Baba Mezia 114b, p. 651, n. 7).

இப்படிப்பட்ட விளக்கத்தில் ஏராளமான பிரச்னைகள் இருக்கின்றன. யோஹாயின் மகன் ரப்பை சிமியோன் தால்முதில் மிகவும் அதிகாரப்பூர்வமான குருமார், ஞானவான். இவர் சுமார் 700 முறைகள் தால்முதில் குறிப்பிடப்படுகிறார். யூத மதத்தில் மிகவும் மதிக்கப்படும் ஞானவான்களில் மிகவும் முக்கியமானவர். அவரது கருத்துக்களையே ரப்பைகள் இந்த விஷயத்தில் ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். வெறும் சடங்கு ரீதியான தீட்டு தவிர மற்ற இடங்களிலும் யூதரல்லாதவர்கள் மனிதரல்ல்லாதவர்கள் என்றே கருதப்படுகிறார்கள். ஒருவரது பலியாடுகளை “மனிதர்கள் அல்ல மிருகங்கள்” என்று பெயர் சூட்டுவது வெறும் வார்த்தை மட்டுமல்ல, மாறாக பெரும்பாலான ஒழுக்கக்கேடான ராணுவ தாக்குதல்களுக்கு எதிராளிகளை ”மனிதர்கள் அல்ல மிருகங்கள்” என்று பிரச்சாரம் செய்வது மிக மிக முக்கியமான தேவையாகும். (3a) அல்டாஸ் ஹக்ஸ்லி, இரண்டாம் உலகப்போரின்போது (1937, p. 101): “பிரச்சாரம் செய்பவரின் முக்கியான நோக்கம், எதிராளியும் மனிதன்தான் என்பதை மறக்கடிப்பதுதான். அவர்களது தனிகுணாம்சத்தை திருடி, அவர்களை கொன்றால், ஒழுக்க ரீதியில் ஒரு பிரச்னையுமில்லை என்று தெளிவாக்குவதுதான்” என்று கூறுகிறார்.

(தொடரும்)

Series Navigation

author

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்

Similar Posts