சம்பந்தமில்லை என்றாலும் – திரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்

This entry is part [part not set] of 43 in the series 20080417_Issue

எஸ்ஸார்சிதிரவிடத்தாய்-மொழிஞாயிறு. ஞா. தேவநேயப்பாவாணர்.
வெளியீடு .திருநெல்வேலிசைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் ஆள்வார்பேட்டை சென்னை 18 முதற்பதிப்பு சனவரி 1944
விலை -சொல்லப்படவில்லை. பக்கம்-115

———————————————————————————————————————-
ஆராய்ச்சியாளரோவெனின் ஔரிருவர் நீங்கலாக பிறரெல்லாம் பிறநாட்டுச்செய்திகளாயின் மறைந்த உன்மையை வெளிப்படுத்துவதும்
தமிழ் நாட்டுச்செய்திகளாயின் வெளிப்பட்ட உண்மையை மறைத்துவைப்பதுமே தொழிலாகக்கொண்டுள்ளனர்.
முகவுரையில்
———————————————————————————————————————-
பழந்தமிழர் தம்முன்னோரைத்தென்புலத்தார் என்றமையாலும் தெற்கே அமிழ்ந்துபோன குமரி நாடே தமிழர் தம் தொல்லகம் என்பதுணரப்படும். பக்கம் 7
———————————————————————————————————————-
தமிழம்- த்ரமிளம்-த்ரமிடம்-த்ரவிடம்-திரவிடம்-திராவிடம் எனத்திரிந்தது.
தலைக்கழக்காலத்தில் தமிழ் செந்தமிழ்,கொடுந்தமிழ் என இரண்டாகவகுக்கப்பட்டது. .செந்தமிழ் நாட்டைச்சூழ்ந்த பன்னிரு நாடுகள்
கொடுந்தமிழ் நாடுகளாயிருந்தன. பக்கம் 8
———————————————————————————————————————-
வைத்தூற்றி (funnel) என்னும் மலையாளச்சொல்லும், கெம்பு என்னும் கன்னடச்சொல்லும் எச்சரிக்கை என்னும் கன்னட தெலுங்குச்சொல்லும் தமிழுக்கு இன்றியமையாதவை. பக்கம் 21
———————————————————————————————————————-
இழிந்தோன் ஈ என்றும், ஒத்தோன் தா என்றும் உயர்ந்தோன் கொடு என்றும் கூற விதித்தனர் முன்னோர்.
பக்கம் 22
———————————————————————————————————————-
சேரலன் -சேரலம்
கேரளன்-கேரளம் பக்கம்29
———————————————————————————————————————-
அக்ரஹாரம்- பார்ப்பனச்சேரி பக்கம்-53
———————————————————————————————————————-
கன்னடம் என்பது கருநடம் என்னும் தமிழ்ச்சொல்லின் திரிபு. கருநடம் அல்லது கருநாடகம் என்னும் சொல்லுக்கு இருபொருள்கள் கூறப்படுகின்றன. 1. கரிய நாடு 2. கருங்கூத்து என்பன.
கருநாடகம் என்பது பழமையான அநாகரீகத்தைக்குறிக்கலாம். பக்கம் 54
———————————————————————————————————————-‘‘கொடுங்கருநாடர் ,கொடுங்கரு நாடரும்’’ சிலம்பு,25/156,106.
பம்பாய் மாகாணமும், ஐதராபாத் சீமையும் சென்னை மாகாணமும் கூடுகின்ற இடத்துக் கொடுந்தமிழ் வழக்கு வடசொற்கலப்பால் 6 ஆம் நூற்றாண்டிற்குப் பின் கன்னடமென வேறு மொழியாகப்பிரிந்து பின்பு சிறிது சிறிதாகத் தெற்கே தள்ளி வந்து தற்போது நீலமலை வரை பரவியுள்ளதென்க. பக்கம் 59
———————————————————————————————————————-
பண்டைத்தெலுங்கு நாட்டின் ஒருபாகம் கலிங்கம் என்னும் பொதுப்பெயர் கொண்ட முப்பகுதியாயிருந்தது. அதனால் திரிகலிங்கம்,
-திரிலிங்கம்-தெலுங்கம்-தெலுங்கு என மருவிற்று பக்கம் 81
———————————————————————————————————————-
15 ஆம் நூற்றாண்டிற்குப்பின் பாண்டியர் வலி குன்றியதால் தெலுங்கர் பலர் தமிழ் நாட்டில் குடியேறிவிட்டதாலும் பாண்டி நாட்டில் பல தெலுங்க வேளிரும் குருநில மன்னரும் தோன்றினர். அங்ஙனம்தோன்றிய வேள் அகங்களுள் எட்டயபுரமும்,பாஞ்சாலங்குறிச்சியும் தலைமையானவை. பக்கம் 86
———————————————————————————————————————-
துளுவ நாட்டிலிருந்து பல நூற்றாண்டிற்கு முன்னரே வேளாளர் பலர் தொண்டைமண்டலத்திற்கு குடிவந்தனர் அவர் தொண்டை மண்டலம் துளுவ வேளாளர். அவர் மொழி தொன்று தொட்டுத்தமிழே பக்கம்-103
——————————————————————————————————————–
உப்பு தீந்தினாயெ நீரு பர்வெ- உப்புத்தின்றவன் நீர் பருகுகிறான் (துளு-தமிழ்)
மல்ல புதெ மெல்ல ஜாவொடு- பெரிய பொதியை மெல்ல இறக்கு. ,,
பாயிடு மக மக, பஞ்சிடு பக பக- வாயால் மகன் மகன், வயிற்றில் பகை பகை.
பக்கம்-112
———————————————————————————————————————-

சில சூழ்ச்சிப்பொறிகளின் பழைய அமைப்புக்கள் இன்றும் கீழ் நாட்டில்தான் உள்ளன. பக்கம்-115


essarci@yahoo.com

Series Navigation

author

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

Similar Posts