ஜான் ஹார்ட்டுங்
Men never do evil so completely and cheerfully as when they do it from religious conviction.
– Blaise Pascal, Pensees, 1670
-மத நம்பிக்கை காரணமாக தீய விஷயங்களை செய்யும்போது மனிதர்கள் முழுமையாக சந்தோஷமடைவது போல வேறெப்போதும் செய்யமாட்டார்கள்.
ப்ளேய்ஸ் பாஸ்கல் 1670
சுருக்கம்:
உலகத்தின் பெரிய மதங்கள் கொலை, திருடு, பொய் சொல்லுவது ஆகியவை தவறு என்று ஒழுக்கத்தை உரைக்கின்றன. அப்படித்தான் 19 ஆம் நூற்றாண்டு 20ஆம் நூற்றாண்டு மேற்கத்திய ஞானம் வைத்துகொள்கிறது. இங்கே காட்டியுள்ள ஆதாரங்கள் மேற்கின் மதங்களுக்கே இந்த ஒழுங்குமுறை பொருந்தாது என்று காட்டுகிறது. முக்கியமாக, கொலைக்கு எதிரான சட்டங்கள், திருடு, பொய் சொல்லுவதற்கு எதிரான சட்டங்களாக சொல்லப்படும் பத்து கட்டளைகள் அந்த ஒரு குழுவுக்கு மட்டுமே போதிக்கப்பட்டவை, அந்த குழு எதிர்குழுக்களை வெற்றிகொள்ளவும், உள்குழுவுக்குள் ஒற்றுமை ஏற்படுத்தவுமே சொல்லப்பட்டவை என்பதை நிரூபிக்கின்றன. கூடவே, இந்த உள்குழு ஒழுக்கங்கள் வரலாற்று ரீதியாகவும், வெளிப்படையாக இப்போதும், குழுக்களுக்கு இடையே பிரச்னைகளை உண்டுபண்ணவும், கொலை, திருடு பொய் சொல்லுவது ஆகியவற்றை ஊக்குவிக்கவுமே உபயோகப்படுத்தப்படுகின்றன. யூத கிரிஸ்துவ ஒழுக்கவியலை உலகளாவிய ஒழுக்கவியலாக முன்னிருத்தும் தற்போதைய முயற்சிகள் யூத மதமும், கிறிஸ்துவ மதமும் அடிப்படையாக கொண்ட அவர்களது மதப்புத்தகங்களுக்கு எதிரானவை. எனவே இப்படிப்பட்ட முயற்சிகள் இறுதியில் தோல்வியில்தான் முடியும்.
ஆசிரியர் குறிப்பு: நோம் சோம்ஸ்கியுடன் ஒன்பது வருடங்களாக இந்த கட்டுரையில் தொடர்பான விஷயங்கள் குறித்து தெளிவுபடுத்தும் கடித போக்குவரத்து வைத்துகொண்டதற்கு நன்றி செலுத்துகிறேன். ரிச்சர்ட் அலெக்ஸாந்தர், நெப்போலியன் சான்யான், லல்லா டாக்கின்ஸ், ரிச்சர்ட் டாக்கின்ஸ், வில்லியம் ஐர்ன்ஸ், கெவின் மெக்டொனால்ட், ப்ராங் மைய்ல், ராபர்ட் ட்ரிவர்ஸ், வில்லியம் சிம்மர்மன், மாட் ரிட்லி ஆகியோரின் ஊக்குவிப்புக்கும் ஞானம் நிறைந்த அறிவுரைகளுக்கும் நன்றி. இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அவை என்னுடையவை. விமர்சனங்களை என்னிடமே கூறும்படி கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்ந்து மாற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பான விமர்சனங்களையும் உபரி செய்திகளையும் hartung@post.harvard.edu முகவரிக்கு அனுப்பும்படி கேட்டுகொள்கிறேன்.
(மொழிபெயர்ப்பாளர் குறிப்பு: இந்த கட்டுரை ஜான் ஹார்டுங் அனுமதியின் பேரில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)
© 1995/2010 John Hartung, Ph.D. First published in SKEPTIC 3:4 pp 86-99, 1995 and 4:1 pp 24-31, 1996. Ever a work in progress, corrections and updates to the text and references are always welcome – please forward to hartung@post.harvard.edu
கண்ணாடியில் தெரியும் கோலம்
சதர்ன் பாப்டிஸ்டுகள் என்ற கிறிஸ்துவ பிரிவினர், அமெரிக்காவின் அலபாமா மாநிலத்திலிருந்து எத்தனைபேர் நரகத்துக்கு போவார்கள் என்று கணக்கிட்டார்கள். அது மாநிலத்தில் 46.1 சதவீதம் அல்லது 1.86 மில்லியன் மக்கள். இது எப்படி என்று நியூயார்க் டைம்ஸ்(1993) விளக்கியது. “ஒவ்வொரு மாவட்டத்தின் மக்கள்தொகையையும் எடுத்து அதிலிருந்து தங்களது சர்ச்சின் உறுப்பினர் தொகையை கழித்தது. பிறகு ஒரு ரகசிய பார்முலாவின் துணையுடன் மற்ற சர்ச் அமைப்புகளின் ஒவ்வொரு சர்ச்சிலிருந்தும் எவ்வளவு பேர் சொர்க்கத்துக்கு போவார்கள் என்று கணக்கிட்டது.” நியூஸ்டே (1993) பத்திரிக்கை இந்த கணக்கின்படி, “மெத்தோடிஸ்ட் சர்ச்சின் உறுப்பினர்கள் ரோமன் கத்தோலிக்கர்களை விட அதிகமாக சொர்க்கத்துக்கு போவார்கள்” என்று அறிவித்தது. அதே நேரத்தில், “எந்த சர்ச்சிலும் உறுப்பினராக இல்லாதவர்கள் நிச்சயமாக நரகத்துக்குத்தான் போவார்கள்” என்றும் அறிவித்தது.
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வந்த செய்தியின்படி, 1893இல் உலக மதங்களின் பாராளுமன்றம் சிக்காகோவில் நடந்து நூறு வருடங்களுக்குப் பின்னால், ஆயிரக்கணக்கானவர்கள் மீண்டும் பங்கு பெறும்போது, “பல கோடி அமெர்க்கர்கள் இணைந்துள்ள எவாஞ்சலிக்கல் கிறிஸ்துவ சபைகளும், அடிப்படைவாத கிறிஸ்துவ அமைப்புகளும் இந்த கூட்டத்தை மத கொள்கை ரீதியில் புறக்கணித்தன. மற்ற மதங்களுடன் நல்லுறவு பற்றி பேசக்கூடிய தாராளவாத அமைப்புகளான எபிஸ்கோபலிய சபைகள், மெத்தோடிஸ்ட் சபைகள் இங்கே காணப்படவே இல்லை”
ஈஸ்டர்ன் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்துவர்கள் வந்திருந்தார்கள். ஆனால், கிறிஸ்துவை நம்பாதவர்கள் இருப்பதை பார்த்து கூட்டமாக வெளியேறினார்கள். நேஷன் ஆப் இஸ்லாம் என்ற (யூத வெறுப்பு குழு) இருப்பதை பார்த்த யூத மத சபையினர் வெளிநடப்பு செய்தார்கள். சீக்கியர்களும் இந்துக்களும் ஒருவரை ஒருவர் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்ற முனைந்தனர். தலாய்லாமா தானே கேட்ட கேள்விக்கு “நான்ஸென்ஸ்” என்று பதிலளித்தார், “மத ரீதியில் நமக்குள்ளேயே சண்டை போட்டுகொண்டிருந்தால், நம்மால் மற்றவர்களுடைய பிரச்னைகளுக்கு தீர்வளிக்க முடியுமா?”(Steinfels, 1993, p. 93).
நான்ஸென்ஸ் தான். குற்றம் சாட்ட விரலை நீட்டுவது அவர் கண்ணாடிக்கு முன்னால் நின்று செய்தால் பயனுள்ளதாக இருக்கும். அண்டைவீட்டுக்காரர்களை பரிசோதிப்பதன் முன்னால், அவரவர் அவரவர் குடும்பங்களை பரிசோதனை செய்தால் நாம் எல்லோருமே இணைந்து வாழலாம். ஆகவே மேற்கத்திய உலகம், மற்றமதங்களை விமர்சனம் செய்வதற்கு முன்னால், யூத மதத்தையும் அதன் உப மதமான கிறிஸ்துவ மதத்தையும் பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.
யார் “உனது அண்டைவீட்டுக்காரன்”?
இரட்டை பிறவிகளில் ஒரேமாதிரி இருக்கும் இரட்டை பிறவிகளை identical twins ஒரேமாதிரி இரட்டை பிறவிகள் என்று சொல்வார்கள். ஒரே மாதிரி இல்லாத ஆனால் இரட்டை பிறவிகளாக இருப்பவர்களை fraternal twins பிறப்பு இரட்டைபிறவிகள் என்று சொல்வார்கள்.
பள்ளிக்கூடங்களில் பிறப்பு இரட்டைபிறவிகளாக இருக்கும் சகோதரர்களை (அல்லது சகோதரிகளை) புதிர் விளையாட்டுகளை சேர்ந்து தீர்க்க சொன்னால், இவர்கள் ”நான்” என்ற வார்த்தையை அதிகம் பிரயோகிப்பதையும், புதிரை பிடுங்குவதற்காக ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுகொள்வதையும், புதிர் எப்படி பொருந்தும் என்பதற்காக சண்டை போட்டுகொள்வதையும், புதிரை விடுவிக்க நீண்ட நேரம் எடுத்துகொள்வதையும், இறுதியில் விடையைப் பற்றி திருப்தி இல்லாதவர்களாக இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருக்கிறார்கள். ஆனால், ஒரேமாதிரி இரட்டை பிறவிகள் அடிக்கடி “நாம்” என்ற வார்த்தையை உபயோகிப்பதையும், புதிரை ஒன்றாக சேர்ந்து விடுவிப்பதையும், ஒருவருகொருவர் உதவி செய்து புதிரை முடிப்பதையும் வெகுவிரைவிலேயே புதிரை விடுவித்துவிடுவதையும், விடுவித்தபின்னால், விடுவித்ததை பற்றி திருப்தியோடும் இருப்பதையும் ஆராய்ச்சியாளர்கள் அறிந்திருக்கிறார்கள்(Segal, 1984).
ஒரேமாதிரி உள்ள இரட்டை பிறவிகள் “உன் அண்டை வீட்டுக்காரனை உன்னைப்போல நேசி” என்னு பொன்மொழியை பின்பற்றுபவர்களாக இருக்கிறார்கள் என்று பரிணாமவியல் அறிஞர்கள் வாதிடுகிறார்கள். உறவுத்தேர்வு வார்த்தைகளில் சொன்னால் (kin selection) இப்படிப்பட்ட ஒரேமாதிரி உள்ள இரட்டை பிறவிகளது உறவு எண்ணை 100 சதவீதம் (“degree of relatedness,” or “r” is 100% (r = l) (Hamilton, 1964). உள்ளதாக சொல்வார்கள். அவர்களது சுய விருப்பங்கள் தனது ஒரே மாதிரி உள்ள இரட்டை பிறவியின் சுய விருப்பங்களோடு முழுமையாக ஒத்துப்போகிறது. ஏனெனில் அவர்களது ஜீன்கள் ஒரே மாதிரியானவை. ஒருவரது குழந்தை மற்றவரது குழந்தையுடன் சமமானது. ஒருவரது குழந்தை, அவரது இரட்டை பிறவியின் குழந்தை இரண்டும் தனக்கு ஒரே மாதிரியான உறவு கொண்டது. ஒரே மாதிரி உள்ளவர்களை பொறுத்தமட்டில், அடுத்தவருக்கு உதவுவது என்பது தனக்குத்தானே உதவிக்கொள்வது.
”உன்னை நேசிப்பது போல உன் அண்டைவீட்டுக்காரனையும் நேசி” என்பது தோராவிலிருந்து வருகிறது. (1) தோரா என்றால் சட்டம். தோராதான் சட்டம். தற்காலத்திய உயிரியலாளர்களுக்கு தனது தெய்வத்தின் கட்டளையை சொல்லவேண்டியதிருந்தால், “உங்களுடைய ஜீன்கள் எல்லாம் ஒரே மாதிரியானவை அதாவது r=1 என்பது போல உங்களது அண்டை வீட்டுக்காரரை நேசியுங்க” என்று சொல்லியிருக்கலாம். புராதன இஸ்ரவேலர்களது சுயசரிதையாக இருக்கும் அவர்களது பழங்குடி கதைகளை பொறுத்தமட்டில், கொலை, திருடு, பொய் சொல்லுவது ஆகியவற்றுக்கு எதிரான இந்த சட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. ஆனால், இந்த ஒழுக்கத்தின் உச்சியாக சொல்லப்படுவது யார்? யார் உன் அண்டைவீட்டுக்காரன்?
தோராவின் தெய்வத்தின் மேல் பெருமதிப்பு வைத்திருக்கும் பெரும்பாலான தற்காலத்திய யூதர்களும் கிறிஸ்துவர்களும், இந்த சட்டம் எல்லோருக்கும் பொருந்தும் என்று பதில் கூறுவார்கள். யூதமத பிரச்சாரம், சமூக நீதிக்கான கமிட்டியின் பிரச்சார ஏட்டில் கீழ்க்கண்டவாறு எழுதப்பட்டுள்ளது. இதே மாதிரியான ஆனால், மிகவும் விவரமான விளக்கத்துக்கு (Walz, 1992; for a more elaborate but ideologically identical interpretation, see Hefner, 1991): படிக்கலாம்.
இஸ்ரவேலர்கள் தங்களது அன்புக்கட்டளையை பெற்றபோது பாலைவனத்தில் தன்னந்தனியர்களாக இருந்தார்கள். (2) விவிலியத்தின் படி, அவர்கள் கூட்டுக்குடும்பம் சுற்றி உள்ள கூடாரங்களில் இருந்தார்கள். அவர்கள் அருகே இஸ்ரவேலர்கள் அல்லாத யாரும் இல்லை. அவர்களிடையே சண்டை சச்சரவுகள் ஏராளம் இருந்தன. உள்குழு சண்டைகள் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது. ஒரே ஒரு சண்டையிலேயே 3000 பேர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். (Exodus 32:26-28).(3) பெரும்பாலானவர்கள் ஒரு புதிய கேப்டனை தேர்ந்தெடுத்துகொண்டு மீண்டும் எகிப்து செல்ல விரும்பினார்கள் (Numbers 14:4). ஆனால், அவர்களது பழைய கேப்டனான மோஸஸ், குழு ஒன்றாக இணைந்து இருக்கவேண்டும் என்று விரும்பினார்.
அண்டைவீட்டுக்காரன் என்று தன்னுடைய தெய்வம் யாரை குறிப்பிடுகிறது என்று மோசஸ் நினைத்தார் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்றால் அந்த சட்டத்தை நாம் அது எந்த சூழ்நிலையில் வந்தது என்பதை கணக்கிலெடுத்துகொள்ளவேண்டும். எந்த இடத்திலிருந்து இந்த சட்டம் விவிலியத்திலிருந்து எடுக்கப்பட்டதோ அந்த இடத்தை நாம் பார்க்கவேண்டும். லெவிட்டிகஸ் (லெவியாகமம் 19:18)இன் நான்கு ஆங்கில மொழிபெயர்ப்புகள்.
– Thou shalt not avenge, nor bear any grudge against the children of thy people, but thou shalt love thy neighbor as thyself. – First Jewish Publication Society translation (JPS ’17) and the King James Version (KJV).
– You shall not take vengeance or bear any grudge against the sons of your own people, but you shall love your neighbor as yourself. – Revised Standard Version (RSV).
– You shall not take vengeance or bear a grudge against your countrymen. Love your fellow as yourself. – TANAKH (JPS ’85).
இந்த சட்டம் வந்திருக்கும் இடத்தை வைத்து பார்த்தோமானால், அண்டைவீட்டுக்காரன் என்பது “the children of thy people,” “the sons of your own people,” “your countrymen” உன்னுடைய மக்களின் பிள்ளைகள், உங்களுடைய சொந்த மக்களின் மகன்கள், உங்கள் நாட்டுமக்கள். வேறொரு வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால் உள்குழு உறுப்பினர்கள்.
(தொடரும்)
- அண்டைவீட்டுக்காரனிடம் அன்பு செலுத்து: உள்குழு ஒழுக்கத்தின் பரிணாமம். (பகுதி 1)
- சொல்புதிது’ இலக்கியவிழா
- பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்
- பெங்களூருவில் ஹிந்து சமய-சமூகத் தகவல் மையம்
- கண்ணதாசனின் பாடல்களில் சமுதாயப் பார்வை
- ஓதி எறிந்த சொற்கள் – என். டி. ராஜ்குமாரின் ‘‘பதனீரில் பொங்கும் நிலா வெளிச்சம்’’ கவிதை நூல் பற்றிய கட்டுரை / காலச்சுவடு வெளியீடு
- காப்பியங்களில் திருப்பு முனைகள்
- வெளிச்சத்தைத் தேடி – எஸ்.ராமகிருஷ்ணனின் “செகாவின்மீது பனிபெய்கிறது”
- இவர்களது எழுத்துமுறை -10 வண்ணநிலவன்
- புலம் – நூல் வெளியீடும் கருத்தரங்கமும்
- சுதேசி – புதிய தமிழ் வார இதழ்
- தேடாமல் வந்தது.
- தேவை ஒரு மரணம்…
- ஓர் இரவு வானம்
- இன்ப வேரா ,துன்ப போரா ?
- பாவனை
- அசம்பாவிதம்
- விலகிப் போனவன்
- நிசப்தம்
- மழையில் காலை
- கபீர் தாஸரின் அற்புத ஆன்மீகக் கவிதைகள் – பகுதி – 2
- சந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி !
- திருப்பூர் : தற்கொலை நகரம்
- சகபயணி ஒருவரின் தடங்களில் விரித்துப் போடப்பட்ட முட்கள்
- கானல்
- பலிகேட்கும் தேர்வுகள்
- அடடா
- கற்றது தமிழ்…
- பலி
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -16
- முள்பாதை 50
- விசாரம்
- மழையின் காதலன்
- பயங்கள்
- இரவின் நிழல்
- நாவின் நுனியில் உடைந்து தொங்கும் நிமிடங்கள்..
- உயிர் உறை ரகசியம்
- விட்டிலாயிராமல் விலகியிரு…
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -34 பாகம் -2பூரணம் அடைவது
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -22என் நாக்கின் வடிவு
- பரிமளவல்லி 15. ஜெனிவா, இல்லினாய்