இஸ்லாமிய ஆய்வும் எமது இறையுதிர் காலங்களும் – 5(2)

This entry is part [part not set] of 36 in the series 20090611_Issue

நேசகுமார்


பாகிஸ்தானில் ரவுடிகளும், முல்லாக்களும் மதம் மாற்றப்பட்ட பெண்கள் விஷயத்தில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை விவரிக்கும் பல கட்டுரைகளை இணையத்தில் பார்க்க முடியும். “When a Hindu is forced to become a Muslim, zealot Islamics gather at the shrines, chanting and singing and marching in the streets. Such a ruckus is made that if the young kidnapped girl appears in court, the fanatic Muslims yell, scream, throw rose petals into the air and follow the youth into the building so that she is so intimidated that she can hardly speak.” (http://www.americandaily.com/article/10362)

இதே போன்றதொரு நடத்தையை, உளப்பாங்கைத்தான் இது குறித்து புல்லரிக்கும் வஹ்ஹாபியும், நாகூர் ரூமியும் வெளிப்படுத்துகின்றனர். இது தனி நபர் உணர்வல்ல. ஒரு மனநோய். இது இஸ்லாமிய அடிப்படையுடன் சம்பந்தப்பட்டது. குரானில்(2), ஹதீஸ்களில்(3) முஹமது, பெண்களுக்காக தம்முடன் வந்து சேர்ந்து கொள்பவர்களுக்கு பெண்கள் தரப்படுவர் என்று சொல்வதால், முஹமதின் காலத்தில் முஸ்லீம்கள், மதம் மாறாத தமது சமூகத்தினரின் பெண்களை வலுக்கட்டாயமாக தூக்கிச் செல்வதையும், வன்புணர்வதையும் கடவுள் தமக்களிக்கும் வெகுமதியாக கருதினர். மத்திய காலங்களில் இந்தியாவிற்கு படையெடுத்து வந்த ஜிஹாதிகளின் கீழும், முதலில் ஜிஹாதிகளாக வந்து பின்பு மன்னர்களான முகமதியர்களின் ஆட்சியிலும் இது வழமையான ஒன்றாக இருந்தது. தமிழ்நாட்டில் படையெடுத்து வந்த முஸ்லீம்கள் இங்கே இருக்கும் பெண்கள் கருப்பாக, அழகற்றவர்களாக இருக்கின்றனர் என்று புலம்புவதை வரலாற்றாவணங்களில் காண முடியும். பஞ்சாபில் சீக்கியர்கள் இப்படி முஸ்லீம்கள் பெண்களை பிடித்து அடிமைகளாக ஈரானுக்கு கொண்டு செல்வதை தடுத்து, அவர்களை விடுவித்து மணமும் புரிந்துகொண்டு புதிய சமுதாயத்தை ஏற்படுத்தினர்.

ஓரளவுக்கு கிறிஸ்துவ, பவுத்த சமூகங்களில் இருப்பவர்கள் கூட இஸ்லாமிய அச்சுறுத்தல்களிலிருந்து தப்பிக்க முடியும். ஏனெனில், நிறுவனமயமான மதங்கள் அவை. எகிப்தில் ஒரு கோப்டிக் கிறிஸ்துவப் பெண் தானாக மதம் மாறினால் கூட, அங்கிருக்கும் இஸ்லாமிய அரசு சர்ச்சுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறது, அந்தப் பெண்ணை மதம் மாற்ற தயக்கம் காட்டுகிறது (http://world.mediamonitors.net/content/view/full/12223). ஆனால், இந்து சமூகத்தில் நிறுவனமயமான தன்மை இல்லை. இருந்த நிறுவனமயமான தன்மை ஜாதி முறைதான், அது இப்போது உடைந்துவிட்டது. மீண்டும் அதை உருவாக்கவோ, பலப்படுத்தவோ சமூகம் திரும்பவும் கற்காலத்திற்கு செல்லவேண்டும். இத்தனையாண்டுகால முன்னேற்றத்தில் உடைந்த சாதி அமைப்பை திரும்ப மீட்பது மீண்டும் மாட்டு வண்டியில் பயணிப்பது போல என்பதை கிட்டத்தட்ட ஒட்டு மொத்த சமூகமும் உணர்ந்து இருக்கிறது. சமயத்தில் ஜாதி முறையை ஆழ்ந்து கவனிக்கும்போது அது அப்படியே ஆபிரகாமிய மதங்களையொத்து இருப்பதாகக் கூட எனக்கு புலப்படுகிறது. ஒரு பிற்போக்குத்தனம்தான் இன்னொரு பிற்போக்குத்தனத்தை தடுத்து நிறுத்த வல்லதாக இருக்கிறது. இதுதான் இயற்கையின் நியதி போலும்.

இந்நிலையில், இந்துக்களில் பாதுகாப்பாக உணர்வது ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற இந்துத்துவ அமைப்புகளில் இருப்பவர்கள் தாம். அங்கேதான் இஸ்லாமிய அச்சுறுத்தல்களை தாங்குகிற, திருப்பித் தாக்குகிற வலு இருக்கிறது. அப்படியும் ஆர்.எஸ்.எஸ்காரர்கள் தெளிவாக தாங்கள் ஒரு கட்டத்தை மீறி வன்முறையை கையிலெடுக்க மாட்டோம் என்கிறார்கள். அப்படி எடுத்து அழிந்துபோன இயக்கங்களை, கேரளாவில் ஆர்.எஸ்.எஸ் கம்யூனிஸ்டுகளுடன் மோதி ஒட்டு மொத்த சக்தியும் அதிலேயே சென்று விட்டதை உதாரணமாகக் காட்டி, ஒட்டு மொத்த சமுதாயமும் முன் வந்தால் ஒழிய, எதுவும் செய்ய தாங்கள் தயாராக இல்லை என்று மறுக்கிறார்கள். அப்படியே இந்துத்துவ இயக்கங்களை சார்ந்து நிற்க முயன்றால், அதற்கு அங்கும் நமது சுய விமர்சனங்களை விட்டுவிட்டு ஒரு சட்டகத்தினுள்ளே வரவேண்டியிருக்கும். இப்படி ஒரு இக்கட்டான நிலையில் தான் இந்து சமூகம் இருக்கிறது இன்று. இதை வேறெவரையும் விட என்னால் முழுமையாக உணரவும் புரிந்து கொள்ளவும் முடிகிறது. நிறுவனமயமான மதங்கள் தொடுக்கும் தாக்குதலில் இருந்து தப்பிக்க இரண்டே வழிகள் தான் தென்படுகின்றன. ஒன்று, கற்காலத்திற்குப் போவது. இரண்டாவது நமது மனிதத்தை, சுய சிந்தனையை ஒரு நிறுவனத்திற்கு அடகுவைத்து தற்காத்துக் கொள்வது.

***

அவரது எல்லா புகழ்ச்சி வசனங்களையும் மீறி, கமலாதாஸ் இஸ்லாத்தை புகழ்ந்தது வேறு வழியில்லாமல் தான் என்று தோன்றுகிறது. இது உண்மையாக இருக்கலாம் அல்லது எனது, ஜெயமோகனின், தஸ்லீமா நஸ்ர் ரீனின், கோடானுகோடி நபர்களின் கற்பனையாகக் கூட இருக்கலாம். ஆனால், கமலா தாஸ் தொடர்ந்து பலரிடம் பொய் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. முதலில் தான் இனி சுரையா இல்லை மாதவிக்குட்டிதான் என்றார், பின்பு அச்சுறுத்தல்கள் வந்தவுடன் பல்டி அடித்தார். தஸ்லீமாவை வரவேற்று அவரிடம் தான் முஸ்லீமாக மாறியது குறித்து வருந்தினார். பின்பு தனது சமீப நூலை இஸ்லாமிய சமூகத்தின் அச்சுறுத்தல்கள் காரணமாக தள்ளி வந்து கனடாவில் வெளியிடுகிறேன் என்றார், இப்படி தொடர்ந்து அவர் தனது எதிர்ப்பை மறைமுகமாவது வெளிப்படுத்தினார்.

அவர் மனதிற்குள் கமலாதாஸாக இருந்தாரா அல்லது சுரையாவாக இருந்தாரா என்பது அல்லாஹ்வுக்கே வெளிச்சம். ஆனால், வெளி உலகிற்கு முஸ்லீமாகவே இருந்து மறைந்தார். இது உண்மை. வேறு வழியின்றி உள்ளே மாட்டிக்கொண்ட பிறகு, அதை நியாயப்படுத்திக்கொள்ள ஜகாதைப் பற்றியெல்லாம் சொல்லி கமலாதாஸ் தம்மை ஆறுதல் படுத்திக் கொண்டிருக்கக் கூடும். ஆயினும், கமலாதாஸின் செயல்பாடுகள் அவரது உள்ளத்தடுமாற்றத்தை, அடக்குமுறையை முழுவதும் ஏற்க முடியாத தன்மையை தெளிவாகக் காட்டுகின்றன. இதைப் போலவே பல சுரையாக்கள் முஸ்லீம் முஹல்லாக்களுக்குள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை. மதம் இத்தனை அடக்குமுறைகளையும் மீறி பெண்களை முழுமையாக அடக்கிவிட முடியவில்லை. ஆண்களுக்கு இல்லாத தைரியம், துணிச்சல் இப்படி பல இஸ்லாமிய பெண்களுக்கு இருக்கிறது. தெருவுக்கு தெரு தஸ்லீமாக்கள், சுரையாக்கள், சல்மாக்கள், வாஃபா சுல்தான்கள், ஹிர்ஸி அலிகள் இருக்கின்றார்கள். பொது சமூகம் இவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதைப் பொறுத்தே இவர்கள் வெளிப்படையாக தங்கள் உள்ளக் கிடக்கையை வெளிப்படுத்த முடியும்.

நேசகுமார்

http://islaamicinfo.blogspot.com
http://nesamudan.blogspot.com

—-

குறிப்பு:

(1) மேலே சுட்டியுள்ள மரியானா பாபரின் கட்டுரையில், அவர் நேர்முகம் காணும் பீர் இவ்வாறு சொல்கிறார்,”In many cases Hindu girls are kidnapped and kept as keeps. But these keeps are not converted. But believe me, they are very happy.”

இதற்குப் பின்னாலும் முஹமதின் சுன்னாஹ் இருக்கிறது. முஹமது ஜிஹாதில் பிடிக்கப்பட்ட மாற்று மதத்தவர்களின் மனைவியரை, மகள்களை, அவர்கள் முஸ்லீமாக மாறவில்லை என்றால், அடிமையாக வைத்துக் கொண்டார். ரைஹானா என்ற யூதப்பெண்ணின் தந்தையையும், சகோதரர்களையும் கொன்ற பிறகு அப்பெண்ணை முஹமது பிடித்து அடிமையாக வைத்துக்கொண்டார். மதம் மாறாத காரணத்தினால் சாகும் வரை அப்பெண் அடிமையாகவே இருந்து இறந்தாள்.

அடிமைகளுடன் அவர்களது விருப்பத்தையும் மீறி உறவு கொள்வதை இஸ்லாம் அனுமதிக்கின்றது. முஹமது, அவரது மருமகன் அலி ஆகியோர் இவ்வாறு அடிமைப்பெண்களுடன் உறவு வைத்துக்கொண்டதை இஸ்லாமிய வரலாற்றிலும் பார்க்க முடிகிறது. முஹமது தன்னுடைய கோப்டிக் கிறிஸ்துவ அடிமை மிரியத்துடன் உறவு வைத்துக்கொண்டார், ரைஹானா என்ற யூதப்பெண்ணை அடிமையாக வைத்துக்கொண்டார். அலி முஹமதுவே கடவுளினால் மனித குலத்துக்கு அனுப்பப்பட்ட அழகிய முன்னுதாரணம் என்ற (குரான் வசனம்) நம்பிக்கையினால், இந்த செயல்களை எல்லாம் முஸ்லீம்கள் கடவுளால் அனுமதிக்கப்பட்டவை என்று நம்பி எவ்வித குற்றவுணர்ச்சியும் இல்லாமல் இருக்கின்றனர்.

Series Navigation

author

நேச குமார்

நேச குமார்

Similar Posts