சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடத்தால் வீழ்ந்தோம் (ஆசிரியர்: குணா)

This entry is part [part not set] of 45 in the series 20080501_Issue

எஸ்ஸார்சி


சம்பந்தமில்லை என்றாலும்

திராவிடத்தால் வீழ்ந்தோம்
ஆசிரியர்: குணா, வெளியீடு: தமிழக ஆய்வரண் பெங்களூர் நவம்-திசம்பர்-1994 விலை உருபா 10.00 பக்கம்-82

———————————————————————————————————————-
ஞா. தேவநேயப்பாவாணர் நினைவாக,,,,,,,,
———————————————————————————————————————-
இந்திக்காரன் இந்திக்காரனாக வாழ்கிறான்,கன்னடன் கன்னடனாக வாழ்கிறான் தெலுங்கன் தெலுங்கனாக வாழ்கிறான், மலையாளி
மலையாளியாக வாழ்கிறான், நாம் மட்டும் திராவிடனாக வாழவேண்டுமா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.- தமிழக ஆய்வரண்
———————————————————————————————————————-
பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியிடமிருந்து 1994 சூன் 25-26 ஆம் பக்கல்களில் குடந்தையில் நடத்தவிருந்த ஒரு கருத்தரங்கில் திராவிட மாயை என்னும் தலைப்பில் கருத்துரையாற்ற ஒரு அழைப்பு வந்தது.,,,,,,,,,,, அக்கருத்தரங்கிற்காக நானெழுதிய கட்டுரையே இது. முன்னுரையில்
———————————————————————————————————————-
ஆரியக்கொள்கையின் மறுபக்கமே திராவிடக்கொள்கை. ஆரியமும் திராவிடமும் சியாமிய ஒட்டுப்பிறவிகள். ஆரியக்கொள்கை திராவிடக்கொள்கை ஆகிய இரண்டுமே இனவெறிக்கொள்கைகளாகும். பக்கம் 1
———————————————————————————————————————-
எந்த ஒரு ஆரியப்படைஎடுப்பாவது தமிழகத்தின் மீது நடந்ததுண்டா? பக்கம் 2
———————————————————————————————————————-
வள்ளுவமும் அதன் எதிர்மறையாகத்தோன்றிய பார்ப்பனியமும் தெற்கில் தோன்றியவை. தெற்கில் தோன்றி வடக்கு நோக்கி ப்பரக்க நெடுக்க பயணம் போன சாதிவெறிக்கொள்கையே பார்ப்பனியம் ஆனால் கலப்பினக்கொள்கையாகிய ஆரியமெனும் நிறவெறிக்கொள்கையோ வடக்கில் தோன்றித் தெற்கே வந்தது.
பக்கம் 4
——————————————————————————————————————
பார்ப்பனியக்கொடுநெறிகளை ச்சட்ட வடிவமாக்கிய மனு நூல் ஆரியரால் ஆக்கப்பட்டதன்று. சாளுக்கியர் என்னும் கன்னடப்பேரரசாளர்
ஆக்கிய நூலே. ( கி.பி அய்ந்தாம் நூற்ராண்டு இரண்டாம் புலிகேசி ஆளுகையின் போது)
பக்கம் 5
———————————————————————————————————————-
தமிழும் தமிழரினமும் ஆரியப்படைஎடுப்பால் கெட்டனவா,திராவிடராம் கன்னடர் தெலுங்கர் மராத்தியர் ஆகியோரால் கெட்டனவா?
பக்கம் 7
———————————————————————————————————————-
திராவிடராம், கன்னடரும் தெலுங்கரும் , மலையாளிகளும் தமிழகத்தில் ஊடுருவி மண்பறிப்பு வடிவில் மடிபறிப்பு ச்செய்ததுடன் தமிழகத்தின்
எல்லையோரங்களிலுள்ள பச்சைத்தமிழ்ப்பகுதிகளையெல்லாம் தத்தம் குடியேற்றங்களாக ஆக்கிக்கொண்டனர்.
பக்கம் 8
———————————————————————————————————————-
பெரியாரின் செயற்பாடுகளையும் திராவிட இயக்கத்தின் செயற்பாடுகளின் பின்னணியில் மார்வாடிகள் முழுமையாக வளர்ந்து தமிழகப்பொருளியலை தங்கள் முழுக்கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்துள்ளதையும் பார்க்கும்போது…,,,,,,,,
பக்கம் 14
———————————————————————————————————————-
தமிழ் பார்ர்ப்பனரெல்லாம் தங்களை ஆரியர் என்று நம்பிக்கெட்டனர். வழியும் தெரியாது வரலாறும் தெரியாது, தமிழரினத்திடமிருந்து
அயன்மையாகி வேரற்று நிற்கின்றனர். அத்துடன் பெரியாரின் திராவிடக்கொள்கையும் பார்ப்பனரெதிர்ப்பும் சேர்ந்து அவர்களை
மீளாமுடியாப்படுகுழியில் தள்ளின. பக்கம் 21
———————————————————————————————————————-
தமிழ்ப்பார்ப்பனரான இராசாசிக்குத் தமிழகத்தின் எல்லைகளை மீட்க வேண்டுமென்று இருந்த அக்கரை கூடத் திராவிட இயக்கத்தினருக்குதை இருந்ததில்லை. சென்னை மாநகரைத் தெலுங்கர்கள் பறித்துக்கொண்டு போகாமல் அரவமின்றி காத்த பெருமை
எல்லாம் இராசகோபாச்சாரியாருக்கே போய்ச்சேரும். பக்கம் 42
———————————————————————————————————————-
தேவிகுளம் பீர்மேடு தமிழருடையதென வலியுறுத்தும் முகமாக 20/02/1956 அன்று தமிழகத்தில் நடந்த வேலை நிறுத்தத்தில் தமிழரசுக்கழகம்
தமிழகப்பொதுவுடைமைக்கட்சி,தமிழக சொசலிசக்கட்சி ஆகியன மட்டுமே பங்கெடுத்தன.
பக்கம் 48
———————————————————————————————————————-
அத்துணைத்துரைகளுமே இன்று மார்வாடிகள்,குசராத்திகள்,பார்சிகள், சிந்திகள் போன்ற வடவரின் முற்றுடைமை ஆகிவிட்டன. அதற்கு
அடுத்த நிலையில் இருப்பவர்கள் தெலுங்கர்கள் கன்னடர்கள் முதலானோர்.
பக்கம் 57
———————————————————————————————————————-
பேதைத்தமிழனோ எல்லோரும் நம்மவரே எனப்பட்டாங்கு படிப்பவன். எல்லோருக்கும் நல்லவனாக இருந்து கெட்டவன்.
தெலுங்கன் தன்னுடைய மனக்கதவை அடைத்துக்கொண்ட பின்னர், கன்னடனும் அதேபோல் தன் உள்ளக்கதவை இழுத்து மூடிக்கொண்டபின்னர் தமிழன் மட்டுமே தன் திருவுளவாயை அகல விரியத்திறந்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய பேதமை!
பக்கம் 72
———————————————————————————————————————-
தமிழகம் மட்டும் தமிழ் நாடாக இல்லை. பக்கம் 76


essarci@yahoo.com

Series Navigation

author

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

Similar Posts