ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 6

This entry is part [part not set] of 35 in the series 20100905_Issue

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் – தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்


22. வேத வழி ஹிந்து தத்வங்களைப்பற்றி, எல்லாவித கேள்விகளையும் வேத வழி தெரிந்தவர்களிடம் எழுப்பலாம், அக்கேள்வி கேட்பவரை “கடவுள் நிந்தனை செய்பவர்” (BLASPHEMER) எனக் கொள்வதில்லை மேலாக, அப்படிக் கேள்விகளை எழுப்புபவர் நோக்கத்திலும் சந்தேகம் கொள்வதும் கிடையாது.
வேத இலக்கியங்களில், இறைவனைப் பற்றிய உண்மைகளும், பலதரப்பட்ட, பல்லாயிரக் கணக்கான ஆன்மீகக் கேள்விகளும், அவைகளுக்கான விளக்கங்களுடன் பதில்களும், (வியாக்யானங்கள்) அடங்கியுள்ளன. அதில் உள்ளவைகளை நிரந்தரமாக, மனதில் இறுத்தி, வைத்துக் கொள்ள மாணவர்கள் விழையும் போது, இயற்கையாகவே, கணக்கற்ற கேள்விகள் மனதில் நிச்சயமாக எழும். அக்கேள்விகளின் ஆழம், தரம், ஆகியவைகளை சீர்தூக்கிப் பார்க்கும்போது, எவ்வளவு தூரம் மாணவர்கள் உண்மையாக ஆன்மீகச் சிந்தனையில் ஆழ்ந்து ஈடுபட்டுள்ளனர் என, ஆசிரியருக்கும் புலனாகிறது. ஆகவே, கேள்வி கேட்பது மூலமாகத்தான் மாணவர்களுக்கு, ஆன்மீகத்தில் நல்லறிவு பெறுவதற்கும், அவ்வப்போது மனதில் எழும் ஐயப்பாடுகளை ஆங்கங்கே களைந்து கொள்ளவும் மிக எளிதாகிறது. வேத வழியில், முன்னரே, எழுப்பப் பட்ட கேள்விகளைவிட புதிதாக கேள்விகள், இனி கேட்பதற்கு வாய்ப்பு இல்லை. ஏனெனில், கணக்கற்ற கேள்விகள் முன்னரே எழுப்பப் பட்டு, அதற்கான விடைகளும் தயாராகவே இருக்கின்றன. எனினும், ஏதாவது ஒரு சீடன் வித்தியாசமான கேள்வி ஒன்றை கேட்டுவிட்டால், ஆசிரியர், அச் சீடனை புறக்கணிக்காமல், மிக மெச்சி, அதற்கான பதிலை விளக்கிக் கூறுவது வழக்கம். கேள்வி கேட்டதற்காக அம்மாணவர்கள் மெச்சப்பட வேண்டுமே தவிர, ஏனைய ஒரு மதம் போல, அவர்களைத் தண்டனைக்கு உட்படுத்துவது நல்ல தரமுமல்ல, ஆகையால் இது வேத வழியும் அல்ல..
இஸ்லாமியத்தில், அம்மதத்தைப் பற்றி கேள்வி கேட்பதே புறக்கணிக்கப் பட வேண்டிய செயல் (taboo or improper) என கொள்ளப் படுகிறது. ஏனெனில், அச் சமயத்தில் கேள்வி கேட்பதென்பது, சமய தத்துவங்களை நம்பாது, அச்சமயத்தையே, சவாலுக்கு அறைகூவுவதாக இஸ்லாமிய நூல்களே கூறுகின்றன. ஆகவே கேள்வி கேட்கபதையே இச்சமயம் தடை செய்கிறது. மேலும் அச்சமயத்தைப் பற்றி எவ்விதத்திலும், கேள்வி எழுப்பினாலும், ’அல்லாஹ்’க்கும் முகம்மதுவுக்கும் செய்யப்பட்ட அவமரியாதை, அதாவது, தெய்வ நிந்தனை*** (blasphemy) எனக் கொள்ளப்பட்டு, கடுந்தண்டனைக்கு உட்பட வேண்டும்.
[[[ “You are always correct, so long you agree with me” எனும் முகத்திலடிற்போலக் கொள்கைதான். அதிகம் சொல்வானேன். முகம்மதுவின் உருவப்படத்தை ’குரானில் சித்தரிக்கப் பட்ட விவரங்களைக் கொண்டு’ ஓவியத்தில் நேர்வழியாகக் கற்பனையில், நல்ல முறையில், (அதாவது, அசிங்கமாகவோ அல்லது அம்மணமாகவே அல்லாமல்) வரைவதற்குக் கூட முஸ்லிம்கள் இஸ்லாமிய புனித நூல்களில் கூறியவாறு ஒப்பமாட்டார்கள். அப்படி மீறினால், கொலை விழும். மேலை நாட்டில் கொலையும் நடந்திருக்கிறது. இது ஏன்? ஆனால் இந்தியாவில் மக்பூல் பிஃதா ஹுஸ்ஸைன் (MF Hussein), ஹிந்துக்கள் தொழும் கடவுள்களை, அம்மணமாக கேலி உருவத்தில் வரைந்ததற்கு, இம்மதத்தினர்களோடு, மதசார்பற்றவர் எனும் ’சாய்ந்தால் சாயும் செம்மறியாட்டுக் கூட்டம்’, ’ஹூஸ்ஸைன் சாகேபு’க்காகப் பரிந்து ”ஒ” என்று கண்ணீர் விடுகின்றனர். முகம்மதுவின் உருவப்படத்தை ஏன் வரையக்கூடாது என்ற காரணத்தை, கூறத்தான் நினைந்தேன். ஆனால், இங்கு நான் கூறவில்லை;………..]]].
இந்த நிலை ஏன் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது என ஆராயும் போது, இதற்குக் காரணம், அவர்களுக்கு இஸ்லாமயத்தில் உள்ள கண்மூடித்தனமான நம்பிக்கையே முதல் தகுதியாகவும், கடைசித் தகுதியாகவும் கொள்ளப் படுகிறது. இதனால்தான், இஸ்லாமிய மாணவர்களுக்கு இஸ்லாமிய ஆன்மீகத்தில் உள்ளது உள்ளபடி இருக்கும் கோட்பாடுகளைப் பற்றி மனதில் ஐயப்பாடில்லாது, இஸ்லாமிய உட்பொருட்களின் நோக்கம் யாது எனும் அறிவை பெற முடிவதில்லை. ஆகையால், இதில் உள்ள சட்ட திட்டங்களைப்பற்றி ஏன், எதற்கு என முழுதும், சீர்தூக்கிப் பார்க்க இயலாத சூழ்நிலையும் அவர்களுகேற்பட்டு விடுகிறது. தங்கள் லட்சியத்தில் குவிமையமாகக் கொண்ட இச் சமய மாணவர் பலருக்கு, தங்கள் மனத்தில் எழும் பல நிரடான ஆன்மீகக் கேள்விகளுக்குப் பதில்களை எதிர்பார்த்து, அச்சமயத்தால் சந்தேகங்களைக் களைய தக்க சூழ்நிலை இல்லாத காரணத்தால், ஐயப்பாடுகளைத் துலக்க, மற்ற மத விவரங்களில் தாங்கள் தேடும் பதில்கள் உள்ளதா என தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. அப்படித் தேடிபோகும்போது தான், இம்மாணவர்களுக்குத் தாங்கள் பிறந்த மதத்திலுள்ள குற்றம், குறைகளைகளெல்லாம், மற்ற மதங்களோடு ஒப்பீடு செய்கையில் நன்கு புலனாகி விடுறது. செயற்கையில்லாத ஐயமற்ற தெளிந்த இந்த புது அறிவே, அவர்களைத் தாங்கள் சார்ந்த பூர்வீக மதத்தை விட்டொழித்து, புது மதத்திலும் சேர்ந்து விடுகிட வேண்டுமென எண்ணத்தையும் உண்டாக்கி விடுகிறது. இதனால், தற்காலத்தில், இஸ்லாமிய நாஸ்திகர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வருகிறது. இதற்கு பல இணய கட்டுரைகள் நன்கு உதவி செய்கின்றன.
அப்படித்தான் பிறப்பாலும், வளர்ப்பாலும் கிருஸ்தவனான நான், கிருஸ்தவத்தில், என் மனதில் எழுந்த கேள்விகளுக்கு விடை கிடைக்காமல் ஏங்கித் தவித்த போது, ஹிந்து சமய (சனாதன தர்ம) வேத நன்நெறியில் மாணவனாக ஆனது, அவ்விறைவனின் பேரருளே என்றே கருதி, அவருக்கு நித்தம் நன்றி கூறுகிறேன்.
[[[***இஸ்லாமிய கடவுள் நிந்தனைக்கு (blasphemy) குரானிலிருந்து மேற்கோள்கள்: 002.088; 004.155; 005.017; 005.064; 005.068; 005.073; 006.019; 009.074; 011.009; 014.028; 039.008; (இங்குள்ள மேற்கோள்களில் உள்ள வசனங்களை அப்படியே உள்ளது உள்ளபடி கொடுக்க இயலததால், மன்னிக்கவும். ஆதலால், விருப்பமுள்ளவர்கள், கீழ்க்கண்ட இணயத்தில் கண்டு தெரிந்து கொள்ளவும் —– www.usc.edu/dept/MSA/quran/ ]]]
ஹிந்து சமயத்தில், கேள்வி கேட்பதென்பது, ஆன்மீக இயல் வளர்ச்சியில் ஏற்படும் வழக்கமான, வலுவான சந்தேகங்களை அவ்வப்போது களைந்து, சமயத்தைப் பற்றித் தெளிந்த அறிவை அடைவதற்குச் செய்யும் செயல், என நேர்மையாக எடுத்துக் கொள்ளப்படும். ஹிந்து சமயம் ஒரு திறந்த புத்தகம். இதில் ஒளிவு மறைவில்லை. வேத வழி ஆன்மீகத்தில் தங்களுடைய ஆசிரியரை, கேள்வி மேல் கேள்விகளைக் கேட்டதற்கும், அவரும் எவ்வாறு பொறுமையுடன் விளக்கங்களை விவரமாகக் கூறி, மனதில் ஏற்பட்ட ஆன்மீக மாசுகளை, களைந்து அதனால் தெளிவு பெற வேத வழியிலேயே செய்கிறார் என்பதை பற்றி ஒரு இலக்கிய உதாரணம் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இறைவனே ஆசிரியராக வந்து, வகுப்பை நடத்தி, மாணவர்களுக்குப் பிரம்மதத்வத்தை போதிக்கிறார்.
கீழ்க் கூறிய வேத வழி இலக்கியப் பாடலில், ஆன்மீகத்தில் நல்லறிவைப் போதிக்க, நுழைபுலம் வாய்ந்த கடவுளே இளம் ஆசிரியராகவும், மாணவர்கள் வயதான முனிவர்களாகவும், ஆல மரத்தடியில் வகுப்பெனக் கூடி, பிரம்ம தத்துவங்களில், கேட்கப்பட்ட ஐயப்பாடுகளுக்கு எவ்வாறு சந்தேகத்துக்கிட மில்லாதவாறு மிக நேர்த்தியாக, மௌனமாக, நுட்பமாக, வினைத் திறனுடன் (subtle) முற்றிலும் களையப்பட்டன எனவும் இப்பாவில் மிக அழகாகச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. (ஸ்ரீ ஆதி சங்கரர் இயற்றிய தட்சிணாமூர்த்தி அஷ்டகம்).

चित्रं वटतरोर्मूले वृद्धा: शिष्या: गुरु: युवा । गुरोस्तु मौन व्याख्यानं शिष्यास्तु छिन्न संशया:॥ சித்ரம் வடதரோர் மூலே விருத்தா: சிஷ்யா: குரு:யுவா | குரோ: ஸ்து மௌனவ்வாக்யானம் சிஷ்யா: ஸ்து ச்சின்ன சம்சயா: ||

அடுத்ததாக: ஆசிரியர்-மாணாக்கர் கேள்வி-பதில் எனும் கருத்தை விளக்க:
ஆசிரியர் ஸ்ரீ ராம கிருஷ்ணர் – மாணவர் விவேகானந்தர், இத் கேள்வி பதில் தொடரைப் தேடிப்படித்தால் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.

அடுத்ததாக; ஆசிரியர்: ஸ்ரீ ரமண மகரிஷி, மாணாக்கர்கள் – ஏராளம், இதில் சிலர்: சிவப்பிரகாசம் பிள்ளை, நடேச முதலியார், கணபதி சாஸ்த்ரி, FM Humphreys, Paul Brunton முதலியோர்.
ஒருதடவை, ஸ்ரீ ரமண மகரிஷிக்கும் ஒரு பழுத்த முஸ்லிமுக்கும் இடையே கடவுளுக்கு உருவமுண்டா இல்லையா எனும் மிக நேரிடையாக நடந்த, சுவாரசியமான உரையாடலை இங்கு தமிழாக்கம் செய்து கீழே கொடுத்துள்ளேன்.

(Based on ‘Ramana Maharshi’ and the path of self-knowledge by Arthur Osborne-Jaico publication – page 121 & 122)

முஸ்லிம்: கடவுளுக்கு உருவமுண்டா?

ரமணர்: அப்படி யார் சொன்னது?

முஸ்லிம்: கடவுளுக்கு உருவமில்லை என்றால், அவரை ஏன் ‘சிலை’ வடிவில் தொழ வேண்டும்?

ரமணர்: (நீங்களே இதற்கு பதில் சொல்லப் போகிறீர்கள் எனப் பொருள்பட, புன் முறுவலுடன்) சரி, அக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். சுலபமான கேள்விகளுடன் முதலில் ஆரம்பிப்போம். உங்களுக்கு உருவமுண்டா? சொல்லுங்கள்.

முஸ்லிம்: (நகைத்து, தன்னிடம் பின்னர் ஏதோ கேட்கப் போகிறார் என்று மட்டும் தீர்மானித்து,
முன் எச்சரிக்கையுடன்; Anticipating further intricate questions) ஆம். நிச்சயமாக எனக்கு உருவமுண்டு; நீங்களே என்னைப்பர்த்துப் பேசுகிறீர்களே! நானும் உங்களுடன் இவ்வுருவத்துடனே பேசுகிறேனே; ஆனால், நான் கடவுளல்ல.

ரமணர்: ஆக நீங்கள் தான், சதையாலும் எலும்பாலும், ரத்தத்தாலும் ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைக்கப் பட்ட இந்த உடைக்குள் இருக்கும் உடல், எனச் சொல்கிறீர்கள் இல்லையா?

முஸ்லிம்: ஆம், இதை நான் நிரந்தரமாகக் கூற முடியும். இவ்வுடல் என் உடைமை தான்.

ரமணர்:’நீங்கள்’ என்பவர் சுய உணர்வு இல்லாது ஆழ்ந்து தூங்கும் போதும் கூட ” இந்த உடலில்
உள்ள நீங்களே தான் இந்த உடல்” எனத் தீர்மானமாகக் கூறமுடியுமா?

முஸ்லிம்: இதெலென்ன சந்தேகம்! தூங்கும் போது இதே உருவில் தூங்கினேன், தூங்கும் வரை இவ்வுடலில் நான் தான் இருந்தேன் எனவும் நானறிவேன். தூங்கி எழுந்த பின், அதே உடலில் நான் இப்போதும் உள்ளேன் எனவும் எனக்குத் தெரிகிறது. ஆக தூங்கும் போதும் இவ்வுடல் என்னிடம் தானே இருந்திருக்க வேண்டும். எங்கும் போய் விட வில்லையே!

ரமணர்: சரி, ”நீங்கள்” ‘நீங்களேதான்’ எனும் உணர்வுடன் இருக்கிறீர்கள் என இப்போது உங்களால்
சொல்ல முடிகிறது. நீங்கள் இறந்த பின்னும் ”நீங்கள்” ‘நீங்களேதான்’ எனும் உணர்வுடன் இருப்பீர்கள் என அப்போதும் உங்களால் சொல்ல முடியுமா?

முஸ்லிம்: (ஒரு கணம் யோசித்து) அச்சமயம் நான் இறந்துவிட்டதாக கருதப்பட்டு, பிணமான என் உடலை மக்கள் புதைக்கப் போகிறார்கள்.

ரமணர்: இவ்வுடல் உங்களுடையது. அதை நீங்கள் நன்கு அறிவீர்கள். இது உங்கள் தனிப்பட்ட சொத்து என நீங்கள் சற்று முன் தான் சொன்னீர்கள். இப்படி இருக்கும்போது, உங்கள் உடலைப் புதைப்பதை எதிர்த்து, “, இவ்வுடல் என்னுடையது. நான் உடுத்தி இருக்கும் உடை என்னுடையது, என்னுடன் கூட இருக்கும் குழந்தைகள், என் குழந்தைகள். இவர் என் மனைவி. நான் வாழும் வீடு என் சொந்த செலவில் நானே கட்டியது. நான் இவர்களுடனேயே இங்கேயே இருந்து விடுகிறேன். என் உடலை அப்படியே விட்டு சென்று விடுங்கள், இதை எடுத்துப் புதைக்க வேண்டாம்” எனும் உங்களுக்குள்ள உரிமையை மற்ற நேரங்களில் நிலை நாட்டிக் கொள்வது போல ஏன் இறந்த பின்னும் நிலை நாட்டிக்கொள்ள முடியாதா?”

முஸ்லிம்: (உடல் சார்ந்த அணுகுமுறை தவறு என மெதுவாக உணர்ந்து, சற்று திகைத்து), என்னைப் புதைக்க வேண்டாம் என, பிணமான நான் எப்படி எதிர்த்துச் சொல்ல முடியும்? ஆக, என்னை இது வரை பேச வைத்தது வேறு: அதாவது, என் உடலை இதுவரை ஆட்டி வைத்துச் சொல்ல வைத்த ஏதோ ஒன்று இறந்த பின்னர், அதைக் காணவில்லை, ஆதலால் தான் பிணமான என்னால் பேச முடியாது. என்னை இதுவரை ஆட்டி ஓட வைத்தது ஏதோ ஓர் உள்-அமைப்பு, எனத் தெரிகிறது. ஆக என் உடல் உரிமையைப் பற்றி, என் எல்லையையும் இப்போது உணர்ந்து கொண்டேன்.

ரமணர்: (புன் முறுவலுடன், இப்போது விளக்கத்தையும் அளிக்கிறார்):
இதுவரை உங்கள் உடலை ’நீங்கள்’தான் அது என நினைத்திருந்தீர்கள். அதுதான் உங்களுடைய அடிப்படை அறியாமை. பின்னர் உடல் அமைப்பில் ஏதோ உங்கள் ’உள்’ உள்ளது எனவும் பின்னர் சொன்னீகிறீர்கள். உங்களைப் போல ’உருவ வழிபாடு’ சச்சரவில் ஈடுபடும் எல்லோருடைய கேள்விகளுக்கு, முன் சொன்ன உங்கள் அறியாமை தான் ஆரம்ப கட்டம். எதுவரை நீங்கள் இந்த அறியாமையை முற்றிலும் அகற்றாத வரை, அதாவது உங்கள் உடலுக்குள் உங்களை ஆட்டி ஓட வைக்கும் ஒரு ’உள்’ அமைப்பு உள்ளது, அது யார்? என்ன? ஏன்? என்பதைப் பற்றி முழுதும் அறியாதவரை அநாவசியமாகப் பகட்டு ஆரவார நூலறிவைக் (pedantry) காட்டுவதில் எந்த பயனுமில்லை. நான் சொன்னதில் பொதிந்த உண்மையைப் புரிந்து கொண்டவுடன், நீங்களே என்னைத் தேடியோ, அல்லது இதைப்பற்றி, மீண்டும் எவரிடமும் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் நிச்சயமாக உங்களுக்கு என்றும் ஏற்படாது. நல்லது உண்டாகட்டும். போய் வாருங்கள்.

என மறை பொருளான கடவுளைப்பற்றி, ரத்தினச் சுருக்கமாக தன் இயல்பான பண்பினால், விளக்கினார். (”Some times, Ramana Maharshi’s answers given were terse and cryptic, sometimes full and explanatory but always adopted to the questioner and always marvelously apt”]]].
23. ஹிந்து சமயத்திலில்லாது எச்சமயத்திலும் இல்லை. இது மதிப்பிட முடியாதது.
இன்று உலகில் காணப்படும் அநேக மதங்கள் கலாச்சாரங்கள், அடிப்படையில் நன்நெறிகள் சம்பந்தமான சாதாரண ஒழுங்கு முறைகளைப் பற்றியே கூற இயலும். இருப்பினும் வன்முறைக்கு ஊக்கமளித்து, ஆதரித்து, அவைகளை செயலாற்றவும் ஆணையிடும் சமயங்களிலிருந்து நன்நெறிகளை எதிர்பார்ப்பது மடமையல்லவா! இவ்விபரீத வழிபாடு முறை இயக்கத்தை மதம் என ஒப்புக்கொள்வதே, மற்ற மதங்களுக்கு செய்யும் இழுக்கல்லவா? அநேக ஆன்மீக சமயங்கள் சிறந்த அறிவைப் புகட்ட ஒரு நிலைக்கப்பால், இயலாத நிலையில் தான் உள்ளன. இது அம்மதத்தைச் சார்ந்த பல கூர்மதி படைத்த சீடர்களுக்கு அதிருப்தியையும் உண்டாக்கி விடுகிறது. இஸ்லாமில் ஆன்மீக சம்பந்த ஐயங்களை துலக்க, அவைகளைப் பற்றி விசாரிக்க விரும்புவதையே ஒரு மாபெரும் குற்றம், எனக் கொள்ளப்பட்டு, கொடும் தண்டனைக்கும் உரியது என மேல் பத்தியில் கண்டோம். உலகில் உள்ள மற்ற மதங்கள், மிக நெரடான, மிக உயர்ந்த படி நிலை எனக் கருதப்படும் ஆன்மீக அறிவுத்திறனைப் பற்றி போதிக்க முற்றிலும் இயலாமல் உள்ளன. ஆனால் வேத வழி எந்த நெரடான, மிக உயர்ந்த படி நிலை எனக் கருதப்படும் ஆன்மீக அறிவுத்திறனைப் பற்றி மிகத் துல்யமாக, சுலபமாக போதிக்க முடிகிறது (Complex spiritual queries with skill and ease), ஆகவே ஒரு உதாரணத்திற்காக, ’மதிப்பு எண்’ (marks) எனும் முறையில் ஒப்பிடும் போது, வேத வழி நன்நெறி பல கோடிகளுக்கு சமமானது, அதே நேரத்தில், சில மதங்கள் ஆயிரம், அல்லது சில ஆயிரங்களுக்கு சமமாகவும் தெரிகிறது. ஆனால் இஸ்லாம் எனும் வன்முறை இயக்கம், ஒன்றுக்கும் இரண்டுக்கும் சில்லரைகளுக்காகக் கவலைப்படும் மிக சர்வ சாதாரணம் போல எளிதில் காட்டிக் கொள்கிறது. இவ்வாறு ஒப்பிடுவதகுக் காரணம், ஆன்மீகத்தில் வேத வழியில், பிரச்சனைகளை எளிதில் புரிந்து கொண்டு விளக்கவும், சிக்கலான பிரச்சனைகளும் மிகத் தெளிவான விடைகளை அளிக்க முடிகிறது. ஹிந்து மூதாதையர் முன்னறிவுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகில பிரபஞ்ச அடிப்படையில் ஆரம்பித்து வைத்த ‘சனாதன தர்மமே’ எல்லாவிதத்திலும் மிகத் தெளிவாக சிந்தித்து, அவைகளுக்கு விடைகளை எளிதில் தருகிறது.
இங்கு வேத வழியில் நம்மைக் காத்துக்கொள்ள நம் அருகாமையிலேயே கிடைக்கும் மததை விடுத்து, மற்ற சமயங்களைப் பற்றி நினைப்பது கூட, ”கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு, நெய்க்கு அலைவதற்கு சமமாகும்” ஏனெனில், ஹிந்து மதமே நம்மை ஏற்கனவே காத்துக் கொண்டிருக்கிறது. ஹிந்துமதமே நமக்கு ஆன்மீக நல்லறிவுத் திறனில் மிக உயர்ந்த உணர்வு நிலையை அடைய வழி செய்கிறது. இவைகளை சுலபமாக நிரந்தரமாக அடைவதற்கு நாம் வேத வழி இருக்கும் போது; மனம் தடுமாற்றமுற வைக்கும், கரடு முரடான வன்முறையை ஊக்குவித்து-ஆதரிக்கும் வழியில் சென்று, ஆங்கே கவனம் செலுத்துவது ’கனியிருப்பக் காய்கவர்ந்தற்று’ போன்ற மடமையாகும். வேத இலக்கியங்களிலும், வேத ஒழுங்கு முறைகளிலும் ஆழ்ந்து கவனம் செலுத்தினாலே போதும். இதை விடுத்து, மற்ற சமயங்களில் கவனம் செலுத்துவது தரமல்ல.
ஹிந்து வேத வழி தவிர, மற்ற சமயங்கள் ஆன்மீகத்தை இரண்டாவதாகவும், ஆன்மீகத்தைச் சாராத, லோகாயத, பொருளுலகத்தைச் சார்ந்தவைகளில் முதலாவதாகப் பேணி, அவைகளை ஆன்மீகம் என்ற போர்வையைப் போர்த்தி தங்களுக்கும் ஒரு குழாமை ஏற்படுத்திக் கொண்டு, ஆன்மீகத்தில் உண்மையாகப் பற்றுடையவர்களை வேண்டுமென்றே துன்புறுத்து கிறார்கள். இப்படி செய்தால் தானே அவர்களுக்கு பொருளுலகத்தில் என்றும் சஞ்சரித்துக் கொண்டிருக்க முடியும்!
24. கடவுளைப்பற்றி நன்கு அறிந்துகொண்டு, அவரை எப்போதும் பற்றிக் கொள்ள, வேத செயல் முறை மிக சுலபமாக நம்மை இட்டுச் செல்கிறது.
இதில் கண்டுள்ள ’அன்பின்’ விவரம், ஒவ்வொருவருடைய சொந்த அபிப்பிராயத்தைப் பொருத்தது என பொதுவாகச் சொல்லி விடலாம். ஆனால், ‘அன்பு’, ஒரு முக்கியமான சொல். நாம் இதையே சற்று கூறுபடுத்தி ஆய்ந்தால், வேதவழி எவ்வளவு சுலபமான ஒழுங்கு முறை என்றும், இவ்வழியைப் பின்பற்றுவது மிக எளிது எனவும் புலப்படும்.
‘அன்பு’ எனும் இயற்கை உணர்வு, நம் ஒவ்வொருவருக்கும் இன்றியமையாதது. இதற்காகவே ஆழ்மனதில் என்றுமே ஏங்குகிறோம். இறைவனிடம் நம் அன்பைக் காட்டுவது, நம்மை அவருடன் இணைத்துக் கொள்ளுதல் என்பதேயாம். இது, ஆன்மீக முன்னேற்றத்தின் முதல் படி. எல்லா சமயங்களும் தான் இறைவனிடம் அன்பு செலுத்துதல் என்பதை விவரித்தாலும், வேதவழி, ’அன்பை’ ஒர் தனிப்பட்ட பண்பெனவும், இதை கடவுளிடம் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள உதவும் ஒரு மார்க்கம் என சொல்லிக்கொடுத்து உதவுவதோடு மட்டுமல்லாமல், அந்த அன்பு உறவை நிரந்தரமாக, தக்க வைத்துக் கொள்ளவும் நமக்கு சொல்லிக் கொடுக்கிறது.
பரந்தாமனுடைய அநேக செய்கைகளை வேத வழி இலக்கியங்கள் விளக்குவது போல வேறெங்கும் காணமுடியாது. இத்துடன் இல்லாது, அதற்கு, அவருடைய நண்பர்கள், உறவினர், தனிச்சிறப்பு, உடுப்பு, தோற்றம், இவைகளைத் தவிர மற்ற வேண்டிய விளக்கங்களுடன் கூறுகின்றன. இதெல்லாம் கூறுவதற்குக் காரணம், நம்மை அந்த பரம்பொருளிடம் நம்மை ஈடுபட வைக்கவும், நம்மை அவரிடமும் அன்புணர்வால், பாசத்தால் பிணைத்து வசீகரிக்கவும் செய்து விடுகிறது. இதையெல்லாம் செயல் முறையில் நிறைவேற்றிக் கொள்ள, வேத வழி மிக சுலபமாக, ’பக்தியோகம்’ எனபதை நமக்களிக்கிறது. ’பக்தியோகம்’ என்பதைப் பற்றி மிக எளிதான சிறு பொருள் விளக்கம் : ”இறைவனிடம், பக்தியாகிற விழிப்பு நிலையை நமக்குள், உண்டாக்கிக் கொள்ளுதல்” என்பதாகும். அதாவது, பக்தி இல்லாத உறக்க நிலையிலிருந்து, பக்தி செலுத்தும் விழிப்பு மன நிலைக்கு நம்மை எழுப்பி, ஈடுபடுத்திக் கொள்ளுதல். இதில், முதல் கட்டமாக, இறைவனை முழுமனதுடன் ஒருமுனைப்படுத்தி இறைவன் பெயர்களை மனனம் செய்தல் என்பதாகும். உதாரணமாக ‘1000’ பெயர் என சொல்லப்படும், ”சஹஸ்ர நாமம்”. மகா பாரதத்தில், பீஷ்மர் நமக்காக, சொல்லச் சொல்ல ஸ்ரீ கிருஷ்ணன் கேட்டுக்கொண்ட, ”விஷ்ணு சஹஸ்ரநாமம்” (ஹரி நாமம்) என்பதைச் சொல்லலாம். (பகவத் கீதையோ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணனால், அர்ஜுனன் மூலம் நமக்காகச் சொன்னது) அநேக யோகிகளால், வேத இலக்கியங்களில் காணப்படும் போதனைகளில், இறைவனை நோக்கி நேரிடையாக, நேர்மையாக, இயற்கையாக, நம் தொடர்ச்சியான அன்பு செலுத்தும் மனப்பாங்கை அடைவதென்பதையும் வலியுறுத்துகிறது. மேலும், இது இறைவனை அடைவதற்கு ஒரு சாதனம் என்பது மட்டுமல்லாமல், அதே இறைவனை இறுதியாக அடையும் ஒரே வழி எனவும் கூறுகிறது. இவ்வாறு இறைவனிடம் செலுத்தும் அன்பினால், நமக்கு இறைவனைப்பற்றி எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ள நமக்கு ஒரு இயக்கு விசையாக, (தூண்டுகோலாக) ஆகி, இதே, இறைவனை நோக்கி சுலபமாக, உறுதியாக, உண்மையாக ஆழ்ந்த தியானம் செய்யும் முறைமையுமாக ஆகிவிடுகிறது. இது தான் நம் மன-மாசுகளை அகற்றி, தூய்மையாக்கி, மீண்டும் மீண்டும் பிறப்பு இறப்பெனும் சுழலில் (पुनरपि जननं, पुनरपि मरणं) (’’புனரபி ஜனனம், புனரபி மரணம்’’, from the cycles of repeated birth and death) என பரிதவிக்காமல், நம் ஆன்மீக வீட்டில் அதாவது (‘திருப்பாவை’ முப்பதும் செப்பிய, பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை, ஸ்ரீ ஆண்டாள் காட்டும் வழியில்) பறையில், இறையுடன் நிரந்தரமாக
””குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;
இற்றைப்பறை கொள்வான், அன்று காண், கோவிந்தா
எற்றெற்றும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்;
மற்றை நம் காமங்கள் மாற்று—ஏலோர் எம்பாவய்””
என்றபடி, இறையோடு உற்றோமேயாகி, அவருக்கே ஆட்செய்ய, ‘இருக்கச்’ செய்கிறது. இதனால், ஆன்மீக உலகத்தில் தான், மெய்யான வரையற்ற நம் இயற்கையான ஆன்மீக அன்பு, தெளிவாய் உணரும் வகையில், நிரந்தரமாக இருந்து விடுகிறது. அங்கு இறைவன் அருளால் குறைவொன்றுமில்லை. எதிலும், எங்கும், எப்போதும் எல்லாமே நிரந்தரமாக நிறைந்துள்ளது.
25. ஆன்மீக வேத வழி தத்துவங்கள், சுயநலமில்லாமல், உலகளாவிய எல்லா நிலையிலும் மாறா மெய்மையுடன் மனித இனம் முழுமைக்கும் என்றும் எல்லாம் பயன் பட வேண்டும் (ஒருவருக்கு மற்றொருவரால் எவ்விதத்திலும் எத்தீங்கும் ஏற்பட்டு விடக் கூடாது) எனும் கருத்தை உருவாக்கி விளக்குகிறது.
முன்னர் விளக்கிக் கூறியவாறு, வேத வழி தத்துவங்கள், உலகளாவியது. இது ஒரு இனத்துக்காகக் கூறப்பட்டதல்ல, அல்லது எந்த இனங்களுக்கும் எதிராகவோ எவரையும் தூண்டிவிட்டு, செயல்பாட்டில் ஈடுபடவும் செய்வதில்லை.
இறைவனால், படைக்கப்பட்ட ஒவ்வொரு பிறவியும், இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமெனவும், அப்பிறவி ஒவ்வொன்றும் (மகா) பிரபஞ்சத்தையே நுண்ணளவில் காட்டும் ஆவண உருவத்துள் (அச்சுக்குள்) இருக்கும் மற்றொரு சின்னஞ்சிறு உருவமெனக் (அச்சு எனக்) கூறுகிறது. (every individual is a part of the universe and in microcosm represents the macrocosm) இன்னொரு உற்சாக மூட்டும் தகவல்: உலகளாவிய பிரபஞ்ச அமைப்பே நம் உடலில் நுண்ணளவாகக் குடி கொண்டுள்ளது, என ஆழ்ந்து, ஆராய்ந்து, படித்துத் தெளிந்த பின், வான சாஸ்த்திர வல்லுனர்கள் ஒருமனதாக அழுத்தந்திருத்தமாக வற்புறுத்திக் கூறுகிறார்கள். இதன் பின்னணியில், எந்த மானிடரும், தன்னைச் சுற்றியுள்ள, குடும்பம், சமூகம், நாடு, உலகம், ஆகிய இவைகளெல்லாம், பிரபஞ்சத்திலிருந்து தனித் தனியாகப் பிறித்து வைத்துக் கொண்டு பேச இயலாது. கூடவும் கூடாது. இதை மற்றொரு விதத்தில் கூறினால், அநேக உருவளவைச் சார்ந்த மனித குலத்திலுள்ள ஒவ்வொருவருமே, பல விதங்களில், அநேக உருவளவைக்கொண்ட அநேக பிரபஞ்சங்களில் உள்ளவைகளின் உருவளவைக் கொண்டவர்களே!! (he or she is a multidimensional being who is connected in many ways to the multidimensional universe)
உலகளாவிய மன உணர்வு நிலை எனும் பொதுக் கருத்தை மனதில் ஏற்படுத்திக் கொண்ட பிறகு நாம் ஒவ்வொருவருமே ஒவ்வொரு விதத்திலும் ஒவ்வொருவருக்கும், உறவினர்களே என நமக்குப் புலப்பட்டு விடும். ஆகையால், நமது செயல்கள் யாவும் நம்மைச் சூழ்ந்தவர்களையும், ஏன்! தாவரங்களையும் மிருகங்களையும் பாதிக்கும். ஆகவே, உயிருள்ள எந்த உளதாம் பொருட்கள்களை (living entities) காவற்பணிப் பொறுப்பாளர்களாக நாம் கவனித்துக் கொள்ள வேண்டும். நாம் செய்யும் எந்த காரியங்களால், எண்ணத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ, நம்மை அறியாமலும் கூட, எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது, ஏனெனில், எதற்கும் எவருக்கும், ஏற்படும் எந்த பாதிப்பும், கட்டாயமாக ஏதாவதொரு விதத்தில் நம்மீதே பிரதிபலிக்கக் கூடியவை. இம்மாதிரியான உணர்வு நிலை நமக்குள் ஏற்பட, ’பூமி’ என்ற கிரகத்தில் உள்ள மாந்தர், சிறு உயிர்கள், சொத்து உள்பட எல்லாவற்றையும், காக்கும் பாதுகாவலர்களாக நாம் அரவணைத்துக் கொள்ள வேண்டும்.
இன்று மேலை நாடுகளிலும், (அதனால் இந்தியாவிலும்) நுகர்வோர் நலன் பாதுகாப்பு (consumerism) எனும் எண்ணம் ஊடுருவி விட்டது. இதன் (உண்மைப்) பொருள்: முதலில் நம் நலனுக்கும் நம் மகிழ்ச்சிக்கும் தான் முதலிடம் என்பதாகும். ஆனால் வேத சமூகத்தில், இக்கருத்தையே மற்றொரு விதத்தில் கண்ணுற்றனர். அதாவது, ஏதாவது ஒரு சமூகத்தில் உள்ள ஒருவராலும் தங்கள் செயகைகளால், மற்றவர்களுக்கு கஷ்ட நஷ்டங்களை ஏற்படுத்த முடியும். பிறர் தேவைகளை தன் தேவைகளுக்கு முன்னர் மனதில் கொண்டால், இந்த கஷ்டங்கள், நஷ்டங்கள் ஏற்படவேண்டிய அவசியமே இல்லை. ஆனால், இது இந்நாட்களில் எங்குமே இது காணக் கிடைக்காது. காரணம் என்ன, என யோசித்தால், மக்கள், வேத வழியிலிருந்து வழுவி, வெறும் மேலை நாட்டு சுய நல நுகர்வோர் நலன் பாதுகாப்பில் இறங்கி, நல்வழிகளை மறந்து விட்டோம். பிறர் நலனில் எல்லோரும் கவனம் கொண்டால் நுகர்வோர் நலன் சங்கம் முதலியவைகளுக்குத் தேவையே வந்திருக்க முடியாது.

[[[விளம்பரத்தால் எந்த உபயோகமற்ற பொருளையும், உயர்வாக விலையை நிர்ணயித்து, அதன்படி விற்று காசாக்க முடியும். அரசாங்கத்தில் அதிகாரத்தில் உள்ளோரே கையூட்டு வாங்கிக் கொண்டு, உற்பத்தியாளர்களுக்கு சாதகமாக கொள்ளை லாபம் அடித்துக் கொள்ள எந்த கேடுகெட்ட செயலிலும் இறங்க தயாராக ஆகியும் விடுகின்றனர். இதனால் பொருட்களுக்கு விலையும் உயர்ந்து விடுகிறது. அதையும் பிறர் மீது சுமர்த்தியும் விடுகின்றனர். இது எல்லாவற்றிக்கும் காரணம், சுய நலம். சுய நலம், பிறர் நலனில் அக்கறை யின்மையே ஆகும். இது வேத வழியே அல்ல]]]

26. மற்றவருடைய கவலைகளைக் களைய உளமார்ந்த கவனமும், அவர்களுடைய நலனில் உண்மையான ஈடுபாடு கொண்டு அக்கறையுடன் இருக்க ஹிந்து வேத வழி ஊக்கமளிக்கிறது.

இயற்கையை நன்கு புரிந்து கொண்டதாலும், அஃதேபோல, மற்ற உயிரினங்களில் உள்ள இயற்கை நிலையும் மேற்கூறிய பத்திகளில் கூறியவாறு அறிந்துகொண்டதாலும், உயிரினங்களுக்குள் உள்ள உறவை, இன்னும் பழுதற்று நிலை நிறுத்திக்கொள்ள, எல்லா உயிரினங்களில் மிக்க அக்கறை கொண்டொழுக சந்தர்ப்பம் உண்டாகிறது. இச்செயல்களால், இவ்வுலகத்தில் லோகாயதப் பொருளால் நமக்குக் கிடைக்கும் பலன்கள், நம்மைச் சூழ்ந்துள்ளவர்களுக்கும் இதே பலன்களும் உண்டாகின்றன. உதாரணமாக: பசியால் யாரும் வாடக்கூடாது; எல்லோரும் நன்கு உடையணிய வேண்டும், எல்லோருக்கும் வசிக்க நிம்மதியான இடம் வேண்டும் என்பன. இதையே சற்று விரிவு படுத்திக் கூறினால், இது, நம் ஆத்மாவையும் சேர்த்துத் தான் எனக் கூறவேண்டும். ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உலகிலுள்ளோர் எல்லோரும் நன்கு வாழ வேண்டும் என உள்ளத்தால் நினைந்தாலும், முடிவில் செயல்பாட்டில் நம் ஒவ்வொருவரால் நடத்திக்காட்ட முடியுமா, எனும் ஐயப்பாடும் கூடவே நம் மனதில் எழுகிறது. அதாவது எத்தனை சொன்னாலும், விரும்பினாலும், நாம் சாதாரண மனிதர்கள் தானே!. நமக்கு இப் பொருளுலகில் நமக்கு வேண்டியவைகளால், நாமே ஏற்படுத்திக் கொள்ளும் அநேக இன்னல்களுக்கும் ஈடுகொடுத்து அவைகளுக்கு வேண்டியவை களையும் நல்லதாகச் செய்தாக வேண்டும். ஆகையால், நாம் ஆன்மீகத்தில் முன்னேறம் அடைந்தால், இம்மாதிரியான இடர்களைக் களையமுடியும். நமக்கேற்படும் ஆன்மீகத்தின் முன்னேற்றத்தால், பொருளுலகம், அருளுலகம் என்பதன் உட்பொருள் உணர முடிகிறது. இதனால், பொருளுலக உடல் நிலையற்றது என உண்மையை அறிந்தபின், அதாவது இவ்வுடல் அநித்தியமானது, வினை, வினைப்பயன், பிறப்பு இறப்பு, எனும் எண்ணம் நம் மனதில் உதித்துத் தெளிந்த பிறகு, நாம் மற்றவருக்கு செய்யும் நன்மைக் கடமைகளைச் செவ்வனே செய்ய முயல்கிறோம். இப்படி ஒவ்வொருவரும் நம் சமூகத்துக்கு ஆற்றும் நற்பணியால், பொதுப் பிரச்சனைகளை எளிதாக தீர்த்துக் கொள்ள இயற்கையாகவே முடியும். இதே தான் இப்பத்தியின் (26வது) தலைப்பில் உள்ளது.: மற்றவருடைய கவலைகளைக் களைய உளமார்ந்த கவனமும், அவர்களுடைய நலனில் உண்மையான ஈடுபாடு கொண்டு அக்கறையுடன் இருக்க ஹிந்து வேத வழி ஊக்கமளிக்கிறது.
அடுத்ததாக ஹிந்து-வேதவழியில் ‘தீண்டாமை’ இருப்பதாக, விதவைகளுக்கு அவமரியாதை செய்யப் படுவதாகவும், ஏழ்மை எங்கும் தாண்டவமாடுவதாக விமர்சனங்கள் ஏராளமாக இருக்கின்றன. இது கட்டாயமாக வேத வழியினால் ஏற்பட்டதல்ல, ஏனென்னில், இப்பிரச்சனைகளுக்கெல்லாம் மூலகாரணமே வேதவழியைப் பின்பற்றாதது தான். சுருக்கமாகச் சொன்னால், ஜாதி முறை என்பதே, பிடிவாதமாக காரிய காரணமின்றித் தவறான வழியில் வேத வழியைக் குடை சாய்ப்பதற்கும், உண்மை வழியிலிருந்து விலக்கி மக்களை வர்ணாச்ரம முறையை சுற்றி வளைத்து உபயோகப் படுதப்பட்டது. வர்ணம் என்பது வேத ஒழுங்கு முறையில் அவரவர்கள் அறிவாற்றலின் படித்தரத்துக்கும், நுண்ணறிவின் மேன்மைக்குத் தக்கவாறும், வேலையில் திறமை, விருப்பத்திற்கேற்றவாறு, ஒவ்வொரு வேலைக்கும், சமூக சேவை புரியவும், பரிந்து கூறப்பட்டது. ஆக, ஒருவர், ஆழ்ந்து ஆய்வுசெய்து படிப்பதிலும், ஆன்மீக சமய நூல்களில் நாட்டம் கொண்டவர்களை பிராம்மணர் என பயிற்சி அளிக்கப்பட்டது; வியாபாரத்தில் ஈடுபாடுள்ளவரை வைசியர் என பயிற்சியளிக்கப்பட்டது. குழந்தைப்பருவத் திலிருந்து, எவரெவருக்கு குறைந்த அறிவுத்திறமும், உடலால் ஆகும் வேலையில், நாட்டமுள்ளதோ அவர்களை சூத்ரர் என அத் தொழிலில் பயிற்சியளைத்து, அத் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டனர். அவரவர்களுடைய சுய கௌரவத்திற்கு எங்கும் குந்தகம் விளைவிக்க வில்லை, மாறாக பாதுகாக்கப்பட்டது, எந்த வகுப்பில் பயிற்சி பெற்றாலும், அதிலுள்ளவர்களுக்கு, மற்ற பிரிவில் உள்ளவர்களுக்குள்ளவர்கள் போல சம உரிமை அளிக்கப்பட்டு, கௌரவத்துடனும் நடத்தப்படவேண்டுமெனவும், ஏற்றத்தாழ்வு என்பதற்கே இடமில்லாமல் இருக்கத்தான் வேத வழிகள் வகுத்துள்ளன.
ஆனால், ஜாதி முறை என் நாம் இன்று காண்பது, இவ்வாறு உள்ளது.
• ஒருவர் ’பிராமண’க் குடும்பத்தில் பிறந்துவிட்டால், அவரை பிராமிணர் என ஒப்புக்கொள்ளப் படுகிறது.
• ஒருவர் ‘சூத்ர’க் குடும்பத்தில் பிறந்து விட்டால், அவரை ’சூத்ர’ என பெயரிடப் பட்டு, அங்கேயே நிலை மாறாது தொடர்ந்து நீடித்திருக்க வைக்கப் படுகிறது.
இவ்வாறாக, வருடக் கணக்கில் நாளாக ஆக, மேற்குடி ஜாதிக்காரர்கள் தங்கள் மனப் பான்மையில் கீழ் ஜாதிக்காரர்களைக் காட்டிலும், ஆள்வகையில் மற்றவருடன் நெருங்கிப் பழக விருப்பமில்லது தங்களை தனியாக விலக்கிக் கொண்டும், தங்கள் இடத்தில் புதிய உருப்பினர்களை சேர்த்துக் கொள்ள விருப்பமில்லாது இருந்தும் விட்டனர். இதற்கு வேத இலக்கியங்களான பகவத் கீதையிலும் பாகவத புராணத்திலும், “ ஒவ்வொருவரும் மடமையுடன் பிறந்தவர்கள்” எனவும்; இச்செய்கையை கொஞ்சம் கூட நியாயமென நிரூபிக்க முடியாது என மிகத் தெள்ளத் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது. முதலில் ஒவ்வொருவரும் ‘பிறக்கும்போது ‘சூத்ர’ ராக பிறந்து, பிறகு அறிவாற்றலின் படித்தரத்துக்கும், நுண்ணறிவின் மேன்மைக்குத் தக்கவாறும், வேலையில் திறமை, விருப்பத்திற்கேற்றவாறு, நிணயிக்கப்படுமெனவே உள்ளது. இதற்குப் பின்னர் தான் ஒவ்வொரு வரும் எந்தெந்த பிரிவில் இருக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட வேண்டும். இதையே வேறு விதமாகச் சொன்னால், நீங்கள் ஒரு மருத்துவர் குடும்பத்தில், பிறந்தவுடன் மருத்துவராக ஆவதில்லை, உங்களுக்கு தேர்வாய்வு செய்யப்படுகிறது பின்னர், பயிற்சி அளிக்கப்படுகிறது, பிறகுதான் மருத்துவராக ஆகத் தகுதி பெறுகிறீகள். கிறுக்குக் குறுக்கு வழிகளில் கிடைக்க வாய்ப்பில்லை. டாக்டருக்குப் பிறந்து அத் தொழிலில் தேர்வு பெறாவிட்டால், நீங்கள் மற்றொரு தொழிலை மேற்கொள்ள வேண்டி வரும். தகுதி பெறாமல் மருத்துவராக இயலுமா? அஃதே போல, பிராமிணருக்குப் பிறந்தாலும், அவரே, புகைத்தலிலும், குடி, புல்லாலுண்டு, பறத்தையரைத் நாடி நாட்களை வீணாக்கினால், அவரையும் பிராமிணர் எனக் கூற முடியுமா? வர்ணாச்ரம ஒழுங்கு முறையின் கீழ், ஒருவர் கீழ் ஜாதி குடும்பத்தில் பிறந்திருந்தாலும், அவரே நற்பண்புகளையும், மூளைத்திறனில் மேம்பட்டு பலர் அறியத் தெரிந்தால், அவரை கீழ் ஜாதியில் நிரந்தரமாகத் தள்ளிவிட இயலாது. அப்பேற்பட்டவர்களுக்கு மற்ற திறனில் தகுந்த பயிற்சி அளித்து முனேற்றவேண்டும். இம்மாதிரி பிரச்சனைகளை நன்கு தீர்த்துவைக்க, வேத வழி நன்நெறி இலக்கியங்களில் ஆழ்ந்து படித்துத் தெளிதல் அவசியம். இப்படி படித்துத் தெளிந்தபின்னர், நம் ஒவ்வொருவரின் ஆன்மீக படிநிலை மேலோங்கி, வேத வழிகளில் உள்ள நன்மைகளை தங்களுத் தாங்களே உணர்ந்து கொள்ளவும் முடியும்.. இது வெறும் சொல்லல்ல. இப்படித் தெளிந்து விட்டால், நாம் போலியில்லாத மெய்யான, நம்பத்தகுந்த வழிதான் வேத வழி என நன்கு புரிந்து கொள்ள முடியும். இதற்கு மாறாக, வெளியிலிருந்து கத்திக் காட்டுக் கூசல்போட்டு ஆர்பாட்டம் நடத்துவதால், எங்கும் குழப்பமும், வீண் வம்பும் தான் விளைவாக முடியும். வேத வழி நிர்மாணிக்க உதவுகிறதே தவிர சமூகத்தை அழித்து, மன பேதங்களை உண்டாக்கி, அதனால் ஒரு சிலருக்கு மட்டுமே பலனை அளித்துக் கொள்ளும் வழியல்லவே அல்ல. வேத வழியால், நம் ஒவ்வொருவரையும் ஆன்மீக உறவினராக்கி, வீணாகக் கண்ணில் காணும் பொருளாகிற வேற்றுமைகளை உண்டாக்காமல், நாம் எல்லோரிடமும் அன்புடன், அக்கறையுடன், கூட்டுறவுடன் வாழ வழி வகுத்துக்கொள்ளவும் முடியும்.
[[[இங்கு ஒரு வேத வழியை எவ்வாறு இறைவனே எல்லோருக்கும் இதன் பொருட்களை ஐயமின்றி செயல்படச் செய்தார் என்பதை கூற வேண்டும். வேத இலக்கிய உதாரணம்:
திருப்பாணாழ்வார்: உறையூரில் பாணர்குலத் சேர்ந்த ஒருவரால், நெற்கதிர்களிடையே, கண்டெடுக்கப்பட்டார். மகப் பேறற்ற பாணர் குலத் தம்பதிகள், மாலவனே தங்கள் மேல், கருணைகொண்டு மனம் மகிழ்ந்து அக்குழந்தையை அளித்துள்ளார் என சீராட்டிப் பாராட்டி வளர்த்தனர். இவர் யாழ் மீட்டி வாசிப்பதில் இயற்கையாகவே இணையற்று விளங்கினார். தென் திருக் காவிரியின் கரையில் நின்றுகொண்டு, திருவரங்கன் கோயில் நோக்கித் தொழுதவாறு கேட்பவர் ”ஊனுருக, உள்ளமும் உயிருமுருக, உலகத்து உயிகளெல்லாம் உணர்விழக்கும் வண்ணம் ஊறிடும் உன்னதத் தேன் வாரிதியாக யாழிசைத்து ஏழிசைப் பாடல்களை ஏராளமாகப் பாடி”, (ஸ்ரீ காச்யபர்) தன்னையும், பிறரையும் பரவசக் களிப்பில் ஆழ்த்தினார்.
ஒரு நாள், பாணாழ்வார் திருவரங்கன் புகழைப் பாடித் தன்னை மறந்த நிலையில் உள்ளபோது அங்கு திருக்காவிரி படித்துறையில் நீராட வந்த அரங்கன் சன்னதி அர்ச்சகர் லோக சாரங்க முனிவர், பாணாழ்வாரை விலகிப் போகச் சொன்னார். ஆழ்வாரோ, திருவரங்கனையே நினைந்து, மெய் மறந்த நிலையில் இருந்ததால், லோக சாரங்கர் வந்தது; தன்னைத் தள்ளிப் போகச் சொன்னது; முதலியவைகளைக் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. ஆகையால் லோக சாரங்கர் அங்கு கிடைத்த சிறு கல்லை எடுத்து ஆழ்வாரை நோக்கி எறிந்தார். அது அவர் நெற்றியில் தவறிப் பட்டுவிட்டது. உடனே பாணாழ்வார் திடுக்கிட்டு எழுந்த போது, திருக்கோவிலில் குடி கொண்ட திருவரங்கன் நெற்றில், குருதி பெருக்கெடுத்து ஓடியது. தன் திருத்தொண்டனுக்கிழைத்த சிறு கடுஞ்செயல், திருவரங்கனுக்கிழைத்த கடுஞ்செயலன்றோ! அரங்கனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அரங்கனையே இந்நிகழ்ச்சி அத்தனைத் துயருற வைத்துவிட்டது. அன்று இரவு, இறைவன் லோக சாரங்க முனிவர் கனவில் தோன்றி, பாணாழ்வாருக்குத் தீங்கிழைத்த கொடுமைகாக, லோக சாரங்கர் தானே தன், தோளில் பாணாழ்வாரை தென் காவிரிக்கரை யிலிருந்து, அரங்கன் சன்னதிவரை சுமந்து வரவேண்டும் எனவும் ஆணையும் இட்டு, அப்படிச் செய்யும் வரை, தன் சன்னதிக் கதவைத் திறப்பதற்கில்லை என உள்தாழ்பபாள் இட்டுக் கொண்டு விட்டார். பாணர் குல ஆழ்வாரை லோக சாரங்கர் தன் தோளில் சுமந்துவரும் காட்சியை ஊர், உலகம் அறிய வேண்டுமென அரங்கனின் திருவுள்ளமன்றோ! அரங்கன் திருவுள்ளப்படி, அரங்கன் கோவில் அர்ச்சகரான முனிவர், பாணாழ்வாரைத் தன் தோளில் சுமந்து, திருவரங்கன் சன்னதியில் சகல தெய்வ மரியாதைகளுடன் கொணர்ந்தவுடன்தான் அரங்கன் சன்னதித் தாழ்ப்பாள் திறந்தது. பாணாழ்வாரைத் தன் சன்னதியில் காண வரும் வரை, திருவரங்கனும், தன் சன்னதியுள் துடித்துக் கொண்டுதான் இருந்தார். அரங்கன் திருமேனியை நேரில், இதுவரைக் கண்ணால் காணாத ஆழ்வார், அத் திருவரங்கனை பக்கலில் கண்ணாரக் கண்டவுடன் அவர் அழகில் அப்படியே சொக்கி, ‘அமலனாதிபிரான் எனும் தொடங்கும் அற்புத, பத்துப் பாசுரங்களில் வருணித்துப் பாடினார். பிறகு அரங்கனிடம் அடைக்கலம் (சரணாகதி) அடைந்து அவருடனே என்றும் உறைந்தும் விட்டார். பாணாழ்வார் அரங்கன் சன்னதியிலிருந்து வெளிவரவில்லை. அரங்கனே பாணாழ்வாரைத் தடுதாட்கொண்டு விட்டார்.
பாணாழ்வார் இயற்றிய பாசுரத்தில், முத்ற்பாசுரத்தையும் கடைசிப் பாசுரத்தையும் கீழே கொடுத்திருக்கிறேன்:
முதல் பாசுரம்:

” அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்,
நிமலன், நிர்மலன், நீதி வானவன்,
நீள்மதில் அரங்கத்து அம்மான், திருக்
கமலபாதம், வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்னதே” (க)

கடைசிப் பாசுரம்:

“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்னெய்
உண்ட வாயன், என் உள்ளம் கவர்ந்தானை,
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள், மற்று ஒன்றினைக் காணாவே””. (க0)

மேற்கூறியதுதான் வேத வழி.!!]]]

27. நாம் எல்லோரும் இறைவனிடம், தனிப்பட்ட முறையில், நேரிடையாக, சர்வ சுதந்திரமாகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளவும் காண்பித்து, இதனை நிலை நாட்டவும் செய்கிறது.

இது ஒரு மிக முக்கிய விஷயமாகும். உலகில் மற்ற சமயங்களை எடுத்துக்கொண்டால், அவைகள் கடவுளை ‘சர்ச்’ மூலமாகவோ, அல்லது நிர்ணயிக்கப்பட, மரபு கொண்ட நிறுவனத்தின் மூலமாகத்தான் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள முடியும்; வேறு வழிகளாலல்ல என அழுத்தந்திருத்தமாகக் கூறுகின்றன. இப்படி செய்யாவிடில், அச்சமயத்தோர் மாற்றுவழியில் சென்றால், அவர்களைத் தங்கள் சமயத்திலிருந்து, தண்டனையாக, நிரந்தரமாக விலக்கிவைத்து (excommunicated or eternally damned), அருவருக்கத்தக்க மீள முடியாத நரகத்திற்குத் தள்ளப் படப்போவதாக சாபமிட்டு, அவர்கள் புகழையும் அழித்துவிடுறது. ஒப்பீடாக, வேத வழி ஒழுங்கு முறையில் சொல்வது: உலகிலுள்ள ஒவ்வொருவரும் இறைவனின் ஆன்மீக உறவினர்களே, ஆகவே அவருடன் நிரந்தரமாக, எல்லையற்று தொடர்புகொள்ளத் தக்கவர்களே எனத் தீர்மானமாகச் சொல்கிறது. இந்த தொடர்பை மீண்டும், தொடர்பில்லா-உறக்க நிலையிலிருந்து, தொடர்புள்ள-விழிப்பு நிலையைப்பெற எழுப்ப வேண்டுமெனக் கூறுகிறது. இந்த விழிப்பை ஏற்படுத்தத்தான் நிறுவனங்கள் உள்ளதே தவிர, அந்நிறுவனங்கள் மூலமாகத்தான் கடவுளிடம் தொடர்பு கொள்ள வேண்டுமென நிர்ப்பந்திக்க அல்ல என வேத பாடங்கள் அறிவிக்கின்றன. இறைவனிடம் செயலற்றுருக்கிற தொடர்பை, வேத வழி சமயத்தோர்களுக்கு, உதவி செய்ய, (பாடங்களாலும், போதனைகளாலும்) மீண்டும் உயிர்பெற வைக்க ஆன்மீக ஆசான்கள் உள்ளனரே தவிர, எதையும் நிர்ப்பந்திக்க இல்லை என சொல்கிறது. இத் தொடர்புக்கு மீண்டும் இயல்பிலும், தோற்றத்திலும் இளமையூட்டி, உள்ளுரம் பெறச் செய்ய, ஒவ்வொருவருடைய சொல்லிலும் செயலிலும் நேர்மையாக நிறைவேற்றிக்கொள்ள, அவ்வாசான்கள் சொல்லிக் கொடுக்கும் போதனிகளின்படி நடந்து காட்டுதலேயாகும். உதாரணமாக, ’சர்ச்’ நிறுவனங்களேதான், அல்லது ’போப்’ எனும் அதன் தலைவர்களே கடவுளிடம் தொடர்பு கொள்ளத் தகுதி பெற்றவர்கள், ஏனெனில், அவர்களுக்குத்தான கடவுளுடைய மூலாதார உண்மைகள் அறிந்து கொள்ள முடியும் எனவும்; ஆகையால் இவர்களிடமே இச்சமயத்தோர் நம்பி சார்ந்திருக்க வேண்டும் எனவும், ஆக இத் தலைவர்கள் இடும் எந்த கட்டளைகளும், இறைவன் சொல்லென அச்சயத்தோர் நிறைவேற்றியே ஆகவேண்டும் என்பது வேத வழி அல்ல.

[[[ ’’ஆச்சார்யர்’’ என கொண்டாடப்படுவது ஏன்? ஏனெனில், அவரிடம் ”ஆசரணம்” = “நடத்தை” இருக்கிறது. எண்ணத்திலும், சொல்லிலிலும், செயலிலும் ஒன்றாகி நடந்துகொள்ளும் பண்புள்ளது. அதனால் தான் இப்பண்புள்ளவரை ”ஆச்சாரியர்” “ஆசிரியர் “எனச் சொல்கிறோம்]]].

உண்மையில், வேத வழி ஆச்சார்யர்கள், ஆசான்கள், மரபு சார்ந்த வழி வழியாக வந்த வேத வழி போதனைகளை ஹிந்து சமயதோருக்கு கல்வியூட்டுவதோடு மட்டுமல்லாமல், இவ்வழியில் நடப்பதால் விளையும் நன்மைகளை நிரூபித்து, (தங்கள் முன்னுதாரணமான நடத்தையால் நிரூபித்து), மற்றும் சமயத்தில் உள்ள இலக்கியங்களில் உள்ள சித்திபெற்றவர்களின் சரித்திர உண்மைகள், நற்பணிகள், செற்கள் முதவற்றைப் போதிக்கிறார்கள். இவர்களுக்கு வேறொரு உள்நோக்கமும் கிடையாது. இந்த மனநிலையை மரபு சார்ந்த வழியாகிற வேத வழி ஆசான்கள் நமக்குள் ஓர் விழிப்பை உண்டாக்குகிறார்கள். ஆம்! கடவுளுக்கும் நம் ஒவ்வொரு வருக்கும் நேரிடை உறவு உள்ளது; தொடர்புள்ளது இதில் எவரும் குறிக்கிட இயலாது என போதித்து, சீடர்களுக்காக கடவுளிடம் நம் மன நலனுக்காக உளமார எப்போதும் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆகவேதான் தெய்வத்தின் குரல் இவ்வாசான்கள் குரலிலும் பிரதிபலிக்கிறது. ஆகையால் தான் அவ்விறைவனே அவரிடம் எக்கணமும் உறைந்துள்ளார் என மெய்ப்பொருள் உணர்ந்தவர்கள் கருதுகிறார்கள்.

28. வேத வழி சாரம் இது தான்: ஹிந்து தத்துவங்கள், வாழ்க்கையின் உண்மைப் பொருள்களைக் (கருத்துகளைக்) காண வழி காண்பிக்கிறது

ஹிந்து வேத வழி தத்துவங்களை உங்கள் வாழ்க்கை-செயல்பாட்டில் நடத்திக்காட்டு வதோடு, இவைகளிலுள்ள கோட்பாடுகளின் படி வாழ்ந்தால், நீங்களே உங்கள் புலன்களால் அறிகிறவாறு, வெளிப்படையாகத் தெரியக்கூடிய மாற்றங்களை உங்கள் வாழ்க்கையில் கண்ணாரக் காணமுடியும். இதே செயற்களங்களில், உங்கள் உள் ஆற்றலிலும் பிரதிபலிக்கும்.
உங்கள் ஆன்மீக அடையாளத்தை நீங்களே விழிப்படையச் செய்ய ஆரம்பித்து, அதனால் பரம்பொருளிடம் உங்கள் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு, இதனால், உங்களுக்கு மிகச் சுலபமான நிறைவமைதியுடன் (போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்தென) மன மகிழ்ச்சியையும், மன அமைதியையும், அடைவீர்கள். உங்களுக்கே, நீங்கள் யார், எங்கிருந்து வந்தீர்கள், உங்கள் வாழ்க்கை நோக்கமென்ன என்பதில் தெளிவான உய்த்துணர்வையும் பெற முடியும். ஆகவே, எதற்காக இப்புவியில் உள்ளோம் எனவும், இப்பொருளுலகத்தில் என்னென்ன செய்ய முடியும் என செயலில் விஞ்சுமளவுக்கு, உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் இயலும். முன்னர் சின்னஞ்சிறு விஷயத்தையும் மிக உள்ளார்வம் மிக்க அக்கறையுடன் கண்காணித்தலால் உண்டான பின் விளைவுகளும் முன் மாதிரி உங்களை அதே பாணியில் பாதிக்காது. வாழ்க்கையில் எல்லா விஷயங்களைப் பற்றித் தெளிவான பார்வையுடன் காணவும், சிற்சில கானல் நீர்போல் உள்ளவைகள் காண்பீர்கள். (மேற்பரப்பில் மட்டுமே அருகிலுள்ளதுபோல காட்சியளிக்கும் – ’பிபீலிகா’ – पिपीलिका = கானல் நீர்), ஆகையால் உள்ளுணர்ச்சி வகையில் ஆழமற்றவைகள் இனி மிக முக்கியமாகத் தென்படாது.
மிக முக்கியமாக உலகில் நிரந்தரமாக உள்ள எல்லாவற்றிகும் உரிய, எல்லாவற்றையும் பாதிக்கிற, எல்லாவற்றையும் உள்ளடக்கிய, எங்கும் எந்நிலையிலும் பல்வகைகளிலும் பயன்படுத்தக் கூடிய மனித இனம் முழுதுக்கும் ஏற்றதான சமயம், “சனாதன தர்மம்” எனும், ஹிந்து “வேத வழி நன்நெறியே” என உங்களுக்குப் புரியவைத்து, இயற்கையாகவே உங்களுள் உறைகிற அத்மாவை உறக்கத்திலிருந்து விழிப்படையச் செய்யும் நோக்கத்தோடு, அந்த ஆத்மாவே (இறைவனின் துகளே) உங்கள் பக்கலில் உள்ளதென தெரிவித்துவிடும். இதனால், உங்களுக்கும் ஆன்மீக அடையாடத்தையும் காட்டிவிடும். இறைவனிடம் உங்கள் நெருங்கிய உறவை புதிப்பிக்கச் செய்தும் விடும். அதாவது நீங்களே எவ்வாறு இறையின் அன்பை அறிந்து, வெளியில் காட்டி, அவ்விறைக்கே தொண்டு செய்யவும் இயலும்.

இதுதான் முக்கிய பகுதியான (உணர்ச்சிகளின் இருப்பிடமான) வேதவழியின், இதயம் போலாகும்.

(முற்றும்)

Series Navigation

author

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Similar Posts