மொழியாக்கம் – யாழினி
தமிழ்நாட்டில் தூங்கி வழியும் புதுகோட்டையில் சிவப்பு செங்கல் கட்டட ஆபீசில் தாவூத் ஷரீபா என்கிற முஸ்லிம் பெண்மணி
வாழ்க்கையில் அவதிப்படும் முஸ்லிம் பெண்களை சந்திக்கிறார்.
அமைதியாக தாழ்ந்த குரலில் தாங்கள் எப்படி கணவரால் விவாகரத்து செய்யப்பட்டோம், கைவிடப்பட்டோம்,
கொடுமைப்படுதப்படுகிறோம் என்று விவரிக்கிறார்.
39 வயதான ஷரீபா 3000 பேர் கொண்ட முஸ்லிம் சங்க பெண்களுக்கு அறிவுறை கூறுகிறார்.
இஇவர் பெண்கள் மசூதி அமைக்கவேண்டும், தங்கள் சமூகத்தில் திருமணம், விவாகரத்து, வீட்டில் கொடுமை,
விவாகரத்துக்கு பின்னர் குழந்தை பராமரிக்கும் உரிமை ஆகியவற்றில் தங்களுக்கு பங்கு வேண்டும் என்று ஆர்வத்துடன்
விடுக்கும் வேண்டுகோள்களை பார்வையாளர்கள் கேட்கின்றனர்.
ஷரீபா கேட்கிறார் ‘உங்களுக்கு தொழுகை செய்ய தனியாக மசூதி வேண்டுமா ? பெண்கள் பங்கேற்கும் ஜமாத் பயன் அளிக்குமா ? ‘.
பெண்கள் அனைவரும் ஒன்றாக ஆம் என்று தலை அசைக்கின்றனர்.
புகார்கள் அதிகரிப்பு
ஆண் ஆதிக்கம் அதிகமாக உள்ள தென்னாட்டில், இந்த பெண் உரிமை போராளி, பெண்களுக்கு தனி
மசூதி வேண்டும் என்று போராட்டத்தை தலைமை ஏற்று ஒரு புயலை கிளப்புகிறார்.
ஷரீபா பி.பி.சி ஆன்லைனுக்கு கூறியது, ‘நாங்கள் கூடி பேசுவதற்கும், நம் பிரச்சினைகளை விவாதிப்பதற்கும், தொழுவதற்கும் தனி இடம் வேண்டும்.நம் சமூகம் அளிக்கும் தீர்ப்புகளில் எங்களுக்கும் பங்கு வேண்டும் ‘.
இந்தியாவில் பெண்கள் மசூதிக்கு அருகே உள்ள தனி கட்டடத்திலோ, அல்லது பெரிய மசூதியில் தனியான ஒரு இடத்திலோ
தொழுகிறார்கள்.
தமிழ்நாடு வக்ப் போர்டு தலைவியும், வக்கீலுமான பாதர் சயிது கூறுகிறார் ‘பெரும்பாலான மசூதிகள் பெண்களை
தொழுவதற்கு அனுமதிப்பதில்லை ‘.
வக்ப் போர்டு முஸ்லிம் மதப் பிரதினிதிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
மசூதிக்கு வரும் தொழுகையாளர்களில் பெண்கள் அவசியம் இருக்க வேண்டும் என்று பாதர் சயிது கூறுகிறார்.
மசுதியில் போதிக்கப்படும் விஷயங்கள் சில சமயம் பெண்கள் சம்பந்தப்பட்டதாக இருக்கிறது.அதை பெண்கள்
கேட்டு அறிந்துக் கொள்ள வேண்டும்.
சமீபத்தில் ஜமாத்தில் அதிகமாக பெண்களுக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்புகள் அளிக்கப்பட்டதாக
புகார்கள் எழுந்ததால் பெண்களுக்கு தனி மசூதி வேண்டும் என்ற யோசனை உருவானது என்று ஷரீபா
கூறுகிறார்.
சென்ற வருடம் வரதட்சிணை, விவாகரத்து, பலாத்காரம் போன்ற விஷயங்களில் ஜமாத் தீர்ப்புகளுக்கு
எதிராக 100 விண்ணப்பங்கள் வந்ததாக கூறுகிறார்.
‘பெண் மசூதி எங்கள் விழிப்புணர்ச்சியின் அடையாளம். ஆண்கள் வேண்டுமானால் வந்து தொழலாம்.
ஆனல் இங்கு ஜமாத்திலும், அனைத்து விவகாரங்களிலும் பெண்களே பங்கேற்பார்கள்.
பாதர் சயிது கூறுகிறார் ‘ ஆண்கள் அதிகமாக உள்ள ஜமாத்களில் அளிக்கப்படும் தீர்ப்புகளில்
பெண்களுக்கு எதிரான தீர்ப்புகள் அதிகம் ‘.
‘பெண்கள் ஒடுக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் ஜமாத் பெண்களுக்கு எதிராகவே முடிவு செய்கிறது ‘
என்று கூறுகிறார்.
‘ஆண்களே நீதி அளிக்கிறார்கள். ஜமாத்தில் பெண்களயும் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் ‘.
சமரசம்
சென்னை புரசைவாக்கம் மசூதி செயலாளர் முகம்மது சிக்கந்தர் கூறுகிறார் ‘ஜமாத்
பொதுவாக நடுநிலையாகவே செயல்படுகிறது ‘.
‘குடும்ப விவகாரங்களில் பாதிக்கப்படும் பெண்களிடம் பேசியே முடிவு எடுக்கப்படுகிறது.
அவசரமாக முடிவு எடுப்பதில்லை ‘ என்று முகம்மது சிக்கந்தர் கூறுகிறார்.
முகம்மது சிக்கந்தர் மேலும் கூறுகிறார் ‘கடந்த வருடம் இந்த மசூதிக்கு வந்த 40 குடும்ப வழக்குகளில்,
5 ஐ தவிர அனைத்து வழக்குகளிலும்சமரசம் செய்யப்பட்டது. ‘
ஜமாத் தன் கணவர் கொடுமை செய்ததற்காக விவாகரத்து கோரிய மனைவிக்கு ரூ.4 இலட்சம் அளித்ததை
கூறுகிறார்.
ஷரீபா சளைக்காமல் கூறுகிறார் ‘ சில நல்ல மனிதர்களும், நல்ல ஜமாத்களும் இருக்கலாம். பெரும்பாலம்
இந்த அமைப்பு பெண்களுக்கு எதிராகவே உள்ளது ‘.
இவர் கிராமங்களுக்கு சென்று பெண்கள் மசூதி கட்டுவதற்காக ரூ9000 சேத்திருக்கிறார். இவருக்கு
$55000 தேவைப்படுகிண்றது.
புதுகோட்டையை சேர்ந்த ரஷீத பேகம் என்ற விவாகரத்து செய்த 21 வயது ஆசிரியை இவருக்கு ஆதரவு
அளிக்கிறார்.
‘நாங்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்திருக்கிறோம். எங்கள் எண்ணங்கள் அடைக்கப்பட்டிருக்கிறது. எங்கள்
உணர்ச்சிகளை வெளிப்படுத்த எங்கள் மசூதி உதவும் ‘.
கணவனால் கைவிடப்பட்ட ரஜீதா பேகம் (37) கூறுகிறார், ‘போக்கிடம் இல்லாத பெண்களுக்கு மசூதி
உதவும் ‘.
இவர் கூறுகிறார் ‘நாங்கள் ஆதரவற்று இருக்கிறோம். வேறு வழி இல்லை, எங்கள் தலை எழுத்தை நிர்ணயம் செய்ய
வாய்ப்புகளும் இல்லை. எங்கள் மசூதி வழிகாட்டும் ‘.
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/3429695.stm
( பி.பி.சி 27 ஜனவரி 2004 )
- கவிதை
- மூடல்
- மனிதம் : காவல் துறையும் மனித உரிமைகளும்
- கடிதம் – பிப் 19,2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- கடிதங்கள் – பிப்ரவரி 19,2004
- தேர்தல் ஸ்பெஷல் படங்கள்:
- கவிப்பெரும்பேரரசு கரடிமுத்துவுக்கு ஞானபீடப்பரிசு
- நிழல்களின் உரையாடல்(Mothers and Shadows)-மார்த்தா த்ராபா[தமிழில் அமரந்த்தா]
- விருமாண்டி – கடைசிப் பார்வை
- தக்கையின்மீது நான்கு கண்கள் – குறும்படம்
- பொருட்காட்சிக்குப் போகலாமா..
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தாறு
- பயங்கரவாதியை உருவாக்குவது எது ? – பகுதி 1
- கவிதை
- கவிதை
- சிதைந்த நம்பிக்கை
- நெஞ்சத்திலே நேற்று
- நிசப்தத்தின் நிழலில்
- விட்டுசெல்….
- காலத்தின் கணமொன்றில்
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- கிராமத்தில் உயிர்!
- அன்புடன் இதயம் – 8 – ஒரு வாரிசு உருவாகிறது
- கதை ஏன் படிக்கிறோம் ?
- கனடாவில் கால்சட்டை வாங்குவது
- சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள்
- குழந்தைகளுக்கான கல்வி
- ஈராக்: அமெரிக்க ஆளுகையின்கீழ் பெண்ணுரிமை
- வாரபலன் – பிப்ரவரி 19,2004 – சீனியர் மேனேஜர் அவஸ்தை – குறுநாவல் குறுகுறுப்புகள் – வழி தவறிய காவிய நயம்- குஞ்சுண்ணி
- இந்தியாவில் பெண்கள் மசூதியால் ஏற்பட்ட புயல்
- நாகம்
- தாண்டவராயன்
- அமெரிக்கா ரிட்டர்ன்
- சில நேரங்களில்…சில குழந்தைகள்
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -12)
- விடியும்! – நாவல் – (36)
- ஆஸ்திரேலியப் பழங்குடியினர் மீது ஆஸ்திரேலிய அரசின் தொடரும் அடக்குமுறை
- யுத்த நெடி , இந்தியக் கூலியின் அரேபியக் காலம் , இருத்தலிஸம்
- தவம்
- ஆறுகள் – கழிவு ஓடைகள் : ஜெயமோகனின் புது நாவல் ஏழாம் உலகம் .
- ஃப்ரை கோஸ்ட்
- உஸ்தாத் படே குலாம் அலி கான் – ஹரி ஓம் தத்சத்
- உறக்கத்தில் பளிச்சிடும் உள்ளொளி
- பிரிவிலே ஓற்றுமையா ?!
- அவன்
- குட்டி இளவரசியின் பாடல் பற்றி
- பத்திரமாய்
- தேவைகளே பக்கத்தில்
- ஒரு கவிதையே கேள்வியாக..
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் – 7