வ.ந.கிரிதரன்
[அண்மையில் நான் எண்பதுகளின் ஆரம்பித்தில் அவ்வப்போது உள்ளத்திலெழுந்த உணர்வுகளைக் கவிதைகளென, கட்டுரைகளென எழுதிக் குவிந்திருந்த குறிப்பேடொன்று அகப்பட்டது. மீண்டும் மேற்படி குறிப்பேட்டிலுள்ளவற்றை வாசித்துப் பார்த்தபொழுது அவை அப்போதிருந்த என் மனநிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதாலும், அவற்றைப் பதிவு செய்தாலென்ன எனத் தோன்றியதாலும் அவற்றை இங்கே பதிவு செய்கிறேன். இது அந்த வகையிலென் இரண்டாவது பதிவு. காதல், அரசியல், சமூகம், இயற்கை, பாரதி, பிரபஞ்சமென விரியும் பதிவுகளிவை. இவற்றில் பாரதி பற்றி எழுதிய சில கட்டுரைகளும், கவிதைகள் சிலவும் அவ்வப்போது சஞ்சிகைகள் மற்றும் பதிவுகள் இணைய இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ளன. அனறைய என் மனநிலையில், உணர்ச்சிப் பிரவாகத்தில், நான் பாவித்த சொற்பிரயோகங்களையெல்லாம் அவ்விதமே மாற்றாமல் பதிவு செய்தலே சரியென்று பட்டதால், அதுவே என் உண்மையான அப்போதிருந்த மனநிலையினைப் புலப்படுத்துமென்பதால் அவற்றை அவ்விதமே இங்கு பதிவுசெய்கின்றேன். – வ.ந.கி -]
களத்தில் குதித்திடு!
என்று உன்னால் உனது சொந்த மண்ணிலேயே
தலை நிமிர்ந்து நிற்க முடியாமல் ஆகின்றதோ,
என்று உன்னால் சுதந்திரமாக உன் கருத்துகளை
எடுத்துரைக்க முடியாமற் போகின்றதோ,
உனது சோதரர்களின் உயிர்களுக்கு
உத்தரவாதம் என்று இல்லாதொழிந்து போகின்றதோ,
என்று என் தோழனே! பெண்மை கொத்தி
எகிறிடப் படுகின்றதோ,
என்று உனது சுயகெளரவம் சிதைக்கப்பட்டு
எரிக்கப்பட்டு கசக்கப்படுகிறதோ,
என்று உனது தாயின் கண்ணீரிற்கு
உன்னால் பதிலுரை பகரமுடியவில்லையோ,
என்று சுதந்திரமாக மூச்சு மூச்சுவிடுவதுகூட
மறுக்கப்பட்டு விடுகின்றதோ,
என்று உன் பிஞ்சுகளின் கொஞ்சல்களை இரசிக்கமுடியாது
உன்னால் ஆகிவிடுகின்றதோ,
என்று உன்னைச் சுற்றிலும் துப்பாக்கிகளின் புகையால்
அவலங்கள் பரவிடத் தொடங்கிடுதோ,
என்று உன்னைச் சுற்றிலும் அச்சம், அவலம், சோகம், சாவு
ஆகியன வலை பின்னத் தொடங்குகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் போராட்டமும், குமுறலும், விரக்தியுமே
வாழ்வென்றாகி விடுகின்றனவோ,
என்று உன்னைச் சுற்றிலும் , ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணியும்,
ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு கணத்தின்
ஒவ்வொரு துளியுமே..
வாழ்வே ஒரு கேள்வியாக, உயிர்ப் போர்முனையாக,
உருவாகி விடுகின்றதோ, அன்று , ஆமாம் அன்று,
நீ உனது போர்ப்பிரகடனத்தைத்
தொடங்கிவிடு!
சுதந்திரக் காற்றினைத் தரிசிப்பதற்கான
தர்மத்திற்கான உன் போர் முரசத்தினைக் கொட்டிடு.
கோழைத்தனத்தினக் குதறியெறிந்துவிட்டுக்
களத்தே குதித்திடு.
அன்று , உன்னை, இப்பிரபஞ்சத்தின்
ஒவ்வொரு துளியும,
ஒவ்வொரு எழிற்பட்சியும்,
மெல்லிய பூந்தென்றலும், நிலமடந்தையும்,
எழில் வானும், நட்சத்திரங்களும், கோள்களும்,
இளங்காலைப் பனியினொவ்வொரு துளியும்,
இளம்பரிதியினொவ்வொரு கதிரும்,
விருட்சத்தினொவ்வோரிலையும்,
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும். ஆம்!
வாழ்த்தி வழியனுப்பிடும்!
– 14-11-1982. –
வெளியில் அவர்கள்!
இந்தக் குடிய்சையினின்றும் வெளியே
இறங்கிடவே யான் அஞ்சுகின்றேன். ஆம்! ஏனெனில்
இங்கு நான் பூரணமனிதனாக, பூரண மனிதனாகவே
இருப்பதனை உணர்கிறேன்.
இருப்பதையுண்டு, உறங்கிட முடிகின்றது.
இன்பமே! உந்தனன்பினில் குளித்திட முடிகின்றது.
இங்கு யாரிடத்துமென் தன்மானத்தினை நான்
இழந்திடத் தேவையில்லை.
கூனிக் குறுகி யார் கால்,கையையும் பற்றிக்
கும்பிடும்போடுமொரு வாழ்வு இங்கில்லை.
உள்வைத்துப் புறம்பேசுமொரு
உழுத்த பழக்கத்திற்கு அவசியமேதுமில்லை.
ஆயின் அவர்கள் வெளியே நிற்கின்றார்கள்.
அவர்தம் வெடிமருந்து தோய்ந்திட்ட கைகளைப் போலவே,
இதயமும்… ஆம்! வெடிமருந்து தோய்ந்த நெஞ்சம் அவருடையது.
சிதைத்தல்! சீரழித்தல்! வதைத்தல்! அவர்தம் வாய்ப்பாடு
இதுவே.
அச்சமும், பேடிமையும், அடிமைச் சிறுமதியும் கவிந்த
புறவுலகோ,
பாவத்தின் சன்னிதியில் மாய்ந்து வேகும்; நோகும்.
தருமத்தின் சரித்திரத்தில் பொறுமைக்கும்
ஓரெல்லையுண்டு.
இனி ஒரு விதி செய்வோம். ஆம்! எந்நாளுமே
அதனைக் காத்திடப் போகின்றேன். அஞ்சிடப் போவதில்லை.
ஆமாம்! ஆமாம்! ஆமாம்!
இனி நானும் வெளியே இறங்கிடப் போகின்றேன்.
வெளியே இறங்கிடப் போகின்றேன்.
– 1982 –
எழுச்சியின் அர்த்தங்கள்!
இரத்தக் காட்டேரிகளின் கூத்தினில்…
இதோ.. மீண்டும் பனங்கூடல்கள் பற்றியெரிகின்றன.
‘பூட்சுகள்’ தடதடக்கப்
பாய்ந்துவரும் ‘ட்ரக்’குகளின் பேரிரைச்ச்ல்களில்,
சாலைகளில், செம்மண் புழுதி பறக்கும்.
படலை மூடி, பெண்கள், பிள்ளைகள்
வியர்த்து, விதிர்விதிர்த்துப் பய்ந்து போய்ப்
பதுங்கிக் கிடப்பர். தம்
புருஷரைப் பற்றியணைத்துக் கொள்வர்.
ஆனால். அவர்கள்… எதற்கும்
அஞ்சுதலற்ற அரக்கர்கள்.
‘இதுவென்ன வாழ்வு! சோகங்கள் கவிந்த
இருள்வாழ்வு. தொய்ந்த நெஞ்சினில் படரும் முகாரிகள்,
மூலைமுடுக்கெல்லாம் படர்ந்து கிடக்கும்
மயானத்து அமைதி.’
ஆயின் அவர்கள், மக்கள், எழுச்சியுறத்
தொடங்கி விட்டார்கள்.
கண்ணகிகள் போர்முரசம் கொட்டி விட்டார்கள்.
இளைஞர்கள் திண்தோள்கள் தினவெடுக்கத்
தொடங்கி விட்டன்.
மழலைகள் ‘போர்ப்பரணி’ ஜெபிக்கத் தொடங்கிவிட்டனவே.
பனங்கூடல்கள் ‘சலசல’க்கின்றனவே காற்றினில்.
புரிகின்றதா? அவற்றின் அர்த்தங்கள்.
நாசங்களின் முடிவுகள் நாசங்கள்தான்.
அழிவுகளின அழிவுகள் அழிவுகள்தான்.
இந்த மண், ஆங்கு வீசிடும் தென்றல்,
எழில்மலர், பொய்கை, வான்,விருட்சங்கள்,
புட்கள் யாவுமே,
இசைக்கின்றனவே. அர்த்தங்கள் புரிகின்றதா?
சத்தியங்கள் சாவதில்லை. சாசுவதமானவை.
சத்தியங்கள் சாவதில்லை. சாசுவதமானவை.
– 15-3-1983-
உண்மையின் வெம்மை!
அடியே! நீ ஏனடீ வீணாக என்னுடன்
ஊடிக் கொள்கிறாய்?
நானப்படி என்னதான் கூறிவிட்டேனென்று
நீயின்று கோவித்தாய்?
உண்மையத்தானே உரைத்தேன்.
உணமை சுடுமென்பார்களே.
உன்னையுமது சுட்டதோடீ!
கண்ணே! கலங்குமுன் கயல்களைத் துடையடீ!
கவலைகளுடலின் புல்லுருவிகளன்றோ.
கண்களைவெட்டிச் செவ்விதழ் போதையேற்றிக்
கார் கூந்தல் பரப்பி
அன்னமென ஆயிழையே! நீ
அசைந்து நடைபயின்று வந்தாய்.
செழித்தவுன் அழகுகளிற்கிடையில் அகப்பட்டு
அல்லலுறுமுந்தன் மெல்லிடை பார்த்ததும்
உரிமைகளிழந்துழலுமெம்மவர் நிலைதானெந்தன் சிந்தையில்
எழுந்தது. எடுத்துச் சொன்னேன். அது தப்பா?
உண்மையைத்தானே உரைத்தேன். உந்தன்
செவ்விதழ்கள், நாணிச் சிவக்கும் வதனம், இவையெலாம்
இரத்தம் சிந்திய எம்மக்களைத்தான் ஞாபகப்படுத்தின.
இதைத்தானே இயம்பினேனென் கண்மணீ! இது தப்பா?
நீ’
இழுத்த இழுப்புகளிற்கெல்லாம் திரும்புமுந்தன் விழிகள்
அடிவருடிப் பிழைக்கும் அற்பர்களைத்தானே உருவகித்தன.
அதையும்தான் சொன்னேன். அதுவும் தப்பா என்ன?
உண்மையெனறாலே அது சுடத்தானே செய்யுமடீ என்
உத்தமீ! உன்னையுமது சுட்டுவிட்டாலதற்கு நானென்ன செய்ய?
– 1981.
பகற்காலத்து ஓசைகளெல்லாம் மெல்லமெல்ல
பதுங்கிக் கொண்டன. கருமைத் திரையின்
தழுவலில் நிலமடந்தை மெய்மறந்து கிடக்கும்
நேரம்.
நிசப்தம் கீறி நத்துக்களின் சோககீதங்கள்
பரவுகையில்,
காற்று மட்டும் சுழன்றி சுழன்று பேயாய்ப்
பொங்கி வெடிக்கும்.
அடே! வருண பகவானே உனக்கென்ன வந்ததோ?
ஆணவத்தின் கொப்பினில்
ஆடுவோர்தம் ஆட்டமெல்லாம் ஒருபோதில் சரி.
தனிமைப் போர்வைக்குள் முடங்கிக் கிடக்கும்
நெஞ்சக் கூட்டினுளோ…
எண்ணக் குவியல்களின் வெம்மையினில்
புயலொன்று வீசும்.
சுடர்ப்பெண்களே! சிரிக்கின்றீர்களா? கள்ளிகளா!
தொலைவிருப்பதால் தப்பினீர்.
நான் பொய்மைக்குள் மாய்ந்தவனல்லன்.
மெய்மையின் தரிசனத்தில் கவி வடிப்போன்.
புரிந்ததா? புரிந்துவிடின் கோழைகளே!
போய்விடுங்கள்.
29-05-1983
ngiri2704@rogers.com
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 9- கண்ணை மறைத்த ஆக்ரோஷப் புயல்
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 4 காட்சி 2
- பெருஞ்சித்திரனாரின் பள்ளிப்பறவைகள்
- அறிஞர் மு.சண்முகம் பிள்ளை தமிழகராதி – தமிழ்மாமணி மு.இறைவிழியனார் பாராட்டிய தகுதிமிக்க தமிழகராதி
- விமர்சித்தல் லா ச ரா எழுத்தை; லா ச ரா வையல்ல
- ‘எழுத்துக் கலை’ பற்றி இவர்கள்…. 1 -தேவன்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! காலாக்ஸிகளை இயக்கும் கருமைச் சக்தி (Dark Energy) (கட்டுரை: 5)
- மூழ்கும் காதல்
- மனித வேட்டை
- வளரும் வலிகள்
- சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும்
- காதலர் தின’த்தில் ஒரு பேட்டி!
- மலேஷிய தமிழர்கள் மீது துப்பாக்கிச்சூடு
- கடிதம்
- கடிதம்
- Exploitation of Migrant Workers in the United Arab Emirates
- Tamil programmes during the Writers Festival
- நாட்டாமை தீர்ப்பை மாத்திப்போடு – 1
- பூக்கள்
- கனவில் நிகழுகிற பயங்கர உலகம்
- தைவான் நாடோடிக் கதைகள் (2)
- மாத்தா ஹரி அத்தியாயம் -38
- அத்தையம்மா!
- டிசம்பர் 1 எய்ட்ஸ் விழிப்புணர்வு நாள் : எச் ஐ வி/ எய்ட்ஸ் சிகிச்சையில் இன்றைய சவால்கள்
- நூலகம் எனும் அன்னை
- “பசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள்” – மார்வின் ஹாரிஸ் சொல்ல மறந்த கதை
- சூரன் போர்
- படித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்
- குறிப்பேட்டுப் பதிவுகள் – 3
- ஜெகத் ஜால ஜப்பான் – 2. ஓஹாயோ கோசைமாஸ்
- மும்பைத் தமிழர் அரசியலும் தாதாக்களும் : (2)
- அக்கினிப் பூக்கள் – 2
- தாகூரின் கீதங்கள் – 5 உன்னுருவில் என் வடிவம் !
- பாத்திரத்தில் இல்லை
- தாழ் படுக்கைகள்
- பன்னாட்டுக் கருத்தரங்கம்