எஸ்ஸார்சி
தமிழாக்கம்-.ஏ.ஜி. எத்திராஜுலு, ஆர். பார்த்தசாரதி, வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுசு பிரைவேட் லிமிடெட்
சென்னை-600098 முதல் பதிப்பு; 1985 விலை ரூ.20 பக்கம்-199
ஆயிரமாயிரம் ஆண்டுக்காலமாக வளர்ந்து வந்துள்ள அறிவியலை ஆதாரமாகக்கொண்டு வளர்ந்தது மார்க்சீயம்.
பொய்யும் திரிபும் கற்பனையும் உத்தேசமும் மார்க்சியத்துக்கு உடன்பால்ல. உண்மையும் வாய்மையும் அதன் உரைகல்.
பதிப்புரையில்
கடவுளை நம்புபவர்கள் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மதத்திற்காக போர்களும் கலவரங்களும் செய்து ரத்த ஆறு ஔடச்செய்து
வருகின்றனர். ஆனாலும் கடவுள் தோன்றி எந்தவிதச் சமாதானமும் ஏற்படுத்தவில்லை.
பக்கம்-5
பைபிளை கடவுள் அருளியதாகக்கருதியிராவிட்டால் இன்னும் எத்தனையோ விஞ்ஞானிகளின் இன்னுயிர்கள் பாத்காக்கப்பட்டிருக்கும்.
அரேபிய முசுலிம் படைவீரர்கள் எகிப்தின் மீது படைஎடுத்தபோது அலெக்சாண்டிரியா நகரிலிருந்த மாபெரும் நூல் நிலையத்தை
கண்மூடித்தனமாக தீயிட்டுக்கொளுத்தினர். அந்நூல் நிலையத்தில் பல நூற்றாண்டுகால கிரேக்க அறிஞர்களின் உழைப்பு
நூல்களாகக்குவிந்திருந்தது. குரானைக் கடவுள் அருளியதாகக்கருதியிராமல் இருந்திருந்தால், கிரேக்க தத்துவ மேதைகளின் எண்ணற்ற ஒப்பற்ற நூல்கள் அழிந்திருக்காது. பக்கம்-13
எந்த ஒரு நூலையும் கடவுள் படைத்ததாகக்கருதுவது, மனிதரிடையே சகிப்புத்தன்மையை அழித்துவிடுகிறது.
பக்கம்-13
எல்லா மத நூல்களுமே தத்தம் காலத்திய முரட்டுப்பிடிவாதங்களாலும் மூட நம்பிக்கைகளாலும் அறியாமைகளாலும் பிணைக்கப்பட்டுள்
ளன. பக்கம்-14
மகத ராச்சியத்தைச்சேர்ந்த சாரிபுத்திரர், மவுத் கல்யாயனர்,,மகாகாசியமர் மட்டுமல்ல மிகத்தொலைவிலிருந்த உஜ்ஜயின் நகர ராஜ புரோகிதரான மகா காத்யாயனர் போன்ற பிராமண அறிஞர்களும் புத்தரின் சீடர்கள் ஆனார்கள்.
பக்கம்-29
நாகசேனர் பஞ்சாபில் இமய மலைக்கருகில் உள்ள கஜங்கல் கிராமத்தில் சொனத்தர் பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
பக்கம்-56
நாகேசனார் இந்திய கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாகவும் நாகரீகத்தின் கேந்திரமாகவும் விளங்கிய சியால்கோட்டில்
பிறந்தவர் என்பதும் இந்தியதத்துவ ஞானத்தோடு கிரேக்க தத்துவ ஞானத்தையும் அறிந்ததனாலேயே மினாண்டர் போன்ற தர்க்க விற்பன்னர்களைத்திருப்திப்படுத்த முடிந்தது என்பதும் இங்கே ஞாபகப்படுத்திக்கொள்லத்தக்கவையாகும்.
பக்கம்-65
நாகார்ஜுனர் (கி.. பி. 175) விதர்பாவில் ஒரு பிராமணக்குடும்பத்தில் பிறந்தார்.
நாகர்ஜுனரின் கருத்துப்படி சூனியவாதமென்றால் உலகமும் அதிலுள்ள ஜடப்பொருட்களும் உயிர்களும் எந்த ஒரு மாற்றமற்ற தத்துவம்
( ஆன்மா, பொருள் முதலியவை) இல்லாமல் சூனியமாகவே இருக்கின்றன. அதாவது உலகம் நிகழ்ச்சிகளின் திரட்டே தவிர , பொருட்களின் திரட்டு அல்ல. பக்கம்-71
அசங்கர் (கி. பி. 350) பெஷாவாரிலிருந்த ஒரு பிராமண க்குடும்பத்தில் பிறந்தவர்.
அழிவுடமை வாதம்: ஒரு பொருள் அழிகிறது.
அதற்கு பதில் வேறு பொருள் உற்பத்தியாகிறது. பொருட்களெல்லாம் ஒவ்வொரு வினாடியும் புதிய புதிய உருவத்தில் தோற்றமளித்துக்கொண்டே இருக்கின்றன. ஆகவே எந்தப்பொருளின் உருவமும் நிலையானதல்ல.
பக்கம்-77
திக்நாகர் ( கி. பி. 425 ) தமிழ் நாட்டில் காஞ்சீபுரம் அருகே சிம்மவக்கிர என்னும் கிராமத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
இயற்றிய நூல் பிரமாண சமுச்சய் இன்று திபேத்திய மொழியில் மட்டுமே கிடைக்கிறது.
பக்கம்-81
தர்மகீர்த்தி ( கி.பி. 600 ) வட தமிழ் நாட்டிலுள்ள சோழ மண்டலத்தைச்சேர்ந்த திருமலை என்னும் கிராமத்தில் ஒரு பிராமணர் குடும்பத்தில் பிறந்தார். ,,,,,,,தர்மகீர்த்தி நாளந்தா சென்று அங்கு அக்காலத்திய மாபெரும் விஞ்ஞான தத்துவ மேதையும் பல்கலைக்கழகத்தின்
முதல்வருமான தர்மபாலரின் சீடராகி பிட்சு சங்கத்தில் சேர்ந்துவிட்டார். பக்கம்-83
வேத நூல்களை பிரமாணமாக நம்புதல், ஒரு கடவுளை சிருஷ்டி கர்த்தாவாக ஒப்புக்கொள்ளுதல், புனித நீராடி மதத்தை பின்பற்றுவதாக
கருதுதல், சிறிய ஜாதி என்று வெறுப்பது பெரிய ஜாதி பெருமை அடித்துக்கொள்ளுதல், பாவங்களை கழுக்கொள்ள உண்ணாவிரதம்
போன்றவற்றை கைக்கொண்டு உடலை வருத்துதல் – இந்த ஐந்தும் மூளைகெட்ட மனிதர்களுடைய முட்டாள்தனத்தின் அடையாளங்களாகும். -தர்மக்கீர்த்தி பக்கம்-110
சங்கராச்சாரியார் தம் அறிவாற்றலாலும் வாதத்திறமையாலும் பொளத்தர்களை வாதில் வென்று பொளத்தத்தை அழித்தார் என்ற தவறான கருத்து சிலரிடம் உலவுகிறது.,,,,, இந்தியாவிலும் வேறு நாடுகளிலும் உள்ள பிராமணீய பெளத்த வரலாற்று ஆவணங்களை முழுமையாக புதைபொருள் ஆய்வுகளின் துணையுடன் ஆய்வோமானால் இக்கருத்தை நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது.
பக்கம்-185
பெளத்த வீழ்ச்சி அடைவதற்கு முதற்பெருங்காரணம்-வஜ்ராயனம்,,,,,,,,,,,, இரண்டாவது காரணம் வடமேற்கிலிருந்து படைஎடுத்து வந்த துருக்கியர் கொடுத்த மரண அடி. பக்கம்-187
ஏன் சில மக்கள் குருடு செவிடு நோய் நொடி பலவீனம் அறிவீனமுடன்பிறக்கிறார்கள்.? ஏன் வேறு சிலர் புத்திசாலிகளாக உடல் நலத்துடன் கண்பார்வையுடன் பிறக்கிறார்கள்? இந்தவேற்றுமை ஏன்? இந்த வேற்றுமைகள் கடவுளால் படைக்கப்பட்டவை என்றால் அது அநீதி அல்லவா?
essarci@yahoo.com
- குடும்பதின வாழ்த்துக்கள்
- திப்பு சுல்தானும், திரிபுவாதிகளும், அண்டப் புளுகர்களும் – II
- இரண்டு தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் – ஆங்கிலத்தில்
- ராஜ்தாக்கரேவின் ராஜாபார்ட் நாடகமும் சில உண்மைகளும்
- கோட்டாறு பஃறுளியாறான கதை
- நந்தனார் தெருக்களின் குரல்கள் – விழி. பா. இதயவேந்தனின் படைப்புலகம்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் விழும் அகிலக் கற்கள் !(கட்டுரை: 17)
- கங்கா பிரவாகமும் தீபாவளி விருந்தும்
- “கடைசி பேருந்து”
- ‘எழுத்துக்கலை பற்றி இவர்கள்………….13 புதுமைப் பித்தன்
- தாகூரின் கீதங்கள் – 17 – உன்னுள்ளே தாய் மகத்துவம் !
- மொழிபெயர்ப்பு கவிதைகள்
- National Folklore Support Centre
- நீதி, தர்மம், திருவள்ளுவர், சமணம்: ஜெயமோகன் கட்டுரை குறித்து..
- ‘உலக தாய்மொழி நாள்’
- பள்ளிகளில் தமிழைக் கட்டாயமாக்கிய அரசின் சட்டம்
- வெயில் மற்றும் மழை சிறுகதைகள்/ மீரான் மைதீன் : காலப் பம்பரத்தைக் கையில் ஏந்திக்கொண்டு
- இன்னும் ஓர் இஸ்லாமிஸ்ட்
- FILMS ON PAINTERS
- எஸ். ராமகிருஷ்ணன் இணையதளம்
- “பாலைவனத்தில் பூக்களைத் தேடி”
- செக்கு மாடும் பௌர்ணமி நிலவும்
- தீயாய் நீ!
- ஒரு நாள் உணவை…
- பஞ்சவர்ணக்கிளிகள் பேசுமா?
- யுவராசா பட்டம்
- “தெருவிளக்கும் குப்பிவிளக்கும்”
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 1 பாகம் 8
- சம்பந்தமில்லை என்றாலும் பௌத்த தத்துவ இயல்- ராகுல்சாங்கிருத்தியாயன்
- கலைஞர் துணிந்து முடிவெடுக்க வேண்டிய நேரம் இது!
- லூதரன் ஆலயம், லூதரன் சபை, லூதரனியம் மார்டின் லூதர் பெயரால் அழைக்கப்படும் கிறிஸ்தவ சமயப் பிரிவு
- கஸ்தூரி ராஜாராம்: நடப்பு அரசியலுக்குப் பொருந்தாத அரசியல்வாதி
- வன்முறையைத் தூண்டும் விதமாக விகடன் நடந்து கொள்வதை வருத்தத்துடன் கண்டிக்கிறோம்
- மலையாளம் – ஓர் எச்சரிக்கை
- பின்னை தலித்தியம்:அர்சால்களின் எழுச்சி
- முடிவென்ன?
- புலம்பெயர்ந்த கனடா
- காற்றினிலே வரும் கீதங்கள் -7 எனது அடங்காத மோகம் !
- ஒரு தாய் மக்கள் ?
- புலன்கள் துருத்தும் உணர்வுகள்
- பாலா என்றழைக்கப்பட்ட சத்தீஷ்