ஹிந்து வேத நல்வழிகளைப் பின்பற்றி நடப்பதால் விளையும் நன்மைகள் — பகுதி – 3

This entry is part [part not set] of 33 in the series 20100815_Issue

ஆங்கிலத்தில் எழுதியவர்: ஸ்டீஃபன் நாப் -தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்5. உயிர் நீத்தபிறகு, மானிடருக்கு ஏற்படும் நிலை மாற்றம், செய்த நல்வினைத் தீவினைகளின் விளைவு, மறுபிறப்பு ஆகியவைகளைப் பற்றி, அறிவியலுக்கும், தர்க்க வாதங்களுக்குத் திருப்தி அளிக்கும் வண்ணம், நம்பத் தகுந்த தகவல்களை வேத இலக்கியங்கள், நமக்களிக்கின்றன.
உயிர் நீத்த பின் மானிடருக்கு ஏற்படும் நிலையைப் பற்றி நிச்சயமாக, அநேகமாக எல்லா சமயங்களும், சுட்டிக் காட்டுகின்றன. அவைகளில் கூறுபவை யாவும், அந்தந்த சமயத்தில் நம்பிக்கை கொண்டு, நல்லவராக இருந்தால், சுவர்க்கத்தை அடையலாம் அல்லது அந்தந்த சமய கோட்பாடுகளுக்கு மீறி நடந்துகொண்டால், நரகத்திற்கு போக நேரும் எனவும் என பலரும் எதிர்பார்க்கும் பதிலைத்தான் வழக்கமான அளிக்கின்றன.
ஆனால், வேத வழி அப்பழுக்கு இன்றி, அளவுக்கு விஞ்சிய அநாவசிய உடற்கிளர்ச்சிப் பேச்சில்லாமல், எல்லோருக்கும் மனதால் திருப்தி கொள்ள, நியாயமென நிரூபிக்கும் வகையில், விவரமான பதில்களை பளிச்சென அளிக்கிறது. அவ்வழி கூறுவதை, சுருங்கச் சொன்னால்: சுவர்க்கம், நரகம் எனும் கருத்துப்படிவம் என்பதே: முன் பிறவிகளில் எண்ணம், சொல், செயல், ஆகியவைகளால் விளைந்த வினப்பயனை, வரும் பிறவிகளில் ஒவ்வொருவரும், அனுபவித்தே ஆகவே வேண்டும். இதில் எந்த குறுக்கு வழியும் கிடையாது. முன்கூட்டியே உத்தரவாதம், விதிவிலக்கு என்பது வேத ஹிந்து வழிகளில் கிடையவே கிடையாது. ஆகவே நல்ல-தீய விளைவுகளுக்கு அவரவர்களே தான் பொறுப்பு (காரணம்). முன் பகுதியில் கூறியபடி, ‘வினை விதைத்தால் தினை கிடைக்காது’. வரும் பிறவி மானிடராக அல்லாமல், வேறொரு ஜன்மமாகவும் (புழுவாக, கொசுவாக, பூச்சியாகக் கூட) ஆகலாம். வேத வழிப்படி, சுவர்க்கம் எனும் கருத்துப்படிவம், கடவுளை எக்கணமும், இணை பிரியாது இருத்தல் என்பதே!! அங்கு வெறும் உடலுக்கின்பம், கேளிக்கை, என்பதற்கிடமே இல்லை. இதை வேத வழி அறுதியிட்டுச் சொல்கிறது.
உண்டாக்கப்பட்ட ஓவ்வொன்றின் (ஜீவராசிகள்) உள்ளில், இறைவனுடைய சிறு பாகம் (துகள்) உறைந்துள்ளது. அத் துகள், (சுடரொளி, or ticking) நின்று விட்டால், மானிடர் பிணமாகிறார். அதை இனி மானிடரென சொல்வதில்லை. ”பிணம் கிடக்கிறது” எனவே ஒரு ஜடப்பொருளாக, அழைக்கிறார்கள். பிணத்தை நிரந்தரமாகப் வீட்டிலேயே பாதுகாத்து வைத்துக்கொள்ள முடியுமா? மற்றொன்று, பின்வரும் பிறவியில் விளையப் போவதற்கு இப்பிறவியிலேயே எந்த உத்திரவாதமும் ஒரு சமயம் அளிப்பதுபோல, வேத வழி எந்த உத்திரவாதம் (religious guarantee) அளிப்பதில்லை.
ஹிந்து (வேதவழி) சமயத்தில் எவரையும் எவ்வித சந்தர்ப்பத்திலும் கட்டாய மதப்போர் நிகழ்த்தியாக வேண்டுமென்றோ, அல்லது அக் கட்டாய மதப் போரில், ஹிந்து மதத்தில் இல்லாதவர்களைக் கொலை செய்தாக வேண்டும் என்று, ஹிந்துக்களைத் தூண்டி விடுவது கிடையது. எனவே, கட்டாய மதப் போரே ஹிந்து மதத்தில் இல்லை என்றால், மதப் போர் ஏது, போர்த்தியாகிகள் ஏது, சுவர்க்க போக உத்திரவாதம் தான் ஏது?! இதற்கு எதிர்மாறாக, வேறொரு மதத்தில் உள்ளவை களைச் பரிசீலிப்போம்.
உலகத்தோருக்கு ஏன்! தன் மன சாட்சிக்குமே, தான் மன்னிக்கத்தகாத மகாபாபி என அந்த ஒருவருக்கே, தெரிந்திதே இருந்தாலும் (known desperados = KD), அவரே தான் சார்ந்த ஒரு மதம் சொல்லும் கட்டாயப்போரில் பங்கேற்று, அச்சமய நூல்களில் குறிப்பிட்டுக் காட்டும் பலிகடாக்களை (victims), (நிரபராதிகளாக இருப்பினும்), அதாவது தங்கள் சமயத்தைப் பின்பற்ற மறுப்போர்களை, வேண்டுமென்றே கொல்லும் போது, தன் உயிரையும் துறக்க நேர்ந்து விட்டால், அப்பேற்பட்டவர் பெரும் சுவர்க்க பதவிக்குத் தகுதி பெற்று, மதத்திற்காக உயிர் துறந்த தியாகி-‘ஷாஹீத்’ என பட்டமும் அளிக்கப் பட்டு, போற்றப்படுகிறார். உடனுக்குடன் அவர் அதுவரை செய்த பாபங்கள் எல்லாமே மன்னிக்கப்பட்டு, இவர்கள் புனித நூலில் கூறியபடி உடனுக்குடான் சுவர்க்கம் புக (Direct ticket) இப்புவியிலேயே உத்திரவாதமும் (religious guarantee) அளிக்கப்படுகிறது. இச்சுவர்க்கத்தில், எண்ணற்ற உடற்கிளர்ச்சி போகங்களுடன் நிரந்தரமாக வாழ, பூவுலகில் வாழும் போதே உத்திரவாதமும் அளிக்கப்படுகிறது. இவ்வாறாக கட்டாய மதப் போருக்கு இச்சமயச் சீடர்கள் ஊக்குவிக்கப் படுகிறார்கள்! இவர்கள் செய்யவேண்டிய தெல்லாம், மிக மிக சுலபம். அதாவது சமயம் சொல்லும் வகுப்பினரை கட்டாயப் போரில் வேண்டுமென்றே அந்தந்தந்த இடத்திற்குத் தக்கவாறு, எவ்விதத்திலாவது போட்டுத்தள்ள (கொலை செய்ய) வேண்டும்!! அவ்வளவுதான். (very simple) பிறகு எல்லாம் இன்பமயம். குறிப்பாக உடலுக்கு விதவித இன்பமே இன்பம்!! (இதற்கு அவர்கள் புனித நூல்களிலிருந்து ஆதாரங்கள் ஏராளம் உண்டு). இதில் ஆன்மீக எண்ணம் எங்கே காணமுடியும்? மற்ற மதத்தில் முழு கவனமும் உடலின்பத்திற்கே அன்றி வேறொன்றிலும் இல்லையே!. உடலின்பமா ஆன்மீகத்தின் குறிக்கோள்?
இவ்வுலகில் உள்ளவர்களை சற்று உற்று நோக்கினால், சிலருக்கு ஏராளமான சொத்து, ஆசைப்பட்டதை வாங்க கை நிறையப் பணம், வானிலையில் இயற்கையாக சீதோஷ்ண ஸ்திதியில் ஏற்படும் ஏற்றம், இறக்கம் ஆகியவைகளுக்கு, வெற்றிகரமாக ஈடுகொடுக்கும் நிலப்பரப்பில், நல்ல சுகாதார சுற்றுச்சூழல் கொண்ட வசதியான சுகமான மிகப் பெரிய வீடு, வாகனம் முதலியவைகள் என, பூலோகத்திலேயே, சுவர்க்க வாசிகளாக வாழ்வதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். அதே உலகில், வேறு சிலர், போர் நிகழும் நாடுகளில், எப்போது குண்டு தன் தலையிலும் வெடித்து விடுமோ என்ற உள்ளூர பயத்துடனும், மேலும் பஞ்சம், (எங்கும் எதிலும் பற்றாக்குறை) வறட்சி, நோய், வறுமை முதலிய மனக் குறையுடன் வாழ்வதையும் காண்கிறோம். இவைகளை மாத்திரம் சொல்வானேன். ஒரே குடும்பத்தில் பிறந்தபோதிலும், அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் நன்றாக கல்வி கேள்விகளில் மிகச் சிறந்து விளங்குவதும், ஒருவர் பணக்காரராகவும், ஒருவர் படு ஏழையாகவும், ஒருவர் எடுத்தகாரியத்தை முடித்து சாதனை படைத்தவராகவும், ஆனால், அதே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர சகோதரிகளில், மற்றொருவர், பிறவிக் குருடர்களாகவும், சிலர் அங்க ஹீனராககவும், ஒரு சிலர் படிப்பே ஏறாத படு முட்டாளாகவும், இப்படி பல ரகங்களாக வாழ்வதையும் கண்கூடாகக் காண்கிறேம். ஏன் இவ்வாறு இருக்க வேண்டும் என எப்போதாவது யோசித்திருக் கிறோமா? பல சமயங்கள், அடிப்படையாக ஒரே வித பதிலைத் தான் அளிக்கப் பார்க்கிறோம், அதாவது, இதற்கு இவர்கள் கூறும் காரணம், ’கடவுள் சித்தம், என் பாக்கியம்’ எனும் கடவுளுக்கே ‘முகஸ்துதி செய்வது போலவோ‘ அல்லது ’கடவுள் மீது குற்றம் சுமர்த்தி’, விரக்தியில் பதிலளிப்பார்கள். ஆனால், மேற்கூறிய காரணங்களைக் காட்டிலும், வேதவழி சமயம், கூறும் பதில் / சமாதானம் மிகத் திருப்தி அளிக்கிறது. உலகில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக தங்கள் ஜீவிதத்தில் நல்லவைகளையும் கெடுதல்களையும் அனுபவிக்கக் காரணம், முன் பிறவியில் அவரவர்கள் செய்த நல்வினை தீவினைக்கேற்றவாறு (எண்ணம், (உணர்வு நிலை), சொல், செயல், ஆகியவைகளால் விளைந்தவாறு) தற்போதுள்ள பிறவியில் அதற்குத் தகுந்தவாறு தான் அனுபவிக்கிறார்கள் என்ற பதில் மிக தெளிவாகவும் அனைவருக்கும் திருப்தி அளிக்கும் பதிலாக உள்ளது.
[[[கீழ்க்காணும் உரையாடலை, பெரியவரரொருவர், ஹிந்து சமய சொற்பொழிவில், சொல்லக் கேட்டேன். அந்த நிகழ்ச்சியை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். ஒருதடவை ஒரு சீடன் தன் ஆசிரியரிடம், கேட்டானாம். ஏன் மனிதர்களுக்குள், விதவிதமாக கஷ்ட நஷ்டங்களைத் தங்கள் வாழ்வில் அனுபவிக்கிறார்கள். எல்லாரும் கடவுளின் குழந்தைகளென்றால், ஒரே பெற்றோருக்குத் தன் குழந்தைகளிடம் இப்படி ஓரவஞ்சனை இருக்கலாமா? கடவுள் நம்மிடம் ஒரு தாயாக, தந்தையாக இருக்கிறார் எனவும் கூறுகிறீர்கள். ஆக, ஒரு தாய் / தந்தை தன்னிடம் இருப்பதை, எல்லாருக்கும் பகிந்து கொடுப்பதைத்தானே நாம் காண்கிறோம். ஏன் இப்படி கடவுளே நடந்து கொள்ளவேண்டுமென படு சீற்றத்துடன் கேட்டானாம். அதற்கு அப் பெரியவர் அளித்த பதில்,
• நம் வேத தர்மத்தை நம்புகிறாயா?
• ஆம் நம்புகிறேன்.
• அத் தர்மத்தில் கூறப்பட்டவைகள் யாவையும் நீ நம்புகிறாயா?
• ஆம் நம்புகிறேன்.
• ஆக, உனக்கு பிறப்பு, இறப்பு, மறுபிறப்பில் நம்பிக்கை உண்டல்லவா?
• ஆம். உண்டு
• சரி, நீ இதுவரை எத்தனை பிறவி எடுத்திருக்கிறாய் என உனக்குக் கூறமுடியுமா? அதில் நீ எவ்வளவு பாப-புண்ணியங்களைச் செய்திருக்கிறாய் என சிறு பட்டியலிட்டு அல்லது சிறு தலைப்பில் கூற உன்னால் இயலுமா? அப்படியும் முடியா விட்டால், போனால் போகிறது. எல்லா பிறவிகளைப்பற்றியும் வேண்டாம். தற்போதுள்ள பிறவிக்கு முன்னிருந்த பிறவியிலாவது என்னென்ன நல்லது / கெட்டது செய்தாய் எனவாவது சொல்ல முடியுமா?
• அதுவும் எனக்கு இருக்கும் புத்தியால் ஆகக்கூடியது இல்லை. இதெல்லாம் எனது சக்திக்கு அப்பாற்பட்டதெனத் தெரிகிறது.
• ஏன் அப்படிச் சொல்கிறாய்?
• முந்தா நாள் நானே சாப்பிட்டதைக் கூட என் நினைவு படித்திக் கூற முடியவில்லையே. கடந்த பிறவியைப் பற்றிக் கூறு என்றால் நடக்கிற காரியமா? மேலும், அதைத் தான் நான் தினமும் பார்க்கிறேனே! ஆகாயம், நட்சத்திரங்கள், இரவு பகல், குளிர், வெப்பம், சூரிய வெளிச்சம், முன் கணக்கிட்டுச் சொல்லியபடி. கிரகணங்கள், எண்ணற்ற நட்சத்திரங்கள், மிகப்பரந்த ஆகாயம், மழை, இடி, மின்னல், ஆறுகள், மலைகள், வெள்ளம், சமுத்திரங்கள், அலைகள், சுனாமிகள், பனிக்கட்டி, கருப்பர்-வெளுப்பர், மாநிறக்காரர், உலகப்பரப்பு, முதலியன……….. எதைச் சொல்லி, எதை விடுவது? அப்பப்பா! அவர் படைத்ததைப் பற்றிச் சொல்லிச் சொல்லி என்னால் மாளாது! அவருக்குள்ள சக்தியைச் சொல்ல நம் சக்திக்கப்பாற்பட்டது. ஆம்! ஒப்புக்கொள்கிறேன்.
• ஆக உனக்கென்று அநேக குறைபாடுகள், கட்டுப்பாடுகள் உண்டல்லவா? உனக்குள்ள அம்மாதிரி குறைபாடுகள், கட்டுப்பாடுகள் அவருக்கில்லையா? அப்பெரும் மகா சக்தி அவரொருவருக்கு மட்டுமே இருக்கிறதென நீ நம்புகிறாயா?
• அவருக்குக் குறைபாடுகள் இருப்பதாக என்னால் கணிக்க இயலாது. அதற்குத் தகுதியும் எனக்குக் கிடையாது என நினைக்கிறேன். ஒன்று மாத்திரம் எனக்குப் புரிகிறது: அதாவது, அவருக்கு மாபெரும் சக்தி உண்டென நம்புகிறேன். இதற்கு மேல் எனக்கு ஒன்றும் சொல்லத் தெரியவில்லை.
• சரி, எத்தனையோ பிறவிகளில் நீ செய்த பாப-புண்ணியங்களைத் தொகுத்து நீண்ட பெரும் தீர்ப்புத் தொகுப்புப் பட்டியலை, இன்றிருக்கும் கணினியால் கொடுக்க முடிந்த அதே காகிதத்தில் ரீம் ரீமாக பிரசுரித்து, (Don’t worry about paper! God will take care of that! printed computer output in reams & reams of paper) கடவுளே அதையும் உனக்குக் கொடுக்க ஏற்பாடு செய்தால், (அவருக்கு தான் சக்தி இருக்கிறது என நீயே ஒப்புக் கொள்கிறாயே!) அது எவ்வளவு பக்கங்கள் இருக்கும் என நீ நினைக்கிறாய்?
• உலகிலுள்ள ஒவ்வொருவருக்குமா? தனித் தனியாக ஒவ்வொருவருக்கும் எல்லா பிறவிகளுக்குமா? ஐய்ய்ய்ய்யோ! அதே ஏராளமாக ஆகுமே! எத்தனை பக்கங்கள் வருமோ! தெரியவில்லையே!!
• ஏன்! வாயைப் பிளந்து கொண்டு, பொறிகலங்கி, சோர்ந்து விட்டாய்! அக்காகிதப் பட்டியலை முழுதும் படிக்க ஒவ்வொருவருக்கும் படித்தறிய எத்தனை காலம் தேவைப்படுமென நினைக்கிறாய்?
• என்னால் கூற முடியாது. சுவாமி! அதைப்படிக்க அநேக வருடங்கள் கூட ஆகலாம். அவைகளைப் படிக்கவே அநேக பிறவிகள் வேண்டுமானாலும் ஆகலாம்.
• ஆக, உனக்கு, ஏன்-என எல்லாம் உனக்குத் தெரியவேண்டும், ஆனால் அப்படி பட்டியலிட்டு அளித்தாலும் உன்னால் படிக்க ஒரு பிறவி போதாது. அப்படித்தானே! ஆக, இதற்கெல்லாம் ஒரு சிறு உபாயம் சொல்லட்டுமா?
• தயவு செய்து உடன் சொல்லி விடுங்கள்! சுவாமி!!,
• நடந்தவைகளை மறந்து, தற்போது அனுபவிப்பவைகளை அப்படியே ஏற்று, இனியாவது நல்ல காரியங்களில் உன் புத்தியை செலுத்து. ஏனெனில், கடந்த பிறவிகளில், செய்த நல்வினை தீவினைகளின் விளைவுகளை அனுபவித்தாகவே வேண்டும். இதை மாற்ற முடியாது. வரும் பிறவியிலாவது நல்ல கதி அடைய முடியுமா என பார்த்துக்கொள். ஆக, பிறப்பு, இறப்பு இல்லாமல் எக்கணமும் நம்மைப் படைத்த இறைவனுடனே, என்றும் ஒன்றி உறைந்திருக்கும் உயர் நிலையான நற்கதியை அடைய, நற் செய்கைகளை இனியாவது செய்ய முயற்சி செய். இனியாவது நல்லதைக் கேள், நல்லதைச் சொல், அதன்படி, நல்லதைச் செய். ஆக நல்லதே உனக்குக் கிடைக்கும். எல்லா நலனும் உனக்குண்டாக என் ஆசிகள்!! உன்னையே நீ உயர்த்திக் கொள்ளப் பார்த்துக் கொள்! உன் மனசாட்சிக்கு (உன்னுள் உறைந்திருக்கும் கடவுளின் சிற்றொளிக்கு / சுடர் ஒளிக்கு) பதில் கூறு!! அது போதும். உனக்கு சர்வ மங்களங்களும் உண்டாகும்!

என அறிவுரை வழங்கினாராம்! எப்படி இருக்கிறது.
இது தான் வேத வழி!! எல்லோராலும் ஏற்றுக்கொள்ளத் தக்க பதில் தானே இது!!
6. கடவுளையும் ஆன்மீக உருவளவையும் முழுதுமாக புரிந்து கொண்டு, இரண்டையும் நன்கு இணைத்து, வேத வழி தத்துவம் நமக்களிக்கிறது.
நாம் அன்றாடம் காணும் ஏனைய சமயப் புத்தகங்களில், ‘பரமாத்மா’ வைப்பற்றி (கடவுளைப் பற்றி) எழுத்து மூலம் இருக்கும் முழு வருணனைகளைக் காட்டிலும், கடவுளுடைய உருவளவு, அல்லது பற்பல, கொள்ளளவைப்பற்றி விளக்கமாக, மிகச் சிறப்பாக, வேத வழிகள் புரிந்துகொண்டது போல வேறு எங்கும் காணக் கிடைக்காது.
வேதவழி, கடவுளை:
• ’பேராற்றல்’ படைத்தவர் எனவும்,
• ஒப்புயர்வற்ற தனிச்சிறப்புள்ளவர், இவ்வுலகை உண்டாக்கி, தான் படைத்தவைகளையும் கண்காணிக்கிறார். இதில் கடவுள் தனக்கிருக்கும் வீர்யத்தை நாமறிய நமக்குக் கண்ணால் காண்பிக்கவும், உணர்வில் உணரவும் செய்கிறார்.
• கடவுளைப்பற்றி மற்றொரு சிறப்பான விவரத்தில், அவர் எப்படி நமக்குக் காணக் கிடைக்கிறார்; எவ்வாறு வாழ்கிறார், எவ்வாறு தன் நண்பர்களுடன் உள்ளார் எனவும், அவர்களுடன் எப்படி விளையாட்டிலும் ஈடுபடுகிறார் எனவும் இருக்கிறது. வேத வழிகளில் கடவுளுடைய பக்தர்கள், அவருடைய மிகச் சிறந்த ஆன்மீக குடும்பத்தில் அவருடைய தாயாகவும் தந்தையாகவும், உறவினர்களாகவும், ஆக்கப்படுகின்றனர் எனவும் காணலாம்.
• பாகவதத்திலும் விஷ்ணு புராணத்திலும், மஹாபாரதத்திலும் கடவுள் எவ்வாறு தன் நண்பர்களையும் பக்தர்களையும் பொறுப்புடன் காக்கிறார்; எவ்வாறு தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்; எவ்வாறு தன்னிடம் மிகுந்த அன்புடையோரிடம் தன்னுடைய பொன்னான நேரத்தைக் கழிக்கிறார்; சாதாரண மாந்தர்களான நாமும் அவரை தன் வசமாக்கி, அவருடன் எவ்வாறு இன்றும் நேரத்தை கழிக்கிகலாம் என வேத நூல்கள் நமக்குச் சொல்லிக் கொடுக்கின்றன.
• கடவுளே தக்க சமயத்தில் நம்மிடம் உள்ள ‘அருள்’ சுரக்கும் இரக்கத்தால், (இரக்கம் என்பது பிறர் படும் துன்பத்தைக் கண்டு துன்பபட்டு, தானாகவே மனம் கனிந்து இரக்கம் காட்டுதல்) அவ்வப்போது, அவருடைய உயர்வான இருப்பிடத்தையும் விட்டு நம்முடன் ஒருவனாகப் பிறந்து, அவரை நாம் நேரிடையாக அறிந்து கொள்ளவும், அவரிடம் நாமே ஈர்க்கப்பட வைத்து தக்க பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறார் எனவும்
• ஆன்மீக உலகைப்பற்றி, அதில் என்ன நடக்கிறது, எவ்வாறு அங்கே உண்மையாக யாரால் நுழையமுடியும், பிரபஞ்ச படைப்பில் என்னென்ன அடங்கியுள்ளது என விவரமாக வேத வழிகளில், அமைதியான தெளிந்த நீரோடை போல தொடர்ச்சியுடன் முற்றிலும் முரண்பாடற்று, உள்ளது. எங்கும் எதிலும் ஓரிடத்தில் கூறியதை வேறொரு இடத்தில் மாற்றிக் கூறாது உள்ளது. (ஆனால் மற்றொரு மதத்தில், கடவுளே தான் முதலில் தவறாகத் சொன்னதற்கு அவர் வாயிலேயே, சைத்தன் புகுந்து கடவுளையே தவறு செய்யத் தூண்டினான் என கடவுளே, தான் படைத்த ஒருவர் (சைத்தன்) மீது வழக்கமாகக் குற்றம் சொல்வதும் கிடையாது!
வேத வழி நூல்களில், பிரபஞ்ச விவரிப்பும், அங்குள்ளவைகள் ஒவ்வொன்றும் எவ்வாறு படைக்கப்பட்டன என்று விவரங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளது. வேற்று சமய நூல்களில், உள்ளவைகளில் மக்கள் நம்புவதற்காக, உருவகப்படுத்தி எழுதப் பட்டுள்ளன. அவைகளில் பிரபஞ்சத்தைப்பற்றி மிகச் சிறிதாகவும், முக்கியமல்லாதவைகள் போலவும், அக்கறை யின்றி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் வேத நெறி விளக்கங்களில், பிரபஞ்ச படைப்புகளைப் பற்றி, எளிதில் விளக்குவதற்குக் கடினமான, ஆனால், நெறி பிழவாத நிலையில் விவரங்களுடன் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கி, பல பகுதிகளில் அடங்கியவைகளாக அளிக்கப்பட்டுள்ளன; இவைகளைப்பற்றி, நன்கு கற்றறிந்த வான் கோளங்களின் ஆய்வியலில் தலைசிறந்த வான நூல் வல்லுனர்களிட மிருந்தே கற்க முடியும். மேலாக, இவைகளில் நாம் இன்று அறிந்து கொள்ளும் பிரபஞ்சம்பற்றி, எதெது எப்போது படைக்கப்பட்டன / நிறுவப்பட்டன எனவும் ஐயமற தெளிவுபடுத்திக் கூறப்பட்டுள்ளது. [[[பிரபஞ்சம் எவ்வாறு படைக்கப்பட்டது என, ஸ்டீபஃன் நாப்” எழுதிய புத்தகத்தில் மிக விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளது- “How the Universe was Created,” By “Stephen Knapp” gives excellent details]]].
• இக்காரணங்களுக்காகத் தான், வேறு எச்சமயத்தை சேர்ந்தவர்களால், வேத நெறி புனித நூல்களிலுள்ளவைகளைப் ஆழ்ந்து படிப்பதோடல்லாமல், அவர்களுக்கு முன்புள்ள ஆன்மீக புரிந்துணர்வுகள் எதுவாக இருப்பினும், அவைகளுடன் இவைகளில் உள்ளவைகளையும் அறிந்து, மேலும் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளலாம்; அல்லது, அப்படி அவர்களுக்கு (போதிய) ஆன்மீக புரிந்துணர்வு இல்லையெனில், மேலும் அறிந்து கொள்ள, உரிமையுடன், தாயகம் செல்வது போலவும், அல்லது நீர் செல்லும் வழிச் செல்லும் தடம் போல தங்குதடையின்றி அறிந்து கொள்ள; அல்லது வட திசை கொண்டு எல்லா திசைகளுக்கும் வழிகாட்டும் துருவ நட்சத்திரம் போல; இருக்கும் வேத வழிகளிலிருந்து எல்லாவறையும் மிகச்சிறந்த வழிகாட்டியாக, இவைகளிலிருந்து அறிந்து கொள்ளலாம். பிரபஞ்ச அறிவியலில், வேத வழியிலுள்ளவைகளுடன் மற்ற சமயங்களில் உள்ளவைகளை ஒப்பிடும்போது அவைகளில் உள்ளவைகள் எல்லாமே …………. அதாவது, வேத வழி இமய உச்சத்திற்கும், மற்ற சமய மடுவுகளுக்கும் இருக்கும் வித்தியாசம் போல, கண்கூடாகக் காணக்கிடைக்கிறது. இதில் ஐயமே வேண்டாம். உண்மை வேண்டுவோருக்கு மேற் கூறியவை போதும் என நினைக்கிறேன்!
(2) [[[வேத வழிகளிலுள்ள சிறப்பு அம்சங்களாவன:
கடவுள் நம் உறவினர்; இது ஒன்றே போதாதா? அவரிடம் தொடர்பு கொள்ள! என் அப்பன், என் தாய், என் குழந்தை, என பெருமையுடன் சொல்லிக்கொள்ள! நமக்கு கடவுளை சுலபமாக அறிந்து கொள்ள முடியும். நமக்கு அத்தகுதி இருந்தால் கடவுளே, அவ்வப்போது அவதரமெடுக்கும் போது கடவுளுடைய நெருங்கிய உறவினனாக, ஏன்! தாய், தந்தையாகக் கூட, (தேவகி-யசோதா, வசுதேவர்-நந்த கோபர்) நண்பனாகவும் உங்களையும் ஆக்கிக் கொள்லலாம். (நன்பர்கள்: விதுரர், குசேலர்)
கடவுளை மற்ற சமயங்கள் சித்தரிப்பது போலல்லாமல், ஹிந்து மதத்தில் அவர் பயங்கரமானவரல்ல. யாரும் அவரை அணுகலாம். அணுகுவற்கு மிக எளிதானவர். மானிடர் சுயநலத்தில் செயல் படுவது போல இறைவன் சுயநலமில்லாதவர்; மனிதனால் தன் சுய நலத்திற்காக, தனக்கிஷ்டப்படி அவர் பெயரால் வேண்டியவைகளைப் புனித நூலில் நுழைத்து, எழுதிக்கொள்ள, ஒரு கடவுளை உண்டாக்கவும் கிடையாது முன்னுக்குப் புரணாக எண்ணத்திலும், சொல்லிலும் செயலிலும், ஈடுபட்டு, பின்னர், தான் சொன்னவற்றை மீண்டும் மீண்டும் திருத்தி எழுதிக் கொள்பவரல்ல. சுருங்கச் சொன்னால், இறைவன் பெயரைச் சொல்லி புனிதமாக ஏமாற்றவோ, கட்டாயப் போர் தொடரவோ வேண்டியதில்லை.

வேதவழிகளில் வேண்டுமென்றே பிறருக்குத் தீங்கிழைப்பதில்லை, தேவையும் இல்லை. மேலாக, நாம் இறைவனுக்குக் காண்பிக்கும் அன்புக்கு, மிகவும் கட்டுப்பட்டவர்; நமக்கு சேவகனாகவும் ஆகக் காத்துக்கிடக்கிறார். அர்ஜுனனுக்கு ரத-ஓட்டுனரானார் (chariot driver), தேசீய மகா கவி சுப்ரமணிய பாரதியார் எழுதிய கண்ணன், என் சேகவன் எனும் படைப்பில். ”நெஞ்சிலுள்ள காதல் பெரிது, எனக்குக் காசு பெரிதில்லை என்றான்” என கடவுளான கண்ணன் என்ற சேவகன் சொன்னான். பாரதியாரும், அக்கண்ணனை நினைந்து உருகி, “இங்கிவனை யான் பெறவே என்ன தவஞ் செய்து விட்டேன்” என்கிறார். நாம் அவருக்கு அன்புடன் செய்யும் எவ்வித உபசரிப்பையும் உகப்புடன் ஏற்றுக்கொள்பவர்; ஒவ்வொரு பழத்தையும், அது சுவையாக உள்ளதா, பழுத்திருக்கிறதா என பரிசோதித்து, இறைபக்தியில் தலைசிறந்த, ஏழைக் கிழவி சபரி, எச்சில் படுத்திக் கடித்துக் கொடுத்த பழங்களையும் மிகக் களிப்புடன் உகந்து, மற்றவர் போல அசிங்கமென ஒதுக்காமல், சுவைத்து உண்டவர். பள்ளிப் பருவத்தில், சாந்தீபினி மகரிஷி ஆச்ரமத்தில் சக மாணவனாக (classmate) இருந்த “குசேலர்” , மிகுந்த ஏழ்மை நிலையில் தன்னை காண வந்தவுடன், அவரை அன்புடன் இறுகக் கட்டித் தழுவி, வரவேற்று, குழந்தையாக இருந்த அந்நாட்கள் போல அதே நட்புடன், வாஞ்சையுடன், சற்றும் மாறாமல், நண்பனுடன் கீழே தரையில் உட்கார்ந்து கொண்டு, பேசிக்களித்து சிறிது நேரத்திற்குப் பின்னர், சின்னஞ்சிறு குழந்தை போல குசேலரை “எனக்கு அந்நாட்களில் தினமும், உன் வீட்டில் செய்த தின் பண்டம் ஏதாகிலும் மிக்க ஆசையுடன் கொண்டு வந்து கொடுப்பாயே! அது போல தின்பதற்கு இன்று எனக்கு என்ன கொண்டு வந்துள்ளாய்!!” என அந்நாளில் இருந்த அதே நட்பு, உரிமையுடன் பழகும் நண்பனாக, சிறுவனாக, நச்சரித்து, ஆவலுடன் கேட்க, ஆனால், ஏழை குசேலரோ தான் அன்புடன் தன் நண்பனுக்காகக் கந்தல் துணியில் கட்டிக் கொண்டு வந்திருந்த மிகச் சாதாரண ஒரு பிடி அவலை நண்பன், கிருஷ்ணனுக்குக் கொடுப்பதா வேண்டாமா எனத் தயங்கிய போது, தன் நண்பன் குசேலன் மிகப் பிரியத்துடன் தன் வீட்டிலிருந்து தனக்காகக் கொண்டு வந்ததையும் அறிந்து, குழந்தைபோல, அவசர அவசரமாக பரபரத்துக் கொண்டு, அதையும் அதே பழைய உரிமையுடன் உண்ணப் பிடுங்கி, தானும் களித்துச் சுவைத்து உண்டு, அதில் ஒரு பகுதியைத் தன் மனைவிக்கும் சுவைக்கக் கொடுத்தவரன்றோ!!

பகவத் கீதை 9வது அத்தியாயம், 26வது ச்லோகத்தில்,

”பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி |
த்தஹம் பக்த்யுபஹ்ருதம் அச்னாமி ப்ரியதாத்மன: ||

””யார் எனக்கு இலை, மலர், கனி, அல்லது சாதா தண்ணீரையோ, தூயமனதுடன் படைக்கிறானோ, (அளிக்கிறானோ) அவ்வாறு எனக்கு அளித்த மிகச் சிறிய பொருளையும், மிக்க அன்புடன் (களிப்புடன்) ஏற்றுக் கொள்கிறேன் / அருந்துகிறேன்.” — (ப.கீதை. 9: 26)

“पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्त्या प्रयच्छति । तदहं भक्त्युपहृतं अश्नामि प्रयतात्मन: ॥

என நமக்கு வேதவழிகள் கூறுகின்றன (அப்படி உதாரணங்கள் வேண்டுமெனில், மேலும் பாகவதம், மஹா பாரதம், பகவத் கீதை போன்ற நூல்களிலிருந்து ஏராளமாக அடுக்கடுக்காக கொடுக்கலாம்.
அஃதே போன்று ஒரு சமய நிறுவனர், தன் முன்னாள் நண்பர் அவரை ஆவலுடன் காண வந்தவரை உதாசீனம் செய்து, அவமதித்த நிகழ்ச்சியையும் ஒப்பீடாக ஆதாரத்துடன் அவர்கள் புனிதமாக்க் கொண்டாடும் புனித சமய நூல்களிலிருந்தே மேற்கோளாகக் கூற இயலும்]]].
7. இறைவனின் வாய்மொழிகள், போதனைகள், ஹிந்து சமய வேத இலக்கியங்களில் உள்ளன.
வேத இலக்கியங்களில், இறைவன் நேரிடையாக அல்லது அவருடைய பல அவதாரங்களின் வாயிலாகவோ, கதைகளாகவும் போதனைகள் மூலமாகவும், அவ்வப்போது நமக்காக அளிக்கப்பட்டன. ஆனால், மற்ற சமயங்களில் கடவுள் மூலமாகக் கட்டளைகளையும் (commandments) அவருடைய இராயபாரிகள் (messengers) மூலமாக அல்லது அச்சமய கடவுளின் தூதர்களுக்கு செய்திகளாக அளிக்கப்பட்டதென அச்சமயத்தோர் சொல்கின்றனர். இவைகள், அச்சமயத்தோர்களுக்கு வேண்டுமானால் வழிகாட்டியாகக் கூட அமையலாம். ஆனால், வேத வழிகளிலோ, பகவான் விஷ்ணு / கிருஷ்ணன், அக்கடவுளின் அவதாரங்களின் போது ஒரு திரட்டாக நமக்கு கிடைத்திருக்கும் நேரிடை போதனைகள், திட்டவட்டமாக, ஐயத்துக்கு இடமற்றவாறு, ஆன்மீகத்தில், பரம்பொருளை மெய்யாக, முழுமையாக உணர்ந்துகொள்ள வழி வகுக்கின்றன. ஆன்மீக மெய்யுணர்தலில், பகவத்-கீதையிலும், பாகவத புராணங்களிலும், மற்ற வேத வழி நூல்களிலும், எல்லாருக்கும் வேண்டிய விழுமிய அறிவுரைகள், உசிதமான நடைமுறைக்கேற்ற நேரிடையாக ஆலோசனைகளைக் கூறுவது போல, வேறெந்த சமயவழிகளிலும் உறுதியாக இல்லவே இல்லை. ஆம்!. அறிவியலைக் சார்ந்த இச்செயல் முறைகளை, இப்போதனைகளில் கூறிய சூத்திரங்கள், வாய்ப்பாடுகளில் உள்ளது உள்ளபடி, சொல்லிலும் செயலிலும் நேர்மையாக வழிகாட்டிகளாகக் கொண்டு விட்டால், இவைகளால் நம் மனங்களைத் தூய்மையாக்கி, உணர்ச்சிகளின் இருப்பிடமான இதயத்தில் உள்ள மாசுகளையும் அறவே அகற்ற முடிகிறது. முழுமையான, அப்பழுக்கில்லாத பேருண்மையின் கணக்கற்ற தோற்ற வேறுபாடுகளின் உருவளவு, அல்லது பற்பல கொள்ளளவைப் பற்றியும் (DIMENSIONS), ஆன்மீகக் கண்டுணர்தலையும் நம் மனத்தால் உணர, இவ்வழிதான் நமக்கு நுழைவாயிலாக அமைந்துள்ளது. ஒருவருக்கு வேறென்ன வேண்டும். சொல்லுங்கள். (we can perceive our own spiritual identity and then the numerous aspects of the Absolute Truth)
8. இறைவனின் நேசபாவம் நிறைந்த, கண்ணுக்கினிய வெளிப்படையான தோற்றங்களின் (VARIOUS FORMS) உட்கருத்துகளை, வேத வழி நமக்காவே தெளிவாகக் காட்டுகிறது:
இறைவனுடைய கணக்கற்ற பண்புக் கூறுகளைப் பற்றி முழு விவரங்களுடன் எடுத்துரைப்பதோடு மட்டுமல்லாமல், இவைகளில், இறையின் அநேக அவதாரங்களின், அமைப்புகள், இயல்புகள், செயற்பாணி, உருவம், ஆகியவற்றிலுள்ள அனுபவ அறிவுடன் தொடர்பு படுத்தி, வேத இலக்கியங்களில், வேத வழிகள், தெளிவாக நமக்களிக்கின்றன. இவ்வாறு கூறப்படும் அவதாரங்களில் இறைவன், பல் வேறு காரணங்களுக்காக, எண்ணிக்கையற்ற பொழுது போகுதற்குரிய செயல்களைச் செய்து அதன் வாயிலாக நமக்கு பல அறிவுரைகளைத் தருகிறார். இவைகளெல்லாம், இயற்கையாக ஆன்மீகத்தைச் சார்ந்தவைகளே.
உதாரணமாக, லக்ஷ்மி-விஷ்ணு, சீதா-ராம், ராதா-கிருஷ்ணா, ஆகியவைகளின் உட்கருத்துகள் மிக மேதகைமையுள்ள பக்தி பாவம் மிக்க, அவதாரங்களாகும். மிகக் குறிப்பாக, ராதா – கிருஷ்ணா எனும் கருத்துப்படிவம் இணைந்த உருவாக்கமும், இதைப்பற்றி விரிவாக வருணனை செய்யப்பட்ட தத்துவங்களனைத்தும், பண்புகளும், தலைசிறந்த பக்தி அம்சங்களும், அமிர்தம் போன்று, ஒப்புமைக்கப்பாற்பட்ட அழகு படைத்தவை. இம்மாதிரி வேறெங்கும் காணக் கிடைக்காது.
ஆகையால், வேத செயல் முறை, பரம்பொருளின் பரம ரகசியமான இயல்புகளைப் பற்றியும், மிக்க அன்பு நிறைத்த மனநிலையைப் பற்றியும், அகசார்பான தெளிவான அறிவு எனும் ஞான ஒளி விளக்கை நம்மனதில் ஏற்றி வைக்கிறது.
பரம்பொருளின் உருவை, எப்போதுமே கோப நிலையில், எழுத்தில் வடிக்க முடியாத மிக அசிங்கமானச் செயல்களைப் புரிந்தவ ரென்றோ அல்லது பொறாமையே உருவானவரென்றோ, மற்ற சமயங்கள் காட்டுவதுபோல, இவைகள் போன்றவைகள் வேத வழியில் ஏதும் கிடையாது. இயற்கையாக நம் மனத்தூய்மையையும், நற்பண்பு நிறைவான பக்தி நிலையையும் கிடைக்க வல்ல, பரம்பொருளின் ஆன்மீக நல்லுருவின் மேதகைமையைப் பற்றி மற்ற சமயங்கள் கூறுவது கிடையாது,
[[[கிருஷ்ணன், அவர் அண்ணன் பலராமனுடன் கம்ச வதத்திற்காக, மதுரா போவதற்கு முன்னர், கோகுலத்தில் 11 வயதுவரை இருந்தார். கோகுலத்தில் இருக்கும் போது எப்போதும் இறை அறிவால் (ஞான), இறையை விரும்பி (தர்சன), இறையுடன் கூடவே இருக்கும் எண்ணத்தால் (ப்ராப்தி), ”தங்களை அறிந்தவர்களால்” (தாம் யார், ஏன் இக்கோகுலத்தில் பிறவி எடுத்தோம் என அறிந்தவர்களால், இறையுடன் ஒரு தடவை கூடவே இருக்க ஆரம்பித்து விட்டால், எங்கும் எக்கணமும் எப்போதும் இணை பிரியாது கூடவே ஏதாவது ஒரு உருவில் இறையுடன் இருப்பவர்களால்), அவர்கள் மனதில் எழுந்த முதிர்ந்த பக்தி பாவத்தால், கோகுலத்தில் கூடி வாழ்ந்தனர். பக்தர்களுக்கு இறைவனின் கூட இருக்கும் ஆனந்த அனுபவம் எப்படி இருக்கும் என நமக்குக் காண்பிக்கவே இறையும் அவ்வதாரத்தைச் அவ்வாறே செய்தது தான், பதினோராவது வயதுவரைச் சிறு பிராய அந்த கோகுல வாச அவதார கட்டம். கம்ச வதத்திற்குப் பின் அங்கிருந்து ‘துவாரகை’ சென்று, தான் உதித்த யாதவ (மாடு மேய்க்கும் இடையர்) தேசத்தை நிர்மாணித்துக் கொள்ளச் சென்றுவிட்டார். அதற்குப் பிறகுதான் ’பாண்டவர்’ ’கௌரவர்’ ஆகியோரின் நேரிடை அழைப்புகளின் பேரில், சிறிது காலத்திற்காக துவாரகையை விட்டு, குருக்ஷேத்ர யுத்தத்தில் பங்கேற்க வந்தார். கிருஷ்ணனின் சேனைகள் மட்டுமே வேண்டிய, துரியோதனனுக்காகத் தன் பெரும்படையையும் (Quantitatively), கிருஷ்ணனான இறைவன் ஒருவரன்றி, வேறொன்றுமே வேண்டாம் என ஒருமனத்துடன் வேண்டி நின்ற அர்ஜுனனுக்காக, (If GOD is with me, who can be against me எனும் வகையில்) யுத்தத்தில் ஆயுதங்களைச் சீண்டாது, அர்ஜுனனின் சேவகனாக, தேரோட்டியாகத் தான் (பார்த்த சாரதியாக) (Qualitatively) பங்கேற்றார். அங்கே தான் ‘பகவத் கீதை’யெனும் ஆன்மீக அறிவுரைகளை அர்ஜுனனுக்காக தன் வாய் மொழியால் வழங்கினார். அக் குருக்ஷேத்ர யுத்தத்தின் போது தான் ’1000 பெயர்’ எனும், ’**சஹஸ்ர நாம ஸ்தோத்திரத்தை’ ’பீஷ்ம பிதாமஹர்’ (நமக்காக) செல்லச் சொல்ல இறைவனான கிருஷ்ணன் தன் காதால் கேட்டு அருளினார். (**இது மகாபாரத அனுசாசனீக பர்வாவில், பீஷ்ம-யுதிஷ்டிர உரையாடலில், 149 அத்தியாயத்தில் உள்ளது]]].
9. ஆன்மீகத்தில், (கற்பிக்கச் சிறந்த) ஆசிரியர்களும், (ஆசார்யர்களும்) திறங்கொண்ட நிபுணர்களும் வேத கலாச்சாரத்தில் காணலாம்
பரம்பரையான சம்பிரதாயங்களில், ஆன்மீக-ஆசிரியர்கள்-சீடர்கள், எனும் போது இதில் மும் மூர்த்திகளான, பிரும்மா, விஷ்ணு, சிவன், ஆகியோரும் அடக்கம். இச்சம்பிரதாயங்களின்படி, மிக உயர்ந்த ஒழுக்கப்படி நிலையிலுள்ள ஆன்மீக அனுபவ அறிவுரைகள், ஒவ்வொரு ஆசிரியரிடமிருந்தும் தங்கள் ஒவ்வொரு சீடர்களுக்கும் மிக பொறுப்புடன் முறையாக ஒப்படைக்கப்பட்டது. இதன்படி, சிறந்த ஆசிரியர்களிடமிருந்து, மிக நுட்பமான விவரங்களுடன் கூடிய நெறிமுறைகளும், அவர்கள் வாழ்க்கைப் பாணியில் நடத்திக்காட்டிய மனித சக்திக்கும் மீறிய அநேக அற்புத நிகழ்ச்சிகளும், எல்லாவற்றிக்கும் சிகரமாக, இவையனைத்தும், மிகச் சிறப்பு வாய்ந்த, மனப்பூர்வமான அன்பு, ஆசிகளுடன், சீடர்கள் வாயிலாக நமக்காக, நம் நலனுக்காக அளிக்கப்பட்டுள்ளது. இப்பேற்பட்ட ஆன்மீக ஆசிரியர்கள், புனித திருத் தொண்டர்கள் ஆகியவர்களின் சரித்திரங்களும், வாழ்க்கை வரலாறுகளும், நம் போனற சாதாரண மானிடர்களின் வாழ்க்கையை இன்னும் வளம்பெறச் செய்து, எதிர்பாராத நல்ல மாற்றங்களையும் உண்டாக்க வல்லது, மேலாக மேற்கூறிய புனிதர்கள் எவ்வாறு கடவுளிடமே நிரந்தரமாக, நேருக்கு நேர் (on one to one basis-1:1) என்றபடி, எப்படி அந்தரங்கமாக உரையாடினர் என்ற அசாதாரணமான நிகழ்ச்சிகளைப் பற்றியும் நமக்குச் சித்தரிக்கின்றன.
இவ்வழியை நாம் மிக மனப்பூர்வமாக அல்லது அக்கறையுடன் ஏற்றுக்கொண்டால், வேத ஒழுங்கு முறைகளும், ஆன்மீக ஆராய்ச்சி முறை நூல்களும் எவ்வாறு ஒன்றுக்கொன்றுடன் இணைந்து செயல்படுகிறதென்று நம் ஒவ்வொருவருக்கும் ஆதாரத்துடன் நிரூபிக்கின்றன. நாம் வேதவழிகள் சொல்லும் உன்னத மோக்ஷம் / சம்சாரத் தளைகளிலிருந்து விடுதலை அடைகிறோமோ, இல்லையோ, நம் தளராத முயற்சியுடன் நாமும் மனப் பூர்வமாக ஈடுபட்டு, அதில் வெற்றி கண்டு விட்டால் அந்த உன்னத ஒழுக்கப்படி நிலையை அடைவது மெய்யாலும் திண்ணமே / நிகழக்கூடியதே என மேற்கூறிய கற்பிக்கச் சிறந்த ஆசிரியர்களும், திறங்கொண்ட ஆன்மீக நிபுணர்களும், நமக்கு வழி காண்பிக்கிறார்கள். முற்றுப்பெற்ற ஆன்மீக முழுமையை வாழ்க்கையில் நாம் அடைந்துவிட, இம்மேலோர், இவை அனைத்தையும் அநேக உதாரணங்களுடன் நமக்குக் கற்பிப்பதுடன், பல ஆசிரியர்கள் நெறிமுறைகளை நடைமுறையில் செயலாற்ற, நமக்கு சுலபமாக புரியும்படியும் அவைகளையும் எழுத்தில் எவ்வாறு நாம் அவைகளைச் செய்ய வேண்டும் என படிப்படியாகப் புகட்டி, வழிகாட்டி நூல்களாக அளித்துள்ளனர். உன்னத ஒழுக்கப்படி நிலையை அடைய, நாம் செய்ய வேண்டியது இது ஒன்றேதான்:- அதாவது, இவர்கள் காட்டும் அடிச்சுவடிகளை அப்படியே பின்பற்றினாலேயே போதும். அவ்வுன்னத நிலையை அடைய வேறொன்றும் தேவையில்லை. (வேறென்னதான் வேண்டும்!)
10. ஆன்மீக மெய்யுணர்தலையும், அறியாமை என்னும் தவறான நம்பிக்கையிலி ருந்து நம்மை விடுவித்துக் கொண்டு, தெளிவு பெற்ற நிலையை அடைய வேத பண்பாடு, பிரத்யேக முறையில் நேர் வழியைக் காட்டுகிறது.
ஆன்மீக ஆன்மா என்றால் என்ன? நமது ஆன்மீக இயல்பும், அதன் படிநிலையும் என்ன? இம்மாதிரி போதனைகளை நாம் பகவத் கீதையிலும், எனைய முக்கிய புனித வேத நூல்களிலும் காணலாம். பிறகு, சனாதன-தர்மம் நம் செயல்களில், உணரும் சக்தியை விழிப்படையச் செய்ய ஒரு ஒழுங்கு முறையை நம் உபயோகத்திற்கு முன்னேற்பாடாக தயார் செய்து தருகிறது.
இதன் திறவு கோல்:
பல் வேறு வகைப்பட்ட பயிற்சிகளால், மேம்பட்ட உண்மைப் பொருள் சரியானவாறு ஒழுக்கப் படி நிலையில் இயக்குவதற்கு (operate on higher levels of reality) நம் மனதிற்கு வரவேண்டிய விழிப்பை ஏற்படுத்துகிறது. அந்நிலை தான் யாவுங்கடந்த இறுதியான ஆன்மீக உச்ச அடுக்கு (மேல் அளவு). இந்த படிவம் நம்முடைய முன்னுணர்வை (awareness) அதிகரித்து, இதனால் நாம் பல்வேறு உருவளவைச் சார்ந்த பிரபஞ்சத்தின் மேலான சமதளப் பரப்பில் வாழும் முறை பற்றி மனதால் புரிந்து கொள்ளும் திறனை நமக்களித்து விடுகிறது. இவ்விதமாக, எவ்வளவுக்கெவ்வளவு ஒருவர் இறைவனைச் சார்ந்த ஆன்மீகச் சிந்தனையில் மேன்மேலும் மூழ்கிப்போகிறார்களோ, அவ்வளவுக்கவ்வளவு, ஆன்மீகம் எங்கெங்குளதோ அவைகளை தாங்களாகவே கண்டுபிடித்துக் கொள்ளலாம் அல்லது செல்வழித் தடங்கண்டு கொள்ளலாம். இதேபோல ஆன்மீகத்தில் தொடர்ச்சியாக முதிர்ச்சி ஏற்பட்டுவிட்ட பிறகு, ஆன்மீக வாழ்க்கை என்பதே ஒரு பொருள் விளங்காத செய்தி என (விரக்தி) ஏற்படாது, இதனால், ஆன்மீக வாழ்க்கை என்பது நாமே உண்மையாக, நிச்சயமாக அனுபவிக்கக் கூடியது என்பதாக ஆகிவிடும். இதனால் தான் பகவான் கிருஷ்ணன் பகவத் கீதையில் வேத ஒழுங்கு முறையே தான், கல்வியின் (அறிவொழுக்கப் பயிற்சியின்) தலைமை பீடம், அதாவது, சிகரம். (zenith of education), இதுதான் ரகசியங்களுக்குள்ளும் இருக்கும் பரம ரகசியம் (the most secret of all secrets–गुह्यात् गुह्यतरं –ப.கீதை 18:63), இதுதான் சனாதன தர்மத்தின் மிகச்சிறந்த நிலை (குறைபாடில்லாத, முற்றுப்பெற்ற நிலை).
ஏனெனில், மெய்யை உணர்ந்து கொள்ளுதலில், கல்விகளுக்கெல்லாம் சிகரமான இந்த வேத முறைக் கல்விதான், ’’நான்’’ (Self) எனும் அக நிலைப் பண்பை பற்றியும், ஆன்மாவைப் பற்றியும் நம்முள் உறைந்த இறைவனைப் பற்றியும், நமக்கு நேரடியாக நம் புலன்களாலும், மன உணர்வுகளாலும் புரிந்து கொள்ள உதவுகிறது. இதைத்தான் மிக மகிழ்ச்சியாக நிறைவேற்றப்பட வேண்டும்;
அந்நிலை தான்:
• நிரந்தரமானது,
• எல்லையற்றது,
• ஆதியந்தமில்லாதது,
• காலவரையற்றது,
• மாற்றமில்லாதது,
• அழிக்க முடியாதது,
• அழியாதது,
• ஆனந்த மயமானது.
இந்நிலை நடைமுறையிலும் சாத்தியமானது. முயன்றால் அந்நிலையையும் அடைந்திட முடியும்.
(இனி நான்காவது பகுதி தொடரும்)

Series Navigation

author

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Josh Schrei தமிழாக்கம்: சேஷாத்ரி ராஜகோபாலன்

Similar Posts