ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 1

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

கே. வி. ராமகிருஷ்ண ராவ்



சமகால நிகழ்ச்சிகளாகயிருப்பினும், மக்கள் பலவற்றை மறந்து விடுகின்றனர். பல இந்தியத் தலைவர்கள், வேறுபட்ட பின்னணியில் இருந்தாலும், அவர்கள் சந்தித்தது, செயல்பட்டது முதலியன வியப்பாக இருக்கலாம், ஆனால் அவை உண்மையில் நிகழ்ந்துள்ளன. பீமாராவ் ராம்ஜி அம்பேத்கார் (1891-1956), மொஹம்மது அலி ஜின்னா (1876-1948) மற்றும் ஈரோடு வேங்கடப்ப ராமசாமி நாயக்கர் (1879-1973) [இனி இவர்கள் பெயர்கள் ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் எனக்குறிப்பிடப்படும்] இவர்களின் சந்திப்பு ஜனவரி 8, 1940ல் பம்பாயில் நிகழ்ந்தது . இவர்கள் முன்பு ஒருவரையொருவர் சந்தித்ததில்லையன்பதில்லை. பெரியார் அம்பேத்காரை மும்முறை பம்பாயிலும் 06-04-40, 07-04-40 மற்றும் 08-04-40, சென்னையில் 21-09-44, ரங்கூனில் 03-12-54 எனவும், ஜின்னாவை நான்கு முறை பம்பாயிலும், இருமுறை சென்னையிலும், ஒருமுறை தில்லியிலும் சந்தித்துள்ளார். அம்பேத்காரும் ஜின்னாவும் பாம்பேயிலியே இருந்ததால், பலமுறை சந்தித்துள்ளனர் . இச்சந்திப்பு, நன்கு தெரிந்தது போல இருந்தாலும், இன்னும் பலருக்குத் தெரியாமல் இருக்கிறது . சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சூழ்நிலைகளில் அவர்களது சந்திப்பு மிகவும் ஆச்சரியமாகவும், விவரமுள்ளதாகவும் முக்கியமனதாகவும் அக்காலக்கட்டத்தில் விளங்குகின்றது. 1929ற்கு பிறகு, நாடு பொருளாதார பிரச்சினையுடன் தடுமாற்றத்துடன் இருக்கும் பொழுது, இந்திய அரசியல், நாட்டுப்பற்று மற்றும் சுதந்திர போராட்ட அமைப்புகளுடன் உத்வேகம் ஊட்டப்பட்டிருந்தது. ஒரு சுதந்திர இந்தியாவை நினைத்துப் பார்க்கும்பொழுது, அதனுடன் பிணைந்திருக்கும் பிரச்சினைகளும் அவர்களது முன்பு எழுந்தன. மக்கள் பல காரணிகளால் பிளவுப் பட்டிருந்தது போல, தலைவரர்களும் சித்தாந்த-குழப்பங்களினால் பிளவுப் பட்டிருத்தனர். படித்த மேனாட்டு அரசியல் முறைகளை அறிந்து, அவை எந்த அளவிற்கு இந்திய சூழ்நிலைகளுக்கு ஒத்துப்போகும் என்று ஆயும்பொழுது, மக்கள் பலவித சமூக-பொருளாதார-அரசியல் நிகழ்வுகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

“ஆங்கிலேயருக்குப்பின்பு இந்தியாவை யார் ஆளவேண்டும்?” என்ற வினா எழுந்தபோது, அத்தகைய சித்தாந்தகளினால் மக்கள் வேறுபடநேர்ந்தது. அரசியல் தலைவர்களது ஆசைகள்-விருப்பங்கள் வெகுஜன மக்களின் நிலையை பாதிக்கும் முறையில் இருக்கவும் செய்தன. அத்தகைய நிலையில், தமது பேராசைகளுக்கு-லட்சியங்களுக்த் துணைப்போக மக்களை அவர்களது மென்மையான உணர்வுகள் மற்றும் உணர்வுப்பூர்வமாகவுள்ள பிரச்சினைகளைத் தூண்டிவிட்டு, இயக்கரீதியில் செயல்பட்டனர். இத்தகைய சூழ்நிலையில், ஆராய்ச்சியாளர்கள் அத்தகைய பிரச்சினையை அலசத் தயங்கியுள்ளது அல்லது அறவே தவிர்த்துள்ளனர் எனத்தெரிகிறது. ஆகவே, அந்த மூன்று தலைவர்கள் சந்தித்தது, உரையாடியது, தீர்மானித்தது, செயல்பட்டது அதன் விளைவுகள் முதலியனப்பற்றி இவ்வாய்வுக்கட்டுரையில் விவாதிக்கப்படுகிறது.

சந்திப்பின் பின்னணி மற்றும் ஏற்பாடுகள்: இந்தியாவின் பல பகுதிகளில் பிராமணரல்லாத இயக்கங்கள் 1920களில், குறிப்பாக தென்னகத்தில், ஆரம்பிக்கப்பட்டபோது சில பிராமணரல்லாதவர், முகமதியர் மற்ற தலைவர்கள், சித்தாந்தரீதியில், ஒரு கூட்டணியை தம்முள் உருவாக்கலாம் என தீர்மானித்தனர். அத்தகைய மாற்றங்களில் மதத்தில் ஈடுபாடற்ற, படித்த மேனாட்டு நாகரிகத்தில் ஊறிய ஜின்னா, மதரீதியில் செயல்பட ஆரம்பித்தார். அம்பேத்காரும் மேனாட்டு நாகரிகத்தில் ஈடுபாடுக்கொண்டிருந்தாலும், முதலில் மஹர் என்ற தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போராட ஆரம்பித்து, சிறிது-சிறிதாக முகமதியர்-சித்தாந்தத்திற்கு ஆதரவாக தமது கருத்துகளை வெளிட ஆரம்பித்தார். திராவிட இயக்கமும் பிராமணரல்லாதவர்களின் நலன்களுக்கு மற்றும் அவர்களது மேம்பாட்டிற்கு ஆரம்பித்தாலும், பிறகு பெரியாரின் கொள்கைகளுடன், இந்துக்களுக்கு எதிராக மாறியது. பல நீதிகட்சி தலைவர்கள் முகமதியர் நலன்களுக்கு ஆதரவாக இருந்தாலும், இந்து-எதிர்ப்பு நிலையை வெறுத்தனர் என்பதனை இங்கு நோக்கத் தக்கது . இருப்பினும், பெரியாரைப் பின்பற்றுபவர்கள், முகமதியர்களுக்கிடையே இருந்த தொடர்புகள் 1930-40களுள் நன்றாகவே வளர்ந்தன. ஜின்னா, முகமது இஸ்மாயில் என்பவரை சென்னை மாகாணத்தின் முஸ்லீம் லீக் கட்சியைத் தொடங்கப்பணித்து, அவர் 1936ல் அதற்கு தலைவராகவும் ஆக்கினார். சென்னையில் 1938ல், முஸ்லீம் லீக் கட்சித் தொடங்கியதுடன், பெரியார் ஜின்னவை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம். பெரியாரின் முகமதியத்தலைவர்களுடான தொடர்புகள் 1920களிலேயேத் தொடர்கின்றன. மூன்றாவது மஜிலிஸ்ஸுல் உலேமா மாநாடு ஈரோட்டில் நடந்தபோது, மௌலானா முஹம்மது அலி, ஹக்கிம் அகமது கான், ஷௌதிர்கலி குஸ்ஸமான் முதலிய மதத்தலைவர்கள் பங்குகொண்டனர், மற்றும் அவைகள் பெரியாரின் வீட்டிலேயேத்தங்கினர் . அலி சகோதரர்களை, பெரியார் தமது தாயார், மனைவிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கும் போது, “இந்த உலகமே காந்தியுடன் இருக்கும்போழுது, அந்த மஹாத்மாவோ, இந்த மௌலானா முஹம்மது அலியின் சட்டைப்பையில் இருக்கிறார்”, என்று சொன்னார்! பெரியார், இஸ்மாயில் சித்தாந்தரீதியில் வேறுபட்டிருந்தாலும் 1920லிருந்து ஒன்றாகயிருந்து, வேலை செய்துள்ளனர், அரசியல் பேசியுள்ளனர் மற்றும் நண்பர்களாகவும் இருந்து வந்துள்ளனர். இவர், முஸ்லீம் லீக் கட்சிக் கூட்டங்களில் பங்கு கொண்டது மட்டுமல்லாது, அவர்களது மீலாது நபி, ரம்ஜான் பண்டிகை-விழாக்களிலும் கலந்துகொண்டுள்ளார்.

அம்பேத்கர் பம்பாயிலேயே இருந்ததால், அவரையும் சந்திக்க ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஜின்னா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்திலிருந்து “விடுபடும் நாள்” என முகமதியர் தீர்மானித்தது, இந்த மூவர்-சந்திப்பின், ஒரு முன்னேற்பாடே எனத்தெரிகிறது:

“காங்கிரஸை சாராத பல ஹிந்துக்கள் மற்றும் நீதிகட்சி தலைவர்கள், செட்யூல்ட் சாதியினர், பாரசீகர் முதலியோரும், “விடுபடும் நாள்” என்ற எங்களது கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர் என்பது உண்மை.”

ஜின்னா, ஜனவரி 1, 1940 அன்று இவ்வாறு எழுதுகின்றார், 9வது தேதி, பெரியார், அம்பேத்கார் முதலியோரைச் சந்திக்கின்றார். பெரியார் “திராவிட நாட்டிற்கான” பிரிவு கோரிக்ககையை திசம்பர் 1938ல் நடந்த 14வது S.I.L.Fன் மாநாட்டில் முன்வைத்தார்! பிறகு, 1939ல் சர் ஸ்டஃபோர்ட் கிரிப்ஸை சந்தித்தபோது, “திராவிடத் தனிநாடு” கோரினார். அப்பொது அவருடன் இருந்தவர்கள்: சர் முத்தையாச் செட்டியார், என். எஸ். சாமியப்ப முதலியார், W. P. A. சவுந்திரப்பாண்டியன் . அதற்கான தீர்மானம் 1940ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால், வேடிக்கையென்னவென்றால் முஸ்லீம் லீக் 1942ல் கிரிப்ஸின் உத்தேசத்தை ஒப்புக்கொள்ளவில்லை.

அம்பேட்கர் மற்றும் பெரியார் 1939ல் “விடுபடும் நாளை” ஆதரித்தது: ஜின்னா டிசம்பர் 22, 1939 நாளை “விடுபடும் நாளாக” (the Day of Deliverance) – அதாவது எல்லா காங்கிரஸ் அரசாங்கங்களும் தொலைந்தன, முஸ்லீகள் விடுதலை அடைந்தனர் என்ற ரீதியில், முகமதியர்களை அனுசரிக்கச் சொன்னார். ஆனால், காங்கிரஸோ “பாராளுமன்ற கூடுதல்” என்ற எண்ணத்தை பிரபலமாக்கி, பாம்பேயில் ஜின்னா, நேருவை சந்திப்பார் என எதிர்ப்பார்த்திருந்தனர் . அம்பேத்கர், முஸ்லீம் லீக் ஏற்பாடு செய்த கூட்டத்தில் பங்கு கொண்டு ஆதரவாக பேசினார். சர் கரீம்பாய் இப்ராஹிம் தீர்மானத்தை டிசம்பர் 22, 1939 அன்று முன்மொழிந்தபோது, அம்பேட்கர் வழிபொழிந்தார். அம்பேட்கர் ஜின்னா பெந்தியர்கர் என்ற இடத்தில் நடந்த ஒரு பொதுகூட்டத்தில் சந்தித்துக்கொண்டு ஒருவரைஒருவர் கைகுலுக்கிக்கொண்டனர் என்பதுதான் அன்று முதல் செய்தியாக இருந்தது. பெரியாரும் தமது கட்சி மற்றும் எல்லா திராவிடர்களும் அந்த நாளை “காங்கிரஸிலமிருந்து இந்த நாடு விடுதலைப் பெற்ற நாளாக…………….பெருமளவில் கொண்டாட…………….” அழைப்பு விடுத்தார். உடனே, மேற்குறிப்பிட்டபடி, ஜனவரி 1, 1940 அன்று ஜின்னா காந்திக்கு எழுதுகிறார்: “காங்கிரஸை சாராத பல ஹிந்துக்கள் மற்றும் நீதிகட்சி தலைவர்கள், செட்யூல்ட் சாதியினர், பாரசீகர் முதலியோரும், “விடுபடும் நாள்” என்ற எங்களது கோரிக்கைக்கு ஆதரவு அளித்தனர் என்பது உண்மை.” ஆகவே அவர், அதற்குப் பிறகு பெரியார் அம்பேட்கரை சந்திப்பார் என்பது, நன்கே தெரிந்திருந்தது, என தெளிவாகிறது!

ஜனவரி 8, 1940 ஜின்னா, அம்பேட்கர், பெரியார் சந்திப்பு: சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த, மூவர் – ஜின்னா, அம்பேட்கர், பெரியார் சந்திப்பு ஜனவரி 8, 1940 அன்று நிகழ்ந்தது. மேற் குறிப்பிடப்பட்ட சம்பவங்களிலிருந்து, இத்தலைவர்கள் நேரிடையாகவும், தங்கள் நண்பர்கள் மூலமாகவும் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருப்பர் எனத் தெரிகிறது. ஜனவரி 5, 1940 அன்று காலை, பெரியார் பம்பாயின் பிராமணரல்லாத குடிமகன்களின் அழைப்பை ஏற்று, பம்பாயிற்குப் புறப்பட்டு செல்கிறார். அவருடன், நீதிபதி டி.ஏ.வி.நாதன், பி.பாலசுப்ரமணியம், “சண்டே அப்ஸர்வர்” பத்திக்கையாசிரியர் (நீதிகட்சி சார்புடையது), சி.என்.அண்ணாதுரை, நீதிகட்சியின் பொதுசெயலாளர், டி.பி.என்.பொன்னப்பன், சி.பஞ்சாக்சரம் முதலியோரும் சென்றனர். குமரராஜா முத்தைய்யச் செட்டியார், கலிஃபுல்லா முதலியோர் வழியனுப்பி வைத்தனர். 06-01-40 பத்து மணிக்கு தாதர் ஸ்டேசனை அடைந்ததும், அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட குதிரை-கோட்சு வண்டியில் அழைத்துச்செல்லப்பட்டனர். மாலையில், அம்பேட்கர் இல்லத்தில் அவருடன் பல சமூக-அரசியல் பிரச்சினைகளை மணி 9 முதல் 10,30 வரை பேசி விவாதித்தனர்.

07-01-40 அன்று, அம்பேட்கர், கோகலே கல்வி நிலையத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததுடன், இரவு உணவையும் ஏற்பாடு செய்தார். எஸ்.சி.ஜோஸி, M.L.C., ஆர்.ஆர். போலே, M.L.A., டி.ஜி.ஜாதவ், M.L.A., முதலியோர் வந்திருந்தனர். அம்பேட்கர், விருந்தினரை அனைவருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.

08-01-40 அன்று, அவர்கள் ஜின்னாவின் இல்லத்தில் சந்தித்து, நடப்பு அரசியல் போக்குகளை மாலை 5.30 முதல் 8.30 வரை விவாதித்தனர். டி.ஏ.வி.நாதன், பி.பாலசுப்ரமணியம், கே.எம்.பாலசுப்ரமணியம் முதலியோர் இருந்தனர். காங்கிரஸ்-அல்லாத கட்சிகளின், காங்கிரஸ்-எதிர்ப்பு நடவடிக்கைகளைப் பற்றி கீழ்கண்டவாறு விவாதிக்கப் பட்டது:

1. காங்கிரஸிலேயே பிராமணரல்லாத ஒரு எதிர்ப்பு குழுவை ஏற்படுத்த உள்ள சாத்தியக்கூறுகள்.
2. முகமதியர், செட்யூல்ட்-சாதியினர், பிராமணரல்லாதவர், காங்கிரஸை விட்டு வெளியேறி கங்கிரஸ்-அல்லாத கட்சிகளில் சேரத்தூண்டுவது.
3. காங்கிரஸ் அல்லாத கட்சிகள் காங்கிரஸுக்கு எதிராக ஒருமித்து செயல்படுவது.
4. இந்தி-எதிர்ப்பு போராட்டம்.
5. காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்களை எல்லா விதத்திலும் தர்மசங்கடத்தில் ஆழ்த்துவது.
6. முகமதியர், பிராமணரல்லாதவர், ஒடுக்கப்பட்ட-பிரிவினர் ஒன்றாக சேர்ந்து செயல்பதுவது.
7. மஹர், முகமதியர் மற்றும் திராவிடர்களுக்கு தனிநாடு கேட்பது.
8. பிரிடிஸ்/ஆங்கிலேய-அரசாங்கத்திடம் அவ்வாறே விண்ணப்பம் செய்வது.

பிறகு, கீழ்கண்டவாறு மூவரும் தீர்மானித்தனர்:

1. ஜின்னாவும், அம்பேட்கரும் ஏப்ரல் அல்லது மே 1940ல் தமிழ் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து “திராவிட நாடு” கோரிக்கையை ஆதரித்து பேசுவது (ஏ.பொன்னம்பலம் கூற்றுப்படி).
2. பெரியார் மறுபடியும் பம்பாயிற்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
3. பெரியார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முகமதியர்-நலன்களுக்கு ஒன்றாக சேர்ந்து செயல்படுவது, அவர்களை ஆதரிப்பது.
4. அம்பேட்கரும் முகமதிய-நலனுக்கு ஆதரவாக இருப்பார்.
5. எல்லோரும் சேர்ந்து காங்கிரஸுக்கு பெருமளவில் பிரச்சினைகளை கிளப்புவது-ஏற்படுத்துவது.
6. ஆங்கிலேயரிடம் அவ்வாறே முறையிட்டு, அதிகாரம் காங்கிரஸிடம் மட்டும் இருக்கக்கூடாது என வற்ப்புறுத்துதல்.

09-01-40 அன்று அம்பேட்கர், பெரியாருக்கு இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார். அதில், கீழ்கண்டவர் பங்குகொண்டனர்:

• ஜெகல், “செந்தினல்” பத்திரிக்கை நிருபர்.
• ராவ், “டைம்ஸ் ஆஃப் இந்தியா”வின் பிரதான நிருபர்
• பல்ஸாரர், ஒரு பத்திரிக்கையாளர்
• பி.என்.ராஜ் போஜ்
• முத்தைய்யா முதலியார், முந்தைய சென்னை மந்திரி.
• சொக்கலிங்கம், வக்கீல், மற்றும் அவரது மகன்
• மற்றும் பலர்

ராத்திரி 11 மணிக்கு கூட்டம் முடிந்தது. என்ன விவாதிக்கப்பட்டது என்பது பற்றி முழு விவரங்கள் தெரியவில்லை என்றாலும், அவைகளது கூட்டம் மற்றும் எடுத்த தீர்மானங்கள் இந்திய அரசியலில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது எனலாம். ஏனெனில், அன்றிலிருந்து மூன்றே மாதங்களில் “பாகிஸ்தான்” என்ற தனி நாடு கோரிக்கைத் தீர்மானம் அகில இந்திய முஸ்லிம் லீக் மாநாட்டில், லாகூரில் மார்ச் 25, 1940 அன்று, நிறைவேற்றப்பட்டது (பின்னிணைப்பு-1 பார்க்கவும்). ஏழே மாதங்களில், “திராவிடஸ்தான்” கோரிக்கைத் தீர்மானம் ஆகஸ்டு 1940ல் திருவாரூர் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது .

லாகூர் தீர்மானத்திற்குப் பிறகு, நீதிக்கட்சி, முஸ்லீம் லீக் இடையிலான உறவின் நெருக்கம் மேலும் கூடியது. மதுரையில் மார்ச் 1940ல் நடந்த ஒரு இரு-கட்சி சேர்ந்த கூட்டத்தில், “திராவிடஸ்தான்” உருவாக்க ஜின்னாவின் உதவி பெறப்படும் என்றும், அதற்காக “ஜின்னா பெரியாருக்கு அவ்வாறு வாக்குக் கொடுத்தார்” எனவும் கூறப்பட்டது . இவ்வாறு, இருவரும் நல்ல உறவை வைத்திருந்தனர்.

பெரியார் ஜின்னாவை 1941ல் சென்னையில் சந்திக்கிறார்: முஸ்லிம் லீக்கின் 28வது வருடாந்திர கூட்டம் ஏப்ரல் 11, 1941ல் சென்னையில் “மக்கள் பூங்கா” என்ற இடத்தில் நடந்தது. ஜின்னா பம்பாயிலிருந்து, கூட்டத்தின் துவக்க விழாவிற்கு வந்திருந்தார். ஜின்னாவும், பெரியாரும் மேடையில் இருந்தனர். மற்றவர்கள் – ஆர்,கே.சண்முகம் செட்டி (கொச்சினுடைய திவான்), கே.வி.ரெட்டி, எம்.ஏ.முத்தைய்யா செட்டி, சீ.ஆர்.ஸ்ரீநிவாசன் (சுதேசமித்திரனின் ஆசிரியர்), எம்.சி.ராஜா, என்.சிவராஜ், சர்.ஏ.பி,பட்ரோ, முதலியோரும் மேடையில் இருந்தனர். ஜின்னாவும், அவரது தோழர்களும் வெளிப்படையாக தென்னிந்தியாவில் மற்றொரு சுதந்திர நாட்டை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்தனர். ஜின்னா இங்கு, மூன்றாவதாக, மற்றொரு நாட்டையும் முன் வைக்கிறார் : “இந்தத் துணைக்கண்டத்தில் இரு சமூகங்கள் உள்ளன: ஒன்று முஸ்லீம் சமூகம் மற்றது இந்து சமூகம், இருப்பினும், இந்த இடத்தில், மற்றொரு நாடுள்ளது, அது “திராவிடஸ்தான்” ஆகும். அப்பகுதியைச் சேர்ந்த 3% மக்கள் தேர்தலில் 3% பெற்று பெரும்பான்மை பெறவேண்டும். இது ஜனநாயகமா அல்லது மாயையா, எனத் தெரியவில்லை. ஆகையால், எனக்கு அவர்களிடத்தில் முழுமையான அனுதாபம் உள்ளது, மற்றும் எனது ஆதரவு அந்த பிராமணரல்லாதவருக்கு உண்டு. நான் ஒன்று அவர்களுக்குச் சொல்கிறேன்: “தாங்கள் உங்களுடைய வாழ்க்கையில் முன்னேறி வரவேண்டுமெறால், தங்களுக்குள்ள ஒரே வழி தங்களது கலச்சாரம், மொழி என்ற ரீதியில் செல்வதுதான்”.” இந்த விதமாக, ஜின்னா, “மூன்று-நாடு-சித்தாந்தத்தை”, மூன்று நாடுகளை– ஹிந்துஸ்தானம், பாகிஸ்தானம், திராவிடஸ்தானம் முறையே ஹிந்துக்கள், முஸ்லீம்கள் மற்றும் திராவிடர்களுக்கு முன் வைக்கிறார். இவ்வாறு சொல்லும்போது, மஹர்கள் மற்றும் செட்யூல்ட் சாதி மக்களை ஒதுக்கி விடுவதோடு, மறந்தும் விடுகிறார்! உண்மையில், முஸ்லீம்களுக்காக தனி நாடு கேட்டு, ஆங்லிலேயரிடத்தே “இருநாட்டு” சித்தாந்தத்தை முன் வைக்கிறாரேத் தவிர, “மூன்று நாடு” அல்லது “நான்கு நாடு” சித்தாந்தத்தையல்ல! (செட்யூல்ட் சாதி மக்களையும் செர்த்து சொல்வதானால்). இந்த “பல நாட்டு” சித்தாந்தக்கொள்கை, லெனின் மற்றும் ரோசாலக்ஸம்பர்க் முதலியோரால் விவாதிக்கப்பட்டது, உருவாக்கப்பட்டது ஆகும்.

பெரியார் ஜின்னாவை 1941ல் சென்னையில் மறுபடியும் சந்திக்கிறார் (?): ஜின்னாவினுடைய ஆகஸ்டு 17, 1944 தேதியிட்ட கடிதத்தின் படி (பின் சேர்க்கை-3, பார்க்கவும்) பெரியார் இவரை சென்னையில் இருமுறைச் சந்தித்து உரையாடியுள்ளார்கள். ஜின்னா பெரியாரிடம் மிகவும் தெளிவாக கூறியுள்ளதாவது , “தான் “திராவிடஸ்தானத்தை” கொள்கை ரீதியில் ஆதரிப்பதாகவும், திராவிடர்தாம் அதற்கு பாடுபடடேண்டும் என்றும், தான் ஒரு முஸ்லீம் என்பதினால், தான் முஸ்லீம் நலத்திற்காகத்தான் வேலை செய்ய முடியுமேத் தவிர, முஸ்லீம்-அல்லாதவர்களுக்கு வேலை செய்ய முடியாது”. பிறகு தனது கடிதத்தில் இதை வெளிப்படையாகவே குறிப்பிடுகிறார்.

பெரியார் ஜின்னாவை 1942ல் (?) தில்லியில் சந்திக்கிறார்: பெரியார் ஜின்னாவை தில்லியில் சந்தித்து பாகிஸ்தான்-திராவிடஸ்தான் பற்றி விவாதித்ததாகத் தெரிகிறது. அப்பொழுது, ஜின்னா, தான் முஸ்லிம்-அல்லாதொருக்காக போராட முடியாது என்று திட்டவட்டமாகக் கூறியிருக்கவேண்டும். பெரியாரும், எப்படி தாங்கள் இந்துக்களிலிருந்து வேறுபட்டவர்கள் என்று தமது சித்தாந்தத்தை விளக்கியிருக்கக்கூடும் . தனது பேச்சுகள், எழுத்துகள் முதலியவற்றை ஆதாரங்களாக எடுத்துக்காட்டியிருக்கலாம். ஆனால், உலேமாக்களின் ஆணைக்குக் கட்டுப்பட்டு திராவிட அரசியலிலிருந்து ஒதுங்கத் தீர்மானித்து இருக்கலாம். இங்கு குறிப்பிட வேண்டியது என்னவென்றால், காந்தியின் தலைமையில் முகமதியர்கள் வேலை செய்வதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஏனெனில், மாற்றுமதத்தினர்-முகமதியரல்லாதவர், “காஃபிர்கள்” ஆவார்கள், குரானின் படி, முகமதியர் அவர்களுடன் எந்த சம்பந்தமும் வைத்துக்கொள்ளக்கூடாது. அவர்கள், மிகவும் கீழ்நிலையிலுள்ள அல்லது மோசமான ஒரு முகமதியனை விட மிகவும் தாழ்ந்தவர்கள், கேவலமானவர்கள். பெரியார் இதனைப் புரிந்துகொண்டாரா இல்லையா எனத்தெரியவில்லை.

Series Navigation

author

கே. வி. ராமகிருஷ்ண ராவ்

கே. வி. ராமகிருஷ்ண ராவ்

Similar Posts