குறிப்பேட்டுப் பதிவுகள் -4!

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

வ.ந.கிரிதரன்[அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். காதல், அரசியல், சமூகம், இயற்கை, பாரதி, பிரபஞ்சமென விரியும் பதிவுகளிவை..- வ.ந.கி -]

13.1.1983:
மனிதரும், இயற்கை, புற, அக உலகத்துடனான மோதல்கள் அல்லது ஆதிமனிதரிலிருந்து …(ஒரு சிக்கலான பிரச்சினை பற்றிய கண்ணோட்டம்).

இன்றைய மனிதர் தம்மை அதிபெரும் மேதாவியென்றும் , நாகரிகத்தின் உச்சணிக் கொப்பிலிருப்பவராகவும் மிகவும் பெரிதாகவே இயலும் போதெல்லாம தம்பட்டமடித்தும் பீற்றியும் கொள்கின்றார். கொலம்பியா விமானங்களிலேறி இப்பிரபஞ்சத்தையே சுற்றி வந்தவர் போல் கொக்கரித்துக் கொள்கின்றார். செயற்கையிருதயமென்ன, செயற்கை மனிதரையே உருவாக்கி விடுவோமென்பதுபோல் ஆர்ப்பரித்துக் கொள்கின்றார். இவையெல்லாம் மனிதரின் அறியாமையின் விளைவிலிருந்துருவான கர்வத்தின் வெளிப்பாடுகளே தவிர வேறல்ல.

ஆதிமனிதர், குகைகளிலும், காடுகளிலும், அலைந்து திரிந்த ஆதிமனிதர், இயற்கையுடன் பெரிதும் போராடியே வாழவேண்டியிருந்தது. ஆசை, கோபம், பொறாமை முதலான குணங்கள் அறியாமையில் கிடந்த ஆதிமனிதரைப் பெரிதும் ஆட்கொண்டதன் விளைவாக ஈவு, இரக்கமற்ற முறையில் கொலைகள், மோதல்கள் வெடித்துச் சிதறின; இரத்தம் ஆறாகப் பெருகியோடியது. பெண்களே சமுதாயத்தின் முக்கிய உறுப்பினர்களாக இருந்த காலகட்டமது. பெண்களின் தலைமையிலேயே குழுக்கள், குழுக்களாக ஆதிமனிதக் குழுக்கள் வாழ்ந்து வந்தன. ஒவ்வொரு குழுக்களின் தலைவராகப் பெண்ணேயிருந்தாள். ஆண்கள் இனப்பெருக்கம் செய்வதற்கும், உணவு சேகரிப்பதற்குமே பயன்படுத்தப்பட்டார்கள். இயலாதவர்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள்.

காலம் உருண்டோட, உருண்டோட மனிதரது சிந்தையிலேற்பட்ட வளர்ச்சியின் விளைவாக இயற்கைக்கும், மனிதருக்குமிடையிலான மோதலிற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. உண்மையில் முற்றாக ஒழிக்கப்படவில்லையென்றே கூறலாம். இன்னும் ஆறுகள் பெருகி ஊர்கள் நாசமாவதும், எரிமலைகள் பொங்கி உருகுவதும், சூறாவளிகள் உயிர்களைச் சுருட்டிச் செலவதும் சர்வசாதாரணமல்லவா. இயற்கையை வெற்றி கொள்ளத் தொடங்கிய மனிதரின் வாழ்நிலைகளிலும் மாற்றங்கள் பல உருவாகின. நாடோடிகளாகத் திரிந்தவர் நாடு, நகரங்களை உருவாக்கினார். உற்பத்திகளின் விளைவாக ஏற்றத்தாழ்வுகள் உருவாகின. ஏழை, பணக்காரர் என்று மனித சமுதாயம் பிரிவுபட்டதிலிருந்து இன்றைய முதலாளித்துவ சமுதாய அமைப்பு வரையிலான காலகட்டத்தில் மனித சமுதாயம் பலவிதமான சமுதாய அமைப்புகளைக் கண்டு கொண்டது. எவ்வாறு இத்தகைய அமைப்புகள் (அடிமை உடமைச் சமுதாய அமைப்பு, நிலப்பிரபுத்துவ அமைப்பு முதலியவை) நீங்கி முதலாளித்துவ அமைப்பு உருவானதோ அவ்வாறே காலவோட்டத்தில் இவ்வமைப்பு நீங்கி இதனிலும் மேலானதொரு அமைப்பு பொதுவுடமை வரும்.

ஆனால் மனிதரின் இதுவரை கால வரையிலான வரலாற்றினைப் பார்ப்போமாயின் ஒன்றினை வெகு தெளிவாகவே உணர்ந்து கொள்ளலாம். ஆதியில் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான பிரதானமான மோதல் நிலவியது. மனிதர் அச்சமயம் தமக்குள்ளும் மோதிக் கொண்டனர். ஆனால் இத்தகைய மோதல்கள் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்களுடன் ஒப்பிடும்பொழுது மிகச்சிறிதளவாகவேயிருந்தன.

மாறாக, மனிதர் இயற்கையைப் பெரிதும் அடக்கிய காலகட்டத்திலிருந்து உருவான, இன்று வரையிலான காலகட்டத்தினை எடுத்துப் பார்ப்போமாயின் மனிதருக்கும் மனிதருக்குமிடையிலான மோதல்களுடன் ஒப்பிடும்பொழுது , மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்கள் மிக்ச்சிறிதளவாகவேயிருப்பதைக் காணலாம். இந்த மோதல்களெல்லாம் மனிதர் மனிதருடன் தாமாக்வே ஏற்படுத்திக் கொண்ட மோதலகள். இந்த மோதல்களின் விளைவாக இக்காலகட்ட வரலாறு முழுவதுமே போர்களினாலும், இரத்தக் களரிகளினாலுமே நிரப்பப்பட்டிருப்பதைக் காணலாம்.

மண்,பெண், பொன் முதலான ஆசைகளின் விளைவாகவும், பொறாமை, கோபம் முதலான உணர்வுகளின் விளைவாகவும் உருவான பிரச்சினைகளே இன்றைய மனிதரின் சகல பிரச்சினைகளும். ஆக ஆரம்ப காலகட்டம் மனிதருக்கும் இயற்கைக்குமிடையிலான மோதல்களையே பிரதானமாகக் கொண்ட காலகட்டமானால், அதன்பிறகு தொடங்கிய இன்று வரையிலான காலகட்டமோ, மனிதருக்கும் , புற உலகுக்கும் (அதாவது மற்றைய மனிதர்கள், நாடுகள் முதலான புறவுலகம்) இடையிலான மோதல்களைக் குறித்திடும் காலகட்டமாகும்.

மனிதர் மட்டும் ஆசை, பொறாமை, கோபம் முதலான குணங்களை அறவேயொதுக்கித் தள்ளிவிடுவாரென்றால், மனிதரின் சகல பிரச்சினைகளுமே தீர்ந்த மாதிரித்தான். ஆனால் அப்படி இம்மனிதரால் வாழ்ந்திட முடியாமலிருக்கின்றதே. ஏன்? அதன் சரியான் காரணம் இதுதான்: மனிதர் தம்மையே உணரத்தொடங்கினால் இப்பிரச்சினைகள் யாவுமே தீரும். தீர அவர் தம் மனதினை உணர்ந்திட அதன் சக்தியில் நம்பிக்கை வைத்திட வேண்டும். எதனையாவது நன்கு கிரகித்துக் கொள்ளவேண்டுமென்றால் அமைதியான சூழலை நாடுகிறோமே. ஏன்? தெளிந்த மனதில் விடயங்கள் மிக இலகுவாகவே பதிந்து விடுகின்றன. அதுபோல்தான் மனிதரும் தம்மைப் பற்றி, தமக்கும் பிரபஞ்சத்திற்குமிடையிலான தொடர்புகள் பற்ற்சி சிந்தித்து உணர்ந்திட வேண்டுமென்றால், முதலில் அவர் புற உலகச் சூழ்நிலைகளின் கோரத்தாக்குதல்களிருந்து விடுபட வேண்டும். எவ்வாறு இயற்கையின் கோரத்தாக்குதல்களிலிருந்து விடுபட மனிதர் இயற்கையைப் பற்றி ஆராய்ந்திடத் தொடங்கினாரோ, அவ்வாறே இன்றைய மனிதரின் சகல பிரச்சினைகளுக்கும் காரணமான, அவரே உருவாக்கிய புறவுலகச் சூழ்நிலைகளின் தாக்குதல்களுக்கான் காரணங்களை அறிந்து நிவர்த்தி செய்ய வேண்டும். பசி, வறுமை, நோய், துன்பம் இவையல்லவா புறவுலகச் சூழலின் தாக்குதல்கள். இவற்றை நீக்கிட வேண்டுமானால், இவை உருவாகுவதன் காரணங்களை அறிந்திட வேண்டும். இவையனைத்திற்கும் காரணம் ஒரு சிலரிடம் அபரிமிதமானச் செல்வம் குவிந்திடுவதை அனுமதிக்கிற , அதாவது ‘தனியுடமை’ அமைப்பல்லவா காரணம். ஆக மனிதர் முதலில் செய்யவேண்டியது இத்தகைய அமைப்பினை உடைத்தெறிவதுதான். கார்ல்மார்க்ஸ் கூறுவதுபோல் பொதுவுடமை அமைப்பினை உருவாக்கிவிடுவதுதான்.

சரி இப்பொழுது இப்படியொரு கேள்வி எழலாம்? ‘சரி பொதுவுடமை உலகம் முழுவதும் பரவியபின் என்ன நடக்கும்?’. விடை இதுதான்: அத்தகையதொரு நிலையில், ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனனுமொரு நிலை உருவாகும். மனிதர் தமது புற உலகப் பிரச்சினைகளிலிருந்து பெரிதும் விடுபடுமொரு சூழல் உதயமாகும். அந்நிலையில் மனிதர் தம்மையே , தம் மனதினையே அறிந்து கொளவதற்குப் பெரிதும் நேரம் கிடைக்கும். சகல பிரச்சினைகளிற்கும் காரணங்களான ஆசை, கோபம், பொறாமை முதலானவற்றினை நிரந்தரமாக உதறித்தள்ளிடக் கூடியதொரு நிலை உதயமாகும். இன்றைய மனிதரிற்கு இவ்வுண்மை தெரிந்தபோதும், அவர் நிரந்தரமாகவே , தூயவராக வாழுதற்கு அவர் சார்ந்திருக்கும் புறச்சூழல் விடுவதில்லை. ஆக, இயற்கைகளுடனான மோதல்களிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட மனிதரின் , அவரே உருவாக்கிய புறச்சூழலுடனான மோதல்கள் முற்றுபெற்றதும், அவருள்ளமைந்துள்ள அகவுலகுடனான மோதல்கள் ஆரம்பமாகும். அதன் வெற்றியிலேயே ‘பிரபஞ்சத்தின் புதிர்’ தங்கியுள்ளது. காலவோட்டம் நிச்சயமாகவே இதனைச சாதித்து வைத்திடும்.

13.1.1983.

விளக்கு!

காலக்கடலின் குமிழியென அர்த்தமற்ற
குறுவாழ்வில்
அவலங்களே அனர்த்தங்களாயவிந்திட
அர்த்தமற்றதொரு வாழ்வு.
‘பொய்மையின் நிழல்படர்ந்து’
புழுங்குமுலகிலெல்லாமே நாசம்;
படுநாசம்; அழிவு; அழிவுதான்.
காரணமற்ற வாழ்வின் காரணம்தான்
யாதோ?
வெளியே, வெற்றிடமே, விரிகதிரே!
விடை பகின்றிடாயோ?
விடை பகின்றிடாயோ?
சலிப்பின் அலைக்கழிப்பில்
நலிந்திட்ட வுலகில்
வழிந்திடும் சோகங்களென்றுமே
தெளிந்திடாவோ?
அண்டச் சுடர்களே! அண்ரமீடாக்களே!
புதிரை அவிழ்ப்பீரோ? அன்றி,
முதிர வழி சமைப்பீரோ? கூறுவீர்.
நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்
நானென்றால் சிரிக்காதீர்.
திக்குத் திசையோ புரியவில்லை.
திணறலினில் மூச்சு முட்டித்
தடுமாறினேனே.
என்றாலுமொரு விளக்கமெங்கோ
ஒளிந்துதானுள்ளது.
விளக்கிடுவேன்; விளக்கிடுவேன்; அவ்
விளக்கின் ஒளிதனிலே
வழிதனைக் கண்டிடுவேன்; அவ்
வழிதனைக் கண்டிடுவேன்.

23.2.1983.

அமைப்பினை மாற்றி வைப்போம்.

சூடுசொரணையற்ற வாடிவிடுமொரு
அடிமையிருள் இவ்வாழ்வு. வண்டில்
மாடென மாயுமொரு
கேடுகெட்ட வாழ்வில் புதைந்தனமே.
இரவுகளெல்லாம் சோகம் பெய்து
இப்படியாயிற்றே குளிர்படர்ந்து.
வெளவால்கள் வாழுமொரு மண்டபமென
வாழ்வே மாறிப்போயிற்றே.
நாதியற்றதொரு நரக வாழ்வு.
சோதியற்ற பெரும் இருட்காடே.
தூங்கி வழிவோரே! தோள் கொட்டித்
துள்ளியெழுவீரே!
ஓங்கியொரு உதை கொடுப்பீரே!
ஒடிந்து வீழ இவ்வமைப்பினையே.
விரைவில், இவ்வுலகெங்கணுமே,
விரைந்து வருமே பொற்காலப் பறவையொன்று.
மென்மையான தன் இறகுகளை அது
மெல்ல விரித்து இன்பப்பாவினை இசைத்திடுமே.
அதன் கதகதப்பில் சூடுகாய்ந்திடுமிவ்வுலகினில்
அழகிய சொர்க்கமொன்றின் தரிசனம்
அவதரித்திடுமே! இனிமை சேர்த்திடுமே!
என்னே வாழ்வு! இவ்வாழ்வு!
பொன்னேயெனப் போற்றுவர் பொய்யர் இப்
புவிமீதினில் புழுத்திட்ட இவ்வாழ்வுதனையே.
என்னே வாழ்வு! இவ்வாழ்வு!
எரிந்த குடிசையெனப் புகையுமிவ்வாழ்வு!
ஏக்கம் தவிர்த்து எழுவீரே!
எட்டியொரு உதை கொடுப்பீரே!
தூக்கம் தனையொழித்து, இங்கொரு
சுதந்திரம்தனைப் படைத்திட
சுட்டெரிப்பீரே நும் நெற்றிக் கண்ணினால்
சீழ்படர்ந்த இவ்வமைப்பினையே!

28.12.1982!

ngiri2704@rogers.com
Plain Text Attachment [ Scan and Save to Computer ]

குறிப்பேட்டுப் பதிவுகள்
-4!

– வ.ந.கிரிதரன் –

[அண்மையில் நான்
எண்பதுகளின் ஆரம்பித்தில்
அவ்வப்போது உள்ளத்திலெழுந்த
உணர்வுகளைக் கவிதைகளென,
கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த
குறிப்பேடொன்று அகப்பட்டது.
மீண்டும் மேற்படி
குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப்
பார்த்தபொழுது அவை
அப்போதிருந்த என் மனநிலையினைப்
படம் பிடித்துக்
காட்டுவதாலும், அவற்றைப் பதிவு
செய்தாலென்ன எனத் தோன்றியதாலும்
அவற்றை இங்கே பதிவு
செய்கிறேன். காதல், அரசியல், சமூகம்,
இயற்கை, பாரதி, பிரபஞ்சமென
விரியும் பதிவுகளிவை..- வ.ந.கி -]

13.1.1983:
மனிதரும், இயற்கை, புற, அக
உலகத்துடனான மோதல்கள் அல்லது
ஆதிமனிதரிலிருந்து …(ஒரு
சிக்கலான பிரச்சினை பற்றிய
கண்ணோட்டம்).

இன்றைய மனிதர் தம்மை
அதிபெரும் மேதாவியென்றும் ,
நாகரிகத்தின் உச்சணிக்
கொப்பிலிருப்பவராகவும் மிகவும்
பெரிதாகவே இயலும் போதெல்லாம
தம்பட்டமடித்தும்
பீற்றியும் கொள்கின்றார். கொலம்பியா
விமானங்களிலேறி
இப்பிரபஞ்சத்தையே சுற்றி வந்தவர்
போல் கொக்கரித்துக்
கொள்கின்றார். செயற்கையிருதயமென்ன,
செயற்கை மனிதரையே உருவாக்கி
விடுவோமென்பதுபோல்
ஆர்ப்பரித்துக் கொள்கின்றார்.
இவையெல்லாம் மனிதரின்
அறியாமையின் விளைவிலிருந்துருவான
கர்வத்தின் வெளிப்பாடுகளே
தவிர வேறல்ல.

ஆதிமனிதர், குகைகளிலும்,
காடுகளிலும், அலைந்து திரிந்த
ஆதிமனிதர், இயற்கையுடன்
பெரிதும் போராடியே
வாழவேண்டியிருந்தது. ஆசை, கோபம்,
பொறாமை முதலான குணங்கள்
அறியாமையில் கிடந்த ஆதிமனிதரைப்
பெரிதும் ஆட்கொண்டதன்
விளைவாக ஈவு, இரக்கமற்ற முறையில்
கொலைகள், மோதல்கள்
வெடித்துச் சிதறின; இரத்தம் ஆறாகப்
பெருகியோடியது. பெண்களே
சமுதாயத்தின் முக்கிய
உறுப்பினர்களாக இருந்த காலகட்டமது.
பெண்களின் தலைமையிலேயே
குழுக்கள், குழுக்களாக
ஆதிமனிதக் குழுக்கள் வாழ்ந்து
வந்தன. ஒவ்வொரு குழுக்களின்
தலைவராகப் பெண்ணேயிருந்தாள்.
ஆண்கள் இனப்பெருக்கம்
செய்வதற்கும், உணவு
சேகரிப்பதற்குமே
பயன்படுத்தப்பட்டார்கள். இயலாதவர்கள்
கொன்றொழிக்கப்பட்டார்கள்.

காலம் உருண்டோட, உருண்டோட
மனிதரது சிந்தையிலேற்பட்ட
வளர்ச்சியின் விளைவாக
இயற்கைக்கும்,
மனிதருக்குமிடையிலான மோதலிற்கு ஒரு முற்றுப்
புள்ளி வைக்கப்பட்டது.
உண்மையில் முற்றாக
ஒழிக்கப்படவில்லையென்றே கூறலாம்.
இன்னும் ஆறுகள் பெருகி ஊர்கள்
நாசமாவதும், எரிமலைகள்
பொங்கி உருகுவதும், சூறாவளிகள்
உயிர்களைச் சுருட்டிச்
செலவதும் சர்வசாதாரணமல்லவா.
இயற்கையை வெற்றி கொள்ளத்
தொடங்கிய மனிதரின்
வாழ்நிலைகளிலும் மாற்றங்கள் பல
உருவாகின. நாடோடிகளாகத் திரிந்தவர்
நாடு, நகரங்களை
உருவாக்கினார். உற்பத்திகளின் விளைவாக
ஏற்றத்தாழ்வுகள்
உருவாகின. ஏழை, பணக்காரர் என்று மனித
சமுதாயம்
பிரிவுபட்டதிலிருந்து இன்றைய முதலாளித்துவ
சமுதாய அமைப்பு வரையிலான
காலகட்டத்தில் மனித சமுதாயம்
பலவிதமான சமுதாய
அமைப்புகளைக் கண்டு கொண்டது. எவ்வாறு
இத்தகைய அமைப்புகள் (அடிமை
உடமைச் சமுதாய அமைப்பு,
நிலப்பிரபுத்துவ அமைப்பு
முதலியவை) நீங்கி முதலாளித்துவ
அமைப்பு உருவானதோ அவ்வாறே
காலவோட்டத்தில் இவ்வமைப்பு
நீங்கி இதனிலும் மேலானதொரு
அமைப்பு பொதுவுடமை வரும்.

ஆனால் மனிதரின் இதுவரை கால
வரையிலான வரலாற்றினைப்
பார்ப்போமாயின் ஒன்றினை வெகு
தெளிவாகவே உணர்ந்து
கொள்ளலாம். ஆதியில் மனிதருக்கும்
இயற்கைக்குமிடையிலான
பிரதானமான மோதல் நிலவியது.
மனிதர் அச்சமயம் தமக்குள்ளும்
மோதிக் கொண்டனர். ஆனால்
இத்தகைய மோதல்கள் மனிதருக்கும்
இயற்கைக்குமிடையிலான
மோதல்களுடன் ஒப்பிடும்பொழுது
மிகச்சிறிதளவாகவேயிருந்தன.

மாறாக, மனிதர் இயற்கையைப்
பெரிதும் அடக்கிய
காலகட்டத்திலிருந்து உருவான, இன்று
வரையிலான காலகட்டத்தினை
எடுத்துப் பார்ப்போமாயின்
மனிதருக்கும்
மனிதருக்குமிடையிலான மோதல்களுடன்
ஒப்பிடும்பொழுது , மனிதருக்கும்
இயற்கைக்குமிடையிலான
மோதல்கள்
மிக்ச்சிறிதளவாகவேயிருப்பதைக் காணலாம். இந்த
மோதல்களெல்லாம் மனிதர் மனிதருடன்
தாமாக்வே ஏற்படுத்திக்
கொண்ட மோதலகள். இந்த
மோதல்களின் விளைவாக இக்காலகட்ட
வரலாறு முழுவதுமே
போர்களினாலும், இரத்தக் களரிகளினாலுமே
நிரப்பப்பட்டிருப்பதைக்
காணலாம்.

மண்,பெண், பொன் முதலான
ஆசைகளின் விளைவாகவும், பொறாமை,
கோபம் முதலான உணர்வுகளின்
விளைவாகவும் உருவான
பிரச்சினைகளே இன்றைய மனிதரின் சகல
பிரச்சினைகளும். ஆக ஆரம்ப
காலகட்டம் மனிதருக்கும்
இயற்கைக்குமிடையிலான
மோதல்களையே பிரதானமாகக் கொண்ட
காலகட்டமானால், அதன்பிறகு
தொடங்கிய இன்று வரையிலான
காலகட்டமோ, மனிதருக்கும் , புற
உலகுக்கும் (அதாவது மற்றைய
மனிதர்கள், நாடுகள் முதலான
புறவுலகம்) இடையிலான மோதல்களைக்
குறித்திடும் காலகட்டமாகும்.

மனிதர் மட்டும் ஆசை, பொறாமை,
கோபம் முதலான குணங்களை
அறவேயொதுக்கித்
தள்ளிவிடுவாரென்றால், மனிதரின் சகல
பிரச்சினைகளுமே தீர்ந்த
மாதிரித்தான். ஆனால் அப்படி
இம்மனிதரால் வாழ்ந்திட
முடியாமலிருக்கின்றதே. ஏன்? அதன்
சரியான் காரணம் இதுதான்: மனிதர்
தம்மையே உணரத்தொடங்கினால்
இப்பிரச்சினைகள் யாவுமே
தீரும். தீர அவர் தம் மனதினை
உணர்ந்திட அதன் சக்தியில்
நம்பிக்கை வைத்திட வேண்டும்.
எதனையாவது நன்கு
கிரகித்துக் கொள்ளவேண்டுமென்றால்
அமைதியான சூழலை நாடுகிறோமே.
ஏன்? தெளிந்த மனதில்
விடயங்கள் மிக இலகுவாகவே பதிந்து
விடுகின்றன. அதுபோல்தான்
மனிதரும் தம்மைப் பற்றி,
தமக்கும்
பிரபஞ்சத்திற்குமிடையிலான தொடர்புகள் பற்ற்சி
சிந்தித்து உணர்ந்திட
வேண்டுமென்றால், முதலில் அவர் புற
உலகச் சூழ்நிலைகளின்
கோரத்தாக்குதல்களிருந்து விடுபட
வேண்டும். எவ்வாறு
இயற்கையின்
கோரத்தாக்குதல்களிலிருந்து விடுபட மனிதர்
இயற்கையைப் பற்றி ஆராய்ந்திடத்
தொடங்கினாரோ, அவ்வாறே இன்றைய
மனிதரின் சகல
பிரச்சினைகளுக்கும் காரணமான, அவரே
உருவாக்கிய புறவுலகச்
சூழ்நிலைகளின் தாக்குதல்களுக்கான்
காரணங்களை அறிந்து நிவர்த்தி
செய்ய வேண்டும். பசி, வறுமை,
நோய், துன்பம் இவையல்லவா
புறவுலகச் சூழலின்
தாக்குதல்கள். இவற்றை நீக்கிட
வேண்டுமானால், இவை உருவாகுவதன்
காரணங்களை அறிந்திட வேண்டும்.
இவையனைத்திற்கும் காரணம்
ஒரு சிலரிடம் அபரிமிதமானச்
செல்வம் குவிந்திடுவதை
அனுமதிக்கிற , அதாவது ‘தனியுடமை’
அமைப்பல்லவா காரணம். ஆக
மனிதர் முதலில் செய்யவேண்டியது
இத்தகைய அமைப்பினை
உடைத்தெறிவதுதான்.
கார்ல்மார்க்ஸ் கூறுவதுபோல் பொதுவுடமை
அமைப்பினை
உருவாக்கிவிடுவதுதான்.

சரி இப்பொழுது இப்படியொரு
கேள்வி எழலாம்? ‘சரி
பொதுவுடமை உலகம் முழுவதும்
பரவியபின் என்ன நடக்கும்?’. விடை
இதுதான்: அத்தகையதொரு நிலையில்,
‘யாதும் ஊரே யாவரும்
கேளிர்’ எனனுமொரு நிலை உருவாகும்.
மனிதர் தமது புற உலகப்
பிரச்சினைகளிலிருந்து பெரிதும்
விடுபடுமொரு சூழல்
உதயமாகும். அந்நிலையில் மனிதர்
தம்மையே , தம் மனதினையே அறிந்து
கொளவதற்குப் பெரிதும்
நேரம் கிடைக்கும். சகல
பிரச்சினைகளிற்கும் காரணங்களான ஆசை,
கோபம், பொறாமை
முதலானவற்றினை நிரந்தரமாக
உதறித்தள்ளிடக் கூடியதொரு நிலை
உதயமாகும். இன்றைய மனிதரிற்கு
இவ்வுண்மை தெரிந்தபோதும், அவர்
நிரந்தரமாகவே , தூயவராக
வாழுதற்கு அவர்
சார்ந்திருக்கும் புறச்சூழல்
விடுவதில்லை. ஆக, இயற்கைகளுடனான
மோதல்களிலிருந்து தம்மை
விடுவித்துக் கொண்ட மனிதரின் , அவரே
உருவாக்கிய புறச்சூழலுடனான
மோதல்கள் முற்றுபெற்றதும்,
அவருள்ளமைந்துள்ள
அகவுலகுடனான மோதல்கள் ஆரம்பமாகும்.
அதன் வெற்றியிலேயே
‘பிரபஞ்சத்தின் புதிர்’
தங்கியுள்ளது. காலவோட்டம் நிச்சயமாகவே
இதனைச சாதித்து
வைத்திடும்.

13.1.1983.

விளக்கு!

காலக்கடலின் குமிழியென
அர்த்தமற்ற
குறுவாழ்வில்
அவலங்களே
அனர்த்தங்களாயவிந்திட
அர்த்தமற்றதொரு வாழ்வு.
‘பொய்மையின்
நிழல்படர்ந்து’
புழுங்குமுலகிலெல்லாமே
நாசம்;
படுநாசம்; அழிவு; அழிவுதான்.
காரணமற்ற வாழ்வின்
காரணம்தான்
யாதோ?
வெளியே, வெற்றிடமே,
விரிகதிரே!
விடை பகின்றிடாயோ?
விடை பகின்றிடாயோ?
சலிப்பின் அலைக்கழிப்பில்
நலிந்திட்ட வுலகில்
வழிந்திடும்
சோகங்களென்றுமே
தெளிந்திடாவோ?
அண்டச் சுடர்களே!
அண்ரமீடாக்களே!
புதிரை அவிழ்ப்பீரோ? அன்றி,
முதிர வழி சமைப்பீரோ?
கூறுவீர்.
நடுக்காட்டில் வழிதப்பிய
நாயகன்
நானென்றால் சிரிக்காதீர்.
திக்குத் திசையோ
புரியவில்லை.
திணறலினில் மூச்சு
முட்டித்
தடுமாறினேனே.
என்றாலுமொரு விளக்கமெங்கோ
ஒளிந்துதானுள்ளது.
விளக்கிடுவேன்;
விளக்கிடுவேன்; அவ்
விளக்கின் ஒளிதனிலே
வழிதனைக் கண்டிடுவேன்; அவ்
வழிதனைக் கண்டிடுவேன்.

23.2.1983.

அமைப்பினை மாற்றி
வைப்போம்.

சூடுசொரணையற்ற
வாடிவிடுமொரு
அடிமையிருள் இவ்வாழ்வு.
வண்டில்
மாடென மாயுமொரு
கேடுகெட்ட வாழ்வில்
புதைந்தனமே.
இரவுகளெல்லாம் சோகம்
பெய்து
இப்படியாயிற்றே
குளிர்படர்ந்து.
வெளவால்கள் வாழுமொரு
மண்டபமென
வாழ்வே மாறிப்போயிற்றே.
நாதியற்றதொரு நரக வாழ்வு.
சோதியற்ற பெரும்
இருட்காடே.
தூங்கி வழிவோரே! தோள்
கொட்டித்
துள்ளியெழுவீரே!
ஓங்கியொரு உதை கொடுப்பீரே!
ஒடிந்து வீழ
இவ்வமைப்பினையே.
விரைவில்,
இவ்வுலகெங்கணுமே,
விரைந்து வருமே பொற்காலப்
பறவையொன்று.
மென்மையான தன் இறகுகளை அது
மெல்ல விரித்து
இன்பப்பாவினை இசைத்திடுமே.
அதன் கதகதைப்பில்
சூடுகாய்ந்திடுமிவ்வுலகினில்
அழகிய சொர்க்கமொன்றின்
தரிசனம்
அவதரித்திடுமே! இனிமை
சேர்த்திடுமே!
என்னே வாழ்வு! இவ்வாழ்வு!
பொன்னேயெனப் போற்றுவர்
பொய்யர் இப்
புவிமீதினில் புழுத்திட்ட
இவ்வாழ்வுதனையே.
என்னே வாழ்வு! இவ்வாழ்வு!
எரிந்த குடிசையெனப்
புகையுமிவ்வாழ்வு!
ஏக்கம் தவிர்த்து எழுவீரே!
எட்டியொரு உதை கொடுப்பீரே!
தூக்கம் தனையொழித்து,
இங்கொரு
சுதந்திரம்தனைப் படைத்திட
சுட்டெரிப்பீரே நும்
நெற்றிக் கண்ணினால்
சீழ்படர்ந்த
இவ்வமைப்பினையே!

28.12.1982!

ngiri2704@rogers.com

Series Navigation

author

வ.ந.கிரிதரன்

வ.ந.கிரிதரன்

Similar Posts