சம்பந்தமில்லை என்றாலும் – ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- (மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் )

This entry is part [part not set] of 40 in the series 20080124_Issue

எஸ்ஸார்சி.


ஒப்பியன் மொழிநூல் திராவிடம் தமிழ்- மொழி ஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் எழுதியது.. வெளியீடு திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் .154 டிடிகே சாலை.சென்னை-18 முதற்பதிப்பு 1940. விலை சொல்லபடவில்லை. பக்கம் ந~ ந~ ச
———————————————————————————————————————-
தமிழ் நாட்டில் பல நூற்றாண்டுகளாக ப்பல தமிழ்ப்பகைவர் பலவாறு தமிழைக்கெடுத்தும் மறைத்தும் வைத்திருப்பதனால் அவற்றை எடுத்துச்சொல்வது இந்நூல் முடிபுக்கும் இன்றியமையாததாயிருக்கிறது.- முகவுரையில்
——————————————————————————————————————-
கருத்த பார்ப்பானையும் சிவத்தப் பறையனையும் நம்பக்கூடாது என்பது பழமொழி. பார்ப்பனருக்குரிய நிறம் வெள்ளை என்பதும் வெயிலிற்காயும் பறையனுக்குரிய நிறம் கருப்பு என்பதும் இவர் இதற்கு மாறான நிறத்தினராயிருப்பின் அது பிறவிக்குற்றத்தைக்குறிக்கும் என்பதும் இதன் கருத்து -பக்கம் 3
———————————————————————————————————————-
ஆரியப்பிராமணர் தமிழப்பார்ப்பாரின் தொழிலை மேற்கொண்டபின் தாமும் அவ்வாறு அழைக்கப்பட்டு வருதல் இயல்பானதே. அல்லாவிடின் வடமொழிப்பற்றுள்ள பிராமணருக்குப் பார்ப்பார் என்னும் தனித்தமிழ்ப்பெயர் வழங்கிவரக்காரணமில்லை.
-பக்கம் 20
———————————————————————————————————————
பார்ப்பார் தமிழ்நாட்டிலிருந்தமைபற்றித் தொல்காப்பியத்திற் கூறப்பட்டனரேயன்றி அவர் தமிழரே என்னும் கருத்துபற்றி அன்று. இதுபோது தமிழ்நாட்டுக் குலங்களைக்குறிப்பின் ஐரோப்பியரும் சட்டைக்காரரும் குறிக்கப்படுவரன்றோ? அங்கனமே தொல்காப்பியர் காலப்பார்ப்பனருமென்க. – பக்கம்-37
———————————————————————————————————————
தமிழகத்தில் உள்ள பார்ப்பனர் தொன்றுதொட்டு இரு சாரர் ஆவர். அவருள் ஒரு சாரார் தமிழை வளர்த்தோர் அவர் அகத்தியர் தொல்காப்பியர் முதலானோர். மற்றொரு சாரார் தமிழைக்கெடுத்தோர். பக்கம்-39
——————————————————————————————————————–
விரலாற் சுட்டி எண்ணக்கூடிய சிறு கூட்டமொரு மாபெரும் நாட்டையும் வலக்காரத்தால் கைப்பற்றலாம் என்பதற்கு தமிழ் நாட்டுப் பார்ப்பனீயத்தைப்போன்ற எடுத்துக்காட்டு இவ்வுலகிலேயே இல்லை. –பக்கம்-41
———————————————————————————————————————–செங்குட்டுவ கனக விசயப்போர் பதினெண் னாழிகையும்
பாரதப்போர் பதினெண்நாளும்
இராமவிராவணப்போர் பதினெண் மாதமும்
தேவாசுரப்போர் பதினெண் ஆண்டும்
ஆரிய தமிழ்ப்போரோ பதினெண் நூற்றாண்டாக நடந்து வருகிறது.. பக்கம்-59
——————————————————————————————————————-
ஜெர்மனியில் ஹிட்லர் யூதரைத்துரத்துவது கொடிதே. ஆனால் அவ்யூதரை காப்பதற்குரிய வழிகளைத்தேடாமல் யூதரும் ஜெர்மானியரே என்று சொல்லின் எங்கனம் பொருந்தும் ? பக்கம்-64
———————————————————————————————————————-
அநுமன் மகேந்திரமலையையினின்று கடலைத்தாண்டி இலங்கைக்குச்சென்றதாக இராமாயணம் கூறுகின்றது
தாமிரபரணி நதியைத்தாண்டுங்கள்.. அதைவிட்டு அப்பாற் சென்றால் பாண்டி நாட்டின் கதவினைக்காண்பீர்கள். அதன் பின் தென்சமுத்திரத்தையடைந்து நிச்சயம் பண்ணுங்கள். ,,,,,,,, என்று சுக்கிரீவன் அங்கதனுக்குச்சொன்னதாக வால்மீகி முனிவர் கிஷ்கிந்தா காண்டத்திற் கூறியிருப்பதினின்று,,,,
பக்கம்-39 /2
———————————————————————————————————————-
அநுமன் குமரி ( மகேந்திர ) மலையினின்று கடல் தாண்டினானென்றும் வானர வயவர் குட( மேற்குத்தொடர்ச்சி ) மலை வழியாகத் தெற்கே சென்றார் என்றும் கற்களைக்குவித்தே அணைக்கட்டினார் என்றும் இராமர் அகத்தியரிடமிருந்து வில் பெற்றனர் என்றும் இராமயணம் கூறுவதாலும் பக்கம்-46/2

அநுமன் குமரி ( மகேந்திர ) மலையினின்று கடல் தாண்டியதும் இராமர் வானரப்படைத்துணையால் அணைக்கட்டியதுமான இடம் இப்போது இந்துமாக்கடலில் உள்ளது.. இப்போது இராமர் அணைக்கட்டு என்று வழங்குமிடம் பிற்காலத்தில் பரிந்தையாலும், எரிமலைக் கொதிப்பாலும் புயலாலும் இயற்கையாய் அமைந்த கல்லணை ஆகும்
பக்கம்-46/2
———————————————————————————————————————-

பால் வேறு ,குலம் வேறு. அந்தணர், அரசர்,வணிகர்,வேளாளர் என்பன பால்கள்.,,, பிள்ளை,முதலியார்,மறவர் இடையர் என்பன குலங்கள்.
பார்ப்பார் என்பது ஒரு குலம். பார்ப்பாரைக்குறிக்கும்போதெல்லாம் பார்ப்பார் என்ற குலப்பெயர் குறித்தே கூறுவர்.
அந்தணர், ஐயர், அறிபர், தாபதரென்னும் பெயர்களெல்லாம் முனிவரைக்குறிக்கும். – பக்கம்-96/2
———————————————————————————————————————
தமிழம்-த்ரமிள ம்-த்ரமிட ம்-த்ரவிட ம்-த்ராவிடம் பக்கம்-194/2
——————————————————————————————————————–
அனுமான் கடல் தாண்டும்போது நாகரைக்கண்டானென்றும் ,மைந்நாகமலையில் தங்கினார் என்றும், வீமன் துரியோத்னனால் கங்கையில் அமிழ்த்தப்பட்டபின் நாகநாடு சென்றானென்றும் சூரவாதித்த சோழன் கிழக்கேசென்று நாகன்னிகையை மனந்தானென்றும் கூறியிருத்தல் காண்க.
இன்றும் நாகர்கோவில், நாகப்பட்டினம், நாகூர், நாகபுரம், சின்னநாகபுரம் முதலிய இடங்கள் இந்தியாவின் கீழ்க்கரையில் அல்லது கீழ்ப்பாகத்திலேயே இருத்தல் காண்க பக்கம்-229/2
———————————————————————————————————————-
தன்நாடான இங்கும் தமிழுக்கு இடமில்லை என்றால் வேறு எங்கு அது செல்லும்? -922/2
———————————————————————————————————————–

Series Navigation

author

எஸ்ஸார்சி

எஸ்ஸார்சி

Similar Posts