அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 2) யாரை கொல்லக்கூடாது?

This entry is part [part not set] of 36 in the series 20101017_Issue

ஜான் ஹார்ட்டுங்


யாரை கொல்லக்கூடாது?Thou Shalt Not Kill Who?

மேற்கண்ட அன்பு சட்டத்திற்கு பின்னால் வரும் குறிப்பான சட்டங்களை சரியாக புரிந்துகொள்ளவேண்டுமென்றால், அண்டைவீட்டுக்காரன் என்று விவிலியம் யாரை குறிப்பிடுகிறது என்று புரிந்துகொள்ள வேண்டும். பத்துகட்டளைகளின் சட்டதிட்டங்களை பார்ப்போம் (Deuteronomy 5:17-21; JPS ’17 & KJV):

Thou shalt not kill.
Neither shalt thou commit adultery.
Neither shalt thou steal.
Neither shalt thou bear false witness against thy neighbour
Neither shall you covet your neighbor’s wife and you shall not desire your neighbor’s
house, his field, or his manservant, or his maidservant, his ox, or his ass, or anything that
is your neighbor’s.

இந்த வார்த்தைகள் எழுதப்பட்ட ஓலைகளில் முற்றுப்புள்ளியோ, கமாவோ அல்லது வார்த்தையின் முதல் எழுத்தை பெரிசாக எழுதுவதோ இல்லாமல் எழுதப்பட்டது என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். எங்கே வாக்கியம் ஆரம்பிக்கிறது, எங்கே வாக்கியம் முடிகிறது எல்லாமே மொழிபெயர்ப்பாளரின் தயவில்தான். ஆகவே, ஐந்து தனித்தனி வாக்கியங்களாகவோ பத்தியாகவோ எழுதாமல் தொடர்ச்சியாக, ஒரு வார்த்தையையும் விடாமல் எழுதினால், Deuteronomy 5:17-21 ஐ இப்படித்தான் மொழிபெயர்க்கவேண்டும்.

Thou shalt not kill, neither shalt thou commit adultery, neither shalt thou steal, neither shalt thou bear false witness against thy neighbour. Neither shall you covet your neighbor’s wife, and you shall not desire your neighbor’s house, his field, or his manservant, or his maidservant, his ox, or his ass, or anything that is your neighbor’s.

இப்போது யாரை கொல்லக்கூடாது என்பதற்கான விடை கிடைத்துவிட்டது. “Thou shalt not kill thy neighbor – the children of thy people, your countrymen” அதாவது உள்குழு உறுப்பினரை கொல்லக்கூடாது.

இப்படி புரிந்துகொள்வது புரட்சிகரமானதா? இல்லவே இல்லை. தால்முத் எழுதிய ரப்பைகள் (தோராவுக்கு விளக்க உரையின் பெயர் தால்முத். ரப்பைகள் என்பவர்கள் யூத குருமார்கள்) ஒரு யூதனை அறியாமல் கொன்றுவிட்ட யூதன் மீது கொலைப்பழி கிடையாது என்று வரையறுத்திருக்கிறார்கள். அதாவது ஒரு யூதன் யூதனல்லாத ஒருவனை கொல்ல நினைத்து தவறாக ஒரு யூதனை கொன்றுவிட்டால் அவன் மீது கொலைப்பழி கிடையாது. மிஷ்னா என்னும் யூத சட்டம் இதில் மிகத்தெளிவாக இருக்கிறது (Sanhedrin 79a):

ஒரு யூதன் ஒரு மிருகத்தை கொல்ல நினைத்து ஒரு மனிதனையோ அல்லது யூதனல்லாதவனையோ அல்லது ஒரு யூதனையோ கொன்றுவிட்டால், அவன் மீது கொலைப்பழி கிடையாது.

இந்த சட்டத்துக்கு கொடுக்கப்பட்டுள்ள விளக்க உரை (Gemara என்றால் விளக்க உரை) ஒரு தெளிவான உதாரணம் கொடுக்கிறது

”ஒரு யூதன் இஸ்ரவேலர்களும் யூதரல்லாதவர்களும் இருக்கும் கூட்டத்தில் கல்லெறிந்தால் அவன் மீது கொலைப்பழி கிடையாது. இது எவ்வாறு? அந்த கூட்டத்தில் ஒன்பது யூதரல்லாதவர்களும், ஒரு இஸ்ரவேலரும் இருக்கிறார் என்று வைத்துகொள்வோம். கல்லெறிந்த யூதர் மீது கொலைப்பழி இல்லை என்பதற்கு அந்த கூட்டத்தில் பெரும்பான்மை யூதரல்லாதவர்களே இருந்தார்கள் என்பதே நிரூபணம்.”

ஆகவே உள்குழுவைச் சேர்ந்த ஆளை கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டவர் ஒப்புக்கொண்டாலும், அவர் வெளிக்குழுவை சார்ந்த ஒருவரைத்தான் குறிவைத்தார் என்று நம்ப காரணம் இருந்தால் அவரது குற்றமற்ற தன்மையை ஏற்றுகொள்ளவேண்டும். இதன் படி, ஞானவான்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் தால்முத் எழுதிய ரப்பைகள், எது கொலை நோக்கத்துக்கான தடயமாக மிகவும் தாராளமான பார்வையை கொண்டவர்களாக இருந்தார்கள். அதாவது ஒன்பது உள்குழு ஆள்கள் இருக்குமிடத்தில் ஒரே ஒரு வெளிக்குழு ஆள் இருந்தாலும், அவர் அப்பாவிதான் குற்றமற்றவர்தான் என்று அறிவிக்கலாம் என்று சொல்கிறார்கள். (Sanhedrin 79a, Baba Kamma 44b):

”பாதிக்குப் பாதி இருந்தாலும், கொலை குற்றம் சாட்டப்படும்போது, சற்று தாராளமான பார்வைதான் எடுக்கப்படவேண்டும். .. ஒரு இடத்தில் ஒன்பது யூதர்களும் ஒரே ஒரு யூதனல்லாதவனும் இருந்தாலும், .. இருப்பினும், அங்கே ஒரே ஒரு யூதனல்லாதவன் இருந்தாலும், அவன் அந்த கும்பலுக்கு இன்றியமையாதவனாக இருக்கும் பட்சத்தில், அந்த இன்றியமையாமை காரணமாக கூட்டத்தில் பாதிக்கு சமானமாக கருதப்படவேண்டும். சந்தேகம் இருக்கும் பட்சத்தில், கொலை குற்றம் சாட்டப்பட்டவர் மீது இரங்கல்தான் காட்டப்படவேண்டும். ”

எதிர்பார்ப்பது போலவே, அறியாமல் கொலை செய்துவிட்டால் சட்டம் பாரபட்சமற்றது அல்ல. வெளிகுழு ஆள் எதிர்பாராத விபத்தின் காரணமாக உள்குழு ஆளை கொன்றுவிட்டாலும், அவர் மீது கொலைக்குற்றம் நிச்சயம் உண்டு. மைமோனிடஸ் (Maimonides) என்பவரது தோரா விளக்கங்களும் தால்முத் விளக்கங்களும் பொதுவாக மிகுந்த அதிகாரப்பூர்வமாக கருதப்படுகின்றன. அவர் இங்கே இதனை தெளிவாக விளக்குகிறார்(Book of Torts 5:5:4):

நம் நாட்டில் இருக்கும் ஒரு அந்நியன் ஒரு யூதரை தெரியாமல் (விபத்தின் காரணமாக) கொன்றுவிட்டாலும், அந்த அந்நியனுக்கு அவன் அப்பாவியாக இருந்தாலும், உடனே மரணதண்டனை விதிக்கப்படவேண்டும்

The Book of Judges (Maimonides, 5:9:4) இதனை உறுதிப்படுத்துகிறது:

ஒரு நோவாஹைட் (யூதனல்லாதவர்) ஒரு மனிதரை கொன்றுவிட்டால், அவர் ஒரு தாயின் வயிற்றில் இருக்கும் கருவை கொன்றுவிட்டாலும், அவருக்கு மரணதண்டனை விதிக்கப்படவேண்டும். சாகக்கிடக்கும் ஒருவரை கொன்றுவிட்டாலும் அவருக்கும் மரணதண்டனை வழங்கப்படவேண்டும். மேற்கண்ட எந்த வழக்கிலும் ஒரு யூதருக்கு மரணதண்டனை வழங்கப்படக்கூடாது.

Series Navigation

author

ஜான் ஹார்ட்டுங்

ஜான் ஹார்ட்டுங்

Similar Posts