ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 5

This entry is part [part not set] of 28 in the series 20100829_Issue

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் – தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்


17. ’மதத்திற்காகப் புனிதப் போர்’ (HOLY WAR IN THE NAME OF RELIGION) (இஸ்லாமியத்தில் ’ஜிஹாத்’ = JIHAD; கிருஸ்தவத்தில் = CRUSADE), இஸ்லாமிய மதப் போரில் பங்கெடுக்கும் தியாகிகள் (MARTYRS) இவர்களுக்கு சுவர்க்க போக உத்திரவாதம் (GURANTEE), ஆகியவைகளை போலவோ, அல்லது இவைகளுக்கு ஒத்த பொருள் படைத்த எண்ணமோ, சொல்லோ, செயலோ, வேத வழியில் கிடையாது.
[[[Dr. N.S.ராஜாராம் எனும் உலகப் புகழ் பெற்ற பொறியியல் நிபுணர், பல பொறியியல் தொழில் துறைப் பட்டங்களுக்குப் பெருமை சேர்த்தவர், ex-NASA – முன்னாள் NASA விஞ்ஞானி. மூத்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர், கூறுவது:” கடவுள் பெயரைச் சொல்லி நடக்கும் இஸ்லாமிய ‘ஜிஹாத்’ பயங்கரவாதமே தான். மேலாக, இஸ்லாமிய சரித்திரமே ‘ஜிஹாதின்’ அட்டவணை தான்.” என்கிறார். ”Jihad is nothing but terrorism in the name of God and Islamic history is a catalog of Jihads”.– Dr. N.S.Rajaram]]]
இஸ்லாமிய சமயக் கோட்பாடுகளை வற்புறுத்திக் கூறி, முஸ்லிம்களைத் தவிர வேறு எல்லா சமயத்தவரையும் அழித்திட வேண்டுமென இஸ்லாமிய புனித நூல்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டி, இயல்பு கடந்த செருக்கு நிலையில், உச்சநிலைத் தீவிரவாதிகளை ஊக்குவித்து, உருவாக்கி, இக்கருத்தைச் செயல் படுத்த ’ஜிஹாத்’ எனும் கட்டாயப் போர்ப்பாணியும், அதன் தொடர்ச்சியாக, இம்மதப்போரில் பங்கெடுத்துக் கொண்டோ, அல்லது இதில் உயிர்துறந்த தியாகிகளுக்கு, இவர்கள் நூல்களில் உள்ளபடி, இஸ்லாமிய மதத்தின் பெயரால், சுவர்க்க போகம் கட்டாயம் உண்டென்று, இஸ்லாமிய மதமே உத்திரவாதத்தை அளிக்கிறது. அதே போல, ’புனிதம்’ ’அன்பு’ எனும் இரு அழகான சொற்களை எப்போதுமே உச்சரித்துக் கொண்டே, வாஸ்த்தவத்தில் அச்சொல்லுக்கு பொருள் மாறாக, நேர் முகமாகவோ அல்லது மறை முகமாகவோ, அல்லது அவர்கள் அதிகாரம் பெற்ற (இத்தாலிய) பிரதிநிதிகள் மூலமாகவோ, கிருஸ்தவர்கள், உலகெங்கும் மற்ற சமயங்களை திட்டமிட்டு அழிக்கும் ’புனிதப்போர்’ எனும் கிருஸ்தவப்பணியில் அந்த நாள் முதல் இந்த நாள் வரை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். இஸ்லாமிய ‘ஜிஹாத் (JIHAD)’ போன்றோ, கிருஸ்தவ புனிதப் போர் ’க்ரூஸேட்’ (CRUSADE) போன்ற சொல்லோ, எண்ணமோ, செயலோ, வேத வழி கலாச்சாரத்தில், கிடையவே கிடையாது.
[[[இத்தாலியில் தற்போது ’வாடிக’னில் உள்ள, போப், மற்ற மதத்தவரை மதமாற்றம் செய்யச் ஆணையிடும் போது உபயோகிக்கும் அகில உலகப் புகழ் பெற்ற சொல்-“Harvesting People”- மனிதர்களை ஏதோ பயிர் அறுவடை செய்வது போன்று பிதற்றுவதை, வேத வழியில் வந்தவர்கள் எந்நாளும் சொல்லமாட்டார்கள். ஆட்களை அறுவடை செய்வது தானே கிருஸ்தவப்பணி]]].
ஆன்மீக வாழ்க்கை என்பதே, மற்ற சமயங்களுடன் சண்டை சச்சரவு செய்து, அதன் விளைவாக எப்பாடுபட்டாவது, தங்கள் ஹிந்து – வேத வழிதான் ஒப்புயர்வற்றது என நிலை நாட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் ஹிந்துக்களுக்கு, என்றுமே இருந்ததில்லை. வேதவழிக்கு ‘தரக் குறியீட்டு முத்திரையாக’ (Hall mark) ஆன்மீகக் கருத்தான ’கடவுளை அணுகுதல்’ என்பது இருப்பதால், இக்கருத்துப் படிவமே, அதற்கு வேண்டிய மன வலிமையையும், பாதுகாப்பையும் அளித்து விடுகிறது. அதன் பின்னணியில் தான், ஹிந்து சமயம் மற்ற சமயங்களையும், மதிக்கிறது, சூதுவாது புரிந்தாலாவது, எல்லாவிதத்திலும் தங்கள் சமயத்தைச் சார்தோர் எண்ணிக்கையைக் கூட்டிக் காண்பிக்க, எக்காலத்திலும் ஹிந்து சமயத்திறகுத் தேவை இருந்ததில்லை. ஏன், யாருக்கு, எதற்காக, நிரூபித்துக் காட்ட வேண்டும்? நிரூபிக்க வேண்டு மென்றால், தனக்குத்தானே நிரூபித்துக்கொள்ள வேண்டுமே தவிர, வேறு எவருக்கும் நிரூபித்துக் காட்டத் தேவையில்லை என ஹிந்துக்கள் கருதுவார்கள். 1400 வருடங்களாக, இவ்விரு மதங்களால் ஹிந்து-இந்தியா, இவ்வளவு சீரழிந்துக் கிடப்பதைப் பற்றிக் காரணங்களை அறிய, எவ்விதத்திலும் குறைபாடற்ற, நடந்தது நடந்தபடி எழுதப்பட்ட சரியான சரித்திரத்தை கருத்தூன்றிப் படித்த அனுபவத்தாலும், மேலாக, மேற்கூறியவாறு படித்தறிந்தவைகளை உறுதிப் படுத்தத் தங்கள் கண்ணுக்கு நேராக இன்று அன்றாடம் காணும் இஸ்லாமிய ’ஜிஹாத்’ மேலும் தக்கியா = புனித இஸ்லாமிய ஏமாற்றல் = வாய்ப்பந்தல்களாலும், மேலும் கிருஸ்தவப் பகட்டு, திறன்படைத்த வாணிகத் தந்திர வாய்ந்த போலி நடத்தைகள், புனைத் திறம் வாய்ந்த அவர்கள் திட்டங்களையும் கண்டு, தெளிந்த சிந்தனையுடன் தீர்மானமாக எடுத்த முடிவுதான் இது. இதனால் தான் ஹிந்துக்களுடைய மூதாதையர் முன்னறிவுடன் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் அகில பிரபஞ்ச அடிப்படையில் (இந்தியாவிலுள்ள ஹிந்துக்களுக்கு மட்டுமன்றி) ஆரம்பித்து வைத்த ‘சனாதன தர்மமே’ தங்களுக்கு எக்காலத்திலும், மிக உகந்தது, என மனதளவிலும், சொந்த (மேற்கூறிய) அனுபவங்களாலும் அறிந்து, தெளிந்து, இக்கருத்தில், திட நம்பிக்கை கொண்டவர்கள்.
ஒவ்வொரு மானிடரும், “தான் யார்? நமக்கும் கடவுளுக்கும் இருக்கும் தொடர்பென்ன? இப்பிரபஞ்சத்தின் உள்நோக்கம் தான் என்ன?” என்றெழும் மன வேட்கைகளுக்கு தக்க விடைகளை முற்றிலும் அறிய, ஆன்மீக செயல் முறை தான் நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறது. இவ்வாறு ஆன்மீக வழியில் முன்னேறுவதில் எவரொருவர் உண்மையாக ஈடுபடுகிறாரோ, அவருக்கு, மற்ற மதங்களை அழித்திடவும், புனிதப் போரில் பங்கேற்க வேண்டுமென ஒரு எண்ணமுமே மனதில் அறவே தோன்றாது. இதனால், மதத்தின் பெயரால், போரில் பங்கு கொண்டோ அல்லது ஆங்கே தன் உயிர்த் தியாகம் செய்து சுவர்கம் புக வேண்டும் எனும் மனக் கருத்து ஏற்பட வாய்ப்பில்லை.
[[[இன்னும் ஒரு படி மேலாக, பிரதிப்பலனை எதிர்பார்த்து எக்காரியத்திலும் இறங்காதே என வேத வழியே இக்கருத்தை வழிவழியாக சொல்லிக்கொடுத்துச் செயல்படுத்துவதால், இக்கருத்து ஹிந்துக்கள் ரத்ததிலும் தன்னியக்கமாகக் கலந்துள்ளது. வேத வழியில், ”வினையாற்றக் கடமைப் பட்டுள்ளாய். வினைப்பயனில் ஒருபொழுதும் உரிமை பாராட்டாதே. வினைப்பயன் விளைவிப்பவனாக ஆகிவிடாதே. ஆனால், வெறுமனே இருப்பதில் எக்காரணங் கொண்டும் விருப்புக் கொள்ளாதே” – ப.கீதை – 2:47)
कर्मणि एव अध्कार: ते मा फलेषु कदाचन ।
मा कर्म फल हेतु: भू: मा ते सङग: अस्तु अकर्मणि
கர்மணி ஏவ அதிகார: தே மா பலேஷு கதாசன । மா கர்ம பல ஹேது: பூ: மாதே ஸங்க: அஸ்து அகர்மணி || – ப.கீதை – 2:47 (மேற்கூறிய சம்ஸ்கிருத ஸ்லோகத்தைப் படிப்பதற்கும், அதன் அர்த்தங்களை நன்கு, சுலபமாகப் புரிந்து கொள்ளவும் பதங்களைப் பிரித்துக் கூறப்பட்டுள்ளது)
“வினைப்பயன் விரும்பாது வினையாற்ற முடியாது. வினைப்பயனை விரும்பாதார் வினையாற்ற வேண்டிய அவசியமில்லை. ஆனால் பகவான் கிருஷ்ணனோ, இதற்கு நேர்மாறாக உபதேசிக்கிறார். ஏனெனில், இதனால் கருமம் புரியாது வெறுமனே (சும்மா) இருக்க வேண்டாம். ஓயாது பெருவினையாற்றிக் கொண்டிரு. ஆனால் வினையினின்று விளையும் பயன் யாது என்ற ஏக்கம் வேண்டாம். அத்தகைய பற்றற்ற பாங்கினின்று தான் நன்மை விளையும்” என்பது தான் ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்குச் சொல்லும் உட்பொருள்.
“படகு நீரில் இருக்கலாம். ஆனால் நீர் படகுக்குள் நுழையலாகுமோ? அங்ஙனம் மனிதன் உலகில் வாழலாம். ஆனால் உலக ஆசை அவன் உள்ளத்தில் புகுந்து விடலாகாது”. — ஸ்ரீ ராமகிருஷ்ணர் உபதேசம்]]]
ஆன்மீகத்தை உண்மையாக விரும்பும் மதங்களானால் ‘இஸ்லாமிய ஜிஹாத்’ போன்ற, பயங்கரத் தீவிரவாத வன்முறை எண்ணம் மனதளவில் கூட, உதயமாகாது! அப்படி ஒரு ‘எண்ணம்” ஏதாவது மதத்திற்கு உண்டானால், அம்மதத்தை மதம் என ஒப்புக்கொண்டு, எவ்வாறு மற்றவர்கள் மதித்து, சகித்துக் கொள்ள முடியும்? இம்மாதிரி மதம் எனும் பெயரால் ஆர்பரிக்கும் இயக்கத்தை ”விபரீத வழிபாட்டுக் கொள்கை முறை” (cult) எனவே தான் அழைக்க முடியும். இக்காரணங்களுக்காகவே, ஜிஹாத் வழியாக சுவர்க்கம் புகுதல், எனும் செயலூக்கக் கருத்து, வேத இலக்கிய ஆய்வுரையில் எங்கும் காண முடியாது. மேலாக இதே காரணத்தால், மற்ற சமயக் கடவுள்களை, ’தவறான-கடவுள்கள்’என விளக்கம் அளிக்கவோ, அல்லது எவருடனும் ஒத்துப்போகாத பிடிவாதத்துடன், செருக்கு வாய்ந்த அணுகு முறையும் வேத வழியில் கிடையாது.
இதனால், வேதவழி-ஹிந்து சமயம் மக்களைக் காக்க அக்கறை கொள்ளத் தவறி விட்டது என்பதாக பொருள் கொள்ளலாகாது. இதன் உட்பொருள், அவரவர்களாகவே, ஆன்மீகத்தில் முதிர்ச்சியடைய, குறிப்பாக, ஆன்மீக அறிவைக் கைப்பற்ற, ஒவ்வொருவருக்கும் பூரண சுதந்திரத்தை தங்கு தடையின்றி, வேத கலாச்சாரம் அளிக்கிறது. வேத வழியில் கருத்தூன்றி நுழைவதற்கு, தனக்குத் தானே ஒரு பேராவல் அல்லது உந்துதல் வர வேண்டும். குதிரையை தண்ணீர் இருக்கும் இடத்திற்கு ஒருவர் அக்கறையுடன் அழைத்து சென்றாலும், அக்குதிரை, தனக்கு தண்ணீர் வேண்டுமானால் தானே குடிக்கும். அதை யாரும் வலிந்து தண்ணீர் குடிக்க நிர்பந்திக்க முடியாது. (You can take the horse to drink water, but you cannot make it to drink) எனவும் சொல்வதுண்டு. அப்படி வேத இலக்கியங்களை கருத்தூன்றி, நுழைந்து படிப்போற்கு, ஆன்மீக உண்மைகளை அதன் ஆரம்ப கட்டத்திலிருந்து, படிப்படியாக, உச்ச நிலையை அடையும் வரை, ஒவ்வொரு மாணவன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு, ஒவ்வொரு பாடத்தையும் நன்கு புரிந்து கொள்ளும் வரை, மீண்டும் மீண்டும், அக்கறையாகப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நல்லாசிரியர் போல, மிக அக்கறையுடன் தெளிவாக, வேத வழி சொல்லிக் கொடுக்கிறது. இப்படி இருந்தும் கூட, ஆன்மீகத்தில் மெதுவாகவோ, அல்லது சடுதியில் நுண்ணறிவை அடைந்துவிட வேத வழி அனுமதிக்கிறது. இதற்கும் மேலாக, கடுமையான விசாரணைகளையும் விமர்சனங்களையும், எந்த நாஸ்திக வாதக் கேள்விகளையும் சற்றும் பயமின்றி கேட்கவும், அதற்குத் தக்க பதில்களையும், அவ்வப்போது, ஆங்காங்கே அளிக்கிறது. மற்ற சமயம் போல ‘நீ கேள்வி கேட்பதற்கு அறுகதையற்றவன்’ ’நாங்கள் உன்பொருட்டு தீர்மானித்து வைத்திருப்பதை மட்டும் கேட்டு அவ்வாறே நடக்கவேண்டு’மென பிடிவாதத் திமிருடன் பதிலளிப்பதில்லை. கேள்வி கேட்பது எனும் கருத்து, ’’மனதில் ஏற்படும் ஐயங்களை அவ்வப்போது களையத் தான். ஆகவே வரவேற்கத்தக்கதே’’ எனக் கருதி, இக் கேள்வி கேட்கும் வழக்கத்தை / கருத்தை ஊக்குவிக்க, இதை அவரவர் தனிப்பட்டத் தேவைக்கும் விருப்புக்கும், வேத வழி விட்டு விடுகிறது. ஆகையால் தான், ஹிந்து வேத வழியில் கட்டாய மதமாற்றம், அல்லது சமயத்தைச் சார்ந்த கொடுங்கோன்மை ஆட்சி அல்லது மற்ற சமயங்களுடன் போட்டி, சண்டை, சச்சரவு, ஆகியவை இல்லை. ஹிந்து சமயத்தைப் பின்பற்றுபவர்களுக்கு, இவ்வாறு மேற்கூறியவாறு பிறரை வீணாக நிர்ப்பந்திக்கும் நடப்புகளைப் பற்றி நினைவோ, அப்படிச் செய்து காட்ட வேண்டுமென்ற ஒரு துடி துடிப்பு உணர்வோ, அல்லது இதைப்பற்றி மேலும் அறிந்து பொருள் பெறும் எண்ணமே மனதில் என்றும் உதயமாவதில்லை. ஹிந்து வேத வழியில் அவரவர் இஷ்டப்படி, ஆன்மீக இறை நிலையை உணரத் தங்கள் சொந்த முயற்சி கொண்டு, படிப்படியாக (step by step), தங்களால் முடிந்த அளவிற்கு மெதுவாகவோ, அல்லது துரிதமாகவோ, செல்லலாம். ஆதலால், வேத வழி ஆசிரியர்கள், தங்களை அணுகிய ஒவ்வொருவருக்கும் தங்களுடைய பொன்னான நேரத்தையும், ஆற்றலையும் மனதார அளித்து, ஆன்மீகத்தில் மென்மேலும் சீடர்களை மேம்பாடடைய ஊக்குவிக்கின்றனர். உதாரணத்திற்குச் சொன்னால், ஹிந்துக்களல்லாத பிற சமயத்தைச் சார்ந்த பலர், ஹிந்து வேத வழியான ’யோக’ப் பயிற்சிகளில் மிகச் சிறப்பாகக் கற்று, தாங்கள் கற்றவாறே, பிறருக்கு இன்றும் கற்பிக்கின்றனர். பிற சமயத்தைச் சார்ந்தவர்கள் என்ற காரணத்தால் இவர்களை வேத வழி நிராகரிப்பதில்லை. வேத வழி, ’பெற்ற அறிவு எல்லோருக்கும் உபயோகப்பட வேண்டும்’ எனும் மனப்பங்குடையது. ஹிந்து மதம் என்றும் குறைவில்லா அறிவுப் பெட்டகம். (Artesian well போல) எப்போதுமே சுரந்து கொண்டிருக்கும். அள்ள அள்ளக் கூடுமே தவிர, குறைவதில்லை. இவ்வாறாகத் தான் வேத கலாச்சாரத்தில், மக்கள் வழிகாட்டப் படுகிறார்கள். பிடித்த ”முயலுக்கு மூன்றே கால்கள்” தான் எனும் கொள்கைப் பிடிவாதம் கிடையாது.
ஆன்மீக வழியில் ’தங்கள் வழி’ ஒரு ’தனி வழி’ யெனக் கொள்ளும் மற்ற சமயத் தோருக்கும், அல்லது வேற்று சமயத்தை சேர்ந்தவர்கள் தங்கள் எதிரிகள், அல்லது மற்ற சமயத்தவர் தங்களுடன் போட்டியிடுபவர்கள் எனும் எண்ணம் கொண்டவர்களுக்கு, திறந்த செல்வழித் திட்டமான ஹிந்து வேத வழிகளைப் பற்றி புரிந்து கொள்ளக் கூட விரும்பாததில் வியப்பொன்று மில்லை. இதில் வியப்படைய என்ன இருக்கிறது?! இதைப்பற்றி ஆழ்ந்து சிந்தனை செய்தால், இதன் அடிப்படை காரணம், அவர்களுக்குள்ளிரும் ‘பயமே’ தான் காரணம் என்று, உளநூல் (psychology) ஆராச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதன் காரணமாக, இவர்களுடைய பயத்தையும் விட்டு விட இயலாமல், அப்படி பயத்துடன் இருக்காவிடில், தாங்கள் நரகத்தில் தள்ளப்பட்டு, துன்புத்தில் உழல நேர்ந்து விடுமோ என்ற அச்சதாலும், சிலர் ’பிடிக்கிறதோ அல்லது இல்லையோ, தலைவிதியே’ என, தங்கள் குறுகிய வழியே சரியென போகப் போக மனது சமாதானமாகி, ஏதாவது ஏடாகூடமாகச் செய்யப் போய், தங்கள் சமூகத்திலிருந்து விலக்கப்பட்டு விடுவோமோ எனவும் பயந்து, தவிர்க்க முடியாமல் பற்றிக்கொண்டு, அதில் உள்ள வேதனையைப் போக்கிக் கொள்ள, தங்கள் சமயமே சரியானது என வீம்புடன், உறும்புப் பிடியாக சமயம் சொல்லும் காரியங்களில் இறங்கிவிட, நேர்ந்து விடுகிறது. ஹிந்து வேத வழியில் இந்த பயம் கிடையவே கிடையாது. இவ்வேத வழியைப் பின்பற்றும் ஹிந்துக்கள் தங்கள் ஆன்மீக வளர்ச்சியில் மேம்பாட்டை கண்காணிக்க, தங்கள் ஆன்மீகக் உள்ளுணர்வே, அவர்களுக்கு அளவு-மானியாக (measuring instrument) அமைந்துள்ளது. இதில் ஏதாவது குற்றம், குறையை உணர்ந்தால், அதைக்களைய மேன் மேலும் ஆத்ம சோதனைகளில் / முயற்சிகளில் ஈடுபடுவார்களே ஒழிய, அடாவடி காரியங்களான ’ஜிஹாத்’ அல்லது புனிதப்போர் எனும் வன்முறைகளில் என்றும் இறங்கவே மாட்டார்கள். ஆன்மீகத்தில் முழு முதிர்ச்சி அடைந்ததற்கு, உள்ளுணர்வு நிலையில், மனதில் ஏற்படும் மாற்றங்களே அதற்கு கணிப்பு மானியாக அமைந்து விடுகிறது.
வன்முறையில் ஈடுபடும் கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் பய-அடிப்படையில் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், என்று, மற்ற சமயங்களில் உள்ள மிக உயர்வான கருத்துக்களை மனதளவிலாவது ஒப்புக் கொண்டு, அல்லது அறிந்திருப்பதாக உணர்ந்து அதை வெளிப்படையாகக் காட்டுகிறார்களோ, மற்ற மக்களும் தங்கள் இஷ்டப்படி, அவரவர்களுகேற்ற சமயக் கோட்பாடு களிலும், செயல் முறைகளிலும் தங்கள் வாழ்க்கையில் அனுசரிக்க வாஸ்தவத்தில் உரிமை உண்டென அறிந்து கொள்கிறார்களோ, கிருஸ்தவ வழிபாடு தலங்களிலும் (churches), இஸ்லாமியர் தொழுகை செய்யும் மசூதி, அல்லது பள்ளிவாசல்களிலும், அவர்கள் சமயச் சொற்பொழிவு ஆற்றும் மேடைகளிலும் (pulpits) மனித இனம் முழுமைக்கும் ஏற்றதான உண்மையான அன்பு வழி தான் அவர்கள் உள்ளத்தை ஒளி பெறச் செய்யும் என இவைகளைப் பற்றி, எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி, முற்றிலும் மனதார உணர்ந்து ஒப்புக்கொண்டு, உரையாற்றத் தொடங்குகிறார்களோ, (Not just lip service but heart felt sincere expressions publicly announced) அன்றுதான் கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், வேதவழியிலும் கூட நல்ல விஷயங்கள் உள்ளன என தங்கள் உள்ளத்தில் அடையாளம் கொண்டு, உலகிலுள்ள எல்லா நல்வழிகளையும் அனுசரித்து, இதனால் மற்ற எல்லோரையும் மகிழச் செய்வார்கள். அதுவரை ……….. ?!! இப்படி மேற்கூறியவாறு நிஜமாகவே செய்து முடிந்துவிட்டால், கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், மற்ற சுதந்திர எண்ணங்கொண்ட மற்ற சமயங்களை, கண்டனம் செய்வதையும், மற்ற மதத்தவர் கட்டாயமாக நரகத்தில் தள்ளப்படும் பயத்தை உண்டாக்குவதையும் கைவிட்டு விடுவார்கள். இதை ஒரு ‘உடோபியா’ (utopia) ’சிறந்த கற்பனை உலகம்’ எனதான் சொல்வார்கள். காரணம் புரிகிறதல்லவா?
ஆகையால் தான், வேத கலாச்சாரம் ஒன்றில் தான் கடவுளுடைய ஆழம் காண இயலாத அன்புள்ளத்தை அறிந்து கொள்ள வழி வகுக்கிறது, ஆனால், மற்ற கொள்கைப் பிடிவாத கட்டுப்பாடுகளுக்குள் சிக்கிக் கிடக்கும் சமயங்கள், கடவுளிடத்தில் ’’பயத்தை அடிப்படை’’யாகக் கொண்ட கொள்கைகளை உடையவைகள். மற்ற மதங்களிலெங்கும் பயத்தைத் தவிர, அன்பில்லை. கிருஸ்தவ சமயத்தில், ’அன்பு’ ’அன்பு’, என வெறும் அழகிய வாய்ப்பந்தல் போட்டாலும் (mere mouthing) அது பயத்தின் அடிப்படையில், மனிதப் பிறவிகளை, கிருஸ்தவ போதகர்கள், ’பாவிகளே’ என்று ஆரம்பத்திலிருந்து விளித்து தான், செயல் படுத்துகிறார்கள்.
[[[உதாரணத்திற்காக, குரானிலிருந்து இங்கே சில குரான் சுராக்கள் (வசனங்கள்), ஆயாதுடன் (உட்பகுதியுடன்) உள்ளது உள்ளபடி மேற்கோளாகக் கொடுக்கப் பட்டுள்ளன:
Quran (2:216) clearly says fighting in jihad war is ordained for Muslims.
குரான் – (02:216) போர் செய்தல் – அது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் – (உங்கள் நலன் கருதி) உங்கள் மீது விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முத்தாய்ப்பாக (‘Al Walaa wa al Baraa’, a fundamental principle of Islamic ethics and Sharia, being unyielding towards the Kafirs, hard against them, and detesting them), ’’ அல்-வலா வா அல் பரா” – (Basic Islamic Jurisprudence) – இது இஸ்லாமிய நடத்தைக்குரிய வழிமுறைத் சட்டத் தொகுப்பான ‘ஷரியா’ வின் அடிப்படை – இஸ்லாமில் இல்லாத,”காஃபிர்” களிடம் இசைந்து கொடுக்காதே, அவர்களிடம் கடுமையாக நடந்து கொள், அவர்களை எப்போதும் விடாது வெறுத்துக் கொண்டு இரு எனும் மன வேற்றுமையை வேண்டுமென்றே வளர்க்கும் கொள்கை)
9.5 Kill kuffar wherever you find them.
Quran 9.38: You who believe! What is the matter with you, that when you are asked to march forth for jihad for Allah, you cling heavily to the earth?
Quran 9.39: If you will not go forth to fight in the cause of ALLAH, you will be given a painful punishment. It is the duty of a Muslim to kill kuffar:
குரான் (08:39 (முஃமின்களே) இவர்களுடைய விஷமங்கள் முற்றிலும் நீங்கி, உலகில் அல்லாஹ்வின் மார்க்கம் முற்றிலும் அல்லாஹ்வுக்கே என ஆகும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்; ஆனால் அவர்கள் விஷமங்கள் செய்வதிலிருந்து விலகிக் கொண்டால் – நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்கியவனாகவே இருக்கின்றான்.

Quran 8.039 – YUSUFALI: And fight them on until there is no more tumult or oppression, and there prevail justice and faith in Allah altogether and everywhere; but if they cease, verily Allah doth see all that they do.

குரானில் மட்டுமே, ஜிஹாதைப்பற்றி, 164 இடங்களில் கூறப்பட்டுள்ளது. கீழே இதன் பட்டியல்:
வசனங்கள் = சுராக்கள்; ஆயாத்

002: 178-179, 190-191, 193-194, 216-218, 244;
003: 121-126, 140-143, 146, 152-158, 165-167,169, 172-173, 195;
004: 071-072, 074-077, 084, 089-091, 094-095,100-104;
005: 033, 035, 082;
008: 001, 005, 007, 009-010, 012, 015-017, 039-048,057-060, 065-075;
009: 005, 012-014, 016, 019-020, 024-026, 029,036, 038-039, 041, 044, 052, 073, 081,083,086,
088, 092, 111, 120, 122-123;
016: 110; 022: 039, 058, 078; 024: 053, 055; 025: 052; 029: 006, 069; 033: 015, 018, 020, 23, 025-027, 050; 042: 039; 047: 004, 020, 035; 048: 015-024; 049: 015; 059: 002, 005-008, 014; 060: 009; 061: 004, 011, 013; 063: 004; 064: 014; 066: 009; 073: 020; 076: 008

இஸ்லாமின் பொருள், ‘அமைதி’ என்று அடிக்கடி மக்கள் மத்தியில், விளம்பரத்திற்காகச் சொல்வதிலிருந்துதான் தான் ’புனித ஏமாற்றலான ’தக்கியா’ ஆரம்பமாகிறதா? ஆரம்பக் கருத்துப் படிவமான (Islamic concept) மதப் பெயரிலேயே ஏமாற்றுதல்’ என்பது ஆரம்பித்து விடுகிறதா? ’அமைதி’ என வெறும் பெயர் சூட்டிக்கொண்டு விட்டால் மட்டுமே, இம்மதத்தை அமைதியான சமயம் என ஒப்புக் கொள்ள முடியுமா? மேற்கூறிய குரான் வசனங்களாலும், அவைகளை இவர்கள் வாஸ்தவத்தில் நிரூபித்துக் காட்டும் செயல்களாலும், ’இஸ்லாம்’ என்பதற்கு ‘அமைதி’ எனப் பொருள் கூறுவது மலையும் மடுவும் ஒன்றேதான் என சொல்வது போல உள்ளதே! (கவுண்ட மணி – செந்தில் வாழைப்பழ நகைச்சுவைப் பாணியில் சொல்வதானால் – ‘அதாங்க இது’ என்பது போலவா?) ‘இதற்கும் மேலாக,”Salamu alakum” (peace to you)”உனக்கு அமைதி உண்டாகட்டும்” என வாய் நிறைய வெறும் வார்த்தையாக வாழ்த்திச் சொன்னால் மட்டும் போதுமா? செயலிலும் காட்ட வேண்டாமா? ’வெளுத்ததெல்லாம் பால் அல்ல’ என்பதற்கு, ,”Salamu alakum” என்பதும் மற்றொரு உதாரணமா?

இங்கே, ’ஜிஹாத்’பற்றி, அவர்கள் போற்றும் மற்ற புனித நூல்களான, ஹடிஸுகள், சுன்னாக்கள், சிராக்கள், ஆகிய இவைகளிலிருந்தும், பெரும் பட்டியலாக கொடுத்து, கட்டுரையை நிரப்பத் தேவை இல்லை எனக் கருதுவதால், இவைகளையும் இங்கே கொடுக்க வில்லை.

சுவர்க்கத்தில் கட்டாய மதப்போரில் பங்கேற்றவர்களுக்கும், அதில் உயிரிழந்த ஒவ்வொரு ‘ஷாஹீது’ க்கும் (!) உடலின்பத்திற்கு 72 (ஹௌரிகள் – whores) பளிங்குக் கன்னிகள்: குரான் சுரா: 37: 40-48; 44:55; 52:17-20; 55:56-57 & 55: 70-77; 78:31; ஓரினச் சேர்க்கைக்கு 28 மீசை முளைக்காத இளம் பாலகர்கள்: குரான் சுரா: 52: 17 & 24; 72:19; (அதாவது விகிதப்படி – 1:100 – அதாவது ஒவ்வொரு ‘ஷாஹீதுக்கும்’ 100 பேர் வீதம் (like joining kits) வழங்கப்படும்!!!) இவ்வசனங்கள் மற்ற மதங்களை அடியோடு அழித்திட, முஸ்லிம்களை மதப்போருக்கு உக்குவிக்கும் நோக்கத்தோடு, கொடுக்கப்பட்ட அப்பட்டமான, உத்திரவதம் இல்லையா? (Is it not an open, deliberate incentive to wage holy war against all other religions?) இதில் கவனிக்க வேண்டியது யாதெனில் சுவர்க்கத்தில் இருக்கும் அநேக வாய்ப்புகள், இன்ப வசதிகள் பூஉலகில் தவிர்க்க வேண்டியவை என புனித நூல்களால் வரையறுக்கப்பட்டவை -மது மாது etc. I.e. prohibited in Earth but available in plenty with more added typical facilities at Islamic Heaven!!) காரணம்?

மேல் இரண்டு தலைப்பில் மட்டுமே கொடுத்தவைகளுக்கும் மேலாக, சுவர்க்கத்தில் இன்னும் இன்ப உடற்கிளர்ச்சியூட்டும் வசதிகள் பற்றி, இஸ்லாமிய புனித வசனங்கள் பல உண்டு. சுருக்கமாக, சுவர்க்கத்தில் மது ஆறு ஓடும், மல-மூத்திரம், வியர்வை கிடையாது, ஹௌரிகளை யும் சிறார்களையும் வெற்றியுடன் ஒருங்கே இஷ்டப்படி சமாளிக்க, இறைவரத்துடன் நிரந்தர சுறு சுறுப்பான ஆரோக்கியமான உடலாற்றால், போன்ற மேற்கோள்களையும் இங்கே கொடுக்க வில்லை.]]].
18. வேத வழி சித்தாந்தத்தை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட சீடர்கள், எவரையும் மதமாற்றம் செய்ய மாட்டார்கள்.
ஹிந்துக்கள் மற்ற சமயத்தவரை மதமாற்றம் செய்ய என்றுமே முயற்சி செய்ய மாட்டார்கள். தேவையும் இல்லை. ஹிந்துக்களுடைய தீர்மானமான நம்பிக்கை யாதெனில் – ஆன்மீக வேத வழியில் உள்ளவை அனைத்துமே கடவுளைப்பற்றி இருக்க வேண்டுமே தவிர, தற்காலத்தில் காணப்படும், பல கணினித் திட்ட வலைப்பின்னல் போன்றவைகளால், தங்கள் லாபத்தை மட்டுமே பெருக்கிக்கொள்ள இருக்கும், வியாபார நிறுவனங்கள் போல, பட்டியல் போட்டுத் தங்கள் சமயத்திற்கு மதம் மாறியவர்கள் கூட்டத்தை அதிகரித்து புள்ளிவிவரங்களுடன் வெளியிட்டுக் காட்டத் தேவையில்லை. ஹிந்துக்களுக்கு சிறந்த தரம், பண்புகள் முக்கியமே தவிர, எண்ணிக்கை முக்கியமில்லை. இதற்காக மிகச்சிறந்த ஆன்மீகப் பயிற்சி பெற்று, மனத் தூய்மை அடைந்து, தன் முன்னுதாரணத்தால், தன்னைச் சூழ்ந்தவர்களையும் கடவுளிடத்தில் ஈடுபாடு கொள்ள ஊக்கமளிக்க வேண்டுமே தவிர, இன்று, ‘வாடிகன் போப்’ ஆணையிடுவது போல மனிதர்களை அறுவடை செய்து, எண்ணிக்கையை, உயர்த்திக் காட்ட வேண்டிய அவசியத்தில் ஹிந்து மதம் என்றும் இருந்ததில்லை. இருக்கப் போவதும் இல்லை. யாரிடம் நற்சான்றிதழ் பெற்று யாருக்குக் காட்டி, இதனால் என்ன ஆதாயம் ஹிந்துக்களுக்குப் பெற்றாக வேண்டும்? பிறர் மீது வெறுப்பை வாந்தியெடுத்து, பொய் பேசி, பித்தலாட்டம் செய்து, மொத்தமாக பல சமய, மனித சமூகத்திடையே, இனம் மொழி ஆகியவைகளால், உட்பூசலைக் கிளப்பி விட, ஹிந்துக்களுக்கு என்றுமே இதனால் தான் நாட்டம் என்றுமே இருந்ததில்லை. ஆனால், கிருஸ்தவர்கள், (both Catholics and Protestants) ஹிந்துக்களை, பேகன்கள் (கிருஸ்தவத்தில் சேராத மூடர்கள்) என்றும், ஹீதன் (காட்டுமிராண்டிகள்) என்று அடைமொழிகளை தாராளமாக அள்ளித்தந்து, நரகத்துக்குத் தள்ளப்படத் தக்கவர்கள் என ஹிந்துக்களுக்கும் சேர்ந்து இவர்களே தீர்ப்பை அளித்து விடுவார்கள். அப்படி நரகத்துள் தள்ளப்படுதலைத் தவிர்க ஒரே வழி, ஹிந்துக்களை கர்த்தர் காத்து ரட்சிக்க, ஹிந்துக்கள் கிருஸ்தவ மதத்திற்கு மாற்றிக் கொண்டால், கண்ணிமைக்கும் (fraction of a milli-micro second) நேரத்தில், பாவ மன்னிப்பு கிடைத்து, எல்லாம் சுபமாக முடியும். எப்படி இருக்கிறது!! இதனால்தான் கிருஸ்தவ மதத்திலுள்ள எல்லோரையும் எடுத்த எடுப்பில், ”பாபிகளே!” என்று ஆரம்ப போதனைகளில் விளிக்கிறார்களா?
”பலகடவுள்” எனும் கருத்துப் படிவமென்ன (concept) ? என்பதைப்பற்றி ஒன்றுமே அறியாது ஏதேதோ மேல்-புல் மேயும் கால்நடைகள் போலப் பேசும், முஸ்லிம்கள், ஹிந்துக்களை, சிலையைக் கும்பிடும் நீசர்கள், பல தெய்வங்களை வழிபாடு செய்யும் உதவாக்கரைகள் {நாசீஸ் – என்றால், அரேபிய மொழியில் (உருது மொழியிலும் இப்படித்தான் பொருள் கூறுவர்) எதற்கும் லாயக்கற்றவர்கள் (?) என்பது பொருள்} என குரானில் உள்ளபடி தீர்ப்பளிப்பார்கள். குரான் சுரா: ஆயாத்-9:28 உள்ளபடி, O! YOU who have attained to faith! Those who ascribe divinity to aught beside God are nothing but impure: and so they shall not approach the Inviolable House of Worship from this year onwards And should you fear poverty, then [know that] in time God will enrich you out of His bounty, if He so wills: for, verily, God is all-knowing, wise! ஆக, இவர்கள் எல்லோரும் நரகத்தில் கொதிக்கும் நெருப்பில் தள்ளப்படுவார்கள் என பயமுறுத்துவார்கள். இஸ்லாமை ஒப்புக்கொள்ளாதவர்களை, ’கடவுள்’ குரங்குகளாகவும் (apes) பன்றிகளையும் (swine) மனித உருவில் உலவ விட்டுள்ளார் என குரானில் உள்ளபடி சித்தரிப்பார்கள். (In Islam, a pig is considered Najis (impure), so are others belonging to other religions except Islam)
Qur’an 005.060 – Say: Shall I inform you of (him who is) worse than this in retribution from Allah? (Worse is he) whom Allah has cursed and brought His wrath upon, and of whom He made apes and swine, and he who served the Shaitan; these are worse in place and more erring from the straight path. Interpretation -Tafsîr Ibn ‘Abbâs: Allah Curses People and Transforms Jews into Apes and Christians into Pigs — Allah then revealed about their saying: ” we do not know any religious community that is more disfavoured than Muhammad (pbuh) and his Companions ” , saying: (Shall I tell thee of a worse (case) than theirs) that which is worse than what you told Muhammad and his Companions (for retribution with Allah) for him who is going to be punished by Allah? (Worse (is the case of him) whom Allah hath cursed) imposing on him the capitation tax, (him on whom His wrath hath fallen! Worse is he of whose sort Allah hath turned some to apes) in the time of the Prophet David (pbuh) (and swine) in the time of Jesus, after eating from the table that Allah sent from heaven, (and who serveth idols) soothsayers and devils; or he whom Allah has made the worshipper of the devil, idols and soothsayers. (Such are in worse plight) worse in works in this world and worse in status in the Hereafter (and further astray from the plain road) the road of guidance.
மேற்கூறிய சொற்கள் எல்லாம் இஸ்லாமியத்திலும், கிருஸ்தவத்திலும், ’நல்ல மதக்கொள்கைகள்’ என்றால், உலகில் ’கெட்ட கொள்கைகள்’ என்ற சொல்லுக்கு என்னதான் பொருள்? பைபிளில் சொன்னபடி கிருஸ்தவர்களும், குரானிலும் உள்ளபடி, முஸ்லீம்கள் நடக்கிறார்கள். ஆனால், ஹிந்துகளுக்கு இம்மாதிரி விபரீத சித்தாந்தங்கள் எந்த உருவிலும், இவர்களுக்குள்ள வேத வழி நூல்களில் கிடையாது. அதனால் மேற்கூறியவைகளை நல்ல செயல்கள் அல்ல என ஹிந்துக்கள் தீர்மானிக்கிறார்கள். ஹிந்து மதம் இவ்வாறு தீர்மானிப்பது தான் தவறா?.
இருந்தபோதிலும், தங்கள் கோட்பாடுகளை ஒரு தலையாய் அதிகாரத் தோரணையில் கூறும் கிருஸ்தவமும், இஸ்லாமும் தங்களிடம் கணக்கிலடங்காத குற்றங்களையும், குழப்பங்களையும், வைத்துக்கொண்டே, ஹிந்துக்களைச் சுற்றிச் சுற்றி வட்டமிட்டு, இடை விடாமல், குற்றங்காணும் ஒரே எண்ணத்துடன் அநாவசியமாகச் செய்யும் விமர்சனங் களால், ஒரு சமயம் இல்லா விட்டாலும் மற்றொரு சமயத்தில், இந்த அதீதமான குற்றச்சாட்டு களை, முதற்படி எதிர்வினை யாக, மற்ற மதத்துடன் கொள்கைப் பிணக்குக்கும், சண்டைக்கும் வித்திடாமல், ஹிந்து கலாச்சாரத்திற்கு ஆதரவாக நேர்மையான விளக்கங்கள் அளிக்கவும், வீண் விமர்சனங்களை மறுத்துக் கூற விழைவதும், மனித இயல்புதானே. வேறொரு விதத்தில் சொன்னால், கிருஸ்தவர்கள், இஸ்லாமியர் தரத்திற்கு ஹிந்துக்களும் தங்களைத் தாழ்த்திக்கொண்டு, மனிதருக்குள் மனிதர்கள் ஒவ்வொரு சமயத்தில் ஒவ்வொரு விதத்தில் வெளிப்படையாக தங்களைத் திட்டிக்கொள்வது போல (man to man abusing each other publicly) ஹிந்து-வேத நூல்களில் இவ்வாறு இல்லாது போனாலும், இவர்கள் உதிர்த்த அதே பொன்மொழிகளை – exact words as they have used – nothing more nothing less – (அதிகமாகச் சேர்த்துகூட அல்ல) அவர்கள் மீதே அதே செயல் திற வேகத்திலும், உபயோகித்தால், இச்சொற்களை கேட்டு ஹிந்துக்கள் போல இவர்களால் வாளா இருக்க முடியுமா? இத்தனைக்கு பிறகும், ஹிந்துக்களுக்கு எதிராக, கிருஸ்தவமும், இஸ்லாமும், வலிந்து அக்கிரம ஆக்கிரமிப்பை தொடர்ந்து, ஹிந்துக்களின் பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவைகளால் மிகத் துணிவு பூண்டு, மீண்டும் மீண்டும் தொடர்ந்துத் தங்கள் முடிவில்லா அநாவசிய தாக்குதல்களை வேண்டுமென்றே நடத்தி, அல்லது மத மாற்றுக் செயல்பாட்டினால் ஹிந்து கலாச்சாரத்தை தாக்கிக்கொண்டே இருப்பதற்கும், ஒரு எல்லை உண்டல்லவா? இதற்கு ஒரு நிரந்தர முடிவு கட்ட, எவ்வித எதிர்ப்பு எங்கிருந்து வந்தாலும் தகர்த்தெறிய, கூடிய சீக்கிரமே ஹிந்துக்களால் ’’பொறுத்தது போதும் என, பொங்கி எழு’’ எனவோ, ‘சாது மிரண்டால் காடு கொள்ளாது’ என்ற மூதுரைக் கேற்றவாறு எதிர் விளைவு உண்மையாக கூடிய சீக்கிரம் ஏற்பட்டால்………..!! (conflagration) பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டல்லவா?’ தற்கால, வருங்கால சூழ்நிலையில் ஹிந்து இளைஞர்களும், தங்கள் முன்னோர்கள் போல பொறுமைப் பதுமைகளாக, அப்படியே, இருப்பார்கள் என யார்தான் வருவதுரைக்க முடியும்? ஹிந்துக்களின் பொறுமை எனும் எல்லையைத் தாண்டத் தூண்டுவது யார்? (Who started all these? Certainly not Hindus) நிச்சயமாக ஹிந்துகளே அல்ல. அதே சமயம், ஹிந்து ஆன்மீகத் தத்துவங்களும், வேத வழி கலாச்சரங்களும், மிகப்பரந்த மனப்பான்மை கொண்டதாக இருக்கிறது எனவும், மதமாற்றம் செய்துதான் தங்கள் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கவோ அல்லது ஆட்களை அறுவடை செய்யத் தேவையில்லை என இன்னும் மிகச் சிறப்பாக’’ஜாடிக்கு மூடி’’ எனும் தக்க மொழிகளிலும், எடுத்துரைக்க வேண்டும். ஹிந்துக்கள் எடுத்த எடுப்பிலேயே, முதலில் வன்முறையில் இறங்குபவர்களல்ல, என்பதை உலகில் எல்லோரும் மனப் பூர்வமாக அறிவார்கள். ஹிந்துக்களின் இப் பொறுமையே ஹிந்துக்களுக்கு எதிரியாகி, மேலும் இப்பொறுமையே இஸ்லாமியர்களுக்கும், கிருஸ்தவர்களுக்கும் துணிவு கொடுத்து, ஹிந்துக்கள் மீது தாக்குதல்களை அதிகரிக்கத் தூண்டுகிற தல்லவா? எக்காலத்திலும் வன்முறையாளர்களான, இஸ்லாமியர், கிருஸ்தவர்கள் போல, ஹிந்துக்களும் அன்றே வன்முறையில் இறங்கி இருந்தால், குறைந்தது 1400 வருடங்களாக முஸ்லிம்களும், பிற்காலத்தில் கிருஸ்தவர்களும், இந்திய மண்ணில், கனவில் கூட ஒரு காலடி வைத்திருக்க முடியாமல் போயிருக்குமே! விளைவு என்ன ஆயிருக்கும்? இந்திய சரித்திரத்தை நடந்தது நடந்தபடி படித்தறிந்தவர்களுக்கு, இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் இந்தியாவில் எவ்வாறு படிப்படியாக நுழைந்து, இந்திய நாடு முழுவதையும் அடிமையாக்கினர் என தெளிவாக அறிந்திருப்பார்கள். (இருவர்களில் ஒருவர் கூட நேர்வழியில் நுழைந்தவரல்ல அல்லது மக்களுக்கு நன்மை செய்யும் நோக்கத்துடனும் அல்ல. அப்படி ஏதாகிலும் நல்லது நடந்திருந்தால், அது கட்டாய நிலையில் தவிர்க்க முடியாமல், அந்தரங்க நோக்கத்துடனே செய்ய நேர்ந்ததாகும். அல்லது உள்நோக்குடன் இன்று தெரிவிக்கப்படும் இலவசத்திட்டங்கள் போல ஆகும் (according to comparative cost theory). ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இந்தியாவை அடியோடு சுரண்ட, என்றுமே எவ்விதத்திலும் இவ்விருவரும் தயங்கியதில்லை என தீர்மானமாகக் கூறிவிடலாம்.) மேலாக, ஹிந்து-இந்தியா எந்நாட்டுடனும் இதுவரை வலிய சண்டைக்குச் வென்றதில்லை. ஒரு சிறு ஆதாரத்தையாவது உலகில் எவராவது கூறமுடியுமா? ஆதாரமும் தேவையில்லை எனலாம். ஏனெனில் இது உலகறிந்த உண்மை. (The whole world knows this universal truth). ஆனால் வந்த சண்டையையும் இனி சகித்துச்செல்ல வருங்காலத்திலும் முடியுமா? அது, இதுவரையிலும் நடக்காதற்குக் காரணம், இது அவர்கள் வழி வழியாக பாரம்பரியமாகப் பின்பற்றிவரும் சாத்வீக வேத வழி இயல்புதான். ஆனால், தற்போதுள்ள நிலைமை, மகா பாரதத்தில் அன்று நடந்தவாறு இன்று, நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் நடக்கிறதல்லவா?. மகா பாரத யுத்ததில் அன்று முடிவுற்றவாறு இந்தியாவிலும் (உலகத்திலும்) அப்படி நேர்ந்து விடுமா? அப்படி ஒரு நிலைமை உண்டாகிவிடுமா? இதில் யார்தான் வெற்றிபெற்றவர், தோல்வியடைந்தவர் என ஆவார்கள்? இதுவரை தெரிந்த விஷயங்களிருந்து வருவதை ஊகித்தால் இப்பயங்கரத் தோற்றமே மனதில் உண்டாகிறது. (extrapolation) எவ்வாறு இருப்பினும், இஸ்லாமிய கிருஸ்தவ சமயப் பிரசாரகர்கள் தொடர்ந்து வேத வழியைப் பற்றி அவதூரான பொய் பிரசாரங்களில் ஈடுபடும் போது ஹிந்துக்கள் இச்செய்கைகளுக்குத் தக்க தற்காப்பு நடவடிக்கை எடுத்தால், இதில் என்ன தவறு இருக்க முடியும்? இம்மாதிரி வேண்டுமென்றே ஹிந்துக்கள் மீது அபவாதமாக இஸ்லாமிய, கிருஸ்தவ போதனைகள் அதிகரிக்கும்போது, ஹிந்துக்களும் தங்களையும் தங்கள் புராதன கலாச்சாரதையும் தற்காத்துக் கொள்ளத் தானே வேண்டும். இது தானே நியாயம் கூட.
தற்காலத்தில், குறிப்பாக, கிருஸ்தவ மத பிரசாரகர்கள் கீழ்த்தர விபரீதமான எண்ணங் கொண்டு, இந்திய நகரங்களில் பிரசாரங்களை மேற்கொள்வதை விடுத்து, கிராமங்கள் நிறைந்த பழங்குடி மக்களிடையே, பிரசாரங்களை நடத்துகின்றனர். நகரங்களில் உள்ளது போல, கிராமங்கள் நிறைந்த பழங்குடி மக்கள் நிறைந்த பகுதிகளில், நகரத்து நன்மைகள் அனைத்தும் நாட்டுப்புற மக்களுக்கும் கிடைக்க வேண்டும் அல்லது இவர்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நல்லெண்ணங்கொண்டு அல்லவே அல்ல. இதற்குக் காரணம், நகரத்தில் உள்ள பொது மக்களால் உண்டாகும் பலதரப்பட்ட இடர்பாடுகள், மேலும் அங்கு கற்றறிந்த பொதுமக்கள் அதிகம், இவர்கள் நடவடிக்கைகளில் விவரங்களை அறிய, கிருஸ்தவர்களுக்கு பற்பல அசௌவுகரியமான கேள்விக்கணைகளை விடுக்கும் போது அவைகளை சமாளிக்க முடியாதுதான் இதற்கெல்லாம் காரணம். ஆனால், பெரும்பான்மையாக படிப்பறிவில்லாத கிராம மக்களிடமிருந்து இம்மாதிரி தொந்திரவு கிடையாது, கிராமப் பகுதிகளில், ”கொடுப்பதைக் கொடுத்து பெறவேண்டியதைப் பெற” என (ஒரு அறிஞர் அன்றே சொல்லிக் கொடுத்தது போல) எல்லாவித லஞ்ச லாவண்யத்தைக் காட்டி சமாளிப்பதும், பல பகுதிகளைக் கொண்ட சட்ட திட்டங்களை எப்படியாவது ஏதாவது செய்து ஏமாற்றுவது அல்லது அங்கு சட்டங்களை வளைப்பதும் கிராமங்கள் நிறைந்த பழங்குடி மக்கள் நிறைந்த பகுதிகளில், மிக சுலபம். ஆகவே தான் கிருஸ்தவ மத பிரசாரகர்கள், இம்மாதிரி, வற்புறுத்தலுக்கு எளிதில் பணிகிற, மென்மையான இலக்குகளில் தான், தங்கள் கிருஸ்தவப் பணியாற்றும் திறத்தைக் (கைவரிசையைக்!) காட்ட, முழு மூச்சுடன் செயல் படுகிறார்கள்.
உலகிலும், குறிப்பாக, இந்தியாவிலும். எங்கும் அமைதி நிலவ ஓரே ஒரு சந்தர்ப்பம் உண்டு. இந்த அமைதியைப்பெற, கிருஸ்தவர்களும், முஸ்லிம்களும், தற்போது நடத்தும் மத மாற்றம், வன்முறை, வெடிகுண்டு கலாச்சார நடவடிக்கைகள் இல்லாமல் போனால் தான் முடிவாக அமைதி நிலவ முடியும். இல்லாவிடில் அமைதியை என்றும் காணவே முடியாது. இந்த பிரச்சனைக்கு இது தான் நியாமான தீர்வு: இதற்கு மற்றொரு மாற்று வழி: இவர்களைப் பற்றிய உண்மை ரகசியங்களை, உலகிலுள்ள எல்லோரும் அறிய, இவர்கள் புனித நூல்களில் உள்ளது உள்ளபடி, தற்கால நடப்புகளைத் தொடர்வு படுத்தி, முற்றிலும் வெளியிட்டு மக்களுக்கு ஒரு மன விழிப்பு நிலையை உருவாக்குவது ஒன்றில் தான் உள்ளது. இரண்டாவது தான் நடப்புக்கு சாத்தியமானது. உடனடியாக செயலாற்ற வேண்டியது. இது மிகவும் இன்றியமையாது.
[[[ அம்பேத்கர், சொன்னது போல, ”முஸ்லிம்களுக்கு, அகில உலக சமூக சகோதரத்துவ ஒற்றுமை/ தோழமை எனும் உணர்ச்சி எனபது கிடையாது; அவர்களுக்கு சகோதர ஒற்றுமை எனபதே முஸ்லிம்களுக்குள் சகோதர தோழமை ஒன்றுதான்” என்றார். (Dada Saheb Ambedkar wrote: “Muslims do not have anything to do with universal brotherhood; their brotherhood is limited only to Muslims”) இது கிருஸ்தவர்களுக்கும் மிகப் பொருந்தும்.
உலகப் புகழ் பெற்ற சிந்தனையாளர், சீர்திருத்தவாதி, பெட்ர்ட்ராண்ட் ரஸ்ஸல் கூறுகிறார்: “ஆழ்ந்த ஆராய்வுக்குப்பிறகு, இதைத் தெளிவாகக் கூறுகிறேன். ’சர்ச்’ ஏற்பாடு செய்யும் கிருஸ்தவ சமயமே (கிருஸ்தவ பிரசாரங்களே), உலகளவில், நல்லொழுக்க மேம்பாட்டுக்கு முக்கிய விரோதி” “I say quite deliberately that the Christian religion, as organised in its Churches, has been and still is the principal enemy of moral progress in the world.” – Bertrand Russell
ஸ்ரீ சீதாராம் கோயல், கூறுகிறார், “கிருஸ்தவ சமய பிரசாரகர்கள், கிருஸ்தவ (மதம் மாற்றும்) இயக்க சரித்திர ஆரம்பத்திலேயே, தங்கள் காரியத்தை முழுதுமாக சாதித்துக்கொள்ள மனித உள்ளங்களுக்கு மோசடி செய்யும் கலையில் மிக திறம்பட முற்று பெற்ற நிலையை என்றோ அடைந்து விட்டனர்” “Christian missionaries had perfected the art of manipulating human minds quite early in the history of their cult” – Sita Ram Goel]]]
19. ஆன்மீகத்தில் தெளிவு பெற்ற நிலையையும், பேரின்பப் பேறு பெறும், (ஜீவன் முக்தி அடையும்) முயற்சியில், தங்களுக்குகந்த வழியைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் உண்டென ஹிந்து சமயம் உடன்பாடு கொண்டது.
உதாரணமாக, இங்கே 2001 இல், அலஹாபாதில் நான் கண்ட கும்ப மேளா எனும் விழாவைப்பற்றி கட்டாயம் கூறத் தான் வேண்டும். அங்கே 7 கோடியே, 10 லட்சம் (71 million people) பொதுமக்கள் கும்ப மேளா விழா நடைபெற்ற நாட்களில், 5000 பற்பல ஹிந்து ஆன்மீக தத்துவங்களைப் பின்பற்றும் அநேக ஆச்ரமங்களிலிருந்து வந்திருந்தனர். இதில் குறிப்பிடும் அம்சம் யாதெனெல், தங்களுக்குள் ஒத்த தத்துவத்தைச் சார்ந்தவர்கள் அநேகமாக நிறைந்திருந்தும், தெளிவாகத் தெரியும் தத்துவ வேறுபாடுகளுடைய ஆச்ரமவாசிகளும் வந்திருந்தனர். இருந்தும், அங்கே வந்திருந்த ஒவ்வொருவரும் பொது நலனுக்காக ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து, தக்க மதிப்பளித்து, மரியாதையுடன் நடந்துகொண்டு, இப்புனித விழாவில் பங்கேற்றனர்.
இஸ்லாமிய சமயத்தில், 72 உட்பிரிவுகள் உண்டு, கிருஸ்தவத்திலும், அநேக வித இனங்களைச் சார்ந்த கிருஸ்தவர்கள் உண்டு, இவைகள் ஒவ்வொருவரும் தங்களுக்குள் உள்ள பற்பல வித்தியாசங்களையும், விமர்சனங்களையும் பொது மேடைகளில் மிக பண்பற்ற தன்மையில், மிக அசிங்கமாக போட்டுடைத்துக் கொண்டு, ஒருவர் மற்ரொருவரை பரஸ்பரம் குற்றங்களைச் சாட்டி, திட்டித் தீர்த்து, கண்டனம் செய்வதையும், அன்றாடம் காண்கிறோம். இஸ்லாமியம் என்பது ஒரே சமய மாக இருந்து கொண்டு, அதே புனித நூல்களை ஆதாரமாகக் கொண்டு, சில வேறு காரணங்களுக்காக, அநேக உட்பிரிவுகளாகப் பிரித்து வைத்துக் கொண்டு, மிகக் கொடுமையாக பரஸ்பர கொலை வரை நீண்டு, தூக்கிலிட்டு, அப்படித் தூக்கிலிட்டு கொல்லப்பட்டவர் புகைப்பட, காணொளிப் படங்களை, பத்திரிக்கை, தொலைக் காட்சிகளிலும், ஒவ்வொரு நாளும் உலக மக்களுக்குத் திகட்டிப் போகுமளவுக்குக் காணக் கிடைக்கிறது. (ஈரானில் பஹாய்கள் படு கொலை, பாகிஸ்தானில் தாலிபான்கள் செய்யும் அக்ரம வன்முறைச் செயல்கள், பாகிஸ்தானில் அஹமதீயர்கள் படு கொலை, ஆப்கானிஸ்தானில், முன்நாள் பிரதம மந்திரியே கொல்லப்பட்டு, அவர் பிணத்தை, ஒற்றைக் காலைமட்டும் தலை கீழாக மின்சார வெளிச்சக் கம்பத்தில் தொங்கவிட்டு, பிணத்தைக் கூடக் கத்தியால் குத்திச் சீண்டிக் கண்டு களிக்கும் வெறிக் கூட்டம், முஸ்லிம் பெண்களைக் கல்லால் அடித்தே கொலை செய்யும் கொடூரப் படங்கள் முதலியன சர்வ சாதாரணக் கிடைக்கும் சில இஸ்லாமிய உதாரணங்கள்). பல பிரிவுகளுள்ள இஸ்லாமியர் நம்புவதும் ஒரே கடவுள் – ’அல்லாஹ்’, எல்லோரும் பின்பற்றுவதும் அதே புனிதல் நூல்களான், குரான், ஹடிஸ், சுன்னா, சுரா ஆகியவைகள்தான். இருப்பினும்?…………
கிருஸ்தவ மதத்திலோ, கத்தோலிகர்கள், ப்ராடஸ்டண்ட் என்றும் இவர்களுக்குள்ளும் அப்பப்பா! கணக்கிலடங்காத, உட்பிரிவுகள் பிரிவுகளும் உண்டு. இவர்களுக்குள், ஏராள வேற்றுமைகள், பரஸ்பர விமர்சனங்கள், முழு நீளப்போர் என அநேக நூற்றாண்டுகளாக இடைவிடாது இன்றுவரை ஒவ்வொரு நாளும் நடைபெற்றுக் கொண்டு தான் உள்ளது. இதில் மிக திகைப்புக்கு உறியது என்னவென்றால், இவர் எல்லாரும் ஒரே கிருஸ்துவையே பின்பற்றுபவர்கள், பைபிளே தங்கள் உயிர் என சொல்லிக் கொள்பவர்கள், இவர்களுக்குள், மற்ரொருவரைத் தாக்கியும் தங்களுக்குள் மதமாற்றுவதில் பரஸ்பரம் நிலை குலைந்து, மற்ரொருவரைத் துன்புறுத்திக் கொள்வதில் தன்னிறைவு அடைந்து கொள்கின்றனர். கிருஸ்தவ, இஸ்லாமியருக்கும் இடையே நடக்கும் நிரந்தர கொடூர சண்டைகள் என்பதே ஒரு மிகப்பெரிய தனிப் பிரச்சனை. உதாரணமாக, பாகிஸ்தானில் இது இன்றும் நடந்துகொண்டிருக்கிறது.
ஒரே கடவுளெனும் கருத்துப்படிவத்தில், அந்த ஒரே கடவுளையே பல உருவங்களாகத் (சிலைகளாகத்) தொழும் ஹிந்து வேத வழியிலுள்ளவர்கள், பரஸ்பரத்தில், (கிருஸ்தவர், இஸ்லாமியர்கள் போல) வெட்டிக் கொலை புரிந்து கொள்வதை எங்காவது யாராவது பார்த்ததுண்டா? சற்று சிந்தியுங்கள். இது தான் வேத வழிக்கும் மற்ற இஸ்லாமிய கிருஸ்தவ வழிகளுக்கும் உள்ள மற்றொரு முக்கிய வித்தியாசம். ஹிந்துக்களுக்கும் ஒரே கடவுள், ஹிந்துக்களின் புனித பெட்டக நூல்களின் ஆதாரம் (Source Books) ஒன்றே தான்.
20. மற்ற சமயங்கள் போலல்லாமல், ஹிந்து சமயம் ஒன்றில்தான் எல்லா உலகத்துக்கும் ஒரே கடவுள் எனவும், அவரை மனதார உணரும் நிலையை அடைவதற்கு, வழியையும், காட்டுகிறது.
பொதுவாக நாம் காண்பது, ஒவ்வொரு சமயமும், ஒரு நிலப்பரப்பைச் சார்ந்த மக்களுடைய சரித்திரம், பின்னணி, அல்லது முன்னேற்றம் ஆகியவகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், ஹிந்து சமய கலாச்சாரமோ, பிரபஞ்ச அடிப்படையில், இந்திய மக்களைச் சார்ந்ததாக மட்டுமில்லாமல், உலகிலுள்ள எல்லா பிராந்தியங்களுக்கும் சார்ந்ததாகி, அநேக உருவளவைச் சார்ந்த பிரபஞ்சத்திலிருக்கும், பலதரப்பட்ட கிரகங்களையும் சார்ந்து, ஒரு முன்னறியும் திறனுடனுடன், தூய்மையான பார்வையுடன், எந்த அம்சத்தையும் மிகைப்படுத்திக் கூறாமல், அதே தருணத்தில் ஒன்றையும் புறக்கணிக்காமல், மிகப் பொருத்தமான உருவமைப்பு, தொலைவு, ஆகியவற்றைக் குறித்துச் சரியான கருத்தைத் தோற்றுவிப்பதாகவும் காணப்படுகிறது. ஆகையால்தான், வேத வழி ஆன்மீக தத்துவங்கள் பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிர்களுக்கும் உகந்ததாக, தக்க போதனைகளை அளிக்க முடிகிறது.
வேதவழி கடவுளைப்பற்றி கண்மூடித்தனமான அபிப்பிராயங்களைத் தழுவியதல்ல அல்லது ஒரு குறிப்பிட்ட மக்கள் சரித்திரத்தைச் சார்ந்ததுமல்ல. வேத தத்துவங்கள், படைப்பு ஆரம்பித்த நாளிலிருந்து இருக்கும் இயற்கையின் விதிகள், செயல் ஒழுங்கு முறைகளை, அடிப்படையாகக் கொண்டது. இதனால் தான், பிரபஞ்ச விதிகளும், வரையறுத்துக் கொண்ட பிரபஞ்ச ஒழுக்க நியதிகளும் எல்லாருக்கும் பொதுவான சட்ட திட்டங்களும் வேதவழி செயல் முறைகளில் உள்ளடங்கியது. வேத பாடங்களில் உள்ள இவ்வேத வழிக ளைப் பின்பற்றும்போது, இதன் விளைவாக, ஆன்மீகத்தில் ஒருவர் இயற்கையின் ஒழுக்க நியதிகளை தங்கள் புலனாற்றலால் கூர்ந்து கவனித்து, மிகுந்த உயர் நிலையான மன-விழிப்பு-நிலையில், (consciousness) இறையை நன்கு புரிந்து கொண்டு, அவ்விறையே நம் ஒவ்வொருவருள்ளும் சுடரொளியாக, (சிறு துகளாக) உள்ளார் என்பதை நேரிடையாகவே அறிந்து, அகத் தெளிவு பெற முடியும். இம்முறையில் ஒருவர் தங்களுடைய ஆன்மீக அடையாளங்களை மனதால் உணர்ந்து கொண்டு, படைப்புகளில் உள்ள ஒற்றுமைகளையும் அறிந்து கொள்ள முடியும். இதனால்தான் வேத தத்துவங்கள் அனைத்திலும் பிரபஞ்ச அணுகுமுறையையே அடிப்படையாகக் கொண்டது என வேத வழி ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே கற்றுக் கொடுக்கிறார்கள்.
வேத வழி ஒரு பிராந்திய அறிவாற்றலால், கடவுளைப்பற்றி கண்மூடித்தனமான அபிப்பிராயங்களைத் தழுவியதல்ல என முன்பத்தியில் கூறி இருக்கிறோம். அக்கருத்தை மீண்டும் வலியுறுத்த, வேதவழி என்பது ‘இந்தியர்களையும், இந்திய பிரதேசத்திற்கு மாத்திரமே உரியதும் அல்ல, சார்ந்ததும் அல்ல. ஆனால், இதில் குறிப்பிட்ட அநேக நிகழ்ச்சிகள் இந்தியாவில் நடந்தபோதும், இந்திய காப்பியங்களான மகாபாரதத்தையும், மற்ற புராணங்களைச் சார்ந்து இருந்தும் கூட, அல்லது இதில் கூறப்பட்டுள்ள ஏராள வேதகால ஆட்களும், அவதாரங்களும், ஆங்கே சித்தரிக்கப்பட்ட பற்பல செயல்கள் (போர், சமாதானம், உறவுக்குள் சண்டை, சச்சரவு, நல்லது, கெட்டது, விளையாட்டு, ஓய்வு நேர பொழுது போக்கு முதலியன), இருந்தபோதிலும், இக்காப்பியங்களில், (மகாபாரதம், மற்ற புராணங்களில்) இந்தியாவுக்கு வெளியில், அநேக கிரஹங்களிலும் நடந்த நிகழ்ச்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. எவ்வாறு இருப்பினும், அக்காப்பியங்களில் கூறும் போதனைகள், தத்துவங்கள், யாவுமே, ஆன்மா சம்பந்தப்பட்ட அறிவியலைச் சார்ந்ததேயாகும். இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். உலகில் உயிருடன் படைக்கப்பட்ட ஒவ்வொன்றும் ’ஆன்மா’ என்பதைச் சார்ந்தது. ஆகையால், ஆன்மாவைப்பற்றிய அறிவு, தெரிந்துகொள்ளல், எந்த ஒரு பிராந்தியத்தையோ, அல்லது ஒரிடத்தில் வாழும் மக்களையோ, சார்ந்ததல்ல. இது எல்லாவற்றிற்கும் உரிய, பாதிக்கிற, உள்ளடக்கிய, எங்கும், எல்லா நிலைகளிலும் உள்ள, மனித இனம் முழுதுக்குமே ஏற்றது. ( It is universal).
மேற்கூறிய யாவுமே, கடவுளைப் பற்றிய அனுபவ அறிவைச் சார்ந்தது. வேத மனோபாவத்தில் கடவுள் ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு உரியதோ, அல்லது ஓரினத்தைச் சார்ந்ததாகவோ, அல்லவே அல்ல அல்லது இதில் குறிப்பிட்ட ஒழுங்கு முறைகள், தொழுகைகள், ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக, செய்யப்பட்டதும் அல்ல அல்லது ஓரின மக்கள் தான், தனிப்பட்ட முறையில் இவைகளைச் செயல்படுத்தப்பட வேண்டியது என்பதுமல்ல. இக்கடவுள், யூதர்களுக்கோ, ஹிந்துக்களுக்கோ, முஸ்லிம்களுக்கோ, அல்லது எந்த சமயத்தாருக்கோ தனித்தனியாகப் பொறுக்கி எடுத்து அவர்கள் தான் பிரத்யேகமாக, செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வரையறுக்கப் பட்டதும் அல்ல. இக் கட்டுப்பாடுடன் கூடிய குறுகிய மனோபாவம் வேத வழிக்குள்ளும், வேத மரபுக்குள்ளும், இல்லவே இல்லை. வேதபாட நூல்களில், கடவுளைப் பற்றி விவரமாக குறிப்பிட்டபடி, கடவுள் தாம் படைத்த எல்லாவற்றிடமும் அன்புள்ளவர், தாம் படைத்த ஒவ்வொன்றின் மீதும் (விதி விலக்கில்லாமல்) அக்கறை கொண்டவர், படைத்தவைகள், மானிடர் மட்டுமின்றி, எல்லா ஜீவ ராசிகளிடமும் பற்று உற்றவர், படைத்த பூவுலகம் எனும் ஒரு கிரஹத்தில் மட்டுமின்றி, மற்ற எல்லா கிரகங்களில் உள்ளவைகள் எல்லாவற்றிலும் (புழு, பூச்சி, பூண்டு ஆகியவைகள் மீதும் அக்கறை கொண்டவர் என்றுதான் வேத வழி நூல்கள் கற்பிக்கின்றன. கடவுளால் படைக்கப் பட்டவைகள் எங்கிருந்தாலும், எவ்வித உருவங்கொண்டிருந்தாலும், கடவுள் மிக்க அக்கறை கொண்டு, எல்லாவற்றிலும் பற்றுடன் உள்ளார் என, தான் படைத்தவைகளும் உணரவேண்டும் எனும் நல்லெண்னமும் உடையவர், இக்காரணங்களுக்காகவே தான், அவ்வப்போது தானாகவே, அவதாரம் எடுத்துக் கொண்டு நம் முன் தோன்றுகிறார்.
இன்னும் மேலாக, ஹிந்து சமயம், உலகத்திற்குத் தலைமை ஆசிரியரையோ, அல்லது தனி ஒரு மனிதரையோ அடையாளங்காட்டி, அதன் அடிப்படையில் செயலாற்றுவது இல்லை. கத்தோலிக்க கிருஸ்தவ சமயத்திலுள்ளபடி, ஒரே ஒரு “போப்” என்பவர் மட்டும் தான் கத்தோலிக்க கிருஸ்தவர்கள் மீது ஏக போக உரிமை பெற்றவர், தன் அதிகரம் (எதுவானாலும்) செலுத்தத்தத் தக்கவர், ஆக உலகிலுள்ள எல்லா கத்தோலிக்க கிருஸ்தவர்கள் அனைவரும் “போப்” எதெது ஆணையிடுகிறாரோ, அவைகளுக்கு மறுப்பு, வெறுப்பின்றி, கீழ்ப்படியவேண்டும் என்பது போல, வேத வழிகளில் கிடையவே கிடையாது.
எந்த மாணவர் / சீடர், எந்த குறிப்பிட்ட ( ரிக், யஜுர், சாம வேத வழி) ஆன்மீக ஆசிரியரிடம் முறையாக தீட்சைபெற்று வேத பாடங்களைக் கற்று இருந்தாலும், அவரவர் ஆசிரியர் கற்றுக்கொடுத்த வேத வழி, மரபுகள் மட்டுமல்லாது, மற்ற வேத வழியில் மிகச்சிறந்த ஆசான்கள் காட்டிய வழிகளிலும் தக்க பயிற்சிபெற்று மிகச் சிறந்த தேர்ச்சியையும் பெறவேண்டும் எனவே செயல்படுகிறது. வேதவழியைப் பின்பற்றும் போது ஒவ்வொருவருவரும் சரியான தடத்தில் செல்கிறார்களா அல்லது இல்லையா, எல்லா நற்போதனைகள் நன்கு பின்பற்றப் படுகின்றனவா என பற்பல இடங்களில், ஒழுங்குமுறைத் தராசுக்கோலால் சமநிலையில் உள்ளதா என பரிசோதிப்பதையும் வேத (மரபு) வழக்கங்கள் பரிந்துரைக்கின்றன. இதற்கான தேர்வுத்திட்டங்கள் பல குறிப்பிட்ட இடங்களில், தக்க ஆன்மீக குருக்களாலும், சாதுக்களாலும் (ஆன்மீகத்தில் குண நலன்களால் நிரூபிக்கப்பட்ட நிபுணர்களாலும்), பரீட்சை அதிகாரிகளாக (examiners) – வருடாவருடம் அநேக பொது இடங்களில் ஆன்மீக-மாணாக்கர்களை தேர்வு செய்கிறார்கள். இவைகளைத் தவிர வேத நூல்களில் தகவல் நிறைந்த நிர்ணயிக்கப்பட்ட பாடங்களும் உண்டு. இந்நூல்களில் உள்ளவை வேற்றுமையில்லா போதனைகளக் கொண்டதால், எங்கும் எதிலும் இடர்பாடில்லை. சில இடங்களில் பாட-விளக்கங்களில் வேற்றுமைகள் எழும்போது, நன்கு விவாதித்து, விசாரணைசெய்து, ஏற்றவர்களால், நிர்ணயிக்கப்படுகிறது. இதனால், எல்லாமே தெளிவாக எல்லாராலும் ஏற்கும்படியாகவும் உள்ளது. இதனால், வேத வழி மாணாக்கர்கள் செல் தடம் சரியாக உள்ளதா எனவும் தீர்மானிக்கப்படுகிறது. இதனால் மற்றொரு விளைவு. அதாவது மாணாக்கர்களும், நல்லாசிரியரிடம் தங்கள் பாடங்களை முரண்பாடற்ற முறையில் கற்றுக் கொள்கிறோம் எனவும் (சுய) திருப்தியையும் அவர்களுக்கு அளிக்கிறது.
21. ஹிந்து தத்துவங்கள், எல்லா உயிரினங்களிலும் கடவுளைக் காண ஊக்கமளிக்கிறது:
கடவுளைப்பற்றி வேண்டிய விரிவுரைகளுடன், ”கடவுள் எல்லா உயிரினம் ஒவ்வொன்றின் உள்ளும் உறைந்துள்ளார்” என வேத புனித நூல்கள், எடுத்துரைத்து நம் முன்னுணர்வை ஐயமற, அதிகரித்துக் கொள்ள, தேவையானவற்றை சேகரித்துக் கொடுக்கின்றன. வேத நூல்களில் உள்ள பாடங்களை ஆர்வமுடன் ஆழ்ந்து ஆராய்ந்த பின், நமக்குள் முன் இருந்த கடவுள் உணர்வு இன்னும் அதிகரித்த்து, பரமாத்மாவான கடவுள் (Supersoul), ஜீவாத்மாவான (individual soul) நம் ஒவ்வொருவரிடம் உள்ளார் என வித்தியாசமான உணர்வு நமக்குத் தன்னால் ஏற்பட்டுவிடும். இம்மாதிரியாக விளக்கிப் பொருள் கூற, வேத நூல்களில் உள்ளது போன்று வேறு எந்த நுல்களிலும், எந்த இடத்திலும் காண இயலாது. இத்தகவல் கொண்டு, உயிர் வாழும் ஒவ்வொரு ஜீவனுள்ளும், (நாம் எல்லோரும் உள்பட), அப்பரம்பொருளின் ஒரு சிறு பகுதி எனவும், மிகச்சிறிய அத்தெய்வத்தன்மை நமக்குள் இருப்பதையும் காணலாம். இந்த முன்னுணர்வுள்ள மன உணர்வால் கடவுளால் உருவாக்கப்பட்ட உயிர்வாழும் ஒவ்வொரு பிராணி மீதும், இயல்பாகவே, நமக்கு மரியாதையும் அக்கறையும் அதிகரித்து விடுகிறது. ஆக, நம்முள் கடவுள் உள்ளார் என்றவுடன், நம் மனதைத் தெளிவாக்கி, ஒவ்வொரு உயிரும் நமக்குப் புனித உறவுமாகிவிடுகிறது. இந்த அறிவால், நாம் கடவுள் படைத்த எதையும் யாவரையும் நேசிக்கவும், மற்றவர்களோடு ஒத்துழைத்து பரஸ்பரம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் எண்ணம் உருவாகிக் கொள்ளலாம். வேத வழி வந்த ஹிந்து தத்துவங்கள்தான் எல்லா உயிரினங்களிலும் கடவுளைக் காண ஊக்கமளிக்கிறது. (இதனால் வெறுப்பு, அதன் தொடர்ச்சியாக மதப்போர், சுவர்க்க உத்திரவாதம், புனித ஏமாற்றல், கொலைகளேது?)
[[[ஒவ்வொரு ஹிந்து வேத வழித் தொழுகை முடிவில்,

”உலகெங்கும் உள்ள யாவும் (கடவுள் படைத்தவை அனைத்தும்) சுகமாக வாழ வேண்டும், எல்லாவற்றிகும் (எல்லோருக்கும்) எல்லாவித மங்களங்களும் உண்டாகட்டும்” –

“லோகா: ஸ்மஸ்தா: சுகின: பவந்து; |
சமஸ்த சன் மங்களானி சந்து|| ”

लोका: समस्ता: सुखिन: भवन्तु ।
समस्त सन् मंगळानि सन्तु॥

– என வாழ்த்துக் கூறி முடிப்பது வழக்கம்]]]
.
(இனி, தொடரும் 6வது பகுதியே இக்கட்டுரையின் கடைசி பகுதியாகும்)

Series Navigation

author

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Similar Posts