எஸ்ஸார்சி
திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்
தாமசு டிரவுட்மன் -வெளியீடு; சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் -காலச்சுவடு பதிப்பகம்
விலை ரூ.150 பக்கம் 340 மே 2007 தமிழில்-இராம.சுந்தரம்
எல்லீசன் என்று தமிழ் ஒலி மரபுக்கேற்ப தம்மை அழைத்துக்கொண்ட பிரான்சிசு ஒயிட் எல்லிசு என்ற தமிழறிஞரின் பெயர் தமிழுலகம் பரவலாக அறிந்திருந்தது,,,,,,,,,,தம் பொறுப்பிலிருந்த அரசாங்கத்தங்கச்சாலையில் திருவள்ளுவரின் உருவம் பொறித்த இரண்டு வராகன் தங்க நாணயங்களை வார்த்த பெருமைக்குரியவர்.,,,,,,,,,,
1856 இல் கால்டுவெல் எழுதி வெளியிட்ட திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற அரிய ஆய்வு நூலுக்கு நாற்பதாண்டுகளுக்கு
முன்னரே,1816 இல் திராவிட மொழிக்குடும்பம் என்ற புலமைக்கருத்தாக்கத்தைக் கண்டுணர்ந்து உலகுக்கு வெளிப்படுத்தியவர் எல்லிசு.
ஆ.ரா.வெங்கடாசலபதி – புகுமுன்
———————————————————————————————————————-
இந்நூல் ஒரு முற்றுப்புள்ளி அல்ல. ஒரு தொடக்கம், மற்றவர்களுக்கு ஒரு தூண்டுகோல்.
-தாமசு டிரவுட்மன்
———————————————————————————————————————-
ச்டூவர்ட் என்ற பேர் பெற்ற மெய்யியலாளர் 1827இல் வெளியிட்ட தம் நூலொன்றில் சமசுகிருதம் கிரேக்கத்தை ஒத்துள்ளது. ஏனெனில் அது
கிரேக்கமாகவே இருந்தது. அதை இந்தியாவிற்குள் நுழைந்த அலெக்சாண்டர்களின் வீரர்களிடமிருந்து ஒட்டுக்கேட்ட சூதுவாது நிறைந்த
பிராமணர்கள் தங்களது புரோகிதத்தொழிலுக்கு மக்களை அடிமைப்படுத்தும் நோக்கில் அதைத்தழுவி புரியாத ஒருவகை இலத்தீனைப்போன்றதொரு மொழியை உருவாக்கிக்கொன்டனர் என்றார்.
இக்கருத்தை முன்வைக்க மெய்னர்சின் நூலும், ஜி. எசு.பெயரின் நூலும் வழி காட்டின.
-பக்கம் 57
———————————————————————————————————————-
ஏறத்தாழ எல்லா இந்திய மொழிகளும் கிளை மொழிகளும் சிறிதும் பெரிதுமாக எழுதப்பட்ட படைப்புக்களைக் கொண்டுள்ளன. இவற்றை
எல்லாம் ஐரோப்பியர்கள் ஆராய்ந்து படிக்காவிட்டால் அவை குறிக்கும் மக்களைப்பற்றியும் தேசங்களைப்பற்றியும் எதுவும் அறிய முடியாமல் போய்விடும். ஆங்கிலேயர்களின் இலக்கியச்சொத்து இந்தியா.
லெய்டன்- –பக்கம் 76
———————————————————————————————————————-
சட்டம் இந்திய மண்ணுக்கே உரியதாக இருந்தது,,, வானியல் சோதிடம், கணிதம் என்பதில் இந்தியச்சாதனை உலக மக்களின் அன்றாட வாழ்வில் முத்திரை பதித்தது. இன்று வழக்கிலுள்ள அரபு எண்கள் உண்மையில் இந்தியாவின் கொடையாகும். சுழி அதைப்பயன்படுத்தும் இயற்கணிதம் மற்றும் முக்கோண கணிதம் ஆகியவற்றுக்கும் இந்தியாவே தாயகம். இவை ஐரோப்பாவிற்கு அரேபியா வழியாகச்சென்று மத்திய காலத்தில் ரோமன் எண்களாக மாறின. பக்கம் -82
———————————————————————————————————————-
பாணினி குறித்து ஆயிரத்துக்கும் குறையாத படைப்புக்கள் ஐரோப்பிய மொழிகளில் உள்ளதைக்காணும்போது பாணினி தொடர்ந்து படிக்கப்பட்டு வருவதை அறிய முடிகிறது. பக்கம்-92
———————————————————————————————————————-
அப்போதுதான் சென்னையில் அறிமுகமாகி இருந்த வைசூரி (பெரியம்மை) நோய்க்கான மருந்து குறித்து- எல்லிசு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
‘ தேவதையும் தன்வந்திரியும் உரையாடும் தன்மையில் அமைந்துள்ள இது. படிக்க ஆர்வமூட்டுவது.
இந்த ஊசி மருந்து நோயால் பாதிக்கப்பட்ட பசுவின் முலைக்காம்பிலிருந்து வந்தது என்றும் அது பஞ்சகவ்யத்தை அடுத்த ஆறாவது என்றும் மனித குலத்தை இந்த அச்சம் தரும்நோயினின்று காக்கப்பசு தந்தது என்றும் கூறுகிறது. பக்கம் 142
———————————————————————————————————————
சென்னை அரசாங்கம் 15/12/1797 இல் இந்திய மொழிகளில் நற்புலமை பெறும் அரசுப்பணியாளர்களுக்கு 1000 வராகன் பரிசளிக்கப்படும்
என அறிவித்தது.. ,,,,,,,,, ஒரு எழுத்தரின் மாத ஊதியத்தை விட இருபது மடங்கு இது அதிகமானது. பக்கம் 150
———————————————————————————————————————-
மாமடி வெங்கையா ( 1764-1834) மண்பாண்டம் மற்றும் பீங்கான் தொழிலில் ஈடுபட்ட கோமுட்டி வணிகர். வனிகத்திலிருந்து ஒதுங்கிய பின்
தெலுங்கு சமசுகிருத அகராதிகளை த்தொகுக்கும் பணியில் பதினான்கு ஆன்டுகள் ஈடுபட்டு அவற்றை நிறைவு செய்தார். இவரது
அறிவாற்றலைக்கண்டு பொறுக்காத பிராமணர்கள் இரண்டு முறை இவரது வீட்டை இடித்துத்தங்கள் எதிர்ப்பைத்தெரிவித்தனர்.
பக்கம் 180
———————————————————————————————————————-
திராவிடச்சான்று குறித்த எல்லிசின் கருத்து ஆகாயத்திலிருந்து குதித்தன்று என்பதும் புனித ஜார்ஜ்கோட்டைக் கல்லூரி அறிஞர் குழுவின் உதவியால் உருவானது என்பதும் தெளிவு. பக்கம் 206
———————————————————————————————————————-
திராவிடச்சான்று குறித்த ஆய்வில் எல்லிசுடன் ஈடுபட்ட சங்கரய்யா, பட்டாபிராம சாசுதிரி ஆகியோர் தெலுங்கு பிராமணர்களாவர் என்பது மனங்கொள்ளத்தக்கது. பக்கம் 224
———————————————————————————————————————-
காம்பெல் ,,,,,,,, இலக்கியத்தை மீட்டெடுத்தல் வளப்படுத்துதல் இந்தியர்களுக்கு அதற்கான ஊக்கம் தருதல் ,பிரிட்டிஷ் ஆட்சிப்பகுதியில் வாழும் மக்களுக்கு அறிவியல் கல்வி புகட்டுதல் அதைமேம்படுத்துதல் முதலியவற்றுக்கு ஆளுனர் ஆண்டுதோறும் ஒரு லட்சரூபாய் செலவழிக்க அனுமதிக்கும் நாடாளுமன்ற விதியையும் ஒரு குறிப்பில் எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்தசட்டம் 1830 இல் சார்லசு டிரெவெலின் மெக்காலே ஆகிய ஆங்கில சமயவாதிகள் எல்லிசு மறைவிற்குப்பின் கீழ்த்திசையியலார்
மீது தொடுத்த கல்விப்போராட்டத்துக்கான களமாக அமைந்தது. பக்கம் 236
———————————————————————————————————————-
சிதம்பர பண்டாரம் ( சிதம்பர வாத்தியார் பண்டார சாதியைச்சேர்ந்தவர்) மானவ தர்ம சாசுதிரம் என்கிற நூலை த்தமிழில் மொழிபெயர்த்தவர். அதற்காக ஔராயிரம் வராகனைப்பரிசாக பெற்றவர்,,,,,,அவர் மொழிபெயர்த்தது மனுவின் நீதி நூல் அல்ல.
பக்கம் 246
———————————————————————————————————————-
பிராகிருதம் சமசுகிருதத்தின் பிறப்பிடம், பிராகிருதம் சமசுகிருதத்தில் இருந்தே பிறந்தது. ,,,, இன்றும் விவாதப்பொருளாகவே இருக்கிற இரு வேறு கருத்துக்கள்,,,,, பக்கம் 263
———————————————————————————————————————-
இந்தியா ஒருகோட்பாட்டைக்கொண்டிருந்தது. ஆனால் அது இறந்துவிட்டது. அதற்கான காரணம் கடந்த கால இந்தியச் சிந்தனையாளர்கள் இன்றும் பொருத்தமானவர்களே என்பதை ஆழ்ந்த கவனத்துடன் விளங்கிக்கொள்ளாமல் போனதுதான்.
,,,,,,,, அவர்கள் ,, வரலாற்று நாயகர்களாகவும் ,வணக்கத்துக்குரியவர்களாக மட்டுமே நின்றுவிட்டனர். பக்கம் 271
essarci@yahoo.com
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 5
- வீடு
- அஷ்டாவதானம்
- நாயைப் போல் எனது வாழ்க்கை – My life as a dog
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன் ஏன் பரிதிபோல் விண்மீனாக வில்லை ? (கட்டுரை: 23)
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 1 (சுருக்கப் பட்டது)
- காற்றினிலே வரும் கீதங்கள் – 13 காதல் யாசகி நான் !
- தாகூரின் கீதங்கள் – 24 இறைவனைத் தேடி இல்லறத் துறவி !
- வார்த்தை ஏப்ரல் 2008 இதழ் – ஒரு முன்னோட்டம்
- சம்பந்தமில்லை என்றாலும் – திராவிடச்சான்று -எல்லிசும் திராவிடமொழிகளும்
- அவன்
- கோஸவா சுதந்திர பிரகடனமும் அதன் பின்னுள்ள உலக அரசியலும்
- தமிழ்,திராவிட இயக்க உணர்வாளர்கள் பார்வையில் திருக்குறள் – 1
- எழுத்துக்கலை பற்றி இவர்கள்………..18 வாசந்தி
- பாகிஸ்தான் பாரதி
- ஆ கா ய ம் வா ட கை க் கு…”வானவில் கூட்டம்” – உலகத் தமிழர் கதைகள் தொகுப்புக்கான அணிந்துரை
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- ‘திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி’ பற்றி
- முகமதியர் பார்ப்பனர் சர்ச்சை: ஒரு குறுக்கீடு
- விரைவில் இலண்டனில் ஈழத்து தமிழ் நூற் கண்காட்சி – 2008
- குழந்தை
- தமிழ்பிரவாகத்தின் அறிவிப்பு
- அடையாளங்களை அழித்துக் கொள்ளும் சிலேட்டுகள்
- மறைந்த எழுத்தாளர் அசுரனின் சிந்தனைகளைத் தொகுத்து வெளியிடும் திட்டம்
- தமிழுலகத்தின் ஆதரவில் – ‘பிரான்சு இலக்கியக் கூடல்’- மூன்றாம் சுற்று
- “நாம்” அறிமுகம் “சிங்கப்பூரில்”
- “ஏர்வாடியில் கண்டெடுத்த ஏட்டுச்சுவடிகள்”
- ஊழிக்கூத்து – எழுத்து, இயக்கம் – வெளி ரங்கராஜன்
- கழுதை வண்டிச் சிறுவன்
- நடை
- ஜனவரி இருபது
- மன்னியுங்கள் தோழர்களே…
- கடவுள் தொகை
- தித்திக்கும் தீந்தமிழ் எத்திக்கும் பரவட்டும்!
- பின்னை தலித்தியம்
- நினைவுகளின் தடத்தில் – (7)
- கவிதைகள்
- என் வீடு
- கர்நாடகம் தமிழகம்
- அடுக்குமாடி காலணிகள்
- கடவுள் வந்தார்
- ஆறு கவிதைகள்
- காட்டாற்றங்கரை – 1