ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 3

This entry is part [part not set] of 42 in the series 20090115_Issue

கே. வி. ராமகிருஷ்ண ராவ்


ஏன் “மஹர்ஸ்தான்” / “பௌத்தஸ்தான்” அடைய முடியவில்லை? முன்னமே குறிப்பிட்டபடி, பூனா ஒப்பந்தம், தாழ்த்தப் பட்டவர்களுக்கு தனி நாடு என்ற சித்தாந்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தது, அது அம்பேட்கரின் அரசியல் எதிகாலத்தையும் தடுத்தது. தனது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் சித்தாந்தங்கள் அத்தகைய தனி-நாடு கொள்கைக்கு ஒத்து வரவில்லை. அவர் தமது வெளியிட்ட வரைபடத்தில், பாகிஸ்தான் மற்றும் இந்துஸ்தான் இடம் பெற்றிருந்தனவேத் தவிர, திராவிடஸ்தான், பௌத்தஸ்தான்கள் இடம் பெறவில்லை. மதரீதியில் கோரிக்கை வைக்க, பௌத்தர்களின் எண்ணிக்கையை உயர்த்த ஒருவேளை, தான் பௌத்ததில் சேர முடிவு செய்திருக்கலாம். 1956ல், பௌதத்திற்கு மாறிய உடனே, அம்பேட்கர் காலமனார். அவராலும், எந்த மாநிலத்தில் “பௌத்தர்கள் / செட்யூல்ட்” மக்கள் அதிகமாக இருந்ததற்கான அத்தாட்சிகளைக் கொடுக்க முடியவில்லை.

தேசிய அளவில் அரசியல் ரீதியில் அவர்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டத்தன்மை: அம்பேட்கர் 1941லேயே தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் அங்கதினராக நியமிக்கப்பட்டார். பிறகு வைஸிராய் கவுன்சிலில் சேர்ந்து, தொழிலாளர் துறையை ஜூலை 20, 1942ல் ஏற்றுக்கொண்டார். ஆகவே ஆங்கில அரசாங்கத்தின் தொழிலாளர் துறையை எற்றுக்கொண்ட இவர், சுதந்திரத்திற்கு 1947ல் பிறகு சட்ட மந்திரியானார்.

ஜின்னா, பாகிஸ்தானிற்கு உழைத்து, அதனை அடைந்தவுடன், 1947ல் ஜனதிபதியானார்! ஆனால் பெரியாரோ ஆகஸ்டு 15, 1947ஐ “துக்க நாள்” என அறிவித்தார்! ஆகவே, பெரியார் தனிமைப் படுத்தப்பட்டார் எனத்தெரிகிறது. ஜஸ்டிஸ் கட்சி தலைவர்கள், ஆங்கிலேயரிடத்தில் விசுவாசமாக இருந்ததால், அவர்கள் மாநில அளவில் பதவி பெற்றனர். மேலும், ஆங்லிலேயர் பிரச்சினை என்று வந்தபோது, காந்தி, ஜின்னா, அம்பேட்கர் இவர்களுடன் அந்தந்த குழுமங்களின் தலைவர்கள் அல்லது பிரதிநிதிகள் என்ற முறையில் பேச்சு வார்த்தைகள் நடத்தினர். ஆனால், பெரியார் அந்த நிலையில் இல்லை. திராவிடர், திராவிட இனம், திராவிடஸ்தான் என்றெல்லாம் பேசி வந்தாலும், தென்னிந்தியாவை முழுவதுமாகக் அவரால் கவர முடியவில்லை, மற்றும் தமிழ்நாட்டிலேயே அதற்கான ஆதரவையும் பெற முடியவில்லை.

மேலும் பெரியாரால் தேசிய அளவில் ஏற்படுகின்ற அரசியல் மாற்றங்களுடன் ஈடுகொடுத்து, மற்றத் தலைவர்களைப்போல தேசிய நீரோட்டத்துடன், செல்ல முடியவில்லை. அவர் எப்பொழுதும் மற்றவரை எதிர்த்தும் அல்லது விமர்சனம் செய்தும் வந்துள்ளார். அவரது வட-இந்தியர்-எதிர்ப்பு, இந்தி-எதிர்ப்பு, இந்துமதம்-எதிர்ப்பு முதலியன, நிச்சயமாகத் அவரை தனிமைப் படுத்தின. ஒரு காலகட்டத்தில் ஹிந்து மஹாசபையும், கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸின் வலது மற்றும் இடது இறக்கைகள் என்று விமர்சனித்து கம்யூனிஸ்டுகளின் கோபத்திற்குள்ளானார் . திமுக தோன்றிய பிறகு, அவரது அரசியல் லட்சியங்கள் முடிவிற்கு வந்தன எனலாம்.

முடிவுரை: மூவரின் சந்திப்பும், அவர்களது விவாதங்களும், எடுத்தத் தீர்மானங்களும், செயல்பட்ட முறைகளும், அவை இந்திய மக்கள், நாடு இவற்றின் மீது ஏற்பட்ட நேர்முக, மறைமுக தாக்கங்கள், மாறுதல்கள் இவ்வாறாக இருந்தன. மொத்த அளவில் அவர்கள் அத்தகைய சந்திப்புகளினால் என்ன சாதித்தனர் என்பது, அவர்கள் அடைந்த முடிவுகளே காட்டுகின்றன, ஏனெனில் ஒவ்வொருவரும் தம்முடைய சித்தாந்தங்களை அரசியல் சூழ்நிலைகளுக்கேற்றபடி மாற்றிக்கொண்டது அல்லது சந்தர்ப்பத்திற்கேற்றபடி நீர்த்ததுபோலத் தோன்றினாலும், தங்களது நிலையினை விட்டுக் கொடுக்கவில்லை என நன்றாகவேத் தெரிகின்றது. நிச்சயமாக இம்மூவர் கூட்டணியில், தனியாக செயல்பட்டு தன்னுடைய மக்களுக்கு-முகமதியருக்குத் தனிநாடு கிடைக்கச் செய்தது ஜின்னாவேயாகும். இந்த விஷயத்தில், இவர் மற்ற இருவரையும் நன்றாகவே பயன் படுத்திக் கொண்டுள்ளது தெரிகின்றது. அம்பேட்கர் அவரது “முஸ்லீம்-மனதை”ப் புரிந்து கொண்டது மாதிரி, பெரியார் அவரைப் புரிந்து கொள்ளவில்லை அல்லது எதோ ஒரு காரணத்திற்காக புரிந்து கொண்டும், தம்மக்கள் நலத்தை விட, முஸ்லீம்களுக்கு ஆதாரவாக பேசி-எழுதியது, தொடர்ந்து அவர்களை ஆதரித்து வந்தது புதிராகவே உள்ளது. அம்பேட்கர் அரசியல் ரீதியில் தான் ஜின்னா-போலவோ, காந்தி-மாதிரியோ மக்கள் நாயகனாக வரமுடியாது என்று அறிந்ததும், ஆங்லிலேயர் மற்றும் சுதந்திரத்திற்கு பிறகு காங்கிரஸ் ஆட்சிகளில் மந்திரி பொறுப்பில் இருந்து செயல்பட்டார். ஒருவேளை ஜின்னா போலவே “தனி மதம்-தனி நாடு” என்ற கொள்கை ரீதியில், திடீரென்று பௌத்தத்திற்கு மாறினாரா என்பது, அவர் உடனடியாக காலமாகி விட்டதால், தெரியவில்லை. அம்பேட்கர் ஆதரவாளர்களும் பெரியாரின் போக்கை அறிந்து விலகினர். இவ்வாறு, பெரியார் தனிமைப் படுத்தப் பட்டபோது, அரசியல் ரீதியாக, அண்ணாதுரைப் போன்றோரும் விலகி தனிகட்சி ஆரம்பித்தபோது, விரக்தியடைந்தார் என்பது திண்ணம் . எனவே “திராவிடஸ்தான்” கோரிக்கை “திராவிடநாடு” ஆகி, விடுதலைக்குப் பிறகு, திமுக ஆட்சிக்கு வந்து, அதுவும் அரசியல் நிர்ணயச் சட்ட விதிகளுக்குப் புரம்பான சர்ச்சையாகி விட்ட பிறகு, அக்கொள்கை அறவே மறக்கப்பட்டது. ஆனால், பெரியார், அதனை எடுத்துக் கொண்டு அவ்வப்போது கிளர்ச்சி செய்து வந்தார். பிறகு, முழுவதுமாக இந்து-எதிர்ப்பில் – வினாயகர் சிலைகளை உடைப்பது, இந்துக்களை தூஷிப்பது, அவதூறு பெசுவது – முதலிய காரியங்களில் ஈடுபட்டார்.

பாகிஸ்தான் உருவாகியப் பிறகு, ஜின்னா அதற்காக வருத்தப் பட்டாரா, பௌத்ததிற்கு மாறியதும் அம்பேட்கர் ஏன் அவ்வாறு செய்தோம் என நினைத்துப் பார்த்தாரா, பெரியார் தமது இந்துமதஎதிர்ப்பு-நாத்திகத்தைக் கடை பிடித்ததற்காக மனம் வருந்தினாரா என்றெல்லாம் தெரியவில்லை. இருப்பினும், மூவர் பேச்சு, எழுத்து செயல்பாடுகள் இந்துக்களுக்கு எதிராக இருந்ததால், அவர்கள் தாம் ஏன் தாக்குதலுக்கு உட்பட்டுள்ளோம் என இந்துக்கள் நினைத்துப் பார்த்திருப்பர்.

மதகலப்புள்ள அரசியல், அரசியலாக்கப்பட்ட சாதித்துவம், சாதித்துவ துவேஷம், அத்தகைய துவேஷத்தில் வளர்க்கப்பட்ட மாநில-மாகாண அமைப்பு-முறை முதலியவை, புதுமுறையான பிரிவினைவாதத்தை வளர்க்க ஆரம்பித்து உள்ளது. சமுக-நடப்புகள் மதசார்பற்றதாக்கும் முறை, நவீனப்படுத்தப்படும் அரசியல் முறைகள், மேற்கத்திய-மயமாக்கும் பொருளாதார வழிகள், இவை அத்தகைய நவீன-பிரிவினைவாத சித்தாந்திகளுக்கு ஊக்க்கமருந்தாகிறது. “இன- சித்தாந்தங்கள்” பொய்-மாயை என்று நிரூபித்த பிறகும் “இனவாதம்” பேசுகிறவர்கள், மொழிப்பற்று என மொழிவெறி பிடித்தவர்கள், சமூக-நலன் என்று வகுப்புவாதம் வளர்ப்பவர்கள், “தேசியவாதம்” என்ற போர்வையில் “நாட்டுபற்று” கொண்டவர்கள், “துணைகண்டம்” பேசி தேசிய-விரோதிகளுக்குத் துணை போகும் புதிய துண்டாடும் தலைவர்கள், முதலியோர், பலர் பலப்பல உருவங்களில், துறைகளில், வழிகளில் எங்கும் நிறைந்து, மறைந்து செயல்படுகின்றனர். இப்பொழுது, அத்தகைய சித்தாந்தவாதிகளிடமிருந்து இந்தியர்கள் தம்மைக் காத்துக்கொள்ள அவசியமாகிறது.

பின்னிணைப்பு-1: முஸ்லீம் லீக் லாகூர் தீர்மானம்-1938

“அனைத்து இந்திய முஸ்லீம் லீக் இந்த மாநாட்டில் தீர்மானிக்கிறது என்னவென்றால், கீழ்கண்ட முறைகளில் அன்றி வேறு எந்த அரசியில் திட்டமுறையில், உத்தேசித்தாலும் அவை இந்நாட்டில் செயல்படுத்த முடியாததால், முஸ்லீம்களுக்கு ஏற்புடையதல்ல, அதாவது பூகோளரீதியில் முஸ்லீம்கள் அதிகமாகவுள்ள தொடர்ச்சியான பகுதிகள், தனியாக அடையாளங் காணப்பட்டு எல்லைகளை வரையறுத்து – உதாரணமாக வடமேற்கு, வடகிழக்குப் பகுதிகள்- எனப் பிரிக்கப்படவேண்டும். அவை, தனித்த இறையாண்மை கொண்ட சுதந்திர நாடாக விளங்குமாறு அமைக்கப்படவேண்டும். இப்பகுதிகளில் அவ்வாறு முஸ்லீம்களை பகுதிவாரி பிரிக்கப்பட முடியவில்லையோ, அல்லது அவர்கள் குறைவாக உள்ளார்களோ, அங்கு அவர்களுக்கு தங்களது மத, கலச்சார, பொருளாதார, நிர்வாக, மற்றும் இதர உரிமைகள் கொடுக்கப்படவேண்டும், அதற்கு அரசியல் சட்டத்தில் பாதுபாப்பும் தரப்படவேண்டும். இம்மாநாடு மேலும் ஒரு செயற்குழுவை அமைத்து, பாதுகாப்பு, வெளியுறவு, நீதித்துறை முதலான அதிகாரங்கள் அப்பகுதிகளுக்கு வரையறுத்து, அதற்கு சாதகமாக ஒரு அரசியல் சட்டத்தை உருவாக்க, அதிகாரம் வழங்குகின்றது”

பின்னிணைப்பு-2: பெரியார் ஜின்னாவிற்கு எழுதிய கடிதம்
ஈரோடு,
ஆகஸ்டு 9, 1944
எனதருமை ஜின்னா அவர்களே,

“நான் திரு. ராஜகோபாலாச்சாரியாருடைய நடவடிக்கைகளை மிகவும் ஜாக்கிரதையாக கவனித்து வருவதால் அவர் தனது திட்டத்தின் மூலம் எவ்வாறு இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவார் எனவும், தாங்கள் திரும்பி வந்ததும், உமது பம்பாய் வீட்டில் காந்தியை ஆகஸ்டு மத்தியில் வரவேற்பதும் அறிவேன். அரசியல் வட்டாரங்களில் அது வரவேற்கப்படுகின்றது. எனக்கு முழு நம்பிக்கை இல்லை என்றாலும், இந்து-முஸ்லிம் பிரச்சினைகளைத் தீர்க்க, குறிப்பாக கிரிப்பினுடைய பரிந்துரை விஷயத்தில், நமது எதிர்ப்பாளர்கள் முன் வந்ததற்கான மாறுதல்களுடன் கூடிய அடையாளச் சின்னங்கள் தெரிகின்றன.

“காங்கிரஸ்காரர்கள் வார்தைகளை திரிப்பதில், அதற்கு ஒரு மாற்று வியாக்யானத்தைத் தர-வல்லவர்கள் என்று நான் சொல்லத் தேவையில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி, அவர்கள் நினைப்பிற்கேற்ற முறையில் என்ன பொருள் வேண்டுமானாலும் கற்பிப்பர். நாம் அவர்களை நம்பி இல்லாமல் இருந்தாலும், நாம் மிகவும் விழிப்புணர்ச்சியுடன், ஜாக்கிரத்தையாக அவரது சமரசங்களில் இருக்க வேண்டும் என்பது உமக்கு நன்றாகவே தெரிந்திருக்கும்.

முஸ்லீம்கள்-இந்துக்கள் மற்றும் ஆரியர்கள்-திராவிடர்கள் முதலியவர்களுக்கான பொது தேர்தல், நமக்கிருவருக்குமே கஷ்டத்தையளிக்கும் என்பது தெளிவாகிறது. நாம் பம்பாய் மற்றும் தில்லியில், பாகிஸ்தான் மற்றும் திராவிடஸ்தான் பற்றிய நமது விவாத-உரையாடல்களையும் மற்றும் இரண்டும் ஒன்றே என்ற ரீதியில் தாம் கோரிக்கை எழுப்புவீர் என தாங்கள் தந்த உத்திரவாதத்தையும் உமக்கு கவனத்தில் கொண்டு வர தயவு செய்து மன்னிக்கவும். இங்கு, தென்னிந்தியாவில் அவை ஒன்றாகவே பாவிக்கப் பட்டு, அப்பிரச்சினையை தீர்க்க, அதற்கான செயல்பாட்டினையும் எனக்குத் திருப்தி அளிக்கும்வரை செய்து விட்டேன்.

“இந்தியாவில் பாகிஸ்தானமும், முஸ்லீம்களுக்குச் சுதந்திரமும் மற்ற இஃதிய நாடுகளுக்கு சுதந்திரம் அடையும் வரை அல்லது கிடைத்தாலொழிய, கிடைக்காது என தாங்கள் நன்றாகவே அறிவீர்.
தங்களுக்கு அன்பான மரியாதை உரித்தாகுக.
தங்கள் விசுவாசமுள்ள,
ஈ.வி.ராமசுவாமி நாயக்கர்.

பின்னிணைப்பு-3: ஜின்னா பெரியாருக்கு எழுதிய கடிதம்
பம்பாய்
ஆகஸ்டு 17, 1944
அன்புள்ள திரு ராமசுவாமி,

உமது ஆகஸ்டு 9 தேதியிட்ட கடித்தைப் பெற்றேன், அதற்கு நன்றி. மதராஸ் மக்களிடம், குறிப்பாக பிராமணரல்லாத 90 சதவீதத்தினரிடம், எப்பொழுதுமே எனக்கு இரக்கம் இருந்து வந்துள்ளது. நான் சொல்வது என்னவென்றால், அவர்கள் அவ்வாறான தங்களது திராவிடஸ்தானை உருவாக்க ஆசைப்பட்டால், அது முழுவதுமாக அவர்களது விஷயமாகிறது, எனவே உமது மக்கள்தாம் அதைப் பற்றித் தீர்மானிக்க்க வேண்டும். நான் இதற்கு மேல் எதுவும் சொல்ல முடியாது, மேலும் உமக்காகவோ உமது தரப்பிலோ பேசவும் முடியாது.

நான் ஒன்றிற்கு மேற்மட்டு இருமுறை சென்னையில் இருந்தபோது உம்மிடமும், உமது நண்பர்களிடமும் எனது நிலைப்பாட்டினை மிகவும் தெள்ளத் தெளிவாக்கி இருக்கிறேன், ஆனால் உமது நடவடிக்கைகள், இது வரையிலும், தீர்மானமற்ற நிலையில் இருந்து வருவதை, நான் கவனித்து வருகிறேன். உண்மையிலேயே, உமது மாகாண மக்கள் திராவிடஸ்தானை அடைய ஆசைப் பட்டால், பிறகு அவர்கள் தான் அதனை உறுதி செய்யவேண்டும்.

“தாங்கள் எனது நிலையை, அதாவது நான் இந்திய முஸ்லீம்களுக்குத் தான் பேச முடியும்- என்பதனை புரிந்து கொண்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன், தவிர, தென்னிந்திய ஒரு மக்கள் பிரிவினர், குறிப்பாக பிரமணரல்லாதவர்கள் ஏதாவது அத்தகைய சரியான நியாயமான கோரிக்கையை வற்புறுத்தலை வைத்தால், எனக்கு முடியும்போது அந்த விஷயத்தில் எனது ஆதரவு உமக்கு இருக்கும்”.
தங்கள் விசுவாசமுள்ள,
எம்.ஏ.ஜின்னா.

Series Navigation

author

கே. வி. ராமகிருஷ்ண ராவ்

கே. வி. ராமகிருஷ்ண ராவ்

Similar Posts