எவ்வாறு ஒரு பிரிட்டிஷ் ஜிஹாதி உண்மை ஒளியைக் கண்டடைந்தார்? – 1

This entry is part [part not set] of 24 in the series 20070503_Issue

எட் உசேன்


(தி இஸ்லாமிஸ்ட் என்ற புத்தகத்திலிருந்து கட்டுரை வடிவில் எடுக்கப்பட்டது. )

ஜெட்டாவில் என் முதலிரண்டு மாதங்களில் , ·பயி-யும் நானும் எங்களது புதிய சொகுசான வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தோம். பளபளக்கும் ஜீப், இரண்டு நீச்சல் குளங்கள், வீட்டு வேலைக்காரி, வரியில்லாத சம்பளம்… நவீன நகரத்தில் அனைத்து வசதிகளுடனும் வாழும் இந்த சொகுசான கூட்டு வாழ்க்கை, செளதி அரேபியாவில் இருக்கும் பயங்கரமான உண்மைகளிலிருந்து என்னை விலக்கி வைத்திருந்தது.

என்னுடைய ஆட்டுத்தாடியும், நல்ல அரபி மொழி திறமையும் என்னை எளிதாக அரபியனாக காட்டியிருக்கும்.

ஆனால் இளம் அரபுபோல இருப்பது மட்டும்போதுமானதாக இல்லை. ஒரு சவுதி போலவே நடைமுறையும், நவுதியாகவே வாழ்வதும் தேவையாக இருந்தது. அங்கே நான் தோல்வியுற்றேன்.
சவுதி கலாச்சாரத்துடன் என் முதல் மோதல், நான் புல்லட் புரூப் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தபோது வந்தது. நான் ஒரு ஆப்பிரிக்க பெண்கள் கருப்பு அபயாக்களில் உணவுச்சாலைகளுக்கு வெளியே குப்பைகளை நோண்டிக்கொண்டும், வீடுகளுக்கு வெளியே குப்பைகளை நோண்டிக்கொண்டும், இன்னும் சாலைகளில் அலைவதையும் பார்த்தேன்.

நான் வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவரிடம், “ஏன் இத்தனை கருப்பின தோட்டிகள் தெருக்களில் இருக்கிறார்கள்?” என்று கேட்டேன். டிரைவர் சிரித்தார். “அவர்கள் தோட்டிகளல்ல. அவர்கள் ஸ்கவஞ்சர்கள். ஜெட்டா தெருக்களில் இருக்கும் அட்டைகளை சேகரித்து விற்கிறார்கள். இவர்கள் பாட்டில்கள், தகரடப்பாக்கள், பைகளை சேகரிக்கிறார்கள்” என்று சொன்னார்.

“ஏழையான இப்படிப்பட்ட அந்நிய பெண்கள் இப்படிப்பட்ட சுகாதாரமற்ற சூழ்நிலையில் மரியாதைக்குறைவான சூழ்நிலையில் தெருக்களில் அலைவது உங்களுக்கு ஆட்சேபகரமானதாக தோன்றவில்லையா?”

“என்னை நம்புங்கள்.பெண்கள் இதைவிட மோசமான வேலைகளில் இருக்கிறார்கள்”

அதனை ஒத்துக்கொள்வது எனக்கு மிகவருத்தமானதாக இருந்தாலும், டிரைவர் சொன்னது உண்மைதான். சவுதி அரேபியாவில் பெண்கள் மிகவும் மோசமான வேலைகளில் இருந்தார்கள். பெரும்பாலானா ஆப்பிரிக்க பெண்கள் ஜெட்டாவில் கராண்டினா என்றழைக்கப்படும் ஏழைகள் நிரம்பிவழியும் குப்பங்களில் இருந்தார்கள். இவைகளில் வறுமையும், விபச்சாரமும், நோய்களும் நிரம்பி வழிகின்றன.

என் வாழ்க்கையில் நான் சந்தித்த மோசமானவைகளிலேயே மிகவும் மோசமானது காரண்டினாவுக்கு நான் சென்றதுதான். ஆயிரக்கணக்கான மக்கள் சவூதி அரேபியாவில் பத்து இருபது வருடங்களாக வாழ்கிறார்கள். ஆனால், இவர்களுக்கு பாஸ்போர்ட் கிடையாது. இவர்கள் குடியுரிமை அற்ற சட்டப்பூர்வமற்ற குடிகள். இவர்கள் உண்மையிலேயே சாலைகளின் கீழே அனாதையாக்கப்பட்டு கிடக்கிறார்கள்.

பிரிட்டிஷ் கவுன்சிலில் நான் சந்தித்த ஒரு சவுதி அல்லாத கருப்பு மாணவர் என்னோடு வந்திருந்தார். “கடந்த வாரமிங்கே ஒரு பெண் குழந்தை பெற்றார்” அங்கேயிருந்த ஒரு அட்டைகளால் உருவாக்கப்பட்ட தடுப்பை காண்பித்துஅவர் சொன்னார்.
சங்கடத்துக்குள்ளான நான், அந்த பெண்கள் சேகரித்த பொருட்கள் விற்பனைக்காக மட்டும் அல்ல, உடை இருப்பிடம் ஆகியவைகளுக்காகவும்தான் என்பதை உணர்ந்தேன்.

அப்படிப்பட்ட ஒரு நிர்வாணமான வறுமையை நான் சவுதி அரேபியாவில் எதிர்பார்க்கவே இல்லை.

அந்த நேரத்தில், நான் பிரிட்டனில் ஏராளமான கருப்பு ஆப்பிரிக்கர்கள் சோமாலியா சூடான் போன்ற நாடுகளிலிருந்து வந்து தங்கியிருப்பதை பார்க்கிறேன். ஒயிட் சேப்பல் என்னுமிடத்தில் கூட்டம் கூட்டமாக தங்கியிருக்கிறார்கள். இவர்களுக்கு அவர்கள் பிரர்த்தனை செய்ய மசூதிகள் இருக்கின்றன. அவர்கள் சுதந்திரமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அரசாங்கம் தங்க அபார்ட்மெண்டுகளை வழங்கியிருக்கிறது.

முஸ்லீம் சவுதி அரேபியாவில் வாழ்வதை விட முஸ்லீமல்லாத பிரிட்டனில் பல முஸ்லீம்கள் நல்ல வாழ்க்கைத்தரத்துடன் வாழ்கிறார்கள். அந்த நேரத்தில் நான் என் வீட்டுக்கு (பிரிட்டனுக்கு) திரும்பிப்போக ஆசைப்பட்டேன்.

உம்மா பற்றிய என்னுடைய பேச்சுக்கள் குழந்தைத்தனமானவையாக தோன்றின. பிரிட்டன் தரும் வசதியில் இஸ்லாமிஸ்டுகள் ஒரே அரசாங்கம், விரிந்துகொண்டே செல்லும் நாடு, ஒரே முஸ்லீம் தேசம் என்று கவைக்கொவ்வாத கோஷங்களை கொண்டுவரமுடியும். அரபு மனத்தின் இனவெறியின் உண்மை ஒருக்காலும் கருப்பு மக்களும் வெள்ளை மக்களும் சமமானவர்களாக ஒப்புக்கொள்ளவே ஒப்புக்கொள்ளாது.

அந்த நாளில் காராண்டினாவில் நின்றுகொண்டு, நான் எதனை தவறு என்று நினைத்துக்கொண்டிருந்தேனோ அதனை பற்றி யோசித்து ஆச்சரியப்பட்டேன். இனக்கலப்பு, மதக்கலப்பு திருமணங்கள்.அங்கே இருந்த மாணவர்களிடம் , பிரிட்டனில் பல கலாசாரத்து மக்கள் சுதந்திரமாக வாழ்வது பற்றிச் சொன்னேன். ஆனால் அவர்களால் சவூதி இனவாதம் இல்லாத ஒரு சுதந்திர நாட்டைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை..

இனவெறி என்பது சவுதி சமூகத்தின் பிரிக்கமுடியாத அங்கம். என்னுடைய மாணவர்கள் நிக்கர் என்ற வார்த்தையைக்கொண்டு கருப்பின மக்களை குறித்தார்கள். சற்றே கருப்பாக இருக்கும் அரபுகள் வெள்ளையாக இருக்கும் அரபுகளை விட தாழ்ந்தவர்களாக கருதப்படுகிறார்கள்.

நான் உலகத்தின் தீவிர முஸ்லீம் நாடாக தன்னை குறித்துக்கொள்ளும் நாட்டில் வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இருந்தாலும் அது நான் நினைத்த முஸ்லீம் நாடாக இல்லை. பொதுவில் வகாபிஸம் திணிக்கப்படுவதை கண்டு அதிர்ந்தேன். இத்தனைக்கும், அதனைத்தான் ஒரு இஸ்லாமிஸ்டாக எதிர்பார்த்திருந்தேன்.

இந்த பிராந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதி, பெண்கள் வண்டி ஓட்டக்கூடாது என்றும், அது பெண்கள் காமத்துக்கு அலைவதை அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டது. சவுதி ஆண்கள் ·பயியை கண்கொட்டாமல் உற்றுப்பார்த்ததும், சவுதி பெண்கள் என்னை உற்றுப்பார்த்ததும் என்னை அதிர்ச்சியுறச்செய்தது.

·பயி தனது உடையில் எந்தவிதமான குறையும் வைக்கவில்லை. பிராந்திய கலாச்சாரத்துக்கு பொருந்தும்படியே அவளும் நீளமான அபயாவையும் அவளது தலையை ஒரு கருப்பு துணியாலும் மறைத்திருந்தாள். என்னுடைய மனைவியை நான்பார்த்திருந்தபல வருடங்களில் அதனைப்போல மிகவும் டல்லாக அவளை எப்போதும் பார்த்ததில்லை.இருப்பினும் இரண்டுமுறை காரில் செல்லும் அரபு இளைஞர்கள் அவளை தடவினார்கள். இன்னும் ஒரு முறை ஒருவன் என் கார் பின்னால் காரை நிறுத்தி அவனது போன் நம்பரை என் மனைவியிடம் கொடுத்தான்.

சூப்பர் மார்க்கெட்டுகளில் நான் ·பயியை விட்டு சில நிமிஷங்களே நகர்ந்தால் போதும், சவுதி ஆண்கள் கெட்ட வார்த்தைகளை அவளுக்கு கேட்கும் வண்ணம் முனகிவிட்டு சென்றார்கள். பயி தனது அனுபவங்களை பிரிட்டிஷ் கவுன்சிலில் இருக்கும் ஒரு சவுதி பெண்ணிடம் பேசிய போது அவள்”சவுதி அரேபியாவுக்கு நல்வரவு” என்று சொன்னாள்.

ஜெட்டாவில் வசிக்க ஆரம்பித்து ஒருமாதத்தில் ஒரு ஆசிய டாக்ஸி டிரைவர் ஒரு பிலிப்பினோ உழைப்பாளி தன்னுடன் தன் புதிய மனைவியை அழைத்து வந்து ஜெட்டாவில் வசிக்க வந்ததை என்னிடம் சொன்னார். தம்பதியினர் பலாத் ஷாப்பிங் சென்றுவிட்டு வீட்டுக்குச் செல்ல ஒரு டாக்ஸியை பிடித்தார்கள். கொஞ்ச தூரம் சென்றதும், அந்த டாக்ஸியை ஓட்டிக்கொண்டு வந்த சவுதி டிரைவர் கார் ஏதோ பிரச்னை தருகிறது என்று சொல்லி கணவனை வண்டியை கொஞ்சம் தள்ளச்சொன்னார். பிரயாணி அதற்கு இணங்கி வண்டியை விட்டு இறங்கினார்.

வினாடிகளில் அந்த டாக்ஸி டிரைவர் அந்த நபரின் மனைவியுடன் காரை கிளப்பிக்கொண்டு விரைந்து சென்றுவிட்டார். மாதங்கள் ஆகியும் அந்த பெண் என்ன ஆனாள் எங்கிருக்கிறாள் என்ற விபரம் தெரியவில்லை.

பாலுறவு இன்றி பரிதவிக்கும் சவுதி இளைஞர்களால் டாக்ஸிகளில் பெண்கள் கடத்தப்படுவதை பற்றி நிறைய கதைகள் கேட்டோம். என் சவுதி நண்பரின் திருமணத்திற்காக ஜெட்டாவில் இருக்கும் ஒரு ஆடம்பரமான ஹோட்டலில், பெண்கள் தங்களது அறையை விட்டு வெளியே வராமல் இருந்தனர். அங்கே தங்கியிருந்த சவுதி இளவரசரின் காவலாட்கள் அந்த பெண்களை பாலுறவுக்காக கடத்திவிடுவார்கள் என்ற பயமே காரணம்.

ஏன் பர்தாவும், ஆண் பெண்கள் என்று பிரித்து வைப்பதும் இந்த மாதிரி நடவடிக்கைகளை தடுக்கவில்லை? நேர்மாறாக, என்னுடைய சவுதி நண்பர்கள், அதில் பெரும்பாலோனோர் சவுதி பல்கலைக்கழக மாணவர்கள், இப்படிப்பட்ட பர்தாவும், ஆண்கள் பெண்கள் என்று பிரித்து வைப்பதுமே சவுதி இளைஞர்களை இப்படிப்பட்ட பாலுறவு பைத்தியங்களாக ஆக்கியிருக்கிறது என்று கடுமையாக விவாதித்தனர்.

பிரிட்டிஷ் கவுன்ஸிலில் கல்விக்காக இலவச இணைய வசதியை உருவாக்கி கொடுத்திருந்தார்கள். சில நாட்களுக்குள், அங்கு வந்த மாணவர்கள் சவுதி அரேபியாவில் தடை செய்யப்பட்டிருக்கக்கூடிய, ஆனால், பிரிட்டிஷ் கவுன்ஸில் தொலைத்தொடர்பு இணைப்பு மூலம் கிடைக்கக்கூடிய மிகவும் மோசமான ஆபாசமான போர்னோகிராபியை தரவிறக்கினார்கள். ஆண்கள் பெண்கள் என்று பிரித்து வைப்பதும், பர்தா மூலம் அந்த பிரிவினையை மேலும் கடுமையாக ஆக்குவதும், அடக்கப்பட்ட பாலுறவு விரக்தியை உருவாக்கி அது சுகாதாரமற்ற வழிகளில் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது.

(அடுத்த இதழில் முடியும்)

Extracted from “The Islamist”, நன்றி டைம்ஸ் ஆன் லைன்

Series Navigation

author

எட் உசேன்

எட் உசேன்

Similar Posts