கே. ஆர். மணி
ஆடை விசயம் அதிகமாக பேசப்படுகிறது. கிரிக்கெட்டில் எதிர்ப்புகளுக்கு பிறகு கொஞ்சம் மூடி சியர்ஸ் லீடர்கள் வருகிறார்கள். முன்னாலிருந்ததைப்போலில்லை. இப்போது பாதிக்குமேலே மூடி, பார்க்க நன்றாகவேயில்லை.
எதுவும் செய்யாமலிருந்தால் அடிதடி கலாட்டாவில் இறங்கி போட்டபணத்திற்கு பிரச்சனை வரும் என்பதால் கொஞ்சம் அடக்கி வாசிக்க சொல்லியிருக்கிறார்கள் போல. கூடவே ஆண்களும் ஆடுவது பாலிவுட் பாட்டின் பிண்ணணிபோல தெரிகிறது. ஸ்ரூக்கானின் ஐடியாவாகயிருக்கலாம். இறுதி ஆட்டத்தில் சாருக்கானும், பீரிதி ஜுண்டாவுமே சீயர்ஸ் லீடராக வரலாம். சட்டை அவிழ்க்கும் தார்மீக உரிமைதனக்கு மட்டுமே உள்ளதென வாதிடும் சல்மான்கானும் வந்த குஸிப்படுத்தலாம் என்கின்றன வட்டாரங்கள். பணம் பத்தும் ஆடும்.
மும்பை தாக்கரே சகோதரர்கள் பதிவுபோல கலாச்சார திருவாய் திறந்து சில கருத்துக்களை மலர்ந்தார்கள். அதில் எனக்கு பிடித்தது, ” களிப்பு வேண்டுமென்றால் காபரே பதிலாய் பங்கரா(பஞ்சாபிகுத்தாட்டம்) ஆடலாமே” நல்ல ஐடியாதான்.
பணத்திற்காக திறக்கிறது, அவிழ்கிறது பாலிவுட்டின் சில கதவுகள் கொக்கிகள். தேவைப்பட்டால் பணத்திற்கு திறக்கவும், பாதிப்பென்றால் மூடவும் தயங்காது- எல்லாம் பணம். எதற்கும் வளைந்து கொடுக்கும் முதலாளித்துவம் என்கிறான் சிவப்புபீடா வாயோடு என் நண்பன். எது எப்படியோ வெளிச்சத்தின் அடியில் நிர்வாணங்கள் மூடப்படுகின்றன.
*
“இப்படிக்கு ROSE” விஜய் டிவியின் நிகழ்ச்சியிலும் ஆடை விழுமியங்களைப்பற்றி கருத்துக்கள் தெரித்தன. தவறான ஆடைகள் இளைஞர்களை/இளைஞிகளை தவறான வழிக்கு, நினைவுக்கு தள்ளிவிடும், அவர்களது பொன்னான காலங் கள் தேவையற்ற வழியில் திசை திருப்பப்பட்டுவிடும் என்கிற பெற்றோர் பதைபதைப்புடன் பேராசிரியர். இத்தகைய விவாதங்களில் அவர்களது கருத்துக்களும் கேட்கப்படவேண்டும் என்கிற உண்மையோடு இன்னொரு பேராசிரியர். இந்த ஆடைவிவாகரங்களெல்லாம் ஆணாதிக்க சமுதாயத்தால் நிறுவப்பட்டது, இவர்கள் யார், எங்களது ஆடை விசயத்தை நிர்ணயிக்க, எனது ஆடையால் உனது கவனம் தவறுகிறதெனில், சரி செய்யப்படவேண்டியது எனதுஆடையல்ல, உன் பார்வையை என்கிற மற்றொரு தரப்பு.
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர், சுடிதாரும் கூட ஆமோதிக்கப்பட்ட உடையாகயில்லை. மெல்ல மெல்ல அதன் சுளுவும், வசதியும் அதனை ஏற்கச்செய்தது. சொல்லப்போனால் அது வடவர் உடைதான். மெல்ல சாரி இனிசாகும் வடவர் சுடிதார் புவிமிசை ஓங்கும் – என்று மொக்கை கவிதையை நல்லவேளையாய் யாரும் பாடவில்லை. இப்போது வளர்கிற இளம் பெண்குழந்தைகளுக்கு சுடிதார் ஏதோ வாரத்திற்கொருதடவை போட்டுக்கொள்கிற அபூர்வ உடையாகயிருக்காது. மாற்றங்களை அதிகமாக மேடை போட்டு பேசாமல் மெளனமாய் செய்து காட்டியிருக்கிறார்கள் பெண்கள்.
என் தற்போதய பயணத்தில் அகமாதாபாத் NIDல் பயின்ற ஒரு பேஸன் டிசைனரை சந்திக்க நேர்ந்தது. NID இந்தியாவின் டிசைன் வளர்ச்சிக்கு செய்த பங்களிப்பு அளவிடமுடியாதது. IIMகள் எப்படி மேலாண்மை துறைக்கோ அப்படி டிசைன் சகாப்தத்தில் NIDன் தொண்டு. சக பயணி, ஆடைகளின் சரித்திரம் பற்றி நுட்பமாய் கற்றவராம். அதைப்பற்றி அவரது எழுத்துக்கள் அவர் துறை சார்ந்தவர்களிடம் பிரபலம் போலும். கழுதையாயிருந்தாலும் என்ன, கொஞ்சம் கற்பூர வாசனை பிடித்துத்தான் பார்ப்போம் என்கிற நோக்கில் அவரது நுண்மான் புலத்தில் மூக்கு நுழைத்தேன். வாயைக்கிண்டினேன். அவர் ஓவ்வொரு நாட்டிலும் ஆடைகள் எப்படி வளர்கின்றன, குறைகின்றன மாறுகின்றன என ஆராய்ச்சி தாள்களை தயாரித்தவராம்.
அந்த பேச்சின் சில துளிகள்.
“வளர்ந்த நாடுகளிலும் பெண்கள் வேலைக்கு போனபிறகே அவர்களின் ஆடை அளவுகள் குறைய ஆரம்பித்தன. ஆடைகள் மாறியபோது மிகப்பெரிய எதிர்ப்புகளை அவர்கள சந்திக்கநேரிட்டது. அவைகள் மெல்ல மெல்ல மாறியது மட்டுமின்றி இப்போது பேசுபொருளாகவுமில்லாது போய்விட்டது. ”
“இப்போது வருகிற பாப் பாடல்களிலும் கீழ் கலாச்சாரத்தை, சந்தையை மனதில் நிறுத்தி மிகக்குறைவான ஆடைக்குறைப்பை
நாயக, நாயகிகள் தவிர்க்கவே செய்கிறார்கள். சாதாரண மக்களின் ஆடைகளும், ரசனையும் கூட ஓரளவு இதையேதான் பிரதிபலிக்கிறது. ”
“பெண்கள் அவர்களது தேவை, அவசியம், அழகு, உள்ளுணர்வுச் சந்தோசம் இவற்றிற்கேற்ப தங்களது ஆடைகளை மற்றவர்களின் கருத்து திணிப்பின்றி ஏற்றுக்கொண்டே வந்திருக்கிறார்கள்”
“பிளேசரும், நமது சேலையும் உலகத்தின் கிளாசிக்குகள். (Classic) பிளேசரின் வடிவ, உருவ அமைப்புதான் மாறியதேயொழிய
அதன் ஒளிவட்டம், மதிப்பு, ஆசை, மன மயக்கம், இன்னும் அப்படித்தானிருக்கிறது. சேலையும் அப்படித்தான் மாறிக்கொண்டேயிருக்கிறது. ” [கல்யாணத்துக்கு கூரைப்புடவையும், மாப்பிளைக்கு ஒரு ரெமண்டு பிளேசரும்.. எடுத்துட்டா.. இது இருந்து கொண்டேயிருக்கும்போல]
“பொதுவாக மார்வாடிகள் இன்னும் கன்சர்வேட்டிவான இனமாகத்தானிருக்கிறார்கள். அவர்கள் வீடுகளிலும் சேலையும், பிளவுசும்தான்
கலாச்சார ஆடைகள். ஆனால் ஓவ்வொரு நடுத்தர மேல்தட்டு பெண்களும் ஒரு வருடத்தில் பதினாறு பிளவுசுகள் தைத்து
கொள்கிறார்கள், அதுமட்டுமின்றி அதன்மீதான வேலைப்பாட்டிற்கு 1200 ரூபாய் வீதம் செலவழிக்கிறார்கள் “[அதிகமாக உடை கலாச்சார அழுத்ததிற்கு உட்பட்ட இஸ்லாமிய பெண்களும் – குறிப்பாய் போரி முஸ்லிம்கள் இவர்கள் குஜராத்தின் சிலபகுதிகள் மற்றும் மும்பை மஜ்ஜித்தில் அதிகம் – அளவுக்கதிகமாகவே உடைகளில் செலவழிக்கிறார்கள் ]
“உலகம் முழுவதும் ஏற்பட்ட உடை மாற்றங்களுக்கான காரணிகள்: போர், பெண்கள் கல்வி, வேலைக்கான அவசியம், அதற்கான பயணம், வேலை மற்றும் பொதுத்தளத்தில் மாற்று உடைக்கான மாறும் மதிப்பீடு, ஆமோதிப்பு, விழுமியத்தின் அடிப்படை மாறாது அதன் மேல்மட்டத்தில் ஏற்படும் மாறுதல்கள், மெல்ல எல்லாதரப்பும் அதை ஏற்றுக்கொள்ளல் என்று ஓரே ரீதியான சக்கர சூழலை (Cyclic Acceptance) கொண்டுள்ளது. ”
“இருபதாம் நூற்றாண்டில்தான் ஆடைகளிலும், ஆடை சார்ந்த தத்துவ விழுமியங்களிலும் உலகம் முழுவதும் மிகப்பெரிய கண்ணோட்ட மாறுதல்கள் ஏற்பட்டன. அதற்கான மிக முக்கிய இரு காரணிகள், போரும், தொழிற்புரட்சிக்குபிறகு பெண்கள் வேலைக்குப்போக ஆரம்பித்தவையே சின்ன தீக்குச்சிகள் (Triggers) ”
“உலக கலாச்சரா ஒருமித்தலில் உலகத்தின் ஆண், பெண்ணுக்கென பொதுவான உடைகளெனெ சில மட்டுமே தங்கலாம். அந்தந்த சீதோசன நிலை, கலாச்சார்த்திற்கேற்றவாறு புதுப்புது Segmentகள் உருவாகலாம், சில பிராண்டுகள் மட்டுமே அதை தீர்மானம் செய்யலாம். வசதி குறைந்த நாடுகளில் அவை NGOக்கள் மூலம் மற்ற நாடுகளில் அதற்கான சரியான விலை மற்றும் சந்தை உருவாக்குதல் மூலம்
நிறுவனப்படுத்தப்படலாம். ”
“எல்லா பொருட்களையும் போலவே ஆடைகளும், புதிய வடிவங்களும், மாற்றங்களும் மேல் தட்டிலிருந்தே கீழ்தட்டிற்கு வருகின்றன பெரும்பாலும். [Top to bottom approach] முதலில் Class என்று சுட்டப்பட்ட ஆடைகள் பின் Mass ஆகிப்போகின்றன.
பிரிட்டிஸ் ராணியின் ஏழுவட்ட
“பஞ்சாப் மற்றும் வடக்குபகுதிகளில் ஆண், பெண் உடைகளில், அணிகலன்களில் அதிகமான வித்தியாசமிருப்பதில்லை ”
DNA பத்திரிக்கையில் வந்த சின்ன ஆராய்ச்சியில், இப்போது பையன்கள் முதல் ஓரிரு டேட்டிங்கில் பெண்கள் சேலை கட்டிவருவதை
ஆர்வமாய் ஆராதிக்கின்றனர். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். முதல் டேட்டிங்கில் அதிகமாக பேசவேண்டும், வாய்ப்புகிடைத்தால்.
ஆனால், இந்த மெட்ரோ பெண்கள் அதற்கான வாய்ப்பே கொடுக்கமாட்டார்கள். அவர்களே பேசிவிடுவார்கள். சமர்த்துபையனாய்
சந்தில், சிந்துபாடிக்கொண்டிருப்பதே புருஸ லட்சணம் என்கிறது அதர்வண ஜாவா வேதம். அதுபோக சேலை கட்டிப்போகும்
பெண்ணையும், காதில் கடுக்கனின்றி சாதாரணமாய் ஜீன்ஸ் போட்டுப்போகும் பையனையும் போலிஸ் மாமாக்கள் தங்களது
நல்ல மருமகன்களாக நினைத்துவிட வாய்ப்பு அதிகம்.
இந்தியாவில் பேண்ட் கலாச்சாரம் 1850க்குபிறகு அறிமுகப்படுத்தப்பட்டபோது அங்கே வழக்கொழிந்த டிசைன்கள் மட்டுமே இங்கே அறிமுகப்படுத்தப்படவேண்டுமென எழுதப்படாதவிதியிருந்ததாம். பெண்களின் கச்சை (பிரா) அங்கிருந்துதான்வந்ததாம். ஏன்னே, அநியாயம் உலகத்தில் ஆதிநிலமான லெமூரியாவிலேதான் மங்கை கச்சைகள் முதலில் இருந்தது என்று நீங்கள் ஆதாரப்பூர்வமாக நிருபிக்க முன்வரலாம். இல்லை பெண்களின் இருதயங்களில் சுகந்திரக்காற்றை ஆரம்பித்திலே வீசச்செய்தது எங்களினம் என்றும் பேசிக்கொள்ளலாம். It never ends. நான் சொன்னது ஆடைப்பற்றிய பேச்சை.
தினசரி பஸ், ரயிலுக்கு சுடிதார், நாள், கிழமைன்னா, எப்பாயாவது சில நாட்கள் வெள்ளிக்கிழமை சேலை, இல்லையென்றால் சேலைநாள் என்று அறிவித்துவிட்டு எல்லாரும் சேலைகட்டி வருதல், படுக்கைக்கு நைட்டி( மெல்லியதான காஸ்டிலியான நைட்டி வெகு அரிதாக கட்ட , மற்றபடி போரடிக்கும் அதே சிவப்பு, மஞ்சள், விப்ஜியர் நிறங்களில்) பிளாட்டின் கீழ்வரைக்கும் நைட்டி சரி, இன்னும் கொஞ்சம் தூரத்திற்கு நைட்டிமேல் துப்பட்டா, மார்னிங் வாங்கிக்கிற்கு ஸ்போர்ட்ஸ் பேண்ட், அலுவலகத்தில் போகும் ரிசார்ட் பார்ட்டிக்கு ஜூன்ஸ், வீட்டோடு போகும் விடுமுறைக்களுக்கென முக்கால் பேண்டு, ஏதாவது பிரசண்டேசனெனில் கறுப்பு பேண்டும், வெள்ளைச்சட்டையும், மடிப்பாக்கம் ரவுடிகள் கழுத்தில் கர்ச்சீப் கட்டுவது போல நிறத்திற்கு முனைகள் குறுகிய கர்ச்சீப் துணிகள், அதோடு சில மெல்லியதாய் அரைக்கை வெள்ளைச்சட்டை, துக்கவீட்டிற்கென சில வெள்ளைபுடவைகள், சமையலறையில் துணிகள் நனையாமலிருக்க ஸ்டார் ஹோட்டல் குக்(கர்)கள் போல நீளமான முதுகுப்பக்கம் முடிச்சுப்போடும் சமையலைறை பனியன், (வேலைக்காரிக்கும், எஜமானியம்மாவுக்கும் தனித்தனி நிறத்தில்) – இப்படியே குவிகிறது வளரும் நடுத்தர- மேல்தட்டு பெண்களின் ஆடை அறைகள்.
ஆமாம். ஆடை விசயம் அதிகமாகவே பேசவிட்டோம்.
அதிகமாய் பேசப்பட்டபின் எப்போதுமே ஏற்படுகிற கனமான மெளனம். பேச்சு நின்றது. செவியின் உணவுக்கு தடை. அப்போதுதான்
அவரது உறுத்தாத உடைகளை கவனித்தேன். நல்ல மஞ்சள், காவிக்கலர் கலந்த நிறத்தில் கால்கைச்சட்டை. டிசர்ட்டும், சட்டையும்
இல்லாத ஏதோ ஒரு ஜந்து. துப்பாட்டாவிற்கு தேவையில்லாத உடம்பு. ஜுன்ஸ் போன்ற கொஞ்சம் கட்டிப்பட்ட துணியிலான பேண்ட்.
அறிவான பெண்கள் எப்படியிருந்தாலும், என்ன போட்டாலும், எப்படி பேசினாலும் – பிடித்துவிடுகிறது.
லீனாமணிமேகலையும், அந்த டாக்டரையும் எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. லீனாவிற்கு துப்பட்டா தேவையில்லைதான்.
netwealthcreator@gmail.com
- பத்து கவிதைகள்
- அன்பு
- காற்றினிலே வரும் கீதங்கள் – 17 ஆத்ம தாகம் தீர்ப்பவன் !
- தன் நெஞ்சறிவது பொய்யற்க – தமிழநம்பி அவர்களுக்கு
- கிணத்தினுள் இறங்கிய கிராமம்
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2இன் பரிசளிப்பு விழா
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?(கட்டுரை: 27)
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)
- தாகூரின் கீதங்கள் – 27 விடுதலை கொடு எனக்கு !
- மன மோகன சிங்கம்!
- நூல் வெளியீட்டு விழா
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 19 அசோகமித்திரன்
- கொஞ்சமாய்ப் பேசுவோம், ஆன்மிகம்
- உண்மையின் ஒளியைநோக்கி – நித்ய சைதன்ய யதியின் “குருவும் சீடனும்”
- இளங்கோவின் ‘நாடற்றவனின் குறிப்புகள்’ – கவிதை நூல் வெளியீட்டு விழா
- நாசமத்துப் போ !
- பெயரிலி!
- ஹெண்டர்சன் பட்டி மன்றம்
- FILCA Film festival schedule
- “Aalumai Valarchi” book release function
- ‘தமிழ் திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள்’ என்ற என் கட்டுரை பற்றி சடாயு கருத்துகள்
- பிறந்த நாள்
- பெயர் முக்கியம்!
- குரு அரவிந்தனின் ‘ஒரு கைதியின் மௌனம் கலைந்தபோது’
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்! – கல்வி!
- ஈழத்துப்பூராடனாரின் கடல்கோள் ஓவியம் – அறிமுகம்
- ஜெயந்தி சங்கருடன் ஒரு கலாச்சார சுற்றுலா
- தீராத தவிப்புகளின் இசை – பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம்” -கவிதைத்தொகுதி
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 9
- கடல் மீன்
- அவள்,அவன் மற்றும் ஒரு மாலைப் பொழுது !
- காதலும் காமமும்
- நாய்கள்
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 3
- சார்புநிலை என்னும் திரை – சு.வேங்கடராமனின் “அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு”
- பெயர்வு: புலமும்! புலனும்?
- Last Kilo byt – 13 : ஆடை..
- நம் பையில் சில ஓட்டைகள்
- ஒப்பனை உறவுகள்
- ’புத்தகங்கள்’
- கவிதைகள்
- எத்தகைப் படைப்பு இந்த மனிதன் !
- இலை போட்டாச்சு – 40 சத்தான காலை உணவு
- தமிழ் நாவல் எழுதும் போட்டி 2 இன் பரிசளிப்பு விழா
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 5 (சுருக்கப் பட்டது)