இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 8

This entry is part [part not set] of 28 in the series 20090702_Issue

நேசகுமார்


வஹ்ஹாபி சொன்னதில் சில உண்மைகள், சில தவறுகள், பல குழப்பங்கள் உள்ளன. அதை சுட்டிக் காட்டுவது நல்லது என்று நினைக்கின்றேன்.

1. அடிமைப் பெண்கள் விஷயமாக சுன்னாஹ்(முஹம்மதின் நடத்தை) எப்படி இருந்தது என்று ரஹிக்குல் மக்தூம் விவரிக்கின்றது(முஹம்மதின் வாழ்க்கையை சொல்லும், சவுதி அரசின் அங்கீகாரம் பெற்ற நூல் இது), இவ்வாறு
குறிப்பிடுகிறது:

A few elements of the enemy embraced Islam and their lives, wealth and children were spared. As for the spoils of the war, the Prophet (Peace be upon him) divided them, after putting a fifth aside, in accordance with Allâh’s injunctions. Three shares went to the horseman and one to the infantry fighter. Women captives were sent to Najd to be bartered with horses and weaponry. For himself, the Prophet (Peace be upon him) selected Rehana bint Amr bin Khanaqah, manumitted and married her in the year 6 Hijri. She died shortly after the farewell pilgrimage and was buried in Al-Baqi..(பக்கம் 145, INVADING BANU QURAIZA, Ar-Raheeq Al-Makhtum )

2. இன்று ஜிஹாத் நடைபெறும் இடங்களில் எல்லாம் இந்த பெண்களை ஏலத்தில் விடுதல் நிகழ்கிறது. சூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் இருக்கும் அடிமைச்சந்தைகளை இணையத்தில் தேடினால் காணலாம். ஏனெனில், இது சுன்னாஹ்! இது சம்பந்தமான ஒரு நல்ல கட்டுரையை சுட்டிக் காட்ட விழைகின்றேன்:

http://frontpagemag.com/readArticle.aspx?ARTID=28953

இந்த கட்டுரை, இதற்குப் பின்னால் இருக்கும் மதக்காரணங்களை எளிதாக விளக்குகின்றது.

3. மிகவும் நாகரிகமாக, வஹ்ஹாபி உரிமையாளன் என்று எழுதுகிறார், நமது அங்கீகாரத்திற்காக. ஆனால், அடிமைகளின் உரிமையாளர் நடந்து கொள்வதுபோல ஒரு கணவன் நடந்து கொள்வாரா, அதை இஸ்லாம் அனுமதிக்கின்றதா என்று அவர் தாம் தெளிவுபடுத்த வேண்டும். ஏனெனில், அடிமைகளின் உரிமையாளர் அவர்களிடம் உடலுறவு கொள்வதற்கு அனுமதி கோரத்தேவையில்லை, உலகிற்கு அந்த உறவை அறிவிக்கவும் தேவையில்லை என்பதே சுன்னாஹ்.

4. சபிய்யா விஷயத்தில், என்ன நிகழ்ந்தது என்பதை சொல்லும் ஒரு ஹதீதை வஹ்ஹாபியின் பார்வைக்கு வைக்க விரும்புகிறேன்.

Volume 7, Book 62, Number 89:
Narrated Anas:
The Prophet stayed for three days at a place between Khaibar and Medina, and there he consummated his marriage with Safiyya bint Huyay. I invited the Muslims to a banquet which included neither meat nor bread. The Prophet ordered for the leather dining sheets to be spread, and then dates, dried yogurt and butter were provided over it, and that was the Walima (banquet) of the Prophet. The Muslims asked whether Safiyya would be considered as his wife or as a slave girl of what his right hands possessed.

முஹம்மது சஃபியாவை அடிமையாக வைத்துக் கொள்கிறாரா அல்லது மனைவி எனும் அந்தஸ்தை கொடுக்கிறாரா என்பது அங்கே இருந்த யாருக்கும் தெரியாது. சஃபியாவை பர்தா போட்டு மூடியதைப் பார்த்தவுடன் தான் சஃபியா மனைவி எனும் அந்தஸ்தைப் பெறுவது கூட இருந்தவர்களுக்கு தெரிகிறது.

ஒரு பெண்ணின் கணவனை கொலை செய்துவிட்டு, அப்பெண்ணின் தந்தையை சித்தரவதை செய்துவிட்டு அப்பெண்ணை அடிமையாக படுக்கைக்கு அழைத்துச் சென்றதை ‘பூ’வின் குணம், அது உலகிற்கு அழகிய எடுத்துக் காட்டு, அது இன்றும் முஸ்லீம்கள் கடைப்பிடிக்க வேண்டிய சுன்னாஹ் என்று சொல்வது எவ்வளவு கொடூரமானது?

5. வஹ்ஹாபி செய்துள்ள இன்னொரு விஷயம், வெறுமனே படுக்கைக்கு எடுத்துச் சென்றதை ‘மணம்’ என்று எழுதி, அதை திருமணத்துடன் சேர்த்து குழப்பி வாசகர்களை குழப்புவது. முஹம்மது முறையாக சஃபியாவை (வஹ்ஹாபி சொல்லியிருப்பது போல ஒரு இஸ்லாமிய நிக்காஹ்வுக்கான விதிமுறைகளுடன்) மணக்கவில்லை. அதுபோலவே ஜைனப், மரியம் மற்றும் பல பெண்களையும் மணம் புரியவில்லை.

ஜைனப் விஷயத்தில், அந்த திருமணம் வானுலகில் நடைபெற்றுவிட்டது என்று குரான் வசனம் இறங்கிவிட்டது. மரியம் விஷயத்தில் இன்னும் இஸ்லாமிய அறிஞர்களிடையே கூட ஒருமித்த கருத்து இல்லை, அவர் மனைவியா அடிமையா, வேலைக்காரப் பெண்ணா என்று. ஆனால், அந்த மரியத்துடன் முஹம்மது உறவு கொண்டது ஹதீதில் பதிவாகி இருக்கிறது. அப்படி உடலுறவு கொண்டது இன்னொரு மனைவி ஹஃப்சாவின் அறையில். அந்த உறவுக்கு பிறந்த குழந்தையின் காரணமாகவே மரியத்துக்கு மரியாதை தரப்பட்டது. அது கூட கலீஃபா உமர் மரியத்தின் மரணத்திற்கு மரியாதை தந்தார், அதனாலேயே கொஞ்சம் மரியாதை.

இல்லையென்றால், இஸ்லாம் காட்டிய வழி இதுவே, அடிமைகளுக்கும் பணியாளர்களுக்கும் வித்தியாசம் கிடையாது. அவர்களுடன் வல்லுறவில் ஈடுபடலாம், அவர்கள் பொருட்களைப் போன்றவர்கள். இஸ்லாம் காட்டிய வழி என்று சொல்லும்போது நான் வஹ்ஹாபியின் மொழி நடையைப் பின்பற்றுகிறேன் அவ்வளவே. காரணம், இஸ்லாம் என்று ஒன்றுமில்லை. முஹம்மது காட்டிய வழி. முஹம்மது செய்த செயல்கள் எல்லாம் மதமாக, கடவுளின் சட்டமாக, கடவுள் உலகிற்கு எடுத்துக்காட்டிய நடத்தைகளாக இவர்களால் கருதப்படுகின்றது.

முஹம்மது மட்டுமல்ல, சரியாக வழிநடத்தப்பட்ட கலீஃபாக்கள் என்ற கருத்தியலின் காரணமாக முஹம்மதுவுக்குப் பின்பு வந்த நான்கு கலீஃபாக்களும் செய்ததெல்லாம் கடவுள் ஆமோதித்த செயல்களாகின்றன. இதில் ஷியாக்கள் சில கலீஃபாக்களை ஒப்புக்கொள்ளவில்லை என்பதால், அவர்களது இஸ்லாம் வேறு மாதிரி இருக்கிறது, சுன்னிகளின் இஸ்லாம் வேறு மாதிரி இருக்கின்றது.

உதாரணமாக, வஹ்ஹாபி சொன்ன அக்காளும் தங்கையுமாக அடிமைகளை பிடித்து வைத்து புணரமுடியாது என்று சொன்ன ‘இஸ்லாமிய கோட்பாடு’ முஹம்மது மரியத்தின் சகோதரியை இன்னொரு தோழருக்கு அனுப்பி வைத்ததால் ஏற்பட்டது. தாயையும், மகளையும் சேர்த்து பிடித்து வைத்து புணர முடியாது என்ற சொன்ன ‘கடவுளின் வழிகாட்டுதல்’ கலீஃபா உமரின் காலத்தில் ஏற்பட்டது.

6. முஹம்மது செய்தது தவறா?

முஹம்மது செய்தது தவறோ சரியோ, இன்றைக்கு அவர் செய்ததெல்லாம் இஸ்லாம் என்று இவர்கள் சொல்வதால், இன்றைய சூழலை கருத்தில் கொண்டே முஹம்மதின் நடத்தையை எடை போட வேண்டும். இன்று ஒரு போலிச்சாமியார் இது போன்று நடந்து கொண்டால் என்ன ஆகும்? அதை எப்படி பிறர் சகித்துக் கொள்வார்கள்? அந்த நிலைப்பாட்டையே நாகரிக சமுதாயம் இந்த தாலிபான்களை/ஜிஹாதிகளை நோக்கி எடுக்கிறது.

முஹம்மது அரசர் கிடையாது. அவர் போர் புரியவில்லை, அவர் ஜிஹாது செய்தார். அந்த ஜிஹாதில் அந்தக் கால போர் தர்மங்கள் எதுவும் கடைப்பிடிக்கப் படவில்லை. குரானின் போதனைகள் அப்போதைய தர்மங்களை நிராகரித்து சூழ்ச்சியின் மூலமாக அப்பாவி பாகன் அரபிகளை அடிமைப் படுத்தியது. எனவே போர் தர்மம், அரசர் இப்படித்தான் நடந்து கொள்வார் என்றெல்லாம் சொல்லி, என்றைக்குமான கடவுளின் சட்டமாக இன்று வஹ்ஹாபிகள் முன்வைக்கும் இந்த அடிப்படைவாத மதக்கோட்பாடுகளை நியாயப்படுத்தக் கூடாது.

நேசகுமார்

Series Navigation

author

நேச குமார்

நேச குமார்

Similar Posts