சம்பந்தமில்லை என்றாலும் – தமிழ்நாடு-நேற்று இன்று நாளை (எடிடர்: என். முருகானந்தம்)

This entry is part [part not set] of 41 in the series 20080320_Issue

எஸ்ஸார்சி


சம்மந்தமில்லை என்றாலும்
தமிழ்நாடு-நேற்று இன்று நாளை
எடிடர்: என். முருகானந்தம். வெளீடு: நியூ ஜெர்சி தமிழ் சங்கம் யு எசு ஏ, முதற்பதிப்பு- 1997 விலை சொல்லப்படவில்லை.
————————————————————————————————————–
தாங்கள் விரும்பியாங்கு கட்டுரைகள் எழுதிப்பெறத்தக்க அறிஞர்கள் முகவரிப்பட்டியல் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்பட்டுவிட்டது.
அன்புகூர்ந்து பொறுத்தாற்றிக்கொள்ளுங்கள்.
குன்றக்குடி அடிகளார் -புகுமுன் (1993ல்)
—————————————————————————————————————-
குனமும் குற்றமும் நாடுதல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பார்வை. இப்பார்வையினால் இந்தியாவும் தமிழகமும் வளர்ச்சி பெறவேண்டும்.
ந. முருகானந்தம் -முன்னுரயில்.
—————————————————————————————————————–
பஞ்சம் ஒரு புறமும் வெள்ளம் ஒரு புறமுமாக நாசம் விளைவித்த நிலை மாறியுள்ளதா? ஆறுகள் தேசிய ஒற்றுமையின் அடையாளச்சின்னங்களாக பாடப்பட்டு வருகின்றன. அரசியல் வாதிகளும் இதையே சொல்லி வருகிறார்கள்.
-ந.மு,வுடன் கோ.இராஜாராம்.
———————————————————————————————————————-
உலகின் செய்தி வலையோ விரிவடையாத காலம்.
கிராமம் சார்ந்தே தமிழ்க்குடும்பங்கள் வாழ்ந்திருந்தன. ஒரு தமிழ்க்குடும்பம் என்பது, தாத்தா, பாட்டி,அப்பா, அம்மா, அண்ணன்,தம்பி,
தங்கைகள், சித்தி, அத்தை, பெரியப்பா,சித்தப்பா,மாமா, மாமாவின் பெண்கள்,கல்யாணம் பண்ணிக்கொள்ளாத சித்தப்பா,பால்ய விவாகமாகி
கணவனை இழந்த தூரத்து அத்தை,பூனைகள், ஆடுகள், வளர்ப்பு அணில்,சிலவேளை மைனா, நாய்க்குட்டிகள்,பசுக்கள்,ன்னும் இரைதேடி
அடுப்படி வரைவரும் குருவிகள், எனத் தன்னளவில் பெரியது. -எசு.ராமகிருஷ்ணன்
———————————————————————————————————————
வள்ளலாரும் வள்லல்பச்சையப்ப முதலியாரும் ஒரு காலத்தில் குளித்து மகிழ்ந்த தூய கூவம் நதி சென்னைக்கு இன்று தீரா அவமானச்சின்னமாகி விட்டது. ,,,,,,,,,,,,,,,,, திருச்சி இராமகிருஷ்ணா தியேட்டர் பின்புறம் முக்கியச்சாலையொட்டி ஔடும் வாய்க்காலின்
பெயர் ‘மானம் கெட்ட வாய்க்கால்’ . ,,,,, அதிகாலையில் இந்த வாய்க்கால் ஔரம் காலைக்கடன்களை முடித்து விட்டு இதிலேயே
இப்பகுதி மக்கள் குளித்து வந்தனராம்,,,,,
சென்னை காமராஜபுரம் பகுதியில் தெருக்கூட்டும் துப்புரவுப்பணியை மேயர் இசுடாலினே தொடங்கி வைத்துப் பேசியபோது அவர் உள்ளக்கிடக்கையை அறிய முடிந்தது.
-. இ. ஜே. சுந்தர்.
——————————————————————————————————————-
வேதகாலத்து ஆரியச் சமுதாயத்தில் வருணாச்சிரம தர்மம் கடைபிடிக்கப்பட்டது. பிறப்பால் அல்ல.
-வீ£. செல்வராஜ்
——————————————————————————————————————-
பிரபலமாக இருப்பவரைத் தலைமைப்பண்புடையவர் என்று மக்கள் தவறாகக் கருதுகிறார்கள்.,,, மக்களுக்குப்புரியாத மொழியிலோ
அல்லது மக்களுக்கு விளங்காத சொற்களைச்சேர்த்து மடைதிறந்தாற்போல் பேசுபன் அறிவாளி என்று மக்கள் நினைக்கிறார்கள்.
-ச.முத்துக்குமரன்
———————————————————————————————————————-
அரபு, பாரசீக. இந்துசுதானி மொழிகளிலிருந்து தமிழுக்கு வந்த ஆட்சிச்சொற்கள்.
இனாம், இருசால், கஜானா, பசலி, மராமத்து, ஜப்தி, ஜமாபந்தி, ஜாமீன், அமீனா, முனிசிப், பிர்க்கா, மசோதா,குமாசுதா, பந்தோபசுது,
பிராது,பஜார், செலான்,நமூனா,ரசுதா,ராஜினாமா,முசாபரி பங்களா,சிரசுதார்,டபேதார்,தாசில்தார்,கிசுதி, டேவணி போன்ற பல
ஆட்சிச்சொற்கள் இவை தமிழில் ஊடுருவி தமிழ்ப்பயன்பாட்டைக்குறைத்தன.
-வை.பழனிச்சாமி
———————————————————————————————————————-
ஔரத்து மக்களின் சிக்கல்கள் திரண்டு இலக்கியமாக வடிவம் எடுக்கும்போதுதான் உன்னத இலக்கியங்கள் பிறந்திருக்கின்றன. இந்த நோக்கில் தேசியம், என்ற அடிப்படையில் தமிழினமும்,சாதி என்ற அடிப்படையில் தலித்துக்களும்,பால் என்ற அடிப்படையில் பெண்ணும் ஔரத்து மக்களாகக் கருதத்தக்கவர்கள் ஆவர். எதிர்காலத் தமிழ் இலக்கியம் இவர்கள் கையில் தான் பேரொளி கொண்டு பெருநெறி பிடித்தொழுகப்போகிறது. – -பஞ்சாங்கம்.
———————————————————————————————————————-
தென்னக இசைக்கு என்று ஒரு பல்கலைக்கழகம் தோன்றுதல் வேண்டும். – வீ. ப. கா. சுந்தரம்
———————————————————————————————————————-
என்னதான் வியாபாரிகள் சினிமா தயாரிப்பைக்கட்டுப்படுத்தினாலும் கலைஞனால் அவற்றிலிருந்தெல்லாம் முடிந்த அளவு மீறமுடியும்.
பிரிட்டீஷ் ஆட்சியின் போது தணிக்கையில் மாட்டிக்கொள்ளாது சுதந்திர உணர்வைக் குறிப்பாலும் குறியீட்டாலும் உனர்த்த முடிந்த
சினிமாக்கலைஞர்களால் வியாபாரிகளையாசமாளிக்க முடியாது.
-ரெங்கராஜன்
—————————————————————————————————————- கல்கி, ராஜாஜி, நாமக்கல் கவிஞர், ம.பொ.சி ஜீவா, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கே.டி.கே தங்கமணி இவர்கள் புகழ் உச்சியில் அதாவது மக்களிடையில் பிரபலமாக இருந்தவரை தமிழ் நாட்டில் காங்கிரசு தேசியம் தழைத்து வந்தது.
பா.கிருஷ்னன்
———————————————————————————————————————-தேவிகுளம் பீர்மேடு தாலுக்க்காக்களை கேரளம் அபகரித்துக்கொண்டதன் விளைவாகப் பெரியாறு அணை கேரளம் வசம் போயிற்று.
பெரியாறு நீர்ப்பிரச்சினை உருவாக்கப்பட்டு விட்டது. –-பழ. நெடுமாறன்.
———————————————————————————————————————
1989 ல் விளையாட்டாய் துவங்கிய -வர்ல்ட் வ்ய்டு வெப்- என்னும் உலகளாவிய கணிப்பொறி வலைப்பின்னல் இப்போது ஒரு மிகப்பெரிய
கலாச்சார மாற்றத்தைக்கொண்டுவரப்போகிறது.,,,,,,,,,,,,, தனிமையை இனிமை ஆக்கும் இந்தத் தந்திரங்களின் சமூக இயல் தாக்க்கத்தை
இப்போது யாரும் சிந்திக்க வில்லை. -சுஜாதா
———————————————————————————————————————
சமயம் மனிதனை உழைக்காமல் செல்வன் ஆக்க அல்ல. அவனை வாழ்வாங்கு வாழச்செய்து வாழும் நிலையை உயர்த்தத்தான்.
‘நடமாடக்கோயில் நம்பற்கு ஒன்றீயில்
படமாடக்கோயில் பகவற்கு அது ஆமே.’ -பொன்னம்பல அடிகளார்.


Series Navigation

author

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

Similar Posts