எஸ்ஸார்சி
சைவாலயங்களில் சமசுகிருத மந்திரங்களே வேண்டும்.
ஆ. சக்கரமூர்த்திப்பிள்ளை, வெளியீடு சைவ சித்தாந்த சபை, சங்கரநயினார்கோவில், ஆகசுடு 1954.
விலை சொல்லப்படவில்லை.
————————————————————————————————–
இக்காலத்தில் தமிழ் நாட்டின் ஆலயங்களில் தமிழிலே அர்ச்சனை வேண்டுமென்று ஒரு சிலரால் பிரசிங்கிக்கப்பட்டு வருகிறது,,,,,
அது நாத்திகத்துக்கே சாதகம் சைவ உலகுக்கு பாதகமே,,,,,,, – முன்னுரையில்.
———————————————————————————————————————-
தமிழ்ச்சைவருக்குத் தமிழ் தாய்மொழியானால் சமசுகிருதம் தந்தை மொழியே. தமிழ் தமிழகத்துக்குரியதாயின் அவ்வகம் உள்பட அகில
புவனங்களுக்குமே சமசுகிருதம் சமமாக உரியது. ,,,,,,,மொழி பிரக்ஞை வேறு நூற் பிரக்ஞை வேறு. அந்நூல் கருவியாதலும் அவற்றின்
ஆசிரியன்மாரது தரத்தளவே என்க. – பதிப்புரையில்.
———————————————————————————————————————-
தமிழர்ச்சனையைப்புகுத்தினால் பிராமணர் வாழ்வு மங்கும் என்ற எண்னத்தால் சைவாலயங்களில் தமிழர்ச்சனையை ப்புகுத்த ஆனையிட்டுள்லனர். மற்றபடி இவர்களுக்கு சைவமும் தெரியாது சாத்திரமும் புரியாது. .சைவ சமயம் பிராமணர்களுடையது
என்று எப்புத்திசாலி சொன்னான்? சமசுகிருதம் பிராமணர்களுக்கே சொந்தமென்று எவ்வாராய்ச்சியாளன் கண்டான்?
இரண்டாம் பதிப்புரையில்.
———————————————————————————————————————-
ஆரியரும் திராவிடரும் ,,,, இந்தியாவுக்கு ,,,,,,குறைந்தபட்சம் பதினாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர்,,,,வந்தவர்கள். இமயமலையிலிருந்து
குமரிமுனை வரையில் பரவி,, ஒருவரோடொருவர் பிரிக்கமுடியாதபடி கலந்து,,,,,,சமயகோட்பாடுகளும் சமூக வழக்க பழக்கங்களும் கலைகளும் பண்பாடுகளும் பிரித்துக்காட்டமுடியாதபடி கலந்து போயிருக்கின்றன. – பக்கம்-1
———————————————————————————————————————-
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்கிறது திருமுறை. –பக்கம் 2
———————————————————————————————————————
தமிழ் ஒரு மொழி.. சைவம் ஒரு சமயம். மொழி வேறு சமயம் வேறு. பக்கம் 6
———————————————————————————————————————
தமிழ் மந்திர மென்ற மாத்திரத்தில்தெலுங்கு முதலிய பிற மொழிகளிலும் மந்திரந்தோன்றுவதற்கு இடங்கொடுக்கப்பட்டதாகும். அதனால் தமிழ் மந்திரம்,தெலுங்கு மந்திரம் ஹிந்தி மந்திரம் , குஜராத்தி மந்திரம், என மொழிப்பற்றிய வழக்குகளும் முளைக்கும். அது ஆரிய மந்திரம் திராவிட மந்திரம் நீ£க்ரோ மந்திரம் சீன மந்திரம் இலங்கை மந்திரம் என நிலம் பற்றிய வழக்குகளையும் பிறவற்றையும் தோன்றச்செய்யும்.
பக்கம் 10
———————————————————————————————————————-
சம்பந்தரை வணங்கி முக்தி பெற்றார் பலர். அப்படியே மாணிக்கவாசகரையும் வணங்கி முக்திபெறலாம்.. அவர் திருவாசகத்தை அருளினார்.
அதை ஆங்கிலத்தில் பெயர்த்தார் போப் என்பவர். இலண்டனில் ஒரு சிவாலயம் இருப்பதாககக்கொள்க.. அதில் அப்பெயர்ப்பைத்தானே
ஔத வேண்டும்.,,,,,, அங்கு போப் உருவம் வணங்கப்படலாமா? பக்கம் 12
———————————————————————————————————————
தமிழகத்தில் சைவாலயங்கள் முந்தித்தோன்றின. திருமுறைகள் பிந்தியவை.. அம்முந்திய காலத்தில் அவ்வாலயங்களில் எந்தத் தமிழ்
முறைகள் மந்திரங்களாக ஒதப்பட்டன ? பக்கம் 16
———————————————————————————————————————-
அத்தனை கோடிப்பேரும் பயபக்தியுடன் ஒதியும் மதித்தும் வருவது அரபு மொழிக் குரானே. உலகெங்கு முள்ள கத்தோலிக்கரும் பல மொழிகளுக்குரியர்தான்.. இலத்தீன்தானே அச்சமயத்துப் பாஷை பக்கம் 28
———————————————————————————————————————-
இராமன் வடநாட்டான். அவன் பிரதிட்டித்த சிவலிங்கமே இராமநாதர். நளனும் வடநாட்டானே அவன் திருநள்ளாற்றுச் சிவாலயத்தைக்கண்டான்,,,,,,,,,, விநாயகர் வடநாட்டுத்தெய்வமாம். அதனை மெய்யெனக்கொண்டால் அவரும் வடவரே.
,, கந்த புராணக் கந்தரும் வடநாட்டவராம். இராமன் முதலியோர் தமிழரல்லர். தமிழுமறியார். ஆயினுமென்?
அவரெல்லாம் சைவ சமயத்தினர். பக்கம் 36
———————————————————————————————————————-சமசுகிருதத்துக்கென ஒரு மாகாணமோ இனமோ குலமோ இல்லை. பக்க 38
———————————————————————————————————————-
இப்போது ஜன கண மன , ஜெண்டா ஊஞ்சா, என்பன தேசிய கீதங்கள். . அவையெல்லாந்தமிழுமல்ல. . அவற்றுக்குப் பொருள் தெரியாத தமிழர் பலராவர். அவர் அவற்றைத் தமிழிற் பெயர்த்தா முழங்கினர். பக்கம் 40
———————————————————————————————————————-சைவரே தமிழைக்கண்டார். தமிழரால் சைவத்தக்காண முடியாது. ,,,,,,,,,, பக்கம் 46
———————————————————————————————————————-
தமிழ் மந்திரங்களென்பது என்றுமில்லை. அவை நவீனரின் கற்பனையே.,,,,, . அவற்றை த் தமிழகச்சைவாலயங்களிலே ஒதவே கூடது.
அவ்வோதுகை சைவசமயத்துக்கு முற்றிலும் புறம்பானது.. அங்கு வேதாகமோக்த சமசுகிருத மந்திரங்களே ஒதத்தகுவன.,,,,,,,,,,,
சைவாலயங்கள் பரார்த்த பூசா நிலையங்கள். அங்குள்ள பூசைகளுக்கு விதி நூல் சிவாகமங்கள். அங்கு வழிபட வருபவர் எவரேனுமாகுக.
அவர் இவ்விதி நூலுக்கடங்கியே விரும்பவேண்டும். பக்கம் 48
———————————————————————————————————————-
மாகாண மொழிகள் எல்லாம் கூவல்கள். அவற்றுள் எதிலும் அச்சமயம் அடங்கிவிடாது. பக்கம் 53
———————————————————————————————————————-
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம் பக்கம் 56
———————————————————————————————————————
சமசுகிருத வேதங்களின் சாரங்களை சைவ சமயாச்சாரியர்கள்,திருமூல நாயனார், முதலியவர்கள் தேவாரம், திருவாசகம்,திருமந்திரம் முதலியதிருமுறைகளாகத் தமிழில் எல்லோரும் உணர்ந்து உய்யும் வண்ணம் பாடினார்கள்.,,,, ஆயினும் அவர்கள் ஒரு கோயிலிலாவது பூசை நடந்த முறையை மாற்றவோ பரார்த்த பூஜையைத்தாங்கள் பாடிய பாசுரங்களால் செய்ய வேண்டுமென்றோ சொன்னவர்களுமல்ல, நினைத்தவர்களுமல்ல. பக்கம் 58
———————————————————————————————————————-
. . .
- கவிதைகள்
- பெண் விடுதலைச் சிந்தனையில் தமிழ் இதழ்கள்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 4
- எழுத்துக்கலை பற்றி இவர்கள் – 17 வி.ஆர்.எம்.செட்டியார்.
- வார்த்தை – ஏப்ரல் 2008 இதழில்…
- கவிதை ஒட்டகங்களுடன் நகர்ந்து செல்கின்றது – அரபு இலக்கியங்கள் ஓர் அறிமுகம்
- Last kilo Byte – 10
- சுஜாதா : பத்திரிக்கைப் பேராளுமை
- பாரதியாரது தத்துவ மரபு
- அண்மையில் மறைந்த ஆர்தர் சி.கிளார்க் அவர்களின் நினைவாக…..
- திண்ணைப் பேச்சு – அன்புள்ள வஹாபி
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சுக்கிரன் வரட்சிக் கோளாய் எவ்விதம் மாறியது ?(கட்டுரை: 22)
- தோஹா ஆசிய திரைப்படவிழா – கிரீஷ் காசரவல்லி அவர்களின் “நாயின் நிழலிலே”
- காற்றினிலே வரும் கீதங்கள் – 12 உறங்காமல் விழித்துள்ளவள் !
- தாகூரின் கீதங்கள் – 23 உலகைப் பிரியும் நாளில் !
- ஊழிக் கூத்து
- சம்பந்தமில்லை என்றாலும்- சைவாலயங்களில் சமசுகிருத மந்திரங்களே வேண்டும் (ஆ. சக்கரமூர்த்திப்பிள்ளை)
- எழுதுகோல் தெய்வமா?
- தில்லைச் சிற்றம்பல மேடையில் ஏறியது தமிழ்! …மார்ச் 2 அன்று!
- அழியும் தருவாயில் உண்மையானப் பெண்ணிலக்கியங்கள்
- காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் – நூல் வெளிவந்துள்ளது
- எனிஇந்தியனின் வார்த்தை இதழ், நான்கு புதிய புத்தகங்கள் வெளியீடு
- மக்கள் சக்தி இயக்கம் – மத்திய மாநில பட்ஜெட் பொது விவாதம்
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 2 பாகம் 4
- பக்தி நிலை வரும்போது__-
- என்னைக் கொஞ்சம் தூங்கவைத்தால்
- ரோபோக்களின் ஆசீர்வாதம்
- அன்புள்ள அப்பாவுக்கு !
- அடகுக் கடை
- கனவு மெய்ப்பட வேண்டும்!
- அநிச்சயக் கோடுகளில் உதிரும் புன்னகைகள்
- கைவளைக்கும் இல்லை கனிவு!
- முறிப்புக் கிராமம்
- கவிதைகள்
- கூவத்தமிழன் கூவுகிறேன்!
- நிலவுக்கும்…….