நிலம் என்பது வெறும் எல்லைக்கோடுகளல்ல இரும்புக்கோட்டையுமல்ல

0 minutes, 4 seconds Read
This entry is part [part not set] of 32 in the series 20100711_Issue

எஸ் குருமூர்த்தி தமிழாக்கம் மணி


அகஸ்தியஸ் காம்டே. 19 நூற்றாண்டு பிரஞ்சு தத்துவவாதி மக்கட்வகை தொகைமையே^ இறுதியானது என்கிறார். . மக்கட்வகைதொகைமை ^ ( அல்லது மக்கட் குழு தொகுப்பு) என்பது சுருக்கமாக ஒரு தேசத்தின் மத,கலாச்சார அல்லது மதசார்பற்ற மக்கட்தொகையையின் மொத்த விகிதாசார உருவகத்தை கொடுக்கும், குறிக்கும். 18,19ம் நூற்றாண்டுகளில் பிரஞ்சுகாரர்களே மக்கட்குழு சார்ந்த தேசியம் மற்றும் தேசிய நலன்கள் எவ்வளவு தேவையானது என்பது பற்றிய தெளிவான புரிதலை முன் வைத்தார்கள். ஒரு நாட்டின் மக்கட்தொகையில் இனமாற்றமோ அல்லது மதமாற்றமோ நடக்கும்போது அது மக்களின் அடையாளத்தை, உளப்பாங்கை, தேசியத்தை ஏன் உலகப்பார்வையை கூட மாற்றிவிடுகிறது.

[^ மக்கட் வகை தொகைமை – demography – ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் குறிப்பிட்ட காலத்தில், இடத்தில் நடக்கும் பிறப்பு, இறப்பு, திருமணம், மதம், வயது, ஆண், பெண், குழந்தைகள் மற்றும் மற்றைய நிகழ்வுகளை பதிவு செய்யும் செயல். அல்லது அவைகள் பற்றிய புள்ளிவிவரங்களால் அறியப்படும் தகவல்களின் தொகுப்பு]

இஸ்லாமிய இந்தோனேசியாவிலிருந்த கிழக்கு திமெரில், அங்கு வசித்த 99 சதவீத திமெர்கள் கிறிஸ்துவம் தழுவியதால் அந்த நாடு கிறிஸ்துவ நாடாக மாறியது. நிலப்பரப்பில் நடக்கும் மத மாற்றம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இது ஒரு தற்போதய உதாரணம். ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு நிலப்பரப்பிற்குள் மதமாற்றத்தை பற்றி பேசுவது அவ்வளவு சரியான விசயமாக கருதப்படவில்லை. இந்த நவீன மதசார்பற்ற சமூகத்தில் மதங்கள் முடிந்துபோனவை என்று நினைத்துகொண்டிருந்த அமெரிக்க-மேற்கத்திய சமூகங்கள் 9/11க்குபிறகு விழித்துக்கொண்டன. எச்சரிக்கை மணி அடித்தபின் அவற்றின் செயல்பாடுகள் பதிவுபோல மிகத்தீவிரமாக அமைந்தன.(Spiritual Capital ) ’ ஆன்மீக தலைமையிடங்கள்’ என்கிற தலைப்பின் கீழ் மதநிலப்ப்ரப்பு தொடர்பான நிறைய ஆய்வுகளை நடத்தியது.

ஜான் டெம்பிள்டன் உதவியால் நடத்தப்பட்ட இத்தகைய ஆய்வு ஒன்று “ஆன்மிக தலைமையிடங்களை கீழ்வருமாறு வரையறுக்கிறது “ அளவிட முடிகிற் விளைவுகளை, பாதிப்பை ஒரு தனிமனிதன் மீதோ, சமூகம் மீதோ அல்லது குழுவின் மீதோ நடத்தும் ஆன்மீக,மத சடங்குகள், நம்பிக்கைகள், நிறுவனங்கள், சங்கிலித்தொடர்புகள் “ இது மதசார்ந்த நாடன்றி வேறென்ன ? கடந்த காலங்களிலும் நிகழ்காலத்திலும் மக்கட்தொகையில் நடைபெற்ற இத்தகைய மத மாற்றங்களால் இந்தியா நிறைய பாதிப்படைநதது என்றாலும் மக்கட்தொகையில் மதமாற்றங்களை அளவிடவது என்பது மதசார்ப்பற்ற இந்தியாவில் கண்டிப்பாக முடியாத ஓன்று. இந்தியா வரலாற்றின் மீது ஒரு உண்மையான பகுத்தறிவு கேள்வி கேட்டுக்கொண்டால், அப்படியான மாற்றங்கள் ஒரு நிலப்பரப்பை பிரித்து எடுத்துக்கொண்டு போனது மட்டுமின்றி பிரிந்த சகோதரர்கள் தாய்நிலப்பரப்பிற்கு எதிராகவும், எதிரிகளாகவும் மாறிப்போனார்கள் என்றும் தெரியவரும். இந்தியாவிலிருந்து பிரிந்த பாகிஸ்தான் இந்தியாவிற்கு எதிராக இரண்டு போரை தொடுத்து தோற்றதுமின்றி, மறைமுக தீவிரவாத போரையும் ஆரம்பித்திருக்கிறது.

மகாபாரத்தின் காந்தாரி, காந்தார் என்று சொல்லப்படும் ஆப்கானிஸ்தானிலிருந்துதான் வந்தாள் என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு தெரிந்திருக்காது. ஆப்கானிஸ்தானை ஆண்டு கொண்டிருந்த பெளத்தமத அரசர் இஸ்லாமிய படையெடுப்பை நெடுங்காலமாக தடுத்து காத்துக்கொண்டிருந்தான். இப்போது ஆப்கானிஸ்தானை பாருங்கள். அது தாலிபான்களின் நிலம். மொகமத காஸன்வியும், நாதர் ஸாவும் உடைக்க நினைத்த பாமியன் பெரும் புத்தர் சிலை தாலிபான்களால் – இஸ்லாமில்லாத எதுவும் இஸ்லாத்திற்கு எதிரானதே என்கிற நோக்கினால் – சின்னபின்னமாக்கப்பட்டது. இன்றும் ஆப்கானிஸ்தானின் தேசிய எல்லைகளில் எந்த இழப்பும் இல்லை, அதே எல்லைக்கோடுகள் தான். ஆனால் மக்கட்தொகையில், குடிபரவியலில் மாறிப்போனது தொலைந்தது புத்தமதம் கமழும் ஆன்மா. இதுவே ஒரு மக்கட்தொகையில் மதமாற்றம் ஏற்படும்போது நிகழும் கலாச்சார மாற்றம்.

ஒரு சில நூற்றாண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தானும், பங்களா தேசமும் எப்படி இருந்தது என எண்ணிப்பார்ப்போம். பாகிஸ்தானின் சிந்து சமவெளிதான் வேதபுராணங்களின் தாய்மடி. இந்துக்களின் புனிதமான 52 சக்திபீடங்கள் இரண்டு பாகிஸ்தானிலும், ஏழு பங்களாதேசத்திலும் இருந்தன. பெருவாரி இந்துக்கள் இஸ்லாம் மதத்தை நோக்கி மாறியதால் ஒரு சுழற்சி பாகிஸ்தானாகவும், பங்களாதேசாகவும் பாரதத்தை விட்டு பிரிந்துபோயின. இப்போது பாகிஸ்தானாக அறியப்படுகிற பகுதியில் இஸ்லாமிய படையெடுப்பிற்கு முன் முஸ்லிம் ஜனத்தொகை இருந்ததேயில்லை.

மொகல் பேரரசர் ஜஹாங்கீர் ஆட்சியில இஸ்லாமிய மக்கட்தொகை 1/6 மட்டுமே இருந்ததாக அவரது வாழ்க்கை குறிப்பிலிருந்து அறியமுடிகிறது( தாரிக்-சலிம்-சாகி) அதற்குபிறகான தொடர்ந்த மதமாற்றங்கள் நிறைய பகுதிகளில் இஸ்லாமியர்களை பெருவாரியாக மதம் மாற்றியது. 1941ல் இன்றைய பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் மக்கட்தொகை 80 சதவீதமானது. மற்ற இந்துக்கள், பெளத்தர்கள், சீக்கியர்கள் மற்றும் ஜெயின்களின் மொத்த மக்கட்தொகையும் வெறும் 20 சதவீதமாக மட்டுமே மாறியிருந்தது. அதுவும் இப்போது வெறும் 2 சதவீதமாகப்போனது. இப்போதய பங்காளாதேசில், 15 நூற்றாண்டில் ராஜா கணேஸ் போன்ற இந்து மன்னர்கள் ஆண்டிருந்தாலும் 1872ல் இந்து மக்களை விட இஸ்லாமிய மக்கள் பெருவாரியாக இருப்பது கண்டு ஆங்கிலேய அரசு அதிகாரிகளே அதிசியத்தனர். கிழக்கிலும், மேற்கிலிமுள்ள பெருவாரியான இஸ்லாமிய மக்கட்தொகையே அவரது பிரிவினைவாதத்திற்கு கை கொடுக்கும் என்று கணக்குபோட்டு இறங்கினார். அது அவரை கைவிடவில்லை. இந்தியா இரண்டு துண்டானது. அதோடு கதை முடியவில்லை.

1941ல் இப்போத்ய பங்காளதேசத்தில் 34 சதவீத இந்து சமயத்தவர் இருந்தார்கள். ஆனால் 1951ல் அது 23 சதவீதமாகவும் பின்பு 10.3 சதவீதமாக 2001 கணக்கெடுப்பிலும் குறைந்துபோனது. இந்த மதமாற்றம் பாரதத்தை தூண்டாடியது மட்டுமில்லாமல், 9.51 லட்ச நிலத்தையும் வெட்டிக்கொண்டு போய்விட்டது. அதோடுமட்டுமின்றி அங்குள்ள இந்துக்கள் சகிப்புதன்மையற்ற மதத்தினால் துரத்தப்பட்டு இந்தியாவில் குடியேற நேரிட்டது. அதற்கு மாறாக, இந்தியாவில் 1941ல் 87.22 சதவீதமாக இருந்து இந்துக்கள், 84.22 சதவீதமாக 2001 கணக்கெடுப்பில் குறைந்தனர். அதே காலநேரத்தில் 10.45 சதவீதமாக இருந்த இஸ்லாமிய மக்கட்தொகை 13.43 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இது அதிகமாக குழந்தைகளை இஸ்லாமியர்கள் பெற்றுக்கொள்வதால் மட்டுமில்லாமல் பங்களாதேசத்தின் எல்லைப்புறத்தில் நடக்கும் மக்கள் புலம்பெயர்தலும், ஊடுருவலாலுமே உண்மையான காரணங்கள் (தேசிய மக்கட்தொகை பெருக்க சதவீதமான 15.93 சதவீதத்தை விட இஸ்லாமிய மக்கட்தொகை பெருக்கம் 18.74 சதவீதம் அதிகமே)

பங்களாதேசத்தின் பக்கத்து இந்திய மாநிலங்களான அஸ்ஸாம், பெங்கால், பீகார் மற்றும் உத்திரபிரதேசத்தில் உயரும் இஸ்லாமிய மக்கட்தொகையிலிருந்தே இதை தெரிந்து கொள்ளலாம். இஸ்லாமிய சராசரி மக்கட்தொகை உயர்வான மூன்று சதவீதத்தை விட ஐந்து சதவீதம் மேற்சொன்ன மாநிலங்களில் இஸ்லாமிய மக்கட்தொகை 1951லிருந்து உயர்ந்திருக்கிறது என்பதை கவனிக்கவேண்டும். அஸ்ஸாமில் மட்டுமே அது எட்டு சதவீதத்தை எட்டியிருக்கிறது. வங்காளத்திலும் 1951லிருந்து 9.5 சதவீதம் அது உயர்ந்திருக்கிறது (6.5 சதவீத சராசரி தேசிய உயர்வுக்கு எதிராக) . வங்காளத்தின் எல்லை மாவட்டமான முர்சிடாபாத்தில் 64% முஸ்லீம் பெரும்பான்மை ; மாலாத் மற்றும் உத்தர் டினாஜ்பூரும் கிட்டத்தட்ட அதே கதிதான். பிகாரிலும், ஜார்கண்டிலும் இஸ்லாமிய மக்கட்தொகை எட்டு சதவீதத்திற்கு மேலாக உயர்ந்திருக்கிறது. பங்களாதேசிகளின் எல்லை ஊடுறுவலும்,புலம்பெயர்தலும் இதற்கு காரணமாயிருக்கமுடியும். திட்ட ஆய்வு குழுமம் சென்னை மத சார்ந்த குடிபரவல் பற்றிய அருமையான ஆய்வறிகை வெளியிட்டள்ளது. அதில் கீழ்கண்ட முக்கிய தரவுகளை தருகிறது.

பங்களாதேசத்தின் ஊடுறுவலும், புலம்பெயரலும் தேசிய எல்லைகளை அஸ்ஸாம், பெங்கால், பீகார் வழியாக குறுக்குகின்றன. அவ்வாறு கடத்தப்பட்ட ஊடுருவாளர்களுக்கும் எந்த கேள்வியுமின்றி 2011ல் தேசிய அடையாள அட்டையும், குடியுரிமையும் பரிசாக வழங்கப்படபோகின்றன. மக்க்டதொகை என்பது எல்லைகள மட்டுமல்ல, அது இரும்புகோட்டையுமல்ல என்பதை மதசார்ப்பற்ற இந்தியா எப்போது உணரப்போகிறது.


Fence is not the border
S Gurumurthy

Series Navigation

author

மணி

மணி

Similar Posts